Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது யாழ்களம் பலர் பார்வையிடும் தளமாக மாறிவிட்டது. யாழ் ஒரு தனி தமிழுக்கான தளம்!! சிலவேலைகளில் இங்கு கருத்தெழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) பல எழுத்துப் பிழைகளை விடுகிறோம்.

இந்தப் பிழைகளை முற்று முழுதாக திருத்த இயலா விடினும், விடயத் தலைப்புகளில் வரும் பிழைகளையாவது மட்டுறுத்தினர்கள் திருத்தலாம்தானே??? .... சில கருத்துக்களை களத்திலிருந்து மாயமாக்கும் சில மட்டுறுத்தினர்கள், கொங்ச நேரத்தை இதில் செலவிடலாம்தானே!!!!

இல்லையேல் தூள்கிங் "ராமராசன்" டமிழ் பேசியதை கேட்பது போல்தான், யாழ்களமும் வாசிக்க வேண்டி வரும்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்கு தமிழ் தெரிந்துதான் எழுதவேண்டும் என்றால் புலம்பெயர் தேசங்களில் வளர்ந்துகொண்டிருக்கும் இளையதலைமுறை இங்கு எழுதாமல் ஒதுங்கிவிடுவார்கள் ஆதலால் முக்கிய பகுதிகளில் எழுதுபவர்கள் மிகமிகக் கவனமாகத் தமிழைக் கையாண்டால் நன்மையானது. லகர,ளகர,ழகர,னகர,ணகர வேறுபாடுகளை தயவு செய்து அவதானியுங்கள் உதாரணத்திற்கு கழி,களி,கலி இம்மூன்று சொற்களிடையேயே எவ்வளவு மாறுபட்ட கருத்துக்கள். தயவு செய்து செய்திகள், கட்டுரைகள் எழுதுபவர்கள் மிக அவதானமாகத் தமிழை உபயோகியுங்கள்.

சாகாரா...இந்தத் தவறுகளில் சில...ஆங்கில மூல தமிழ் தட்டச்சுக் காரணமாகவும் வருகிறது..! சிலது உண்மையாவே மொழிப் பாவனைக் குறைவு காரணமான குழப்ப நிலையாலும் தோன்றுகிறது. எதுஎப்படியோ..தவறுகளை இயலுமானவரை குறைப்பது மொழிச் செலுமைக்குத்தான் உதவும்..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

களப்பொறுப்பாளர் அவர்களே!

இங்கே, எதாவது உறுப்பினர்களின் நிலையில் தரமுயர்வு செய்தீர்களா? யாழ்கள உறவுகள் எப்படி நடக்க வேண்டும் என்று ஏதாவது சட்டதிட்டங்கள் உள்ளனவா?

சிலர், தாங்கள் யாழ்களத்தை நிர்வகிப்பது போன்று கதைத்து, அதன் பெருமைகளை உள்ளிருந்தே சிதறடிக்க முயல்கின்றனர்.

யாழின் பெருமை சிதறிக்கத்தக்க பதிவுகளைத் தந்த பெருமதிக்குரியவர்களே..அதை இங்கு சொல்வதில் அர்த்தமில்லை..! :lol: :idea:

மற்றவர்களை நோக்கி சுட்டுவிரலை நிமிர்த்தமுதல்..அதற்கான தகுதியையும் பரிசீலியுங்கள்..! :wink: :idea:

நாங்கள் சாதாரண கருத்தாளர்களாக எமது கருத்தை கருத்துக்களுக்காக வைக்கின்றோம்...அதை ஏற்பதும் மறுப்பதும்..புறக்கணிப்பதும்..

