Jump to content

ஆண்களுக்கு திருமண ஆசை ஏற்படாததற்கும் காரணங்கள் உண்டு !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது.

 

வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை.

ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒருவேளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும், இன்னமும் கூட உங்களுக்கு தகுந்த பெண்ணை கண்டுபிடிக்க திணறினால், உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை என்னெவென்று ஆராய வேண்டும். சரி, நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதற்கான முக்கியமான 10 காரணங்களை இப்போது பார்க்கலாமா…

சுதந்திரப் பிரியர்கள்

திருமணமாகாத ஆடவராக இருப்பதிலும் சில நன்மைகள் அடங்கியுள்ளன. நினைத்த நேரத்தில் காலை எழுந்திருக்க முடியும், பிடித்த உணவை சாப்பிட முடியும், நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியும். இவை அனைத்தையும் குறை சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள்.

 

மேலும் வீட்டில், உங்களுக்கு பிடித்த கிரிகெட் அல்லது கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பதற்கு பதிலாக, காதலிக்காக மணிக்கணக்கில் காத்திருக்கவோ அல்லது அவளை காண வெளியில் செல்வதற்கு கண்ணாடி முன் பல மணிநேரம் செலவிடவோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் பெண்கள் வேண்டுமென்றால், கண்டிப்பாக சிலவற்றை தியாகம் செய்யத் தான் வேண்டும். அதற்கு தயாராக இல்லாதவர்கள் தான், திருமணம் புரியாமல் இருப்பார்கள்.

தனி உலகத்தில் சஞ்சரிக்காதீர்கள்

உங்களுக்கென்று ஒரு உலகம் என்று எப்போதும் ஒரு கோட்டிற்குள்ளேயே வாழ்கிறீர்களா? அந்த உலகத்தை விட்டு வெளிவரவும், உங்கள் மனம் இடம் தரவில்லையா? அப்படியானால் உங்களை சுற்றி உள்ளவர்களை, நீங்கள் அலுப்புத் தட்டி தூங்க வைத்து விடுவீர்கள். அவர்களிடம் பேச சில நினைவுகள் மட்டுமே உங்களிடம் இருக்கும். சிறிது காலம் கழித்து சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கும்.

 

இதில் பெரிய கொடுமை என்னெவென்றால், அலுப்புத் தட்ட வைக்கும் குணாதிசயம் உடையவர் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும், அதனை இரகசியமாக வைத்திருக்க மாட்டீர்கள். ஒரு பெண்ணை உங்களால் சிரிக்க வைக்க முடிந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

தன்னைத்தானே காதலிப்பவரா

நீங்கள் உங்கள் மீதே அதிக காதல் கொண்டவராக உள்ளீர்களா? அதை தவிர வேறு எதுவும் உங்களை கவரவில்லையா? அப்படியானால் அதிக கவர்ச்சியுடன் அழகான பெண்ணை கண்ட போதிலும் கூட, உங்கள் மனதில் “அவளை விட நான் தான் அழகு” என்ற எண்ணம் தான் இருக்கும். மற்றவர்களின் மேல் குற்றம் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் கடினமானது, நம்மீது உள்ள குறைகளை நாம் உணர்வது. நீங்கள் இந்த வகை ஆணாக இருந்தால், ஏன் இன்னும் திருமண பந்தத்தில் ஈடுபடவில்லை என்று இப்போது புரிந்திருப்பீர்கள்.

 

விளையாட்டுப் பிரியரா

இந்த தலைமுறையை சேர்ந்த விளையாட்டு விரும்பிகள், கணிப்பொறி முன் அமர்ந்து விளையாடுவதில் அலாதி காதல் கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்த வரை ,விளையாட்டில் எதிரிகளை வீழ்த்தி, முதல் இடத்தை அடைந்து, உலக பதிவை உடைத்தெறிந்தால் தான் இடைவேளையே விடுவார்கள். ஆகவே

 

இவ்வகையை சேர்ந்தவராக இருந்தால், ஏன் உங்களுக்கு இன்னும் காதலி இல்லை என்பது தெளிவாக புரிந்திருக்கும். அப்படியே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தாலும், ஒன்று நீங்கள் மாற வேண்டும் அல்லது அவள் உங்களுக்காக மாற வேண்டும்.

