Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் தனி ஒருவர் உரிமை கோர முடியாது – சுரேஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

Suresh-150x150.jpgஇலங்கை அரசு தொடர்பினில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பத்திரிகைக்கு அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கிய செவ்வியில் ஜெனிவா தீர்மானத்தை தனது சாதனையாக வெளிக்காட்டும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்திருந்;தார்.

இதனை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென தெரிவித்ததுடன் புலம்பெயர் தமிழ் உறவுகளது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அதனை பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

கனடா பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அவுஸ்திரேலியாவென புலம்பெயர் உறவுகள் நீதி கேட்டு போராடிவருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கான வெற்றியே இது.

இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் அனைத்து ஆளும் தரப்பும் இந்நாடுகளிற்கு பயணிக்க அஞ்சுகின்றனர். அதிலும் ஜனாதிபதி பிரிட்டனில் நிகழ்வொன்றில் பேசமுடியாது திருப்பப்பட்டமை மறக்கமுடியாததெனவும் அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கை அரசு அவ்வமைப்புக்களை தடை செய்ததாகவும் தெரிவித்த அவர் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களல்ல எனவும் புலம்பெயர் தேசங்களிலிருந்து மனித நேய தனிநபர்களுடாகவோ குழுக்களினூடாகவோ உதவிகளை பெற்று வாழந்து வரும் தாயகத்திலுள்ள எமது மக்களே எனத்தெரிவித்தார்.

http://tamilleader.com/?p=31025

 

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டைக்கோழி ஏன் உதயனில் கூவியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.