Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணையைத் தடுக்க சிங்களத்தின் புலம்பெயர்ந்த புலித் தடை

Featured Replies

தமிழர்களைப் பார்த்து சிறீலங்கா மீண்டும் அச்சப்படத் தொடங்கியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் மீதிருந்த அதன் பயம் மெல்ல மெல்ல அகன்றுவர, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீதான அதன் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிட்டால், இலங்கைத் தீவை சிங்கள - பௌத்த மயமாக்கும் தனது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றிவிடலாம் என்று கனவுகண்ட ‘மகாவம்சச் சிந்தனை’வாதிகளுக்கு, அவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வலுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுந்துவருவது அச்சத்தைக் கொடுக்கின்றது. உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூத மக்கள் எவ்வாறு தமக்கான பலத்தைத் திட்டமிட்ட ரீதியில் ஒன்றுசேர்த்து இஸ்ரேல் என்ற தேசத்தைக் கட்டியெழுப்பினார்களோ, நாளை அதேபோன்று புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களும் தங்கள் அரசியல், பொருளதார வளங்களைப் பலப்படுத்திக்கொண்டு இலங்கைத் தீவில் இழந்துபோன தங்கள் தாயகத்தை மீட்டெடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்தை சூழ்ந்திருக்கின்றது. இதனால்தான், 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிப்புடன், புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள தமிழ்க் கட்டமைப்புக்களைச் சிதைத்துச் சீரழிக்கும் நடவடிக்கையை சிங்கள தேசம் கனகச்சிதமாக மேற்கொண்டது. அதன் ஆழ ஊடுருவும் படையணிகள் புலம்பெயர்ந்த கட்டமைப்புக்குள் இறங்கிச் சிதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இதன் உச்சமாகவே பிரான்சில் பரிதி என்ற தேசியச் செயற்பாட்டாளர் பலியெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தனது நடவடிக்கைகளை இப்போது வரையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் சிங்களம் எதிர்பார்த்த பலனை இதுவரை அது கொடுக்கவில்லை. தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை தனது ஆயுதங்களின் மூலமும், பரந்தளவான புலனாய்வுக் கட்டமைப்புக்கள் மூலமும் அச்சுறுத்தி அடக்கிவைக்க முடிகின்ற போதிலும், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது ஆயுத பலத்தின் மூலம் அச்சுறுத்துவது அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பங்களையும் உறவுகளையும் அச்சுறுத்துவதன் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி, இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தமுடியும் என்று சிங்களம் எதிர்பார்க்கின்றது. அதன் விளைவாகத்தான் இப்போது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்களின் விவகாரங்களைக் கையில் எடுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் புலிகள் தோன்றிவிட்டார்கள் என்று தமிழர் தாயகம் எங்கும் தீவிர தேடுதல்கள், கைதுகள் எனப் புலி வேட்டைக் கதையளந்து ஐ.நா. விசாரணையைத் தடுக்க முனைந்த சிறீலங்கா அதில் தோற்றுப்போய்விட்டது. ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பின் ஐ.நாவின் சர்வதேச விசாரணை எதிர்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேச நாடுகளில் இருக்கும் புலிப் பயங்கரவாதிகளால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்பதுபோன்று புதிய கதையன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி சர்வதேச ரீதியாகத் தடை செய்து, ஒரு இன அழிப்பையே செய்து முடித்தார்களோ, அதேபோன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணையும் கட்டமைப்புக்களையும் பயங்கரவாத முத்திரை குத்திவிட்டால் அவர்களின் நடவடிக்கைகளையும் சர்வேதசம் ரீதியாகத் தடைசெய்து, தமிழர் தாயகக் கனவை முழுமையாகச் சிதைத்துவிட முடியும் என்று எண்ணுகின்றது. ஜெனீவாவில் பிரேரணை நிறைவேறிய கையுடன், புலம்பெயர்ந்த தமிழர்களின் கட்டமைப்புக்களுக்கும் தனி நபர்களுக்கும் தடை விதிக்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. ஒரு பக்கத்தில் தமிழர்களை அச்சுறுத்தும் அதேவேளை, இன்னொரு பக்கம் புலம்பெயர்ந்த நாடுகளில் ஏராளமான புலிப் பயங்கரவாதிகள் இருப்பதாகக் கூறி, அவர்கள் மீது அந்நாடுகளை நடவடிக்கை எடுக்க வைத்துவிட்டால் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுச்சியை அடக்கிவிட முடியும் என்று பார்க்கின்றது. அதேநேரம் சர்வதேச நாடுகளில் இருக்கும் புலிகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தாமல், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தமுடியாது என்பதையும் சர்வதேசத்திற்கு சொல்ல விளைகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து உலகெங்கும் தடை வாங்க முடிந்த சிறீலங்காவினால், புலம்பெயர்ந்த தமிழர்களின் கட்டமைப்புக்களுக்கு எதிராக அத்தனை இலகுவில் தடைகளை வாங்கிவிட முடியாது. சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தி, சிறீலங்காவின் தோளோடு தோள் நிற்கும் நாடுகளில் அது சாத்தியம். ஆனால், மனித உரிமைகளை மதிக்கின்ற, ஜனநாயகப் பண்புகளைப் பேணுகின்ற ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள், அந்நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, அமைப்புக்களை நிறுவி, தமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் முன்னெடுத்துவரும் போராட்டங்களைத் தடுப்பதற்கு அந்த நாடுகள் சம்மதிக்காது. எனினும், சிறீலங்காவின் இந்தக் கருத்துக்களை உள்வாங்கி அந்நாடுகள் நடவடிக்கை எடுக்க முயலுமாயின் அது தமிழ் மக்களுக்கு அந்த நாடுகள் மீண்டும் இழைக்கும் பெரும் அநீதியாகவே இருக்கமுடியும். ஏற்கனவே, சிறீலங்காவினதும் அதனுடன் இணைந்து செயற்பட்ட நாடுகளினதும் கதையைக் கேட்டு சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற அமைப்புக்களுக்கும் நபர்களுக்கும் எதிராகச் சில நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே, சிறீலங்கா மிக மோசமான இனஅழிப்பை செய்து முடிப்பதற்கு காரணமாக அமைந்தது. எனவே, சிங்களப் பேரினவாதத்தின் இந்தப் புலிப் பூச்சாண்டி மாயைக்குள் மீண்டும் வீழ்ந்துவிடாது இதனை முறியடிக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். ஏற்கனவே, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்று கூறி, பிரித்தானியா சிறீலங்காவின் இந்தக் கோரிக்கையை உடனடியாகப் புறந்தள்ளியுள்ளது தமிழர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இதனை ஏனைய நாடுகளும் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. ஆசிரியர் தலையங்கம் நன்றி: ஈழமுரசு http://www.sankathi24.com/news/40245/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் சீப்பை ஒழிச்சு வைச்சுவிட்டால் கலியாணம் நிண்டுபோடும் என்டு நினைக்கினம். கலியானம் நிக்க வேணும் அதுதான் எனக்கு ஆசை அப்போதான் இதைவிடக்காத்திரமான விசாரணை வளையத்துக்குள் சிங்களத்தைக் கொண்டுவரலாம்.

