Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். 
[saturday, 2014-04-05 16:29:54]
SURESH-050414-150.jpg

இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குச் செல்லவில்லை. வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக, தென்னாபிரிக்காவுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே எமது பயணம் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தென்னா பிரிக்கப் பயணம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

  

நாம் ஒரு போதும் இலங்கை அரசைக் காப்பாற்றவில்லை. சர்வதேசத்திடமிருந்து அவர்களை நாங்கள் பிணையெடுக்க மாட்டோம். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முழு முயற்சியும் முன்னெடுப்போம். இதேவேளை வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நாம் தென்னா பிரிக்காவுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்.

இங்கு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு என்ன தடையாக உள்ளது என்பதை நாங்கள் விளக்குவோம். இலங்கை அரசினால் போடப்பட்டு வரும் தடைகளை நீக்கித் தருமாறு தென்னாபிரிக்காவிடம் கோருவோம். இதற்கு தென்னாபிரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=106979&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
தென்னாபிரிக்கா செல்லும் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல் வெளியாகிது

 

tna-150x150.jpgஎதிர்வரும் 9ஆம் திகதி – புதன்கிழமை – தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் இரா.சம்பந்தன் எம்.பி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இலங்கை சமரச முயற்சியைக் கையாளுவதற்காக அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் சுமாவினால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் சிறில் ரமபோசாவை சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டமேலா சிறில் ரமபோசா (வயது 62) தென்னாபிரிக்காவின் வர்த்தகர், சிறந்த அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர், பேச்சுக்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் விற்பன்னர், கைதேர்ந்த தந்திரசாலி என்று மதிக்கப்படுபவர். தற்சமயம் தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உபதலைவராகப் பதவி வகித்து வருகின்றார்.

தென்னாபிரிக்க தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் இவரே அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளவர் என்றும் கருதப்படுகின்றார். தென்னாபிரிக்காவில் இன முரண்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, அதிகாரத்தில் இருந்த வெள்ளையரின் சிறுபான்மையினர் அரசுடன் பேச்சு நடத்துவதற்காக அப்போதைய தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் விசேட பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பேச்சு மூலம் அந்தப் பிணக்குக்கு அமைதித் தீர்வு எட்டுவதிலும் அந்த நாட்டின் முதலாவது ஜனநாயகத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக மதிக்கப்படுகின்றது. அவரது இத்தகைய அனுபவம் காரணமாகவே இலங்கையில் பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுக்கும் இடையிலான சமரச முயற்சிகளில் உரிய அனுசரணைப் பணி வகிப்பதற்காக அவரை தென்னாபிரிக்க ஜனாதிபதி தமது விசேட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து நியமித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

http://tamilleader.com/?p=30889

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.