Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள் ஊடகங்களில் இருந்து

Featured Replies

  • தொடங்கியவர்

புலிகளுக்கு ஒஸ்லோவின் நிதியுதவி குறித்து நோர்வே பத்திரிகை தகவல்

நோர்வே நாட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு ஸ்ரீலங்காவின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 25 மில்லியன் நோர்வே குறோன் வரையான நிதி உதவியை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கியிருப்பதாகவும் ஸ்ரீலங்கா நாணயப் பெறுமதியைப் பொறுத்தவரை ரூபா 375 மில்லியன் அல்லது ரூபா 37 கோடியே 50 இலட்சம் பெறுமதியான இந்த நிதி உதவியை நோர்வே அரசு புலிகள் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னருள்ள குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே வழங்கியிருப்பதாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான `நீ ரீடி' தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நோர்வே அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையேயான நிதி உதவிபற்றி நோர்வே நாட்டுப் பத்திரிகையே தெரிவித்திருக்கும் தகவல்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மேற்படி பெருந்தொகையான பணத்தொகையை நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்துக்கு வழங்கியிருப்பதாகவும், புலிகள் அமைப்பின் சமாதான தலைமைச் செயலகத்துக்கே நேரடியாக இந்தப் பெரும் தொகையை நோர்வே அரசு கொடுத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிதி உதவியை புலிகள் அமைப்புக்கு நோர்வே அரசின் வெளிவிவகார அமைச்சு வழங்கியிருப்பதற்கான காரணம் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்களுக்கேற்ப அந்தப் பணத்தொகை முழுவதையும் சமாதான நடவடிக்கைகளின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் மேற்கொள்ளும் போக்குவரத்து உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்காகவே நோர்வே அரசு புலிகள் அமைப்பின் சமாதான அலுவலகம் மூலம் கொடுத்திருப்பதாக மேற்படி நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து வெளியாகும் `நீ ரீடி' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

-திவயின : 14.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/18/...s_page10999.htm

  • Replies 62
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஐரோப்பாவில் வாங்க புலிகள் திட்டம்

கடந்த பெப்ரவரி மாதம் 22, 23 ஆம் திகதிகளில் ஷ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே சமாதானப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவ்வாறு பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் குழுவினர் ஜெனிவா செல்வதற்காக 7 மில்லியன் ரூபா தொகையை ஷ்ரீலங்கா அரசு செலவிட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் நிபந்தனையற்ற முறையில் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற புலிகள் இயக்கம் இணங்கியிருந்தது. அவ்வாறு 2006 பெப்ரவரி மாதம் அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இதுபற்றி இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகையாகிய இந்துஸ்தான் ரைம்ஸ் (Hindustan Times) பத்திரிகையில் பிரபல அரசியல் விமர்சகர் மீனாட்சி ஐயர் வெளியிட்டிருந்த கட்டுரையில் புலிகள் அமைப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்துள்ளது. உண்மையில் சமாதானத்தை எய்தும் நோக்கமல்ல எனவும் அவ்வாறான சமாதானப் பேச்சுக்கள் மூலம் ஷ்ரீலங்கா அரசு மூலமும் இயக்கத்துக்கு வேண்டிய ஐரோப்பாவில் செய்ய வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்ளவே என்றும் கருத்துப்பட தெரிவித்திருந்தார்.

தற்போது புலிகள் இயக்கம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் நிலையில் நம்பத்தகுந்த பாதுகாப்புத்தரப்பு சம்பந்தப்பட்ட சில வட்டாரங்களிலிருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்தத் தகவல்களுக்கேற்ப புலிகள் அமைப்பினர் சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய முயற்சி செய்வதன் பின்னணியில் இரகசியமான நோக்கங்கள் இருப்பதாகவும், இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதே புலிகள் அமைப்பின் திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, புலிகள் இயக்கத்தினரின் முக்கிய முகாம்கள், நிலையங்கள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்துவதற்காக விமானப்படையினர் பயன்படுத்தும் கிபீர் விமானங்கள் உட்பட ஏனைய விமானங்களைத் தாக்கியழிக்கும் சக்தி வாய்ந்த சாம் ஏவுகணைகளை குறிப்பிட்ட ஐரோப்பிய நாடு ஒன்றில் கொள்வனவு செய்வதே புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் நோக்கம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மேற்படி பாதுகாப்பு வட்டாரச் செய்திகளிலிருந்து தெரியவந்துள்ளது. திவயின விமர்சனம்: 17.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/19/...s_page11059.htm