உறவில் பயம்

சுதந்திரமாக இருப்பதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் வாழ்க்கையில் ஏன் பெண் ஒரு அங்கமாக இல்லை என்பது உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. பொதுவாக பெண்களுக்கு ஒரு உறவில் ஈடுபடுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும்.

 

அவர்களை விட்டுவிட்டு வேறு பெண்ணை நீங்கள் நாடலாம் என்ற பயம் உங்கள் மீது இருக்கலாம். ஆனால் இந்த புதிய உறவு என்பது ஒவ்வொரு உறவுமுறையிலும் முக்கியமான ஒன்று. இந்த உறவின் மீது மதிப்பு வைத்துள்ள ஒரு ஆணை தான் பெண்கள் விரும்புவார்கள். இதை தவிர மற்றவை மீது விருப்பம் காட்டும் ஆணை, எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.

வேலை இல்லை என்ற பயம்

அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்களின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஆனால் சிலசமயங்களில் வெளியே செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக ஆசைப்படுவார்கள். வெளியே செல்வதென்றால், சாப்பிட ஏதாவது வாங்கி தருவது, பயணச் செலவை ஏற்பது, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவழிப்பது போன்றவைகளாகும். ஆனால் வேலை போய்விட்டதென்றால், இந்த செலவை எல்லாம் உங்களால் செய்ய முடியாது. அதனால் கையில் பணம் இல்லாத போது, காதல் போன்றவற்றில் விழமாட்டீர்கள்.

 

அமைதிப்  பிரியரா

அமைதியாக இருந்து, மற்றவர்களுக்கு உதவி புரிந்து அனுசரணையாக நடந்து கொள்பவரை தான் ஒரு பெண் விரும்புவாள் என்று நீங்கள் நினைத்தால், முதலில் உண்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை நல்ல குணங்கள் உள்ள ஆண்கள், பெண்களிடம் சகஜமாக பழகுவதற்கு அதிக காலம் எடுப்பார்கள். சில நேரம் மிகவும் அதிக நேரம் எடுப்பதால், அந்த பெண் அவன் வாழ்க்கையை விட்டே சென்றிருப்பாள். மேலும் பெண்ணின் கண்களுக்கு மிகவும் நல்லவனாக, அமைதியானவனாக காட்சி அளித்தால், உங்களை இளக்காரமாக நினைத்து விடுவாள்.

 

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரு கால்மிதியை போல் பயன்படுத்தப்படுவீர்கள். ஆகவே மற்ற ஆண்களிடம் பழகும் போது, நீங்கள் காட்டும் உங்கள் கடுமையான பக்கத்தை பெண்கள் காணச் செய்ய வேண்டும். உங்களை இணங்கச் செய்வது கடினமாக இருந்தாலும், அதில் ஒரு இனிமையை அவர்கள் காண வேண்டும். மேலும் மற்றவர்களை தாக்கி, அவளை காப்பாற்றும் நிலை வரும் போது, நீங்கள் அப்படி செய்யவே அவள் விரும்புவாள்.

ஓவர் அடக்கம் காதலுக்கு ஆகாது

 

அடக்கம் என்ற குணத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அதற்காக எப்போது பார்த்தாலும், அதிக அடக்கத்துடன் இருந்தால், அது கொஞ்சம் ஜாஸ்தி தான். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் பேசும் போது, குறிக்கிட்டு கொண்டே இருப்பார்கள்.

 

சில கடுமையான கருத்துக்கள் மற்றும் நாகரீகமற்ற நகைச்சுவையை சொன்னாலும் கூட, யாருக்கும் சிரிக்க தோன்றாது. நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், ஒரு பெண்ணை பொறுத்தவரை அவள் நகத்தை துளையிடும் துன்பமாக நீங்கள் விளங்குவீர்கள். ஆகவே நீங்கள் ஒரு நல்ல நபராக மாறும் வரை, எந்த பெண்ணையும் தொந்தரவு செய்ய வேண்டாம்.