நிர்வாகம் இவ்வாறான தருணங்களில் நிலமையைத் தெளிவாக்காமல் தொடர்ந்தும் இவ்வாறான எழுதுக்களை இங்கே தொடர அனுமதிப்பதானது அவ்வாறான எழுதுக்களுக்கான அங்கீகாரமாகவே பார்க்க நேருகிறது.அப்படியாயின் இங்கே தொடர்ந்தும் எழுதி தனி நபர் தூற்றல்களுக்கு ஆளாக வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.இதை நிருவாகம் புரிந்து கொள்ளாத விடத்து இங்கு எழுதாமல் இருப்பதே தேவையற்ற மன உளச்சல்கள் ஏற்ப்டாமல் இருப்பதற்கான ஒரே வழி. யாழ்க் களம் ஒன்றே எல்லாருக்கும் வாழ்க்கை ஆகிவிட முடியாது.பொய்களை மறுதலிக்காமல் தொடந்தும் மவுனம் காப்பது நிர்வாகத்தின் நிலைப்பாடு என்றால் , கண்ணியமாக எழுத விரும்புவோரும் களத்தில் மொவுனம் காப்பதே மேலானதாகப்படுகிறது.தாம் தான் களப் பொறுப்பாளர் என்று இங்கே யார் எவ்வாறு நடக்க வேண்டும் யார் யார் என்ன என்ன எழுத வேண்டும் என்று ஒருவர் எழுதிய போது அது கள விதி முறைகளுக்கு அமைவானதா இல்லயா என்பதை நிருவாகம் தெளிவாக்கி இருக்க வேண்டும், அல்லது மேற்குறிப்பிட்ட நபரின் எழுதுக்களை தணிக்கை செய்திருக்க வேண்டும் அல்லது விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.இவ்வாறான தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி ஒரு அனாமதேய நபர் நிருவாகமாக இங்கே செயற்பட முயற்ச்சிப்பதைத் தொடர்ந்தும் நிருவாகம் அனுமதிக்குமே ஆகில் இங்கிருந்து எழுதுவதில் எதுவித பிரியோசனமும் இல்லை.இவரின் தனி நபர் தாக்குதல்களால் இங்கே எழுதாமல் விட்டவர் தொகை பற்றி நிருவாகம் நன்கு அறிந்திருந்தும் இதைத் தொடர அனுமதிப்பது ஏன் என்பது விளங்கவில்லை?

1)யாழ்க்கள உறுப்பினர்கள் ஒன்றுகூடல்களை நாடத்துவது யாழ்க் களத்தைப் பாதிக்கிறதா?

2)கள உறுப்பினர்களிடயே நட்பையும் புரிந்துணர்வையும் வளர்க்க நடாத்தப்படும் சுய முயற்ச்சினாலான இந்த ஒன்றுகூடல்கள் கள நிர்வாகத்திற்கு சிரமங்களை ஏற்படுத்தி உள்ளதா?

3)இந்த ஒன்று கூடல்கள் பற்றிக் களத்தில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது கள நியதிகளுக்குப் புறம்பானதா?

4) மேலும் இவ்வாறான ஒன்றுகூடல்களை நாடத்துவதற்கும் கள உறுபினர்களைடயே புரிந்துணர்வை வளர்ப்பதும் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளதா?இதற்காக விசேடமாக யாரிடம் ஆவது எதாவது அனுமதி பெறப்பட வேண்டுமா?

5) இங்கே நிர்வாகம் குருவி என்பவர் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா?அவர் தான் இது சம்பந்தமான நியதிகளை இங்கே பரிந்துரை செய்கிறாரா?இவரின் பதவி நிலை இங்கே என்ன?

6) இவரின் இவ்வாறான கருதுக்களிற்கான விளக்கத்தை ஏன் இன்னும் நிர்வாகம் தெளிவாக்கவில்லை?

