Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அவசரகாலச் சட்டத்தைச் கையில் எடுப்பார்களா மகிந்த சகோதரர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளை அடக்க வழிதேடும் படலங்களா தொடர்கிறது? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -ஹரேந்திரன்

New%20LTTE_CI.jpg

 

 

இலங்கையிலிருந்து நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கும்செய்திகள் இலங்கையிலுள்ள  தமிழ்முஸ்லிம்சிறுபான்மையினர் மீண்டும் இலக்குவைத்து  பகிரங்கமாகபழிவாங்கப்படுவதற்கான ஆயத்தங்களா என்ற அச்ச நிலையைஉருவாக்குகிறது.  இதற்கு வசதியாக அவசரகாலச் சட்டத்தைஇலங்கையில் மீண்டும் வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்குஅரசாங்கம் திட்டமிட்டு  செயல்பட்டு  வருகின்றதா  என்றசந்தேகமும் எழுந்துள்ளது.

 

தமிழ் அமைப்புக்களைத்  தடைசெய்துள்ளன.  அந்தஅமைப்புக்கள்  தொடர்புடைய சுமார் 400 பேரின் பெயர்விபரங்களையும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.அந்தத் தரப்பினருடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர்என எச்சரிக்கப்பட்டுள்ளதுவிடுதலைப் புலிகள் மீளஒருங்கிணைய  முயற்சிப்பதாக  ஊடகங்களில் செய்திகள்வெளியிடப்படுகின்றனவிடுதலைப் புலிகளின் புதியதலைவர்கள்குற்றவாளிகள்  என்ற போர்வையில் சுவரொட்டிகள்  ஒட்டப்படுகின்றனவடக்கில் மீளவும் இராணுவமினி முகாம்கள் முளைக்கின்றனபாஸ் நடைமுறைகள்அமுலுக்கு வருகின்றனவீடு வீடாக என்று விபரங்களைச்சேகரிக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

 

இவ்வாறு திடீரென அரசாங்கம் செயல்படுவதற்கு இரண்டுகாரணங்கள் இருப்பதாகக் கருப்படுகிறது.  ஒன்று ஜெனீவாவில்அடைந்த தோல்விமற்றையது  அதனைக்  காட்டி பிரசாரம்செய்தபோதிலும் கூட தேர்தலில் அடைந்த  பின்னடைவு.

 

இதில்மாகாண சபைத் தேர்தலுக்கு ஒருமாத காலத்திற்குமுன்னரே ஆளும் கட்சி தேர்தலில் வீழ்ச்சியைச் சந்திக்கநேரிடும் என புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்தரப்பினருக்குஅறிக்கை சமர்ப்பித்திருந்ததுஇதனால் சற்று குழம்பியஅரசாங்கம்வீழ்ச்சியைத் தடுப்பதற்காகபுலிகளின் மீள்உருவாக ஆரம்பித்துள்ளதாக  ஊடகங்கள்  மூலம் பல செய்திகளை வெளியிட்டனஜெனீவா பிரேரணை நாட்டுஎதிரான சதியாகவும் தேர்தல் மேடைகளில் அரசாங்கம் பிரசாரத்திற்காகப்  பயன்படுத்திக் கொண்டது.

 

இறுதியாக நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தல்பிரசாரங்களில் போதுஜெனிவா பிரேரணைக்கு எதிராகவாக்களிக்குமாறு  ஜனாதிபதி கோரியிருந்தார்இறுதியாகநடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்கூட, ''28ஆம் திகதிஜெனீவாவில் தோற்பதில்லை எனக்கு கவலை இல்லை. 29ஆம்திகதி இங்கு வெல்வதே மிகமுக்கியமானது'' எனக் கூறி தேர்தல்பிரசாரத்தை மகிந்த ராஜபக் முடித்துவைத்திருந்தார்.

 

இலங்கை தேர்தல் வரலாற்றில் அரச அதிகாரிகளும்அரசவளங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தேர்தலாக2014ஆம் ஆண்டு இந்தத் தேர்தலை தேர்தல் கண்காணிப்பில்ஈடுபட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனஅத்துடன்,பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில்இருக்கும் இந்த அரசாங்கம் பலத்தை இழகக்கூடும் என்றஎச்சரிக்கையே இந்தத் தேர்தலின் முடிவுகள் சொல்லியுள்ளன.

 

ஜெனீவா தீர்மானம் இலங்கை மீது பொருளாதாரத் தடையைஏற்படுத்தாது என்பது உறுதியான விடயம் தான்ஆனால்,இலங்கையின் எதிர்கால செயல்பாடுகள்முக்கியதரப்பினருக்கான பயணத் தடைகொடுக்கல்வாங்கல் தடைகள்விதிக்கப்படக்கூடிய நிலை இருக்கின்றது.