  • தொடங்கியவர்

வெள்ளையினத்தவரைக் காதலித்து மணமுடிக்கிறார் சந்திரிகாவின் மகள்

சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க அண்மையில் "லங்காதீப" பத்திரிகை சார்பில் காணப்பட்ட செவ்வி ஒன்றில் தெரிவித்திருக்கும் தகவல்களில் அவருடைய சகோதரியும் முன்னாள் ஷ்ரீலங்கா ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவின் மகளுக்கு அண்மையில் லண்டனில் நடைபெறவிருக்கும் திருமணம் பற்றிய விபரங்களைத் தெரிவித்துள்ளார். மேற்படி செவ்வியில் இது பற்றி அவர் கூறியிருப்பதற்கேற்ப முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகள் வெள்ளை இனத்தவர் ஒருவரைத் திருமணம் செய்யப் போவதாகவும் அவர் ஒரு வைத்தியக் கலாநிதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணமகனுக்கும் மணமகளுக்குமிடையே ஏற்பட்டிருந்த காதலைத் தொடர்ந்தே இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெறுவதாகவும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது சகோதரியின் மகள் வெள்ளையினத்தவர் ஒருவரை மணமுடிப்பது பற்றி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்; முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி இத்தாலிய நாட்டவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவருமான சோனியாவைத் திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். மேலும், தற்போது இந்தியாவின் தலைவர் யார் என்று கேள்வி கிளப்பிய அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க இவ்வாறு சோனியா வேறு நாட்டவராக இருந்த போதும் அவர் இந்தியாவின் பிரபல காந்தி பரம்பரையைச் சேர்ந்தவர் போலவே கருதப்படுகிறார் எனவும் எனவே, பண்டார நாயக்கா பரம்பரையில் தோன்றிய தனது சகோதரியின் மகள் வெள்ளையினத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதால் பண்டாரநாயக்க பரம்பரையினர் மீது ஷ்ரீலங்கா மக்கள் வைத்துள்ள ஆதரவு குறைந்து விடாதென்றும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா சுட்டிக் காட்டியுள்ளார். லங்காதீப:17/9/2006

http://www.thinakkural.com/news/2006/9/19/...s_page11063.htm

  • தொடங்கியவர்

கட்டைபறிச்சானில் 250 புலிகள் பலி

சம்பூர் பிரதேசத்தை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து விடுவிப்பதற்காக ஷ்ரீலங்கா படையினர் யுத்த நடவடிக்கையை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்தினர் கட்டைபறிச்சானிலுள்ள இராணுவ முகாம்கள் மீது தொடுத்த கடுமையான தாக்குதல்களின் போது கட்டைபறிச்சான் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தரப்பில் இராணுவ உத்தியோகத்தர்கள் உட்பட 80 பேர் மட்டுமே இருந்தார்கள் எனவும் ஆயினும் புலிகள் அமைப்பினர் தரப்பில் 700 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முகாமைச் சுற்றிவளைத்து தாக்குதலைத் தொடுத்தனர் எனவும் எவ்வாறாயினும் கட்டைப்பறிச்சான் முகாமிலிருந்து 80 இராணுவ வீரர்கள் வீரமாகப் போரிட்டு புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட இந்தப் பாரிய தாக்குதலை முறியடித்து முகாம் புலிகளின் கைகளில் சிக்காது பாதுகாத்துக் கொண்டனர் எனவும் குறித்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இராணுவ கப்டன் விஜித அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுமார் 750 பேர் வரையிலான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் முகாமைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்த 5 நாட்கள் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமைச்சேர்ந்த 80 வீரர்களும் போராடி முகாமை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் அந்த வீரமிகு தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதையிட்டும் இவ்வாறு பெருந்தொகையான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை சிறு தொகையினராக இருந்து அடித்து விரட்டியதையிட்டும் பெருமைப்படுவதாக மேற்படி முகாம் தலைவர் கப்டன் அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவ தினம் எவ்வாறு மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுங்களுடன் பெருந்தொகையில் வந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தாக்குதல்களின் ஆரம்பக் கட்டங்களில் கட்டைபறிச்சான் முகாம் பகுதியிலுள்ள இராணுவத்தினரின் 8 பதுங்கு குழிகளைக் கைப்பற்றியதாகவும் ஆயினும் முகாமிலிருந்து 80 இராணுவத்தினரும் பின்வாங்காது தொடர்ந்து பதில் தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த சந்தர்ப்பங்களில் மூதூரிலும் தாக்குதல்களை நடந்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு ஏனைய பிரதேச இராணுவத்தினரின் உதவி கிடைக்கவில்லயெனவும் கப்டன் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

இவ்வாறு கட்டைப்பறிச்சான் மீது தாக்குத்களை நடத்த வந்த புலிகள் இயக்கத்தினரில் சுமார் 200 பெண்புலி உறுப்பினர்கள் இருந்ததாகவும் இந்த தாக்குதல்களின் முடிவில் இராணுவத்தினர், புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடித்த நிலையில் 250 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் கட்டைபறிச்சான் இராணுவக் கப்டன் கூறியுள்ளார். -லங்கா தீப:17.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/19/...s_page11062.htm

