Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே விலை உயர்ந்த காபியின் விலை 150 டொலர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே விலை உயர்ந்த காபியின் விலை 150 டொலர்! 

[saturday, 2014-03-01 20:41:57]
cat-010314-150.jpg

உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 150 டொலர் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம்.

  

அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 400 டொலர்களுக்கு மேல் விற்பனையாகிறது. அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104703&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
தமிழரசி சிவா என்பவர் 'இதழ்' என்ற இணையத்தின்மூலம் வெளியிட்ட பதிவொன்றை பின்னூட்டமாக இடுவது, தமிழரசின் இத்திரிக்குச் சாலப்பொருந்தும் என எண்ணுகிறேன்.
 
உலகில் உள்ள பல இந்துக் கோயில்களில் நடைபெறும் சிறப்பான அபிசேகங்களின் போது வாசனைத் திரவியங்களாக சந்தனம், கற்பூரம், புனுகு சேர்த்துக் கொள்வார்கள். தமிழகத்திலே மிகவும் பணக்கார தெய்வமான திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிசேகத்திற்கு புனுகு சேர்க்கப்படுகிறது. புனுகுபூனையின் மதம் (புனுகு) பாவிக்கப்படுவதால் திருப்பதியான் சிலை வழவழப்பாக இருக்குமாம். புனுகு அதிகவிலைக்கு விற்கப்படுவதால் புனுகு எடுப்பதற்காக திருப்பதி தேவஸ்தான வளாகத்துள் புனுகுபூனைகளை வளர்க்க 2008ல் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்ததை பத்திரிகையில் வாசித்தேன். 2011ல் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் திருப்பதியானின் அபிசேகம் காணும் பக்தர்களும் புனுகு மணத்தில் திளைப்பர்.
 
திருமந்திரத்தை எழுதிய திருமூலர் ‘எமக்குள்ளே இருக்கும் இறைவனின் தன்மையை நாம் உணரும் போது சிவமணம் கமழும் என்பதை 
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் 
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர வல்லார்கட்கு 
நாவி அணைந்த நடுதறி ஆமே”                 - (திருமந்திரம்: 1459)
 
இத்திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூ மலர முன்னர் பூவின் மணம் அதனுள் அடங்கி இருப்பது போல, நமது ஆன்மா இறைவன் என்னும் உண்மையை உணர முன்னர், ஆன்மாவுக்குள் அடங்கியிருந்த சிவமணமும், வரைந்திருக்கும் ஓவியம் என்ன கருத்தைச் சொல்கிறது என்பதை உணர்ந்து அறிவது போல உணர்ந்து அறிய வல்லவர்கட்கு, புனுகு பூனை புணர்ந்த மூங்கிலில் புனுகு மணம் வீசுவது போல, விசும் என்கிறார்.
 
திருமூலரின் இந்தத் திருமந்திரத்திற்கு பொருள் எழுத முற்பட்ட போது நான் அடைந்த அதிர்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புனுகுபூனையை நாவி என்று அழைப்பர். நாபி என்பது தொப்பூழ். நாவியும், நாபியும் வேறு வேறானவை. தமிழகராதிகள் சில இரண்டையும் ஒன்றாகக் கருதுகின்றன.  நடுதறி, இங்கு மூங்கிலைக் குறிக்கிறது. எதற்காக புனுகுபூனை மூங்கிலோடு சேரவேண்டும்? என்ற கேள்விக்கு கிடைத்த விடை என்னை சிந்திக்க வைத்தது. அதற்கு முன்னர் புனுகு ஒரு வாசனைத் திரவியம் என்று நானும் நினைத்திருந்தேன். 
 
வாசனைப் பொருளாகக் கருதப்படும் புனுகு, புனுகுபூனையின் மதத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. புனுகு எப்படி பெறப்படுகின்றது என்பதை அறிந்தால் என்னைப்போல் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.
 
சில விலங்குகள் தமது இன்ப வேட்கையை வெளிப்படுத்தி எதிர்ப்பால் (ஆணையோ/பெண்ணையோ) விலங்கைக் கவர மணமுள்ள ஓமோனை வெளிப்படுத்தும். புனுகு பூனை தன் இன்பவேட்கைக்காக வெளிப்படுத்தும் ஓமோனே புனுகு. அந்த புனுகு எடுக்கப்படும் விதத்தையே “நாவி அணைந்த நடுதறி” காட்டுகிறது.
 
புனுகுபூனையைப் பிடித்து கூட்டில் அடைத்து நன்றாக உணவு கொடுத்து வளர்ப்பார்கள். அது தகுந்த வயதை அடைந்ததும், அதன் கூட்டில் மூங்கில் குழாய்களைப் பொருத்தி, அதற்கு இன்ப வேட்கை வரும்படி செய்வர். அப்போது புனுகுபூனை முங்கில் குழாய்களைச் சேர்ந்து (அணைந்து) மதத்தை வெளிப்படுத்தும். அது வெளிவிடும் மதம் மூங்கில் குழாய்க்குள் சேரும். மூங்கில் குழாயினுள் சேரும் மதம் புனுகு என அழைக்கப்படுகிறது.
 
புனுகுபூனையை வதைத்து எடுக்கும் புனுகு, 21ம் நூற்றாண்டிலும் கோயிலினுள் அபிசேகத்துக்கு மிகவும் வேண்டிய பொருளாக இருப்பது மூடநம்பிக்கையாகப் படவில்லையா? முட்டை என்பதை வாயால் சொல்லாது, உயிர்களைக் கொன்று தின்னாது வாழும் பிராமணர்கள் எப்படி புனுகு கலந்து கோயிலில் அபிசேகம் செய்கிறார்கள்? அதுவும் திருப்பதியானின் மேனி மினுமினுக்க புனுகு பூசுவது வேடிக்கையாக இல்லையா? கோயிலின் கருவறையினுள் புனுகு எப்படி நுழைந்தது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். :o
 

Jamaican Blue Mountain Coffee or Jamaica Blue Mountain Coffee is a classification of coffee grown in the Blue Mountains of Jamaica. The best lots of Blue Mountain coffee are noted for their mild flavour and lack of bitterness. Over the last several decades, this coffee has developed a reputation that has made it one of the most expensive and sought-after coffees in the world. Over 80% of all Jamaican Blue Mountain Coffee is exported to Japan.[1] In addition to its use for brewed coffee, the beans are the flavor base of Tia Maria coffee liqueur.

Jamaican Blue Mountain Coffee is a globally protected certification mark, meaning only coffee certified by the Coffee Industry Board of Jamaica can be labeled as such. It comes from a recognised growing region in the Blue Mountain region of Jamaica, and its cultivation is monitored by the Coffee Industry Board of Jamaica.

The Blue Mountains are generally located between Kingston to the south and Port Antonio to the north. Rising to 2,300 metres (7,500 ft), they are some of the highest mountains in the Caribbean. The climate of the region is cool and misty with high rainfall. The soil is rich, with excellent drainage. This combination of climate and soil is considered ideal for coffee.

இந்த கோப்பியை பல்கலை ஆராய்ச்சியாளர் ஒருவர் உணவு உற்பத்தி முகாமையாளர்களுக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்யும் போது நானும் பருகினேன்.

பயங்கர கச்சல். இது கோப்பி அடிமைகளுக்கு தான் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.