7)தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகள் நடை பெறாமல் இருப்பதற்கும், அவை பற்றி சுதந்திரமாக கள உறுப்பினர்கள் தங்கள் கருதுக்களைப் பகிர்வதற்கும் மேற்குறியவரின் விசமத்தனமான எழுதுக்கள் இங்கே தடையாக உள்ளன.ஆகவே இது சம்பந்தமாக தெளிவான நிலைப் பாடுகளை நிருவாகம் முன் வைக்க வேண்டும்.இல்லாது விடின் இவ்வாறான ஒன்று கூடல்களோ அன்றி அவை பற்றிய சுதந்திரமான அனுபவப்பகிர்வுகளோ இங்கே இடம் பெறாமற் போகும்.

இது கள உறுபினர்களிடயே ஆன நட்புணர்வையோ புரிந்துணர்வையோ வளர்க்காது என்பது எனது கருத்து. நிர்வாகத்தின் பதில் என்ன?

யாழ் களம் மூலம் அறிமுகமான சிலர் ஒன்று சேர்ந்து சந்திப்பதில் என்ன தவறினைக் குருவிகள் காண்கின்றார் என்பது தெரியவில்லை. யாழ் களத்தின் மூலம் அறிமுகமான சிலர் கூடும்போது சந்திப்பதில் எதுவித தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. இது யாழ் இணைய அங்கத்துவர்களிடையே ஒரு புரிந்துணர்வை, நல்லுறவை ஏற்படுத்தும் எனக்கருதுவதனால் இவ்வாறான செயற்பாட்டினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்க்கவில்லை. இவ்வாறான சிறு சிறு சந்திப்புக்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.

இங்கே குருவிகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு இடைச்செருகலாக யாழ் இணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைப்பது வழமையான ஒன்றாகி விட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதனித்துள்ளோம். அத்துடன் பல்வேறு கருத்துக்களிலும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களை வைத்து கருத்தாளர்களை ஒதுங்கச் செய்யும் ஒரு செயற்பாட்டினைத் தொடர்கின்றார். ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து என்பது, விதண்டாவாதக் கருத்து என்பது வேறு. எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதனைத் தொடர்ந்து விவாதிக்க முடியும். ஆனால் விதண்டாவதக் கருத்துக்கள் முடிவில் தனிநபர் தாக்குதலிலேயே போய் முடிகின்றதை அவதானித்துள்ளோம். இங்கே குருவிகள் இரண்டாவது வகைக் கருத்துக்களை இடையிடையே வைத்து குழப்பங்களை ஏற்படுத்துவதை அவதானித்ததன் காரணத்தினாலேயே இப்பதிவினை வைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

அத்துடன் சில கருத்துக்கள் மூலம் கள அங்கத்துவர்களை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றார் என்பதும் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளதுடன், சில மட்டுறுத்துனர்களும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

ஆரம்ப காலங்களில் கண்ட குருவிகளுக்கும் தற்போது காணும் குருவிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தற்போது எழுதும் குருவிகள் உண்மையில் யாழ் ஆரம்ப காலங்களில் கண்ட குருவிகளா என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னிடையே சந்தேகம் வந்ததுண்டு. அறிவியற் செய்திகளைத் தூய தமிழில் மொழிபெயர்த்துத் தரும் திறமைமிக்கவர். அவ்வவ் காலத்திற்கேற்றாற் போல் கவிதைகளை உடன் எழுதும் திறன்படைத்தவர். அவ்வாறான பழைய குருவிகளையே இங்கு களத்தில் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் குருவிகளின் கருத்துக்களை நாம் கட்டுப்படுத்துகின்றோம் என்பது அர்த்தமல்ல. மேலே குறிப்பிட்டுள்ள சில பிரச்சனைகளைத் தவிர்க்கவே இவ் ஆலோசனை.

உங்களின் ஆக்கமான ஊக்கமூட்டும் முயற்சிக்கு பாராட்டுகள் மோகன் அண்ணா..! உங்களின் இந்த முயற்ச்சி வெற்றியீட்டினால் மகிழ்பவனில் நானும் ஒருவன்...!

