Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரா பௌர்ணமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள்.

r2.jpgபொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் தானமாகக் கொடுப்பது வழக்கமாகும். அன்று முழுவதும் உப்பில்லாத உணவுண்டு விரதம் இருத்தல் வேண்டும்.

மாதம் தோறும் பூரணை விரதம் அனுட்டிக்க இயலாதவர்கள் சித்திரா பூரணையாவது அனுட்டிக்க வேண்டும். இப்பூரணை விரதம் மற்றைய பூரணை விரதங்களை அனுட்டிப்பதன் பலனைக் கொடுக்க வல்லது. முதன் முறை விரதம் தொடங்கும் போது 5 அல்லது 9 கலசங்கள் வைத்து அவைகளில் சித்திர குப்தனையும் மற்றும் எட்டுத் திக்குப் பாலகர்களையும் (அல்லது நான்கு திக்குப் பாலகர்கள்) இருத்தி வழிபட்டு பிறகு தானம், ஓமம். பிராமண போசனம் முதலியன செய்ய வேண்டும்.

அன்று எல்லா பலன்களையும் கொடுக்கவல்ல இந்திர வழிபாடு செய்தல் வழக்கம் என்று தேவி புராணம் கூறுகின்றது. மருக்கொழுந்தினால் இந்திரன் முதலிய தேவர்களை வழிபட வேண்டும். அத்திதி சனி, ஞாயிறு அல்லது வியாழன் அன்று வருமாயின் மிகவும் விசேடமானது. இயமனுடைய கணக்குப்பிள்ளையே சித்திரகுப்தர் என்று அழைக்கப்படுவர். அவரவர் செய்த நன்மை, தீமைகளை எழுதி வைத்துக் கடைசியில் உத்தரிக்கிற காலங்களிலே அக்கணக்கை வாசிப்பவர் சித்திர குப்தர் ஆவார்.

சித்திர குப்தருக்கு காஞ்சி புரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சந்நதியும் உண்டு. வேறு எங்கும் கிடையாது. யமதேவன் தென் திசைக்கு அதிபதி. யமனுக்கு பதினான்கு பெயர்கள் இந்த யமனையும் வெல்ல வேண்டும் என்பதே அடியார்களின் அவாவாகும்.

எல்லாத் தருமங்களும் அன்பில் அடங்கும். அந்த அன்பே சிவம். அச்சிவமே காலகாலன் இந்த சிவத்தைப் பூசித்து மார்க்கண்டேயன் யமனை வென்றான். சாவித்திரி, மார்க்கண்டேய வரலாறுகள் யமனை வெல்ல இரண்டே மார்க்கம் உள்ளன என்பதை உணர்த்துகின்றன. ஒன்று சாவித்திரி மார்க்கம், இதனைக் காலவத்தனம் எனலாம். மற்றையது மார்க்கண்டேய மார்க்கம். இதனை காலவஞ்சனம் என்கிறார்கள்.

காலத்துக்குட்பட்டுக் காலனை வெல்வது காலவந்தனம். காலத்தைக் கடவுளை வழிபட்டு காலத்தை வெல்வது காலவஞ்சனம். சாவித்திரி மார்க்கண்டேயர் விஷயங்களில் யமதருமன் தன்கால தருமத்திற்கு விலக்காக நடந்து கொண்டார். சத்தியவான் விஷயத்தில் சாவித்திரியின் அளவு கடந்த அன்பில் ஈடுபட்டு தன் அனுக்கிரக வாக்கை காக்கும் பொருட்டு வரமளித்தார். இது காலவந்தனத்துக்கு உவந்து அளித்த வரம்.

மார்க்கண்டேயனோ காலனைச் சிந்தியாமல் சிவத்தைச் சிந்தித்து வந்தவன். கால நியமப்படி அவனது முடிவு காலம் வந்தபோது காலந்தகன் தன் கடமையைச் செய்ய வந்தான். ஆனால் மார்க்கண்டேயன் ஆதியந்தம் இல்லாத சுயம்பிரகாச வெளியில் சிவதரிசனத்தைக் கண்டு காலாதீதனாக விளங்கினான். இதனால் யமனின் அதிகாரம் மார்க்கண்டேயன் விஷயத்தில் தோற்றது.

தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீ வாஞ்சியம என்ற இடத்தில் யமதேவனுக்கு சந்நிதி உள்ளது. யமதேவனும், சனிபகவானும் சூரியனுடைய திருக்குமாரர்கள் என்று புராணம் கூறுகின்றது. சித்திரா பூரணையிலன்று போடப்படும் கோலத்தில் தென்புற வாசலை மூடியது போல போடுவது வழக்கமாகும்.

நூற்றுக்கணக்கான கோயில்கள் அமைந்துள்ள காஞ்சிமா நகரில் சித்திரகுப்தனுக்கோர் தனியான ஆலயமுண்டு. சித்திரா பெளர்ணமியில் விசேஷமான சித்திரகுப்தன் பூஜையும் புறப்பாடும் உற்சவமும் நடைபெறும். இதே பெளர்ணமியில் இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் அகலுவதற்காக மதுரையில் ஹாலாஸ்ய நாதனைப் பூஜித்தார். இப்பொழுதும் ஆண்டுதோறும் இங்கு வந்து இந்திரன் சித்ரா பெளர்ணமியில் பகவானைப் பூஜிப்பது ஐதீகம். அன்று விசேட உற்சவமும் நடைபெறும்.

 

இங்கிரிய தினகரன் நிருபர்...-

http://www.thinakaran.lk/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விரதம் அம்மா இல்லாத ஆட்கள் தான் அதிகம் பிடிக்க வேண்டும்.இந்த வருசம்,வருடப் பிறப்போடு சேர்ந்து வருகு...ரொம்ப கஸ்டம்:)

சித்திரை பௌர்ணமி என்றதும் எனது பழைய நினைவுகள் ஆட்கொள்கிறது...

முழு நிலவு நாளில் வைகை ஆற்று மணற்பரப்பில் வண்ண விளக்குகளின் அலங்காரமும், குழாய் ஒலிபெருக்கியின் வழியாக தவழும் பாடலும், பருவப் பெண்களின் சிரிப்பொலியும்... அவர்களின் ஜொலிஜொலிக்கும் தாவணியும், பெண்கள் கூட்டத்தை கவர விடலைகள் செய்யும் சேட்டையும்,  மக்கள் வெள்ளத்தின் இரைச்சலும்... ஆகா!! அந்த சனத் திரள்களுக்குள் நுழைந்தால் எங்கிருந்தோ சந்தோசம் தானாகவே சேர்ந்து கொள்ளும்...

பா.வெங்கடேசன் எழுதிய நீல விதி சிறுகதையில் இருக்கும் சில வரிகளை இங்கு கண்டேன்... அப்படியே சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்துகிறார்...

 