  • தொடங்கியவர்

படையினரின் தாக்குதலில் புலிகளின் தலைவர்கள் பலி

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினரால் அண்மையில் புலிகள் இயக்கத்தினரின் முக்கிய முகாம்கள், நிலையங்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிரமான தாக்குதல்களில் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிக்கி உயிரிழந்துவிட்டதாகப் புலிகள் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்பின் பிரபல தலைவர்கள் மூவர் படையினரின் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டுவிட்டதை புலிகள் இயக்க ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரரே உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் "திவயின" சார்பில் மேற்படி புலிகள் அமைப்பின் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரருடன் மேற்கொண்ட தொலைபேசி தொடர்பாடல் ஒன்றின்போதே அவர் தமது இயக்கத் தலைவர்களின் உயிரிழப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு மேற்படி மூன்று முக்கிய புலிகள் அமைப்பின் தலைவர்களும் திருகோணமலை பிரதேசத்திலும் வடக்குப் பிராந்தியங்களிலும் பாதுகாப்புப் படையினர் அண்மையில் மேற்கொண்ட தீவிர தரைவழித் தாக்குதல்களிலும் விமானத் தாக்குதல்களிலும் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். ஆயினும், அண்மைத் தாக்குதல்களால் புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு பற்றி புலிகளின் ஊடகப்பேச்சாளர் மறுத்துள்ளார். மேலும், அண்மையில் கல்முனை கடற்பிராந்தியத்தில் வைத்து புலிகள் அமைப்பின் கப்பல் ஒன்று ஷ்ரீலங்கா கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டது பற்றி தயா மாஸ்ரரிடம் வினவப்பட்டபோது, அப்படி சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

-திவயின: 19.07.2006-

http://www.thinakkural.com/news/2006/9/21/...s_page11223.htm

  • தொடங்கியவர்

உணவு லொறிகளை கடத்தும் புலிகள்

வவுனியாவுக்கு அப்பால் ஓமந்தை எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் படையினரின் காவலரண் பகுதியினூடாக வடக்கே அரச படையினரால் மீட்கப்படாததும் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ளதுமான பிரதேசங்களுக்கு பிரதான உணவுப் பொருளாகிய மா மூடைகளை ஏற்றிச் சென்ற மூன்று லொறிகளை புலிகள் இயக்க உறுப்பினர்கள் இடைமறித்துப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் மூலமாகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் செய்யப்பட்ட இந்த லொறிக் கடத்தல் சம்பவம்பற்றி வவுனியா பாதுகாப்புப் பிரிவு தலைமை அதிகாரி ஒருவர் தகவல் தருகையில், இவ்வாறு ஓமந்தைக் காவலரண் பகுதியிலிருந்து படையினரால் கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படாத பகுதியாகிய கிளிநொச்சிக்குச் செல்ல மாமூடைகள் அடங்கிய நான்கு லொறிகள் அனுமதிக்கப்பட்டதாகவும் இவற்றில் மூன்று லொறிகளையே புலிகள் இயக்க உறுப்பினர்கள் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை மேற்படி லொறிகளின் சாரதிகளே பாதுகாப்புப் படைப்பிரிவு தலைமை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப சம்பவதினம் ஓமந்தை காவரலண் பகுதியிலிருந்து கிளிநொச்சி செல்ல படையினரால் அனுமதிக்கப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்ற நிலையிலேயே மேற்படி நான்கு லொறிகளையும் இடைமறித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூன்று லொறிகளிலிருந்த சாரதிகளையும் பலாத்காரமாக இறக்கியபின் மா மூடைகள் அடங்கிய மூன்று லொறிகளையும் கடத்திச் சென்றதாகப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்ற மூன்று லொறிகளைத் தவிர ஒரு லொறிமட்டுமே கிளிநொச்சி போய்ச் சேர்ந்துள்ளது.

-லங்காதீப : 18.09.2006-

  • தொடங்கியவர்

இந்திய சமஷ்டியிலும் கூடுதல் அதிகாரமே தீர்வு என்கிறார் அநுரா

ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்ற அரசியலமைப்பு பற்றி அண்மையில் சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், அத்தகைய தீர்வுக்காக சமஷ்டி முறையொன்றே ஏற்றது எனவும் ஆயினும், இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் சமஷ்டி அரசியலமைப்பு முறை ஸ்ரீலங்காவுக்கு ஏற்றதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அண்மையில் லங்காதீப பத்திரிகைக்காக அளித்த செவ்வி ஒன்றிலேயே அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சமஷ்டி முறையிலான தீர்வு பற்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கருத்து வெளியிடும்போது, அவரது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இனப்பிரச்சினைக்கான தீர்வாக 1938 ஆம் ஆண்டில் சமஷ்டி அரசியலமைப்பையே அறிவித்திருந்தார் எனவும் ஆயினும், அந்தக் காலகட்டத்தில் தமிழர் பிரச்சினை இன்று உள்ளதுபோல் தீவிரமாக இருக்கவில்லை எனவும் அவ்வாறு இருந்த நிலையிலேயே அவரது தந்தையார் தகுந்த தீர்வைத் தெரிவித்திருந்தார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது இவ்வாறு இனப்பிரச்சினை மோசமடைந்திருப்பதால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டி அரசியலமைப்பைக் காட்டிலும் கூடுதல் அதிகாரம் கொண்ட சமஷ்டித் தீர்வை வழங்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் அநுரா குறிப்பிட்டார். இவ்வாறு இந்த நாட்டிற்கு ஏற்றதொரு சமஷ்டித்தீர்வு கிடைக்காவிட்டால் மக்கள் எல்லோரும் புதைகுழிக்குள் செல்லும் வரை யுத்தம் தொடரவே செய்யும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க.