உங்களைப்போலவே எனக்கும் எண்ணம் ஏற்பட்டது... ஆனாலும் பொறுப்பாளராய் நீங்கள் செயற்படுவதை மகிழ்வோடு வரவேற்க வேண்டும் எண்ற ஆசையில் எனது கருத்தை பதிந்துள்ளேன்... நண்றி..!

சாகாரா...இந்தத் தவறுகளில் சில...ஆங்கில மூல தமிழ் தட்டச்சுக் காரணமாகவும் வருகிறது..! சிலது உண்மையாவே மொழிப் பாவனைக் குறைவு காரணமான குழப்ப நிலையாலும் தோன்றுகிறது. எதுஎப்படியோ..தவறுகளை இயலுமானவரை குறைப்பது மொழிச் செலுமைக்குத்தான் உதவும்..! :idea:

குருவிங்க.. ..செழூமைக்குத்தான் உதவும்.... ஒரு தபா..நாக்கு... ஊ-தை வழிச்சுட்டு சொல்லுங்க.... எப்படி ..செழுமை... ஆ.. அது தான்

யாழ் களம் மூலம் அறிமுகமான சிலர் ஒன்று சேர்ந்து சந்திப்பதில் என்ன தவறினைக் குருவிகள் காண்கின்றார் என்பது தெரியவில்லை. யாழ் களத்தின் மூலம் அறிமுகமான சிலர் கூடும்போது சந்திப்பதில் எதுவித தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. இது யாழ் இணைய அங்கத்துவர்களிடையே ஒரு புரிந்துணர்வை, நல்லுறவை ஏற்படுத்தும் எனக்கருதுவதனால் இவ்வாறான செயற்பாட்டினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்க்கவில்லை. இவ்வாறான சிறு சிறு சந்திப்புக்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.

இங்கே குருவிகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு இடைச்செருகலாக யாழ் இணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைப்பது வழமையான ஒன்றாகி விட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதனித்துள்ளோம். அத்துடன் பல்வேறு கருத்துக்களிலும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களை வைத்து கருத்தாளர்களை ஒதுங்கச் செய்யும் ஒரு செயற்பாட்டினைத் தொடர்கின்றார். ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து என்பது, விதண்டாவாதக் கருத்து என்பது வேறு. எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதனைத் தொடர்ந்து விவாதிக்க முடியும். ஆனால் விதண்டாவதக் கருத்துக்கள் முடிவில் தனிநபர் தாக்குதலிலேயே போய் முடிகின்றதை அவதானித்துள்ளோம். இங்கே குருவிகள் இரண்டாவது வகைக் கருத்துக்களை இடையிடையே வைத்து குழப்பங்களை ஏற்படுத்துவதை அவதானித்ததன் காரணத்தினாலேயே இப்பதிவினை வைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

அத்துடன் சில கருத்துக்கள் மூலம் கள அங்கத்துவர்களை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றார் என்பதும் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளதுடன், சில மட்டுறுத்துனர்களும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

ஆரம்ப காலங்களில் கண்ட குருவிகளுக்கும் தற்போது காணும் குருவிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தற்போது எழுதும் குருவிகள் உண்மையில் யாழ் ஆரம்ப காலங்களில் கண்ட குருவிகளா என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னிடையே சந்தேகம் வந்ததுண்டு. அறிவியற் செய்திகளைத் தூய தமிழில் மொழிபெயர்த்துத் தரும் திறமைமிக்கவர். அவ்வவ் காலத்திற்கேற்றாற் போல் கவிதைகளை உடன் எழுதும் திறன்படைத்தவர். அவ்வாறான பழைய குருவிகளையே இங்கு களத்தில் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் குருவிகளின் கருத்துக்களை நாம் கட்டுப்படுத்துகின்றோம் என்பது அர்த்தமல்ல. மேலே குறிப்பிட்டுள்ள சில பிரச்சனைகளைத் தவிர்க்கவே இவ் ஆலோசனை.

