Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் மோதல், கொழும்பில் கூடல்! – அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் மோதல், கொழும்பில் கூடல்! – அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை. 

[Tuesday, 2014-04-01 07:53:49]
us-sl-flags-010414-150.jpg

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தலைமையகம், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பிரதானி அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் - 24' எனும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் வரும் 9ம் திகதி வரை கொழும்பு, கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்கா உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 46 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். வியட்நாம், கனடா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, நேபாளம், மாலைத்தீவு, கம்போடியா, இதோனேசியா, மலேசியா, மொங்கோலியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 26பேரும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 20பேரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் முப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 23பேரும், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 21பேரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு பாதுகாப்பு பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நிகழ்வு கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசெல் ஜே. சிசன் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆசிய – பசுபிக் வலயத்தில் ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் அல்லது திடீர் தேவைகளின் போது நாடுகளுக்கிடையில் ஏற்படவேண்டிய அந்நியோன்ய நடவடிக்கைகள் மற்றும் செயற்றிட்ட விருத்திகள் தொடர்பில் இந்த கருத்தரங்கின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=106881&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உலகநடப்பு தெரியாவிட்டால் இப்படித்தான் எழுதத் தோன்றும். இலங்கை இன்னும் குற்றவாளி நாடு அல்ல. இப்போதுதான் விசாரணை நடத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்கi இராச தந்திரவிதமாக அணுகாமல் இப்படி நொட்டை, சொட்டை சொல்லிக் கொண்டிருங்கள். உருப்படுவீர்கள்.... சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராட்டம். ஆனால் கல்வி, உணவுக்காக அவர்களையே நம்பியிருந்த போரட்டத்தை நாங்கள் நடத்தி விட்டு இப்படிக் கதைக்கலாமா? அப்படி அவர்களையே நம்பி இருந்ததால் தான் கடைசிக் காலத்தில் அதையே அவன் ஆயுதம் ஆக்கினான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நம்ம வீட்டிலை என்ன நடக்குதாக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தர்ப்பங்கi இராச தந்திரவிதமாக அணுகாமல் இப்படி நொட்டை, சொட்டை சொல்லிக் கொண்டிருங்கள். உருப்படுவீர்கள்.... சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராட்டம். ஆனால் கல்வி, உணவுக்காக அவர்களையே நம்பியிருந்த போரட்டத்தை நாங்கள் நடத்தி விட்டு இப்படிக் கதைக்கலாமா? அப்படி அவர்களையே நம்பி இருந்ததால் தான் கடைசிக் காலத்தில் அதையே அவன் ஆயுதம் ஆக்கினான்...

KEEP IT UP. 

இன்னும் அதிகமாக விடயங்களை அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.  முன்னரே இவ்வாறு சிந்தித்திருந்தால் பல விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்பந்தமே இல்லாதவர்கள் போலக் கதைப்பதவர்கள் எல்லாம் புத்திமதி சொல்ல வேண்டாம். எவன் தன்னுடைய போராட்டம் என நினைக்கின்றானோ அவன் மட்டுமே பதிலளிக்கத் தகுதி உள்ளவன். சிங்களவ அரசை உணவுத் தேவைக்காக நம்பியிருந்தது போராடியவர்களின் தோல்வியல்ல, புலம்பெயர் தமிழர்களின் தோல்வி. வணங்காமண் போலப் பல கப்பல்களை முதலே அனுப்பும் சக்தியைப் பெற்றிருந்திருக்க வேண்டும்.