லங்கா தீப :17.09.2006

http://www.thinakkural.com/news/2006/9/21/...s_page11218.htm

  • தொடங்கியவர்

சந்திரிகாவின் மகன் விமுக்தி அரசியலில் பிரவேசிக்கும் சாத்தியம்

சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரியுமான சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்திக்கு தனது பெயரிலுள்ள ஹொறகொல்ல சொத்தை உரிமையாகக் கொடுத்து உயில் எழுதிவிட்டதாக அமைச்சர் அநுரா தெரிவித்துள்ளார். இவ்வாறு ஹொறகொல்ல வளவு எனப்படும் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் பிரபல்யம் வாய்ந்த பாரம்பரிய சொத்தை அமைச்சர் அநுரா தனது சகோதரியின் மகனுக்குக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், அவரது மூத்த சகோதரி சுநேத்ரா பண்டாரநாயக்காவும் அவரும் திருமண வாழ்க்கையில் ஈடுபடவில்லை எனவும் இருவருக்கும் பிள்ளைகள் இல்லாத காரணத்தால் அவர் இறந்த பின்னர் அவருக்குடைமையான சொத்துக்கள் அரசாங்க உடமையாக்கப்பட்டுவிடலாம் எனவும் கூறியுள்ளார். எனவேதான் தான் உயிருடன் இருக்கும்போதே அவரின் பெயரிலுள்ள ஹொறகொல்ல வளவுச் சொத்துக்களை சகோதரி சந்திரிகாவின் மகன் விமுக்திக்கு முன்கூட்டியே எழுதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க அறிவித்திருப்பது அண்மையில் அவர் "லங்காதீப" பத்திரிகைத் தரப்புக்கு அளித்த செவ்வி ஒன்றின் போதேயாகும். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி லண்டனிலிருந்து ஸ்ரீலங்காவுக்குத் திரும்பி வந்து தனது தாயாரின் வழிகாட்டலில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அதற்கு வசதியாகவே பண்டாரநாயக்க பரம்பரையின் பாரம்பரிய ஹொறகொல்ல வளவை அநுரா பண்டாரநாயக்க தனது சகோதரி மகனுக்கு உடைமையாக எழுதிக் கொடுத்துவிட்டதாகவும் இவ்வாறு விமுக்தியின் வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கான ஒரு பாரம்பரிய அடிப்படையாக இருப்பதற்கும் அங்கிருந்து விமுக்தி தனது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாகவே குறித்த பிரபல்யம் வாய்ந்த பண்டாரநாயக்க குடும்ப வளவு விமுக்தியின் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் வதந்திகளின் அடிப்படையில் ஊடகத்தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் அதுபற்றி உறுதியாகத் தெரியவில்லையெனவும் அத்துடன் விமுக்தி ஸ்ரீலங்காவில் வசிப்பதற்காக வருவாரா என்பது பற்றியும் தன்னால் கூறமுடியாது எனவும் தெரிவித்ததுடன் ஆயினும் தனது சகோதரி மகன் தன்னில் பாதி என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்திரிகா குமாரதுங்க ஸ்ரீலங்காவுக்கு மகனுடன் திரும்பி வந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது பற்றி ஊகங்கள் தெரிவிக்கப்படுவது பற்றி கேட்கப்பட்டபோது அதனை நிராகரித்து அந்தத் தகவல் பொய்யானது எனக்கூறிய அமைச்சர் அநுரா ஆயினும் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சம்பந்தமான தகவல்கள் பற்றி ஸ்ரீலங்காவின் ஒரு சிலர் பயந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

-லங்காதீப : 17.09.2006-

  • தொடங்கியவர்

பனாமா, ஹொன்டூராஸ் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட புலிகளின் கப்பல்

விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் தற்காலத்துக்கேற்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்ட 11 நவீன கப்பல்கள் உள்ளன எனவும் இவை சர்வதேச கடற்பிராந்தியங்களில் போக்குவரத்துச் செய்து வருவதாகவும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி ஸ்தானபமாகிய சர்வதேச லோயிட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் லோயிட் லிஸ்ற் (Loyds List) அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆசிய ப் பிராந்திய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தொடர்புடையவை எனவும் இந்த நிறுவனங்களின் சர்வதேச கப்பல் போக்குவரத்து செயற்பாடுகளின் கீழே மேற்படி விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் போக்குவரத்து செய்துவருவதாகவும் இவற்றில் சில கப்பல்கள் விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு குறித்த சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் பெயரில் மத்திய அமெரிக்கப் பிராந்திய நாடும், சர்வதேச கடல் கால்வாயாகிய பனாமா கால்வாய் அமைந்துள்ளதுமான பனமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் புலிகள் அமைப்பில் வேறு சில கப்பல்கள் குறித்த புலிகள் சார்பு சர்வதேச கப்பல் நிறுவனங்களால் மற்றுமொரு தென்னமெரிக்க நாடாகிய ஹொன்டூராஸில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்படி லோயிட்ஸ் கப்பல் காப்புறுதி சர்வதேச நிறுவனம் வெளியிட்ட தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மேற்படி அனைத்துக் கப்பல்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்கள் என்று பதிவு செய்யப்பட்ட நிலையில் வர்த்தகக் கப்பல் என்ற போர்வையில் சர்வதேச ரீதியில் யுத்த ஆயுதங்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்திருக்கும் மேற்படி லோயிட்ஸ் கப்பல் காப்புறுதி நிறுவனம் இந்தக் கப்பல்கள் "சீபிஹின்" என்னும் பெயருடைய வர்த்தகக் கப்பல்களின் தொகுதியாக குறித்த "சீபிஹின்" வலையமைப்பில் சர்வதேச கடற்பிராந்தியங்களில் போக்குவரத்துச் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான இந்தக் கப்பல்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்து சட்டவிதிகளுக்கேற்ப குறித்த சர்வதேச கப்பல் கம்பனிகளின் ஆதரவில் பனாமா ஹொன்டூராஸ் ஆகிய நாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் வர்த்தகக் கப்பல்கள் என்ற பெயரில் நீண்டகாலமாக ஆயுதங்கள் வெடிப்பொருட்களை ஏனைய வர்த்தகப் பொருட்களுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ களவாக கடத்திவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தக் கப்பல்கள் மூலம் இதுவரையில் பெருந்தொகையான ஆயுதங்கள், யுத்த உபகரணங்கள் வெடிப்பொருட்களை சிறிலங்காவுக்குக் கடத்தியுள்ளதாகவும் குறித்த லோயிட்ஸ் நிறுவனத்தரப்பு தகவல்கள் கூறியுள்ளன.

- திவயின:19.9.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/22/...s_page11320.htm

  • தொடங்கியவர்

புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார்

அண்மைக் காலங்களில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகள் இயக்கத்தினரிடையே மிகமோசமான ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்புக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடல்கோள் அனர்த்தமேயாகும்.

கடல்கோள் அனர்த்தத்தின்போது நிலத்துக்குக் கீழ் பாரிய அறைகளிலும் பதுங்கு குழிகளிலும் புலிகள் அமைப்பினரால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஏராளமான யுத்த ஆயுதங்கள், வெடி மருந்துப் பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. இவ்வாறு கடல்கோள் அனர்த்தத்தில் புலிகள் அமைப்பில் ஆயுதங்கள் அழிந்து போனதுபற்றி விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகக் கருதப்படும் பாலகுமார் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடல்கோளால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் 2005 ஜனவரி மாதம் தெரிவித்தார். அப்போது அவர் அறிவித்ததற்கேற்ப புலிகள் இயக்கத் தலைவர் யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்காக தீவிரமான திட்டமொன்றை தீட்டியிருந்தார் எனவும் ஆயினும் அந்தத் திட்டத்தை கடல்கோள் நாசமாக்கிவிட்டதென்றும் பாலகுமார் கூறியிருந்தார்.

இவ்வாறு பாலகுமார் அறிவித்ததிலிருந்து தெரிய வருவது யாதெனில், கடல்கோள் அனர்த்தத்தில் புலிகளின் ஆயுத பலம் அழிந்துவிட்ட நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றிலும் பலவீனமாக உள்ளது என்பதே. -திவயின: 19.09.06-

http://www.thinakkural.com/news/2006/9/26/...s_page11589.htm

சிங்களவனுக்கு மேல்மாடி இல்லை எண்டு நல்லாதெரியுது :P :)

