Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'லக்ஸ்' திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் விருது பெற்ற 'தலைமுறைகள்' திரைப்படம் பற்றி இணையத்தில் தேடியபோது சென்னையில் கடந்த சனவரி மாதத்தில் திறக்கப்பட்ட புதிய திரையரங்குகளின் தொகுப்பு பற்றிய இந்த படங்களும், அதனைப் பற்றிய செய்திகளும் கிட்டின.

 

யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இனி...

 

 

'லக்ஸ்'(LUXE) திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை.

 

 

10171781_678669908858828_744823714910352

 

 

சென்னை வேளச்சேரி 'பீனிக்ஸ் சிட்டி மாலில்' (Phoenix City Mall) புதிதாக உருப்பெற்றுள்ள மாறுபட்ட , நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற வகையில் லக்ஸ் திரையரங்க தொகுப்பு  உருவாகியுள்ளது.

11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடியவகையில் இந்த 'லக்ஸ் தொகுப்பு' திறக்கப்பட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

வரவேற்பு மண்டபம்:

 

10253792_678670115525474_644330967678026

 

 

கதவைத் திறந்தவுடனே காற்றோட்டமான இடம், இத்தாலி மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூட்டத்தின் மையப் பகுதியில் 72 LCDகள் கொண்ட வீடியோ தூண் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்கூடத்தின் வலதுகை பக்க மூலையில் சற்று உயரமான மேடையில் பெரிய பியானோ ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டட் ஐபாட் உடன் இணைக்கப்பட்ட கருவியிலிருந்து  அனைத்து பிரபலமான இசையமைப்பாளர்களின் ரம்மியான பாடல்களைக் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

10256093_678670125525473_867616155976826

 

 

10252046_678670262192126_296686269837807

 

 

10171152_678670395525446_703753426391319

 

 

1514582_678670275525458_5070475988520499

 

 

10168233_678670082192144_675227904902285

 

 

திரையிடும் தொழில்நுட்பம்:

 

அனைத்து திரைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிநவீன 4K ரிசொல்யூஷனுடன் பார்கோ(Barco) டிஜிட்டல் புரொஜக்டர்களைக் கொண்டுள்ளன. 4K ரிசொல்யூஷனில் (4906 x 2160) பிரமிக்க வைக்கும் வகையில் படங்கள் தெரிவதுடன், 33,000 (Lumens) வெளிச்சத்தில் துள்ளியமான நிறத்தை வழங்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அலைவரிசை வகைகளிலும் உயர்ந்த துல்லிய தன்மையைக் கொடுப்பதற்காக உலகில் தலைசிறந்த QSC DCP 300 புராசஸருடன் 4 வழி QSC ஸ்பீக்கர்கள் வசதி கொண்டுள்ளன. அதிக ஒலி தெளிவுத்தன்மை கிடைப்பதற்கு இந்தச் சாதனங்கள் SMPTE தரத்தில் தொனியேற்றப்பட்டுள்ளன. சினிமா ஒலியமைப்பில் அதிநவீனமான டால்பி அட்மாஸ் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

 

1932455_678669905525495_9088232183154422

 

 

1964826_678669892192163_6674356703518531

 

வடிவமைப்பு:

 

லக்ஸின் ஒட்டுமொத்த உள் வடிவமைப்பையும்(Interiors), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காஸ்டர் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த டிசைனர் Giovanni Castor ஆல் உருவாக்கப்பட்டது. Remedios Siembieda என்று அழைக்கப்படும் Chhada Siembieda நிறுவனத்துடன் இணைந்து பல வருடங்கள் பணி புரிந்துள்ளார். மிகப் பிரபலமான நிபுணரான IMPei உடன் இணைத்து நியூ யார்க்கில் பணி புரிந்துள்ளார். மெக்சிகோவிலுள்ள Kacienda de San Antonio, French Polynesiaவிலுள்ள Adrian Zecha’s Arman Resorts-சும், Giovanni Vastorஇல் வடிவமைக்கப்பட்டவை.

 

 

10155980_678670005525485_159564915208034

 

 

கலிஃபோர்னியா Three Architecture உடன் L’Ermitage Beverly Hills, Pei Cobb Freed உடன் the Park Hyatta Taichung, Lohan Associates உடன் Grand Hyatt Mumbai மற்றும் மாலத்தீவில் உள்ள Rangali Island Resort, இவர் உள்ளமைப்பு வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த இடங்கள். லக்ஸின் உள் அலங்கார அமைப்பில் ஒளியமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறுகிறது. விரிவான ஒளியமைப்பு டிசைன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒளியமைப்பு வடிவமைப்பாளர் இன்டக்ரேடட் லைட்டிங் டிசைன சேர்ந்த பாபு சங்கரால் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அலங்காரம் மற்றும் ஒளியமைப்பு அனைத்திற்கும் சங்கர் மற்றும் ஐஎல்டி நிறுவனமே முக்கிய பொறுப்பாகும்.

 

 

luxe-cinemas-imax-opening-date.jpg

 

 

TH-LUXE_CINEMAS__1844082f.jpg

 

 

நன்றி: https://www.facebook.com/luxeimax

 

 

அடுத்த முறை தமிழகம் சென்றால் நிச்சயம் இந்த திரையரங்கத்திற்கு செல்வதென முடிவெடுத்துவிட்டேன்.. :rolleyes:

 

சென்னை சென்ற டங்கு, வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் போலுள்ளது. :o

 

நீங்கள் எப்படி? :lol:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்பம் பற்றி விரிவாக மேலும் சில படங்களுடன் பின்னர் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் ரெடி ...! :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியாதே.. :o தெரிந்திருந்தால் கட்டாயம் போயிருப்பேன்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி. தமிழ்நாடு சென்றால் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

10171781_678669908858828_744823714910352

 

தியேட்டர் நல்ல அழகாக உள்ளது.
கலரியில் உள்ள கதிரைகளே.... லெதர் கதிரைகளாக உள்ளது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.