 

அனால் தடைப்பட்டியலில் போட்டவயள் நானூற்றி இருபதுபேருக்குப்பதலாக ஒரு நாலாயிரத்து இருநூறோ அல்லது நாற்பத்தி இரண்டாயிரமோ எண்டு போட்டிருக்கலாம்.

 

ஏனெண்டால் இப்பவே அப்போ இப்போ எண்டு தொத்துப்பொறியில நிண்டு என்னதான் இருந்தாலும் உருக்குப்போறனாங்கள் இந்த ஊர்வலம் போராட்டம் எண்டுபோறது அவ்வளவு நல்லாயில்லை என ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்குப் போய் லிங்கம் கூல்பாறில ஐஸ்கிறீம் குடிக்கிறத முழுக்கும்போட்டுட்டு இன்னுமொரு பத்துவருடங்களுக்கு ஊருக்குப்போறத பின்போடுவம் எண்டு தெருவில இறங்க ஆயத்தமாயிட்டினம்.

 

இனிமேல் நடக்குறது ஒண்டும் உங்களுக்கு நல்ல செய்தியாக அமையாது.

 

சிங்களமே உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கட பிரடியப்பதம்பாக்குமே தவிர எங்களை ஒண்டும் செய்யாது. பொறுத்திருந்து பாருங்கோ நீங்களே தங்கத் தட்டில தமிழீழத்தத் தாரைவாக்கும் கைங்கரியம் கூடிய விரைவில் நடக்கும்.

இவையள் சீப்பை ஒழிச்சு வைச்சுவிட்டால் கலியாணம் நிண்டுபோடும் என்டு நினைக்கினம். கலியானம் நிக்க வேணும் அதுதான் எனக்கு ஆசை அப்போதான் இதைவிடக்காத்திரமான விசாரணை வளையத்துக்குள் சிங்களத்தைக் கொண்டுவரலாம்.

 

அனால் தடைப்பட்டியலில் போட்டவயள் நானூற்றி இருபதுபேருக்குப்பதலாக ஒரு நாலாயிரத்து இருநூறோ அல்லது நாற்பத்தி இரண்டாயிரமோ எண்டு போட்டிருக்கலாம்.

 

ஏனெண்டால் இப்பவே அப்போ இப்போ எண்டு தொத்துப்பொறியில நிண்டு என்னதான் இருந்தாலும் உருக்குப்போறனாங்கள் இந்த ஊர்வலம் போராட்டம் எண்டுபோறது அவ்வளவு நல்லாயில்லை என ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்குப் போய் லிங்கம் கூல்பாறில ஐஸ்கிறீம் குடிக்கிறத முழுக்கும்போட்டுட்டு இன்னுமொரு பத்துவருடங்களுக்கு ஊருக்குப்போறத பின்போடுவம் எண்டு தெருவில இறங்க ஆயத்தமாயிட்டினம்.

 

இனிமேல் நடக்குறது ஒண்டும் உங்களுக்கு நல்ல செய்தியாக அமையாது.

 

சிங்களமே உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கட பிரடியப்பதம்பாக்குமே தவிர எங்களை ஒண்டும் செய்யாது. பொறுத்திருந்து பாருங்கோ நீங்களே தங்கத் தட்டில தமிழீழத்தத் தாரைவாக்கும் கைங்கரியம் கூடிய விரைவில் நடக்கும்.

 

உண்மை, மலையாளி தனது சொந்த தேவைக்காக இந்திய அரச இயந்திரத்தை பயன்படுத்தி பெற்றுக் கொடுத்த வெற்றிய்யை தனது வெற்றி என்று சிங்களவன் நம்பீட்டான் போல் உள்ளது, சிங்களவன் மோடையன் என்பது எனக்குத் தெரியும் ஆனால் இப்படி வடிகட்டின முட்டாளாக இருப்பான் என்று நினைக்கவில்லை,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.