  • தொடங்கியவர்

புலிகள் கைவிட்டுச் சென்ற பாரிய ஆயுதக் களஞ்சியங்கள்

திருகோணமலைப் பிராந்தியத்தில் சம்பூர் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினரின் முகாம் தொகுதிகள் மீது முப்படையினரும் அண்மையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர், அந்தப் பிரதேசத்தை விட்டு அவர்கள் பின்வாங்கியதைத் தொடர்ந்து சம்பூர் பிரதேசத்தைக் கைப்பற்றிய படையினர் புலிகள் இயக்கத்தினரின் முகாம் பகுதிகளிலும் மற்றும் அவர்களுடைய நிலையங்களிலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது புலிகள் அமைப்பினர் விட்டுச் சென்ற பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கடந்த 21 ஆம் திகதி படையினரல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆயுதக் களஞ்சியத்தில் மோட்டார் குண்டுகள், விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் விசேட குண்டுகள் போன்ற முக்கிய குண்டு வகைகள் உட்பட பெருந்தொகையான குண்டுகள், ரவைத் தொகுதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த ஆயுதக் களஞ்சியத்திலேயே சம்பூர் பிரதேசத்திலும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முன்னர் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினர், தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய அனைத்து குண்டு வகைகள், ரவை வகைகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகத் தெரிய வந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்ப மேற்படி புலிகளின் சாம்பூர் ஆயுதக் களஞ்சியத்தில் அதி சக்தி வாய்ந்த 120 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் மட்டும் 60 க்கு மேல் இருந்தன எனவும் அத்துடன் விமானங்களை தாக்கியழிக்கும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் 150 விசேட ரவைகளும், இயந்திரத்துப்பாக்கிகளுக்கு

  • தொடங்கியவர்

வடக்கில் புலிகளின் பிஸ்டல் குழுவின் நடமாட்டம் அதிகரிப்பு

கடந்த 22 ஆம் திகதி மட்டும் புலிகள் இயக்கத்தின் பிஸ்டல் குழுவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பொது மக்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள இருபாலை பிரதேசத்திலும் மற்றும் வடக்கேயுள்ள பருத்தித்துறைப் பிரதேசத்திலும் புலிகளின் பிஸ்டல் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் நான்கு குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் மூவரை இருபாலைப் பகுதியில் வைத்தே புலிகளின் பிஸ்டல் குழுவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட நபர்களின் இறந்த உடல்களைச் சம்பவதினம் பிற்பகல் கண்டெடுத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம்பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப 30 வயதான ஏகாம்பரம் லவன்குமார், 36 வயதுடைய செல்லத்துரை கேதீஸ்வரன், 34 வயதான எஸ்.குமார் மற்றும் 58 வயதுடைய பாக்கியநாதன் மாணிக்கம் ஆகிய நான்கு நபர்களே இவ்வாறு கடந்த 22 ஆம் திகதி புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் பிஸ்டல் குழுவினரின் நடமாட்டமும், கொலைச் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாகவும் இதனால் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் வசிக்கும் சாதாரண பொதுமக்கள் பெரும்பீதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -லங்காதீப : 23.09.2006

http://www.thinakkural.com/news/2006/9/26/...s_page11590.htm

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கப்பல் நடமாட்டம் பற்றிய தகவல்களை வழங்கிய `றோ' அமைப்பு

சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமாகிய லொயிட்ஸ் இன்ரர்நஷனல் அமைப்பினால் பிரித்தானிய பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் கோரிக்கையின் பெயரில் முன்வைத்த அறிக்கைகளில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமாக 11 வர்த்தகக் கப்பல்கள் இருப்பதாகவும் அவை "சீ பிஜன்" எனப்படும் கடல் போக்குவரத்து வலையமைப்பின் சர்வதேச கடல் பிராந்தியங்களில் நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லொயிட்ஸ் இன்ரர்நஷனல் அமைப்பு புலிகள் அமைப்பின் வசமிருக்கும் கப்பல்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கும் முன்னரே இந்திய உளவுச்சேவையாகிய "றோ' அமைப்பு புலிகள் அமைப்புக்குச் சொந்தமான கப்பல்கள் பற்றிய பெயர் விபரங்களை வெளியிட்டுவிட்டது. "றோ" உளவுச் சேவையின் தகவல்களுக்கேற்ப விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமாக வோலன், இல்யானா சீ ஹோர்ஸ், சன்பேட் செலிசியா, ஹோல்டன் பர்ட், அலி ஜோடின், ரொன்கோவா, அனற் ஆகிய பெயர்களில் வர்த்தகக் கப்பல்கள் ஆசிய கடற்பிராந்தியங்களில் மட்டுமன்றி சர்வதேச கடற் பரப்பிலும் நடமாடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி "றோ" இந்திய உளவுச்சேவையால் பெயர் குறிப்பிடப்பட்ட புலிகள் இயக்கத்தினரின் கப்பல்களில் ரொன்கோவா எனப்படும் கப்பல் ஷ்ரீலங்கா கடற்படையினராலும், அனற் என்னும் கப்பல் இந்திய கடற்படையினராலும் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டன. இதற்கு மேலதிகமாக புலிகள் அமைப்பினரின் ஐந்து ஆயுதக் கப்பல்கள் ஷ்ரீலங்கா கடற்படையாலும் விமானப்படையாலும் அழிக்கப்பட்டுவிட்டன.