நண்பர்களுடன் கும்மாளமடிப்பவரா

ஆண்களை, அவர்களின் சேர்க்கையை வைத்தே எடை போடலாம் என்று சொல்வார்கள். அதே போல் பெண்களும் கூட, அவர்களின் சேர்க்கையை வைத்து தான் அவர்களை எடை போடுகிறார்கள். இவ்வாறு உங்களை சுற்றி நண்பர்கள் என்ற பெயரில் குரங்கு கூட்டம் ஒன்று எப்போதும் உங்களை விட்டு பிரியாமல் இருக்கிறதா?

 

அப்படியானால் கண்டிப்பாக ஒரு பெண்ணும் கிடைக்கப்போவதில்லை. மேலும் பழகும் பெண்ணுட் சிடுசிடுப்பாகவே நடந்து கொள்வார்கள். எனவே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், இதுவா, அதுவா என்று.

சோம்பேறிகள்

ஷேவ்விங் செய்யவோ அல்லது குளிக்கவோ பிடிப்பதில்லையா? நினைவு தெரிந்த நாள் முதல் தலைமுடியை வெட்டவில்லையா? துணிமணிகளை சரிவர துவைக்காமல், அவைகளை அழுக்குடன் அணிகிறீர்களா? மிச்சமான உணவு அறையெங்கும் சிந்தி கிடக்கிறதா? அறையில் உள்ள பர்னிச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறதா? அப்படியானால் நிச்சயம் காதல் உங்களை தேடி வராது.

 

www.ekuruvi.com

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மா சும்மா எழுதாதீங்க சார். ஒரு பெண்ணைக் காதலிச்சுப் பாருங்க.. அப்புறம் புரியம்.. அது ஒரு தேவையில்லாத வேலைன்னு.

 

நாங்க நேரமாகுதுன்னு.. விழுந்தடிச்சு சொன்ன நேரத்துக்குப் போனா.. அவா அங்க இருக்கமாட்டா. லேட்டா வந்தா.. ஒரு சாரி போதும் அவாவுக்கு.

 

அதுவே நாங்க கொஞ்சம் லேட்டா போனமுன்னு வையுங்க.. மூஞ்சிய ஒரு பக்கம் திருப்புவாங்க.. அதைச் சமாளிச்சு உள்ள போனா.. ஆயிரம் கேள்வி பதில்.. ஏண்டா வந்தமுன்னு இருக்கும்.

 

இந்த நிலையில் எவன் சார்.. பொண்ணுங்க உறவுன்னு தொத்திக்கிட்டு திரிவான். அதிலும் தனிய காயா இருக்கலாம்.

 

காதலிச்சா.. ஒரு பொண்ணு மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். அதுவே காதலிக்கல்லைன்னா.. றோட்டால போற அத்தனையும் கண்ணுக்குத் தெரியும். இதில எது திறம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட,
யாரப்பா முழு பூசனிக்காயை சோற்றுக்குள் புதைத்தது......
  • கருத்துக்கள உறவுகள்
Posted

...ஒரு பெண்ணைக் காதலிச்சுப் பாருங்க.. அப்புறம் புரியம்.. அது ஒரு தேவையில்லாத வேலைன்னு.

 

....

 

காதலிச்சா.. ஒரு பொண்ணு மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். அதுவே காதலிக்கல்லைன்னா.. றோட்டால போற அத்தனையும் கண்ணுக்குத் தெரியும். இதில எது திறம். :lol::D

 

பெண்களை embarrassed-smiley18.gif ..!

 

நெடுக்ஸ் எழுதியுள்ளதை பார்த்தால் இந்த பொம்மைகள் ஞாபகம் தான் வந்தது! :lol:

இந்த வைராக்கியம் எத்தனை நாட்கள் தாங்குமென பார்ப்போமே! smiley-with-glasses23.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்ந்தா இப்படி கூலா வாழனும். எவனு/ளும் கேள்வி கேட்க்கப்படாது. அதைவிட்டிட்டு.. கையில ஒன்னு.. காலில ஒன்னு.. முன்னாடி ஒன்னு.. பின்னாடி ஒன்னு.. என்று கட்டிக்கிட்டு திரியேலாது. அது ரோதனை. :)

 

1979476_10151943110712944_1982682894_n.j

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.