இறைவியின் திருக்கோயில் உச்சியில் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டு விட்டிருந்தது. நகரம் முழுவதும் இரைச்சலும் உள்ளூர் மக்களோடு பக்கத்து கிராமங்களிலிருந்து நெருங்கி வந்த ஜனநெருக்கடியும் சூதாட்ட அரங்கங்களில் இரைந்த காசுகளின் சலசலப்பும் வெற்றிக் களிப்பும் பொய்ச் சண்டைகளும் வியாபித்திருந்தன. நுழைவெல்லைகளைப் பூத்தோரணங்களும் வண்ணச் சுதேசித் துணி வளைவுகளும் அலங்கரித்துக்கொண்டிருந்தன. கடவுளின் திருமணத்தை முன்னிட்டு நகரப் பெண்களுங்கூட புதிய உடைகளாலும் புதிய மஞ்சள் துண்டுகள் கோர்க்கப்பட்ட மங்கல நாண்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். வீதிகளின் ஒவ்வொரு சந்திப்புப் புள்ளியையும் அவர்களே தங்கள் சிரிப்பாலும் மணத்தாலும் நிறைத்திருந்தார்கள்.  இந்தியாவின் வேறெந்த நகரத்திலும் இவ்வளவு பெண்களை வீதிகளில் பார்த்ததேயில்லையென்று நினைத்துக்கொள்ளும்படியாக இறைவியின் பெயரால் ஆண்டுக்கொரு முறை அனுமதிக்கப்படும் சுதந்திரத்தை முழுவதுமாக அனுபவிக்கவென்று அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீடுகளைத் துறந்து தனியாகவும் குழுக்களாகவும் வெளியே திரிந்துகொண்டிருந்த அந்தப் பெண்கள் ஈரங்காயாத கூந்தலால் அங்கே கனன்று கொண்டிருந்த வெய்யிலைத் தணியச் செய்திருந்தார்கள். இடுப்பிலிருந்து தொங்கும் தோல் குடுவையிலிருந்து குறுகிய குழாய்கள் மூலமாக நீரை உறிஞ்சி ஜனநெரிசலின் மேல் சாரலாகத் துப்பும் கள்ளழகர்கள் கருத்த வீதிகளையும் ஈரத்தால் பெண் கூந்தலாக்கிக் கொண்டிருந்தார்கள். சித்திரைத் தெருக்களின் காற்றில் இரண்டாண்டுகளுக்கொரு முறை வஸந்தராமின் சுவாசத்தைப் புதுப்பித்துத் தரும் நீர்மோரின் வாசனையும் வெல்லப் பானகத்தின் திகட்டலும் சுழன்றுகொண்டிருந்தது.  வளைவுகளில் தேரின் வரவை அறிவிக்கும் அதிர் வெடிகளின் கைக்குழந்தைகளைத் திடுக்கிட்டுக் கதற வைக்கும் சத்தம் சில நிமிடங்களுக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் வழிபாட்டிக்காக மாசி வீதிகளில் குவிந்து விட்டதைப் பயன்படுத்திக் கொண்டு வெளிவீதிகளில் வந்து நின்று கொண்ட ஆண்கள் கூட்டம் அங்கே உலா வந்து கொண்டிருந்த விளம்பர வண்டிகள் உதிர்த்த பெண் குரலிலும் பெண் சித்திரங்களிலும் சொக்கிப்போயிருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விரதம் அம்மா இல்லாத ஆட்கள் தான் அதிகம் பிடிக்க வேண்டும்.இந்த வருசம்,வருடப் பிறப்போடு சேர்ந்து வருகு...ரொம்ப கஸ்டம் :)

 

இந்தமாசம் இரண்டு தரம் பூரணை வருது.......அடுத்த பூரணைக்கும் பிடிக்கலாம். நான் வாற பூரணைக்குதான் விரதம்....திதியும் கணக்காய் வருது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாசம் இரண்டு தரம் பூரணை வருது.......அடுத்த பூரணைக்கும் பிடிக்கலாம். நான் வாற பூரணைக்குதான் விரதம்....திதியும் கணக்காய் வருது

அடப்பவியல் இத ஒருத்தரும் எனக்கு சொல்லேலயே
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தமாசம் இரண்டு தரம் பூரணை வருது.......அடுத்த பூரணைக்கும் பிடிக்கலாம். நான் வாற பூரணைக்குதான் விரதம்....திதியும் கணக்காய் வருது

அண்ணா இங்கே அநேகமான கோயில்களில் சொன்னார்கள் இரண்டாவது வரும் பெளர்ணமியில் வரும் நட்சத்திரம்/திதி இவ் விரதம் புலத்தில் பிடிப்பதற்கு உகந்ததல்ல என என்று ஏதோ காரணம் சொன்னார்கள்.மன்னிச்சுக் கொள்ளுங்கோ முதலே இது பற்றி யாழில் எழுதி இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.