களத்தின் பெயரால் நடக்கும் தனிநபர் சந்திப்புக்களை அவற்றின் தன்மைகள் குறிக்கோள்கள் எதுவும் நோக்காமல்..நீங்கள் ஆதரிக்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு இதுதான் அண்ணா..நன்றிகள்.!

குருவிகள் எப்பவும் ஒரு வகைதான். ஆனால் களத்தில் சிலர் வந்தது முதல் குருவிகளை திருத்திறம்...கொள்ளுறம் என்று வசைபாடத் தொடங்கிய போதெல்லாம் நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டிய போது..நீங்களோ..இல்ல இதர நிர்வாகிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..இருந்தீர்கள். குறிப்பாக நாரதரும் இன்னும் சிலரும் சேர்ந்து மிகவும் கீழ்த்தரமான..வகையில் எங்கள் ஆக்கங்களை கருத்துக்களை கவிதைகளை (விஞ்ஞான மொழிபெயர்ப்புக்கள் உள்ளடங்க) விமர்சித்த போது..நாங்கள் சுட்டிக்காட்டியும்..நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை..! குருவிகள் வக்கிர நோக்கில் இங்கு கவிதை வரைவதாக நாரதரும் இளைஞனும் கள அங்கத்தவர்கள் பகுதியில் கவிதை வடிவில் கருத்தாடியது உங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட போதும் நீங்கள் ஏன்..நிர்வாகத்தின் சார்ப்பில் கண்டிக்க முனையவில்லை.. ஏன் கண்டுகொள்ளவே இல்லை..!

இப்படிப் பல தடவைகள் பலரின் தவறுகள் நிர்வாகத்துக்கு அறியத்தந்தும்..வலைஞன்..யாழ்பா

குருவிகள் உமது காழ்ப்புணர்வினால் தான் இவ்வாறு குழப்புகிறீர் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள் , நீர் உண்மயாகவே யாழ்க் களத்தின் மேல் அக்கறையினால் எழுதுவதாக எழுதியது எல்லாம் பொய் என்று இப்போது ஒத்துக்கொண்டுளீர்.மேலும் நான் உமது ஆக்கங்களைக் கீழ்த்தரமாக விமர்சிததாக ஒரு குற்றச் சாட்டை முன் வைத்துள்ளீர், இதற்கான ஆதாரத்தை உம்மால் காட்ட முடியுமா? வெறும் தனி நபர் தாக்குதல் தான் உமது கருதாடல் என்பதை நான் வெகு காலமாகவே கூறி வருகிறேன் ,உமது கருதாடல்ளுக்கு எதுவித கருதியல் அடிப்படைகளும் கிடயாது என்பதுவும் மேற்குறிப்பிட்ட உமது எழுதுக்களில் தெளிவாகி உள்ளது.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டாத்திற்கு எதிராக நீர் எழுதத் துணிந்ததுவும் அதற்காகத் தான் என்று நான் அன்று கூறியதுவும் இன்று மெய்பிக்கப்பட்டுள்ளது.இங்கு நடக்கும் உமது கருதாடல்கள் எல்லாமே இங்கே நிகழும் கருதாடல்களை வேண்டுமென்றே குழப்ப வேண்டும் என்ற உள் நோக்கிலே நாடத்தாப்பட்டதாக கூறி ஊள்ளீர். நன்று.ஆனால் நீர் அதற்காக நான் கீழ்த்தரமாக விமர்சிததும் அது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் நிர்வாகம் மேற் கொள்ளவில்லை என்றும் கூறி உள்ளீர்.இதற்கான ஆதரத்தை முன் வையும். நான் பதில் அழிக்கிறேன்.இங்கே நீர் எனது பெயரைப்பாவித்து உமது கீழ்த்தரமான நடவடிக்கையை நியாயப்படுத மீண்டும் முனைகிறீர் என்பதால் நீர் உமது குற்றக்ச் சாட்டிற்கான ஆதாரத்தை முன் வையும், தகுந்த பதில் அழிக்கப்படும்.

