Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபூஷிகாவும் சந்தேகநபரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mm2344.jpg

கிளிநொச்சியில் தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூஷிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேக நபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவரை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தயார் ஜெயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது, அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
குறித்த சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அவர்களுடைய வீட்டிலிருந்து, நிலத்தின் கீழ் இருப் பவற்றைக் கண்டறியும் கருவி மீட்கப்பட்டமை என்பன தொடர்பிலேயே ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
 
இவர்களைக் கைது செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வவுனியாவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு விட்டு மறு நாள் 14 ஆம் திகதி இரவு கிளி நொச்சி நீதிமன்ற பதில் நீதிவானின் வீட்டில் முற்படுத்தினர்.
 
அதனையடுத்து தாயார் ஜெயகுமாரியை 18 நாள் பூஸாவில் தடுத்து வைத்து விசாரிக்கவும், விபூசிகாவை மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் இரு நாள் மருத்துவ மனையில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா மீளவும் கிளி நொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது அவரை கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தி ருந்தது.
 
விபூசிகா இன்னமும் விடுவிக்கப்படாமையால் அவருக்காக கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சிலர் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளனர் என்று  தெரிவிக்கப்படுகின்றது.        

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=625712777025151939

 

பெண்கள் அமைப்புகள், சிறுமிகள் அமைப்புகளுக்கு தெரிவித்து அழுத்தத்தை கூட்டவேண்டும்.

ஜெனோசைட் தூதரகத்தை சுற்றி இருக்கும் அலுவலங்களில் பிரசாரம் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில.. சிறுவர் போராளிகள் இருக்கான்னு பார்க்க ஒருத்தர் வந்தாரே.. ஒலரா ஒட்டுண்ணு.. என்னு ஒருத்த. அவர் இருக்காரா. யுனிசெப் இருக்கா... இதெல்லாம் அவங்க கண்ணுக்குப் படாது போல..!

 

துரைமார்.. இதை எல்லாம் கண்டுக்காத எண்டு சொல்லி இருப்பினம். யு என் னோ.. யுனிசெப்.. அடக்கிவாசிக்கும்.

 

அதுக்கு மேல.. கிளிநொச்சி.. சிறுவர் உரிமை காப்பாளர் என்று.. யுனிசெப் விருது வாங்க சங்கரி தாத்தா எங்க..

 

ஓ.. அவரு நவிப்பிள்ளைக்கு புலிகள் பயங்கரவாதிகள் என்று கடிதம் எழுதிட்டு இருக்காரில்ல..!

 

என்னமா உலகத்தையும் மக்களையும் பேய்க்காட்டிக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கு படை பந்தோபஸ்து.. சட்டம்.. ஒழுங்கு.. நீதிமன்றம்.. நீதிபதி.. இறையாண்மை.. ஓட்டாமை.. எல்லாம் ஒரு கேடு. :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில.. சிறுவர் போராளிகள் இருக்கான்னு பார்க்க ஒருத்தர் வந்தாரே.. ஒலரா ஒட்டுண்ணு.. என்னு ஒருத்த. அவர் இருக்காரா. யுனிசெப் இருக்கா... இதெல்லாம் அவங்க கண்ணுக்குப் படாது போல..!

 

துரைமார்.. இதை எல்லாம் கண்டுக்காத எண்டு சொல்லி இருப்பினம். யு என் னோ.. யுனிசெப்.. அடக்கிவாசிக்கும்.

 

அதுக்கு மேல.. கிளிநொச்சி.. சிறுவர் உரிமை காப்பாளர் என்று.. யுனிசெப் விருது வாங்க சங்கரி தாத்தா எங்க..

 

ஓ.. அவரு நவிப்பிள்ளைக்கு புலிகள் பயங்கரவாதிகள் என்று கடிதம் எழுதிட்டு இருக்காரில்ல..!

 

என்னமா உலகத்தையும் மக்களையும் பேய்க்காட்டிக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கு படை பந்தோபஸ்து.. சட்டம்.. ஒழுங்கு.. நீதிமன்றம்.. நீதிபதி.. இறையாண்மை.. ஓட்டாமை.. எல்லாம் ஒரு கேடு. :icon_idea:

 

நான்  நினைக்கின்றேன்

இவற்றை  எல்லாம் தாண்டி எமது பிரச்சினை  சென்றுவிட்டதாக...

இனி  ஒட்டுமொத்த  தமிழினத்தின் அழிவுக்குள் இவை வந்துவிடும்

தனித்தனியாக அல்ல.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.