Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூமா வாசுகியின் கவிதைகள்

Featured Replies

                             உயிர் நீட்சி
 

 

குடித்த விஷம் அழைத்து வந்த மரணம்
அறைக்குள் நட்பு சம்பாஷணையொலிக்க
பேச்சு முடியட்டும் போவோம் என்று
பொறுத்திருந்தது
மிச்சமிருந்ததை இன்னொரு முறை பருகி
துரிதப்படுத்தினேன் விளைவுகளை
அது என்னவென்றறியாத நண்பன்
எனக்கும் என்று கை நீட்டவில்லை
கேட்டிருந்தாலும்
உன் பங்கும் சேர்ந்துதான்
தீர்ந்தது என்றிருப்பேன்
நொறுக்குத் தீனியிருந்தால்
நேரம் போகுமென்றெண்ணி
மரணம் உலவுகிறது குறுக்கு நெடுக்காக
தற்காலிகமாய் விடைபெற்று
நண்பன் அகன்றான்
உத்வேகமாய் வந்த மரணம்
தன் தொழில் பெட்டியை திறக்கும்முன்பு
தட்டப்பட்டது தாழிட்ட கதவு
"இங்கே என் நண்பன் இருக்கிறானா?"
நிலை மறந்து வாய் தவறி
மரணமே பதிலிறுத்தது
"இருக்கிறான் இருக்கிறான்"
உள்ளேயிருந்து கேட்ட குரல்
உன்னுடையது போல் இல்லையே
என்று வந்த வேறொருவன்
கழுவாத தேநீர் கோப்பையில்
ஈக்கள் மொய்க்கின்றன பார் என்றான்
தேநீர் வண்டலை தொட்டுக்கொண்டிருந்த
ஈக்களைப் பார்த்து
மரணத்திடம் கேட்டேன் மானசீகமாக
"நான் பருகியது விஷமல்லவா?"
"நீ தனித்திருக்கும் போதுதானே அதன்
தன்மை தெரியும் - இப்படிக்
காக்க வைத்துக் கழுத்தறுக்கிறாயே" - என்று
பிழைப்பை நொந்து கொண்டு
படிக்கட்டிலமர்கிறது மரணம்.

Edited by ராஜன் விஷ்வா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

                                                                    பயணம்

 

 

பயணத்தில் எதிர்படும் குழந்தைகளுக்கு
இனிப்புகள் சேகரித்தேன்
அழுகின்ற பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்ட
குரங்கு முகமூடியையும் தேடி எடுத்தபின்
சலிப்புறுவோரை மகிழ்விக்க
மறந்துபோன சில நல்ல பாடல்களை மீண்டும்
மனனம் செய்தேன்.
சக பயணிகளோடு உரையாட பல விஷயங்களைப்
படித்தறிய வேண்டியிருந்தது. இல்லையெனில்
அவர்கள் என்னுடன்
பேசாதிருந்துவிடக்கூடும்.
எதிர் இருக்கைக்காரார்களுக்கென சில
புத்தகங்களை தூசி தட்டி வைத்தேன்.
அவர்களுக்குப் பிடிக்குமா என்று தெரியாமல்.
அவர்களுக்கு தொந்தரவெனில்
புகைக்கக் கூடாதென்றும் எதையும் நான்
ஆட்சேபிக்கக் கூடாதென்றும்
நினைத்துக் கொண்டேன்.
பிச்சைக்காரர்களுக்கு சில்லறைக்காசுகள்
கொஞ்சம் மாற்றிக் கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டுமென்று
பத்திரப்படுத்தப்பட்டன
தலைவலி, உடல்வலி
மாத்திரைகள்.
மசி நிரப்பிய பேனாவும் காகிதங்களும்
பயணக் குறிப்பெழுத.
இறுதியில்
மலர்களில் மிகைப்பூத்த சிலதை
பட்டுத்துணியில் சுற்றிக்கொண்டேன்
எவருக்காவது
பரிசளிக்க நேரலாம்.
புறப்படுகையில் தோழன் சொன்னான் -
"நீண்ட பயணத்தில் நண்பர்கள் கிடைப்பார்கள்."
ரயில் நிலைய அதிகாரி
சற்றே புரண்டு விழிக்கும்வரை காத்திருந்து
என் வண்டியைப் பற்றி விசாரிதேன் - அது
வெகுநேரம் முன்பே சென்றுவிட்டதாய்
தூக்கத்தினிடையில் சொன்னார்...

Edited by ராஜன் விஷ்வா

  • 1 month later...
  • தொடங்கியவர்

இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து

 

 

 

இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து 

அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன். 

அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது, 

சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம். 

சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே 

சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம். 

தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல் 

நீ நுழைந்து சென்றிருக்கிறாய். 

உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை 

உன் மணம் இல்லை – உடனே படும்படி 

உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும் 

உன் வருகையை நான் உணர்கிறேன் 

எனக்கான செய்தியை அனைத்து 

உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன் 

அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து 

புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன் 

தலையணை உறைக்குள், பாயின் அடியில், 

போர்வை மடிப்பில், ஏமாற்றம். 

குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து 

கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன் 

ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய 

பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது 

புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர். 

உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி 

பல தடவைகள் சோதித்தாகிவிட்டது 

சொற்ப பொருள்களையும். 

புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.

கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து 

விளக்கணைத்துச் சாய்கிறேன் 

ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ? 

பிரமைதானோ? 