கருத்தியல் வன்முறை,வேண்டும் என்றே குழப்பும் நோக்குடன் ஆன கருத்தாடல், தனி நபர் தாக்குதல்கள், அச்சுறுதல்கள் எல்லாமே நீர் உள் நோக்கோடு தான் நிகழ்த்தி உள்ளீர் என்பது தெளிவாகிறது.

நிர்வாகத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கிய மோகனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளிற்கு சாத்திரியின் அன்பான வணக்கங்கங்கள் மீண்டும் அய்யா குருவி உங்களை விட நான் அரம்பத்தில் யாழ் கள நிருவாகத்தில் அதிக முரண்பட்டனான் ஆனால் பின்னர் ஒரு தளத்தை நிருவாகிப்பது எவ்வளவு பொறுமை வேண்டும் என்று எனது சொந்த அனுபவத்தில் கண்ட பின்னர் நிருவாகத்துடன் முரண்படுவது இல்லை ஒன்று மட்டும் அதாவது எனது வயதையும் அனுபவங்களையும் கூட மறந்து மறைத்து அவையெல்லாவற்றையும் உங்கள் காலடியில் வைத்து மன்றாட்டமாக கேட்டுகொள்வதெல்தாம் உங்:கள் வீண் வீம்பை விட்டு பழைய குருவிகளாய் யாழில் கருத்தாட வேண்டுமென்பதே நானும் யாழ் பொறுப்பாளரிடம் ஒரு சந்தெகத்தில் கேட்டு பார்:த்தேன் குருவிகளின் கடவுசொல்லை யாராவது திருடிவிட்டார்களா? என்று இல்லை இந்ந மாற்றத்தை விட்டு அதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணமிருப்பின் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் எனவே எனது வேண்டு கொளை எற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் உங்கள் கரத்துகளை மறு பரிசீலனை செய்யுங்கள் அன்புடன் சாத்திரி

சாத்திரி..எல்லாம் நிர்வாகத்தின் கையில் தான் இருக்கிறது...! :wink: :P

நாரதர் உங்கள் கலக விளையாட்டுகள் இங்குதான் நிறையப் பதிவாகி இருக்கிறது. தேடிப்பிடியுங்கோ. உங்களுக்கு தேடிப்பிடிச்சுக் காட்ட வேணும் என்ற அவசியமில்லை. நிர்வாகம் கேட்டால் தேடிக் காட்டலாம்..! :idea:

அப்படி எதுவும் இருந்தாத் தானே காட்ட? சும்மா கதை அளப்பதை நிப்பாட்டும்.உமது சுய தம்பட்டங்களை முடிவுக்குக்கொண்டு வந்து, சில உண்மைகளை உணர வைத்து களத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது தான் என் மீது உமக்கு இருக்கும் கோவம்.இந்தத் தனிப்பட்ட கோவத்தால் தான் களத்தில் பல குழப்பங்களை வேண்டும் என்றே உருவாக்கினீர்.இதனை நிர்வாகமும் அனுமதித்தது, இப்போது உண்மைகள் தானாகவே வெளிவருகின்றது. நிர்வாகம் உமது விருப்பதிற்கு ஏற்ப நடக்க வேண்டும் அல்லது தொடர்ந்தும் இவ்வாறு குழப்புவேன் என்று நிர்வாகத்தை எச்சரிப்பது கேலிக் கூத்தானது.களத்தை நெறிப்படுதுவது நிர்வாகமும் கள விதிகளுமே. நீர் அல்ல.உமது சொந்த நலங்களிற்காக நீர் யாழை என்ன தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுதுவீர் என்பது நன்றாக நிருபணம் ஆகி உள்ளது.இனி இங்கே உம்மை தொடர்ந்தும் குழப்ப அனுமதிப்பதுவும் விடுவதும் நிர்வாகத்தைப் பொறுத்தது.தனி நபர் தாக்குதல்களை வேண்டும் என்றே நிகழ்த்துவது, கருதாடல்களை வேண்டுமென்றே உள் நோக்குடன் குழப்புவது என்று நீர் நிகழ்த்திய யாவுமே கள விதிகளுக்கு முரணானது.இதனால் யாழ்க்களத்தில் எந்தவிதமான ஆரோக்கியமான கருதாடல்களும் நிகழப்போவதில்லை.ஆகவே மாற விரும்பின் மாறும் இல்லாது விடின் அதற்கான பலாபலங்களை அனுபவியும்.