தற்போது, வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் புலிகள் அமைப்புக்குச் சொந்தமாக இருந்த கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் முடக்கப்பட்டுவிட்டதுடன் புலிகள் அமைப்பின் ஆயுதக் கடத்தல் வலையமைப்பும் சிதறிவிட்டது என்றே கருதப்பட வேண்டும்.

-திவயின விமர்சனம் : 24.09.2006-

  • தொடங்கியவர்

தாய்லாந்து புகெட் தீவில் புலிகளின் ஆயுதக் கடத்தல் நிலையம்

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகக் கருதப்படும் பிரபலமான தீவுகளிடையே தாய்லாந்துக்குச் சொந்தமானதும் அண்மையிலுள்ளதுமான "புகெட்" தீவு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாறு புகெட் தீவு சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட வகையில் மட்டுமன்றி கப்பல்கள் மூலமான கள்ளக் கடத்தல் வியாபாரத்துக்கும் பெயர் பெற்ற மத்திய நிலையமாக உள்ளது. இவ்வாறு ஏனைய கள்ளக் கடத்தல் வியாபாரங்களுடன் சட்ட விரோதமாக ஆயுதங்களைக் கடத்தும் வியாபாரமும் "புகெட்"தீவில் தாராளமாக செய்யப்படுகிறது.

இந்த "புகெட்" தீவிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் சட்ட விரோத ஆயுத விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யும் பல்வேறு ஆயுத வகைகளையும் இந்த "புகெட்" தீவில் வைத்தே புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் ஆயுத முகவர்களும் கப்பல்களில் ஏற்றி ஸ்ரீலங்காவிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டப் பகுதியிலுள்ள கரையோரப் பிராந்தியங்களுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பி வைக்கும் முக்கிய ஆயுதக் கடத்தல் காரராக இருப்பவரே கே.பீ. என்னும் சுருக்கப் பெயரில் அழைக்கப்படும் குமாரன் பத்மநாதன் என்பவராகும். இவர் இந்த புகெட் தீவிலேயே வசித்து வருகிறார். இவரையே இன்று சர்வதேச பொலிஸ் சேவையாகிய "இன்ரர்போல்" மிகவும் தேவைப்படும் நபராகத் தேடி வருகிறது. இவ்வாறு ஆசியா நாடுகளிலிருந்து புலிகள் அமைப்பினர் சட்ட விரோத ஆயுதங்களைக் கடத்தும் நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட கதையாகியுள்ளது.

மேற்படி கே.பி.எனப்படும் நபர் பற்றியும் புலிகள் அமைப்பின் ஆயுதக் கடத்தல்கள் பற்றியும் மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு சர்வதேச ரீதியிலான புலிகள் அமைப்பின் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைவர் குறித்த கே.பி.என்பவரே எனவும் இவருடைய உண்மையான அல்லது மற்றுமொரு பெயர் தர்மலிங்கம் சண்முகம் குமாரன் எனவும் இன்ரர்போல் சர்வதேச பொலிஸ் சேவை இவரைப் பற்றிய விபரங்களை இணையத்தளம் மூலம் வெளியிட்டு அவரைத் தேடப்படும் நபராக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இன்ரர்போல் சேவையின் இணையத்தளத்திற்கேற்ப அவரை தர்மலிங்கம் சண்முகம் குமாரன் அல்லது கே.பி.எனவும், அவருடைய பிறந்த இடம் காங்கேசன்துறை யாழ்ப்பாணம், பிறந்த திகதி 1955 ஏப்ரல் 6, எனவும் அவர் தமிழ், ஆங்கிலம், சிங்களம் பிரெஞ்சு ஆகிய நான்கு மொழிகளும் பேசக் கூடியவர் என்றும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட குற்ற செயலுக்காக அவரைத் தேடுபதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா கடற் பிராந்தியத்தில் படையினரால் தாக்கி அழிக்கப்பட்ட புலிகள் அமைப்பினரின் கப்பலில் ஆயுதங்களை ஏற்றி அனுப்பியிருப்பவரும் மேற்படி கே.பி. எனப்படும் புலிகள் இயக்க ஆயுதக் கொள்வனவுத் தலைவரே என்பதும் தெரிய வந்துள்ளது.