 

யுத்தத்தைக் காரணம் காட்டிஆட்சி அதிகாரத்தை நீடித்துக்கொண்டபோதிலும்எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைநீடித்துக்கொள்வதற்கான போதிய காரணமோநிலைத்துநிற்பதற்கான வலுவான தளமோ மகிந்த அரசாங்கத்திற்குஇல்லாதிருப்பதை தென் இலங்கை அரசியல் உணர்த்துகிறது.எனினும்பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாடுமுன்னேற்றமடைவதாக அரசாங்கம் கூறினாலும்அந்தமுன்னேற்றத்தை மக்கள் இதுவரை தமது தனிப்பட்டவாழ்க்கையில் அனுபவிப்பதாகத் தெரியவில்லை.

 

அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல்வரும்போதுஅதில் வெற்றிபெறுவதற்கு இந்த அரசாங்கத்திற்குவலுவான ஒரு பிடி தேவையாக இருக்கிறதுகடந்த காலதேர்தல் முடிவுகளுடன் எதிரணிக் கூட்டணி ஒன்றுசேரும்பட்சத்தில் அரசாங்கத்தின் பிடி இன்னமும்பலவீனமாகும்.

 

சிங்கள மக்களை அரசாங்கப்பக்கம்  முழுமையாக  இழுத்து ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக,சிறுபான்மையான தமிழ்முஸ்லிம் சமூகம் பலியாக்கப்படலாம்என்ற அச்ச நிலை இருக்கிறதுஇதற்காகவே கடந்த காலங்களில்அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளரின் அனுசரணையுடன்இயங்கிய பௌத்த  பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்சமூகத்தை நேரடியாகத் தாக்கியபோதும்அதனை அரசாங்கம்வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அரசாங்கமும்சிங்களப் பேரினவாத சக்திகளும்முஸ்லிம்சமூகம் குறித்து சிங்கள மக்களிடம் விதைத்த விஷம்இன்றுமுளைக்க ஆரம்பித்துள்ளதுஅது தற்போது அடங்கியிருந்தபோதிலும்அந்தத் தீயை அரசாங்கத்தினால்  இலகுவாகபற்றவைக்கக்கூடிய  நிலையும் இருக்கிறது என்பதை எவரும்மறுக்க மாட்டார்கள்.

 

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில்குறிப்பாக வடக்கில்அரசாங்கம் மேற்கொண்ட மோசமானசெயல்பாடுகளைவிடவும்எதிர்காலத்தில் மிகமோசமான சம்பவங்களை  நடந்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அதிகாரத்தை இழப்பது என்பது மிக ஆபத்தான விளைவுகளைஏற்படுத்தும் நிலையை மகிந்த ராஜபக் தரப்பினருக்குஏற்பட்டுள்ளதுஎதிர்க்கட்சிகளின் குறிப்பாக  ஜே.வி.பிசரத்பொன்சேக்கா கட்சிகள் மகிந்த ராஜபக் குடும்பத்தார் ஆட்சிகவிழ்க்கப்பட்டுஅவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கங்கணம்கட்டி போராடி ஆரம்பித்துள்ளன.

 

இறுதித் தேர்தலில் உயிர்பெற்ற ஜே.வி.பி எதிர்காலத்தில்அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டிபோராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நிலையும் இருக்கிறது.அதனை ஆரம்பத்திலேயே தகர்த்தெறியவதற்கு இந்தஅவசரகாலச் சட்டம் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது.

 

இதற்காக வடக்கு கிழக்கில் புலித் தோல் போர்த்திய நரிகர்கள்உயிர்ப்பிக்கப்பட்டு அங்குள்ள இளைஞர்களும்முன்னாள்விடுதலைப் புலி உறுப்பினர்களும் கைதுசெய்யப்படலாம்.முஸ்லிம் மக்கள் மீதான மத ரீதியான ஒடுக்குமுறைகள்அதிகரிக்கப்படலாம்மகிந்த ராஜபக் அரசாங்கத்தின் அதிகாரமையத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்த இரண்டுகல்களினால் காய் வீழ்த்தினாலும் வியப்படைவதற்கில்லை.

 

இதற்காக அரசாங்கம் தற்போது இருப்பதைவிட மிகக்கடுமையான அரசியல் நகர்வுகளையும்நாடகங்களையும்,நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக் கூடும்இது ஆரம்பம்மட்டுமே!!!

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105192/language/ta-IN/article.aspx

 

மீண்டும் அவசர கால சட்டம் வந்து சிங்களவரும், இசுலாமியரும் பட்டு தெளிந்தால் தான் ஈழ தமிழரின் ஆதங்கங்கள் விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.