Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன் முரண்பாடுகள் கிடையாது - ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hakkim_CI.jpg

ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷவுடன் முரண்பாடு கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சில விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும் இருவருக்கும் இடையில் விரிசல் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டங்களில் ஜனாதிபதியுடன் வாதம் செய்வது புதிய விடயமல்ல எனவும், அவ்வாறான தர்க்கங்களை ஜனாதிபதி ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது எனவும், அதன் போது ஜனாதிபதி உரத்த தொனியில் பேசியதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களின் போது திறந்த மனதுடன் தங்களது கருத்துக்களை வெளியிட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் உத்தரவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் ஜனாதிபதி ஆத்திரமடைவதாகவும், அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் வழமையானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தியுள்ளதாகவும், இவற்றைக் கண்டு தாம் குழப்பமடையப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மையும் தமது கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103702/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன் மகிந்தருடன் முரண்பாடு எனக்கூறினால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் மகிந்தர், எல்லோருக்கும் முன்னால் படு தூசனத்தில பேசியும், பின்புறத்தையும் மண்ணையும் தட்டிப் போட்டு இந்தாள் இளிச்சுக் கொண்டு நிக்குது.

மானங்கெட்ட புழைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.