Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்க முடியாது! - மஹிந்த சமரசிங்க திட்டவட்டமாகத் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்க முடியாது! - மஹிந்த சமரசிங்க திட்டவட்டமாகத் தெரிவிப்பு. 

[saturday, 2014-03-29 07:51:51]
samarasinge-290314-150.jpg

ஜெனிவா தீர்மானத்தை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும் செய்து கொடுக்கப் போவதில்லை என்றும் மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2012 மற்றும் 2013 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தீர்மானத்தை முன்வைத்த தரப்பினருக்கு பெரும்பான்மை வாக்கு கிட்டவில்லை. இம்முறை முடிவுகளை நோக்குகையில் அவ்வாறே தீர்மானத்தை கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.47 வாக்குகளில் 23 வாக்குகளே கிடைத்துள்ளன.

  

இதில் பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்கு 24 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்ற பெரும்பாலானவர்களின் ஆதரவு இந்த தீர்மானத்துக்கு வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். ஒரு பிரிவின் தீர்மானத்துக்கு எதிராகவும் மற்றும் ஒரு தரப்பினர் வாக்களிப்பிலிருந்து விலகிச் செயற்பட்டுள்ளனர். இந்த வகையில் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித தார்மிக உரிமையும் கிடையாது.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இது தொடர்பில் பாரிய அரசியல் அழுத்தங்களை இப் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரயோகித்தன. வாக்களிப்பு தொடர்பான சந்தர்ப்பங்களில் இது எமக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அவ்வாறிருந்தும் அவர்களால் பெரும்பான்மை ஆதரவை காட்ட முடியாமல் போனது.

இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் முன்பே நாம் ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு எமது தெளிவான ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருந்தோம். இந்த தீர்மானத்தை எந்த வகையிலும் நாம் ஏற்கப்போவதில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருந்தோம். மேற்படி தீர்மானத்தில் எவ்வாறு திருத்தம் கொண்டு வருவது அதனை எவ்வாறு பலமிழக்கச் செய்வது போன்ற எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாம் சமுகமளிக்கவுமில்லை. ஏனெனில் இதனை நாங்கள் ஒரு அரசியல் செயல்பாடாகவே கருதினோம்.

இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஐ. நா. மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தோடும் நவநீதம்பிள்ளையோடும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்களே. இந்த வகையில் இதுபோன்ற நூற்றுக் கணக்கில் தீர்மானம்கள் கொண்டுவரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டாலும் சர்வதேச சக்திகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் தடையின்றி முன்னெடுக்கும். இப்போதும் அதை மேற்கொள்வது போல் எதிர்காலத்திலும் அதனைச் செய்வோம். இது போன்றதொரு விடயம் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை இம்முறை இந்தியா தெளிவாக உணர்ந்து கொண்டதாலேயே தீர்மானத்துக்கு நடுநிலை வகித்தது. இந்த தீர்மானம் மூலம் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடு ஏற்படும் என்பதை இந்தியத் தூதுவரும் தெரிவித்திருந்தார். இந்தியாவின் இந்த வெளிப்பாடு ஏனைய நாடுகளுக்கும் சிறந்த செய்தியாக அமைந்தது.

நேற்று முன்தினம் முடிவையடுத்து ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். அச்சந்தர்ப்பத்தில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு எம்மிடம் கேட்கும். அவர்கள் இங்கு வந்து தேவையான தகவல்களைப் பெறுதல் மற்றும் விசாரணைகளுக்கு எமது ஒத்துழைப்பையும் கோரும். நாம் அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இதனை நாம் ஆரம்பம் முதலே தெளிவாகக் கூறி வந்துள்ளோம்.

எவ்வாறாயினும் ஐ. நா. மனிதஉரிமை ஆணைக் குழு அலுவலகமோ நவநீதம்பிள்ளையோ பாரபட்சமற்ற விதத்தில் செயற்படப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். மேற்கத்தைய நாடுகளினாலேயே இந்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் இதுவும் தருஷ்மன் அறிக்கை போன்றதொன்றே என்பதையும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

ஏனெனில் மேற்படி ஆணைக் குழு அலுவலகத்தில் பணிபுரிவோரில் 100 ற்கு 85 வீதமானோர் எமக்கெதிராகச் செயற்படுகின்ற மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்தவர்களே. இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஐ. நா. வின் நிதி ஒதுக்கீடு 50 வீதமே இடம்பெறுகிறது. மீதம் 50 வீதத்தை இத்தகைய நாடுகளிடமிருந்தே அலுவலகம் பெற்றுக் கொள்கிறது. எவ்வாறான நிபந்தனைகளுடன் இந்த நிதி பெறப்படுகிறது என்பதும் வெளிப்படையானதல்ல.

ஏற்கனவே நாம் நவநீதம்பிள்ளைக்கு இலங்கைக்கு வர அழைப்பு விடுத்தோம். அவர் வந்து செயற்பட்ட விதம் அதன் பிரதிபலன்கள் யாவரும் அறிந்ததே. இதனால் மீண்டும் ஒருமுறை அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமான ரீதியில் அறிக்கை வெளியிட இடமளிக்கப் போவதில்லை. அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106686&category=TamilNews&language=tamil

நீங்கள் விசாரணை வசதிகள் செய்து கொடுக்கமாட்டீர்கள் .. ஏன் என்றால் குற்றவாளிகளான உங்களை எப்படி விசாரணைம் மூலம் மாட்டி தூக்கில் தொங்க நீங்கள் என்ன முட்டாள்களா? உலகம் எல்லாத்தடைகள் கொண்டு வர தெரியும் உங்கள் நிலமை...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே  தான் இருப்பீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்

தொடர்ந்து முரண்படுங்கள்

மோதுங்கள்

தமிழரின் விடுதலை

உங்கள் கையில் தான் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினாவுக்கு முதலில் ஐனநாயகம், வாக்கெடுப்பு பயிற்சி கொடுக்கவேணும்.

வராத ஆக்களை எப்படி 'எதிர்ப்பாளர்' ஆக்கிறார்? வந்திருந்தால் ஆதரவா போட்டிருக்கலாம் தானே.

சாதாரண சிங்கள மக்களை சுத்தத் தான் நிக்கிறார் இந்த மனித உரிமைகள் மங்குனீ பொய் அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் விஜயதாரணி எம்எல்ஏயும் அதைத்தான் சொல்லுறா.. வாக்களிப்பில் இருந்து ஒதுங்கினாலும் அது எதிர்ப்பாம். அப்படிப் பார்த்தால் இவர்கள் யாருமே எம் எல் ஏ ஆக இருக்க முடியாது. வாக்களிக்காமல் விட்ட சனத்தை கணக்குப் பார்த்தால் இவைக்கு தோல்விதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா,  இந்த லொஜிக்கில 2005 ஜனாதிபதி தேர்தலில, வடக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால், ரணில் தான் இன்று ஜனாதிபதியாய் இருந்திருப்பார் எண்டு இந்தாள் ஒத்துக் கொண்டு, மகிந்தரை ராஜினாமா செய்ய சொல்லலாமே..

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.