Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவைப் பெறும் கடைசி முயற்சி – நேரடியாகவே களமிறங்குகிறார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-M%20Mohan.jpg

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் கடைசி முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபடவுள்ளார். 

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்காது என்றே பரவலாக நம்பப்படுகிறது. 

இந்தியாவில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக, ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. 

நேற்று முன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதனை ஒப்புக்கொண்டிருந்தார். 

எனினும், இறுதி முயற்சியாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், நேரடியாகவே இந்தியாவின் ஆதரவைக் கோர அவர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வங்காள விரிகுடா நாடுகளின் பலதுறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் மியான்மர் தலைநகர், நேபிடோவில் நடைபெறவுள்ளது. 

இதில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை நேபிடோ புறப்படவுள்ளார். 

இந்தக் கூட்டத்தின் பக்க நிகழ்வாகவே, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார். 

இதன்போதே, இந்தியப் பிரதமரிடம் இறுதி முயற்சியாக ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளார். 

எனினும், இதற்கு இந்தியப் பிரதமர் வெளிப்படையாகப் பதில் ஏதும் கூறமாட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, இந்த மாநாட்டில் பங்கேற்பகாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நேபிடோ சென்றுள்ளார். 

இவரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சு நடத்தவுள்ளார். 

இதையடுத்து பீரிஸ் அங்கிருந்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள், ஜெனிவா செல்லவுள்ளார்.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140302110056

பாவம், நோபல் பரிசு கிடைக்கபோகுது என்று நினைத்தவருக்கு இந்த கதி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமெரிக்காவின் முதுகில் குத்தப்போகுது என நினைக்கிறேன்.. :rolleyes:

இந்தியா அமெரிக்காவின் முதுகில் குத்தப்போகுது என நினைக்கிறேன்.. :rolleyes:

கொங்கிரஸ் நேரு குடும்பம் காந்திக்கே நெஞ்சில் சுட்டு ஆட்சியை பிடித்தவர்கள்.

பொம்மை சிங்குவின் மகள் அமெரிக்க பிரசை. அப்பாவின் கள்ள காசில் நிறைய வேண்டி போட்டிருக்கிறா.

ஏதாவது ஏடாகூடமா செய்து சொத்தை இழக்க விரும்பமாட்டார். :)

இந்தியா அமெரிக்காவின் முதுகில் குத்தப்போகுது என நினைக்கிறேன்.. :rolleyes:

 

இத்தாலிய பாதுகாப்பு கொள்ளையின் ஒரு அம்சம் சீனா இலங்கையில் கால் ஊன்றினாலும், அமெரிக்காவை விடக்கூடாது என்பது. ரஜீவ்கூட இப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் முசோலினி புலிகளை சாட்டிக்கொண்டு அமெரிக்காவை ஏமாற்றுகிறார். அமெரிக்காவை ஐ.நாவில் தள்ளிவைத்துவிட்டு தான் முன்னால் நின்று பிரேரனைகளை கொண்டுவந்து அரசரை பதவி நீக்கி UNPயை கொண்டுவந்தால் சீனாத் துளாவாரம் விழுந்து படுக்கும். "இலங்கையை மிரட்டினால் அது சீனா பக்கம் சரிந்துவிடுமே" என்ற கதைக்கே இடமிருக்காது. 

 

தாம் தேர்தலில் வெல்லவும் வேண்டும். அதே நேரம் அரசர் பாதுகாப்பாக பதவில் இருக்க வேண்டும் என்பது இத்தாலிய பாதுகாப்பு கொள்ளையில் இருக்கும் ஒரு சரத்து.  இதில் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை விளங்கிகொள்ளவது கடினம். அரசர் பதவியில் இருப்பதால் மட்டுமே அமெரிக்கவை வெளியே வைத்திருக்கலாம் என்று பாதுகாப்பு கொள்ளை நம்புகிறது. அரசரே பதவியில் இருந்தாலும், UNP வந்தாலும் இன்றைய சீனாவின் இடத்தை இலங்கை இந்தியாவுக்கு கொடுக்குமா என்றால் அது நிச்சயமாக இல்லை. இந்தியா ஏற்கனவே இலங்கை மீது ஒருதடவை படை எடுத்த்தால் இனி SLFP யோ, UNP யோ இந்தியாவை நம்ப மாட்டர்கள். உள்ளெ வந்து காலூன்ற இடம் கொடுக்க மாட்டர்கள். முசோலினி எனத்தை குத்தி முறிஞ்சாலும் அதில் சிங்களவர் சூடு கண்ட பூனையாகத்தான் நடந்து கொள்வார்கள். நமது யாழ்களத்து இத்தாலிய பாதுகாப்பு கொள்ளை தத்துவஞானிகள் சோடை போனதும் இதனால்த்தான். எல்லா இத்தாலிய பாதுகாப்பு கொள்ளைகளும் இலங்கைக்கு வெளியே மட்டும்தான் செயல்ப்படலாம்.

 

ஆனால் UNP வந்தால் சீனாவைன் இடத்தை பிடிக்க அமெரிக்கா காலூன்ற இடம் உண்டு. இது பிரதானமாக தமிழ்நாட்டால் விளைவது. தமிழ் நாட்டின் பொருளாதார வளர்த்தியை முந்தாவிட்டால் இலங்கை தமிழ்நாட்டின் சந்தையாவதை இனி கான காலத்துக்கு தடுத்துப்பிடிப்பது கஸ்டம். இதனால் அமெரிக்காவை, மேற்குநாடுகளை இலங்கையில் முதலிட வருந்தி அழைப்பதே  அவர்களுக்கு இந்த சீனாவின் பாரிய கடன் சுமையிலிருட்ந்து தப்ப இருக்கும் ஒரே வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணே ஆசியா கோப்பை கிரிகெட்டில் ஒபிநிங் ல இறங்கிற மாதிரி தலையங்கம் போடுறீங்கள். நல்ல வருவீங்க அண்ணே  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.