இதை நீங்கள் குருவிகளுக்குச் சொல்ல நீங்கள் நிர்வாகியல்ல..! நமக்குத் தெரியும் நிர்வாகத்தின் ஆலோசனையை எப்படி அமுல்படுத்திறது அல்லது விடுறது என்று. குருவிகளை விழித்து எழுதுவதை நிறுத்துங்கள். உங்கள் எந்தக் கருத்தையும் குருவிகள் கணக்கில் எடுக்கப் போறதில்லை..! உங்களுக்கு அந்தத் தகுதியும் இல்லை..! நீங்கள் தான் இக்களத்தில் பிரச்சனையை வளர்ப்பவர்..! அதை மோகன் அண்ணா சரியாக இனங்காண வேண்டும்..! இப்படியானவர்களால் தான் விதண்டாவாதத்துக்கு வித்திடப்படுகிறது..! ஆரம்பக் களத்தில் இருந்து இன்றுவரை இங்கிருக்கும் எமக்குத் தெரியும் கருத்தாடலின் போக்குகள்..! யாரும் யாரையும் மாற்றியதாகச் சித்தரிப்பது அவசியமற்ற விதண்டாவாதம்...! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

செய்ய பிழைகளை ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் வரவே இல்லை. இப்போது எழுதிய கருத்தைப் படிக்கின்றபோது கூட, உறுப்பினர்களைத் திருத்த வெளிக்கிட்டது போய், நிர்வாகத்தையும் திருத்துகின்றேன் பேர்வழியாகக் காட்ட முனைகின்றார்.

திருந்தவே மாட்டுதுகள்!

இதை நீங்கள் குருவிகளுக்குச் சொல்ல நீங்கள் நிர்வாகியல்ல..! நமக்குத் தெரியும் நிர்வாகத்தின் ஆலோசனையை எப்படி அமுல்படுத்திறது அல்லது விடுறது என்று. குருவிகளை விழித்து எழுதுவதை நிறுத்துங்கள். உங்கள் எந்தக் கருத்தையும் குருவிகள் கணக்கில் எடுக்கப் போறதில்லை..! உங்களுக்கு அந்தத் தகுதியும் இல்லை..! நீங்கள் தான் இக்களத்தில் பிரச்சனையை வளர்ப்பவர்..! அதை மோகன் அண்ணா சரியாக இனங்காண வேண்டும்..! இப்படியானவர்களால் தான் விதண்டாவாதத்துக்கு வித்திடப்படுகிறது..! ஆரம்பக் களத்தில் இருந்து இன்றுவரை இங்கிருக்கும் எமக்குத் தெரியும் கருத்தாடலின் போக்குகள்..! யாரும் யாரையும் மாற்றியதாகச் சித்தரிப்பது அவசியமற்ற விதண்டாவாதம்...! :idea:

முதலில் மோகன் எழுதியவற்றிற்கு நீர் பதில் அழித்த போது எனது பெயரை மேற் கோள்காட்டி நான் உம்மை கீழ்த்தரமாக விமர்சிததாகவும் அதனால் தான் நான் இப்படி நடந்து கொள்கிறேன் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை உமது கீழ்தரமான செயற்பாடுகளுக்குக் காரணமாக எழுதியதால் தான் அதற்கான ஆதாரம் உம்மிடம் இருந்து என்னால் கோரப்பட்டது.