இந்த அறையின் இருட்டு நிசப்தம் 

இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே 

நீ வந்திருந்தால் வழக்கம்போல 

அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும். 

புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது. 

பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை. 

காலையில் நான் புறப்படுகையில் 

காலியாகத்தானிருந்தது சாடி. 

நனைகிறேன். 

Edited by ராஜன் விஷ்வா

  • 6 months later...
  • தொடங்கியவர்

ஒரு மனிதன் முயலாக - யூமா வாசுகி.

 

"ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது..."

Edited by ராஜன் விஷ்வா

யூமா வாசுகியின் கவிதைகள் பல வாசித்துள்ளேன்.. வித்தியாசமான ஒரு நடையிலும் மொழியிலும் எழுதுவார். இணைப்புகளுக்கு நன்றி ராஜன் விஷ்வா.

 

இவரின் யூமா வாசுகி என்ற பெயரின் இடையில் கமா (comma) வர வேண்டுமா?

  • தொடங்கியவர்

ஆரம்பத்தில் இந்த திரி ஆரம்பிக்கும் போது நூலகத்தில் இருந்து எடுத்த யூமா வாசுகியின் புத்தகத்தில் இருந்து முதல் இரண்டு கவிதைகளையும் எனது அலைபேசியில் எழுதினேன். இன்று வரை யாழில் எழுதிய எனது பதிவுகள் அனைத்துமே அலைபேசியில் எழுதியதே. அதனால் பல இடங்களில் எழுத்து பிழை விட்டிருக்கிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா.

யூமா வாசுகியை எனது ஆசானாக நேசிக்கிறேன், யூமா வாசுகி என்னுள் ஆழ்ந்து பதிந்து விட்டார். அவரது கவிதைகளை படித்த பின் தான் எனது கற்பனை திறன் விரிவடைந்தது. அவரது தாக்கம் எனது எல்லா கவிதையிலும் இருக்கிறது. அவரது சொல்லாடல்களையும் ஆரம்பத்தில் எழுத தொடங்கியபோது அதிகம் பயன்படுத்தி உள்ளேன், அதன் காரணமாக குற்ற உணர்வும் மேலோங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யூமா. வாசுகி (இடையில் முற்றுப்புள்ளி உள்ளது).

தி. மாரிமுத்து என்பது இவரது பெயர்.

பல வருடங்களுக்கு முன்னர் அவரது வாசுகி அக்காவுக்கு சமர்ப்பணம் செய்த ரத்த உறவு எனும் நாவலைப் படித்திருந்தேன். திரும்பவும் படித்தால்தான் என்ன கதை என்று ஞாபகம் வரும்!

  • தொடங்கியவர்

யூமா. வாசுகி (இடையில் முற்றுப்புள்ளி உள்ளது).

தி. மாரிமுத்து என்பது இவரது பெயர்.

பல வருடங்களுக்கு முன்னர் அவரது வாசுகி அக்காவுக்கு சமர்ப்பணம் செய்த ரத்த உறவு எனும் நாவலைப் படித்திருந்தேன். திரும்பவும் படித்தால்தான் என்ன கதை என்று ஞாபகம் வரும்!

 

இவர் நாவல்கள் மற்றும் சிறு கதைகள் எழுதி உள்ளார். நான் அவற்றை படித்ததில்லை. நேற்று இணையத்தில் இவரது சிறு கதை ஒன்றை கண்டேன் காப்புரிமை கருதி அதை இணைக்க மனம் வரவில்லை.

அந்திமம் அணைந்தொரு வலம்புரி சங்காய்

இரவுகளின் நிழற்படம்

என்ற இரு கவிதை தொகுதிகளை படித்துள்ளேன்.  கிருபன் அண்ணா நிறைய்ய்ய வாசிப்பிர்கள் போல் உள்ளதே !!!

 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா நிறைய்ய்ய வாசிப்பிர்கள் போல் உள்ளதே !!!

ஆம். அது சின்ன வயதில இருந்து விடமுடியாத ஒரு பழக்கமாக வந்துவிட்டது. என்னிடம் இருக்கும் புத்தகங்களைப் பற்றி யாழில் ஒரு தொடர் எழுதலாம் என்று நினைக்கின்றேன். அதற்கு முதல் இருப்பில் (stock) உள்ளவற்றைச் சரி பார்க்கவேண்டும் :)

  • தொடங்கியவர்

நிற்சயம் போடுங்கோ அண்ணா. எனக்கு வாசிப்பு பழக்கம் சின்னதில் தினமலர் நாளிதழில் வெள்ளியன்று வரும் சிறுவர்மலர் மூலம் வந்தது. நாங்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் ஐய்யா தான் ஒரு நாள் குறும்பு தாங்காது இதை படியடா என்று கொடுத்தார். பிறகு வெள்ளிகிழமை காலைகளில் எழுந்ததும் போய் நின்றுவிடுவேன். படித்து முடித்து விட்டுதான் பாடசாலை போவேன். அவர் தான் முதலில் ஒரு புத்தகமும் படிக்க தந்தவர் பத்தாம் வகுப்பில். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம்.

பிறகு பள்ளியில் படிக்கும்போதே நூலகம் சேர்ந்து நூல் எடுக்க துவங்கினேன். இன்றுவரை தொடர்கிறது.

உங்களிடம் உள்ள நூல்களை உடன் சுருக்கமான விளக்கம் தந்தால் பலருக்கும் பயன்படும் அண்ணா. கட்டாயம் எழுதுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.