உங்களை  Encourage செய்வதற்காக எழுதினால்கூட அதனை Negative ஆக எடுத்தால் உங்களை யாரும் திருத்த முடியாது.  ஒரு காலத்தில் பெரியாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிந்தீர்கள்.  பின்னர், வெளிநாடுகளில் காசு அடித்தவர்களுக்குச் சப்போர்ட் செய்து கொண்டு திரிந்தீர்கள்.  இப்ப பெரியாரின் கொள்கையைக் குப்பையில் வீசிவிட்டுத் தமிழையும் இந்து சமயத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகிறீர்கள்.  நியாயத்தை எழுதினால் எதிரானவர்கள் என்ற கொள்கையிலிருந்து எப்பதான் திருந்தப் போகிறீர்களோ தெரியவில்லை.  இன்றைய சர்வதேச அரசியல் நிலையில் நியாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமல் எமது தேசத்திற்கு விடுதலை காணமுடியாது.

சம்பந்தம் இருக்கா இல்லையா என்பதை ஒருவரின் எழுத்திலிருந்து (புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தாலன்றி) அறிந்து கொள்ள முடியாது.    யாழ்ல எழுதுற கருத்துகளை வைச்சு மட்டும் ஒருவரை எடைபோட முடியாது என்பதை பலரை நேரில் சந்திச்ச,   பல வருசங்களா யாழ்ல இருக்கிற,  உங்களுக்கு விளங்கவில்லை.

நான் மேல சொன்னது மாதிரி, இன்னும் கொஞ்சம் படிக்கப் பாருங்கள்.  முன்னர் இருந்த உங்கள் எழுத்திலிருந்து இப்ப நிறையவே தெளிவு இருக்கிறது.  அதைத்தான் ஊக்குவிக்க எழுதினேன்.  அதுவும் பிடிக்கவில்லையாயின் Go to Hell.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு போதும் பெரியாரைத் தூக்கியே பிடிக்கவில்லை. என்றைக்குமே அந்த மனிதரை ஆதரித்துப் பதிலளித்ததில்லை. தெரியாமல் உளற வேண்டாம். புலம்பெயர் மக்களைத் தூக்கிப் பிடித்தல் என்பது, சம்பந்தமே இல்லாத நபர்கள் தங்களின் வஞ்சத்தைத் தீர்க்கப் பாவிக்கமுயலும்போது அவர்களை ஆதரித்திருக்கின்றேன். ஆனால் மேலே எழுதிய கருத்தில் நானும் ஒரு புலம்பெயர்ந்தவன் என்ற பாணியில், என்னையும் உள்வாங்கியே குற்றச்சாட்டினைத் தெரிவித்திருக்கின்றேன். போராட்டத்தின் தோல்வியில் என் பங்கும் இருக்கின்றது என்ற குற்ற உணர்வை என்றைக்குமே என் நெஞ்சில் இருக்கின்றது. மற்றும்படி பெரியாரை நான் தூக்கிப் பிடித்ததேன் என்பது வேடிக்கையான கருத்து. பெரியார் பற்றி எழுதும்போது, ஆரம்பத்தில் அடிப்படை மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் விவாதங்கள் செய்யும்போது, பெற்ற தகவல்கள் என்றைக்குமே அந்த மனிதரை மதிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாது என்பதைப் பரிபூரணமாக நம்புகின்றேன். என் கருத்தைத் தெளிவாக எழுத வைக்க முயன்றமைக்கு நன்றிகள். ஆனால் நீங்கள் முதலில் தெளிவாக எழுதினால் தான் உங்களின் நோக்கம் புரியும்.

ஆரம்பத்தில் அடிப்படை மட்டுமே தெரிந்திருந்தது.  ஆனால் விவாதங்கள் செய்யும்போது, பெற்ற தகவல்கள்.....

நீங்க சொன்ன மாதிரியே எல்லா விடயங்களிலயும்  தகவல்களைச் சேகரித்து எழுதுங்கள்.  நன்மையும் தீமையும் நாம எடுக்கிற விதத்திலதான் இருக்குது. 

இன்னைக்கு (நமக்கு) வேணா பெரியார் மதிக்கத்தகாதவராக இருக்கலாம்.  ஆனா, அவரோl காலகட்டத்தில, அவர் இருந்த ஏரியாவுல (தமிழ்நாடு) அவரோட கொள்கைகள் தேவையாத்தான் இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.