இங்கே எதுவித ஆதாரமும் இன்றி நீர் தான் எனது பெயரைப்பாவித்து உமது செய்கைகளுக்கு வியாக்கியானம் செய்துள்ளீர்.இது உமது செய்கைகளை நியாயப்படுத மேற் கொள்ளப் பட்ட ஒரு தனி நபர் மீதான தாக்குதல் , அதற்காகத் தான் உம்மிடம் அதற்கான ஆதாரம் கோரப்பட்டது.உம்மால் அது முடியாது ஏன் எனில் ஆதாரம் இன்றி மற்றவர் மீது பொய்மையான குற்றச் சாட்டுக்களை அடுக்குவது தான் உமது வழமையான கருத்தாடல் இங்கு, இதனை நீரே ஒத்துக் கொண்ட பின்னரும் நிர்வாகம் உம்மை இங்கே தொடர்ந்தும் கருதாடல்களைக் குழப்பவும் எதுவித ஆதாரமும் இன்றி தனி நபர்கள் மேல் தாக்குதல்களைத் தொடரவும் அனுமதிப்பது தான் விந்தைலும் விந்தை.மோகன் இதை இப்போது ஆவது உணருவாராக.மேலும் களத்தில் கள விதிகளுக்கு அமைவாக நிர்வாகம் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப் படுவதாக சொல்லித் தான் நாம் அனைவரும் இணைகிறோம்.அதில் நீர் மட்டுமே நிர்வாகத்திற்குச் சாவால் விட்ட வண்ணம் உங்கள் தீர்ப்புக்களை ,மாற்றுங்கள் அல்லது நான் இங்கே குழப்புவேன் என்றும் மட்டுறுதினர்களை வசை பாடியும் வலம் வருகின்றீர்.இதற்குக் அடிப்படைக் காரணம் நிர்வாகம் வேண்டிய தருணங்களில் உம்மீது கள விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்காததே.அதனையே மேற்குறிப்பிட்ட உமது நிர்வாகத்தின் மீதான மிரட்டல் தெளிவாகாக் காட்டுகிறது.இதனை மோகன் தொடர்ந்து அனுமதிப்பாராயின் களத்தில் இருந்து பலர் ஒதுங்கி விடுவர்.கள விதிகளை பாரபட்சமற்று அமுல் படுத்துவதும் சிக்கலானதாகி விடும். களத்தில் மேற் கொள்ளப் படும் எந்த விதமான செயற்பாடுகளும் தொடர்ந்தும் குழப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.

மேலும் உம்மோடு கருதாட எமக்கும் தேவயில்லை நீர் மிகவும் கீழ்தரமானவர் என்பது இப்போது உமது வாயாலையே எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது.இங்கே நீர் தான் தேவயற்று எனது பெயரை மேலே எழுதினீர் நான் அல்ல.அதனால் தான் உம்மிடம் ஆதாரம் கோரப்பட்டது.

நிர்வாகம் அரசியற் காரணங்களால் களத்தைக் குழப்பிய மதிவதனுக்கு வழங்கிய அதே தண்டனையை தனிப்பட்ட காரணங்களுக்காக வேண்டுமென்றே குழப்பும், நிர்வாகத்திற்குச் சாவல் விடும் இவருக்கும் வழங்க வேண்டும், அல்லாது விடின் இவர் திருந்துவதோ களத்தில் கருதாடல்களை வேண்டுமென்றே குழப்புவதோ, தனி நபர்கள்மேல் உள் நோக்குடன் வேண்டுமென்றே தாக்குதல் நடாத்துவதும் தொடர்ந்தும் நடை பெறத் தான் செய்யும். நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளாத விடத்து இவாறாணவர்கள் திருந்துவது கடினம்,கள விதிமுறைகளையும் உறுதியாக அமுல் படுத்த முடியாதும் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.