- லங்கா தீப விமர்சனம் 24.09.2006

http://www.thinakkural.com/news/2006/9/27/...s_page11647.htm

  • தொடங்கியவர்

ராஜீவ்காந்தி கொலையை எந்தவகையிலும் ஏற்கமுடியாது என்கிறார் சம்பந்தன்

விடுதலைப் புலிகள் அமைப்பினர் முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததற்காக இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் இவ்வாறு மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் உடனே எடுக்க வேண்டுமெனவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அறிவித்துள்ளதாக இந்திய செய்திச்சேவை ஒன்றின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்வித்ததற்காக இந்தியாவிடம் மன்னிப்புக்கோரும் நடவடிக்கையானது குறித்த கொலைச் செயலுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் கவலைப்படுவதை இந்திய மக்களுக்கு நிரூபிக்கும் நடவடிக்கையாக அமையும் எனவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை இந்தியாவின் முக்கிய செய்திச் சேவைகளில் ஒன்றாகிய இந்திய ஆசிய செய்திச் சேவை (India Asia News Service) தெரிவித்துள்ளது. இதுபற்றி இந்த செய்திச் சேவை மேலும் தெரிவிக்கையில்; கடந்த 20 ஆம் திகதி புதுடில்லியில் சர்வதேச தொடர்புகள் சம்பந்தப்பட்ட இந்திய சபை என்னும் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலேயே தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டியது கட்டாயம் பற்றி அறிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு முன்னாள் இந்தியப்பிரதமரை கொலை செய்த நடவடிக்கையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தமிழினத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் மக்களும் இவ்வாறு இந்தியப்பிரதமரைப் புலிகள் அமைப்பு கொலைசெய்ததையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளரெனவும் மேலும் தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

- லங்காதீப24.09.2006. -

http://www.thinakkural.com/news/2006/9/27/...s_page11646.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் அண்ணே இந்த திரியை நீங்கள் நகைச்சுவை பகுதியில் பதிந்தால் நல்லாயிருக்கும் நானும் தினமும் தினக்குரல் வாசித்து சிரிப்பது வழக்கம்

  • தொடங்கியவர்
ஈழவன் அண்ணே இந்த திரியை நீங்கள் நகைச்சுவை பகுதியில் பதிந்தால் நல்லாயிருக்கும் நானும் தினமும் தினக்குரல் வாசித்து சிரிப்பது வழக்கம்
:(:(:(:(
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மானின் இணையத் தளத்தில்....

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகிய சிவசங்கர் பொட்டுஅம்மான் புலிகள் அமைப்பின் சர்வதேச பிரசாரங்களுக்காக நடத்தி வரும் இணையத் தளத்தில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டவருமான ஆபிரஹாம் லிங்கன் எவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பற்றிக் காட்டப்பட்டது.

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் தென் பிராந்தியத்தைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜோன் பீலிக்ஸ் புத் எனப்படும் அந்த நபர் ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கனை போட் எனப்படும் பொது அரங்கத்தில் வைத்தே சுட்டார். படுகாயம் அடைந்த ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கன் மறுநாள் உயிரிழந்தார்.

இவ்வாறு பொட்டு அம்மானின் இணையத் தளத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத முறையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கன் கொல்லப்பட்ட முறை ஏன் விவரிக்கப்பட்டது என்பது சந்தேகத்திற்குரியதாகும். இது பற்றி அரசியல் விமர்சகர்களும் குறித்த இணையத் தளத்தை அவதானித்த ஏனையோரும் கருதுவதற்கேற்ப அவ்வாறு பொட்டு அம்மான் தரப்பில் அவருடைய இணையத் தளத்தில் ஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்டது விபரிக்கப்பட்டிருப்பது ? லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எச்சரிக்கையாக இருக்குமா என்றே தெரிவிக்கப்படுகிறது. இதற்கேற்ப வருங்காலத்தில் ஜனாதிபதி மீது விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடுக்க விடுக்கும் கொலைத் தாக்குதலுக்கு மேற்படி பொட்டு அம்மான் இணையத் தளத்தில் சம்பந்தமுமின்றி காட்டப்பட்ட ஆபிரஹாம் லிங்கனின் கொலை பற்றி விவரணம் முன்கூட்டியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு விடப்பட்ட எச்சரிக்கையா என்றே கேள்வி கிளப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் சமகால அரசியல் நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் தெற்கு அமெரிக்க பிரதேசத்தில் தனியான அரசமைக்கப் போராடி வந்த தெற்குப் பிரிவினைவாதிகளின் கோரிக்கையை நிராகரித்தார். இறுதியில் அப்பொழுது யுத்த தந்திரங்களில் வல்லவராக விளங்கிய ஜெனரல் லீ எனப்படும் இராணுவத் தலைவரின் உதவியுடன் தெற்குப் பிரிவினருக்கு எதிராக யுத்தத்தை நடத்தி ஆபிரஹாம் லிங்கன் பிரிவினவாத தலைவர்களைத் தோற்கடித்து வடக்கு, தெற்குப் பிராந்தியங்களை ஒன்றிணைத்தார்.

ஆயினும், பொட்டு அம்மானின் இணையத் தளத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கொலை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் முறையிலேயே விவரித்துக் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியான ஆட்சி அமைக்கும் பிரிவினருக்கு எதிராகச் செயற்படும் தலைவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்தைக் கூறும் வகையில் மேற்படி இணையத்தள விடயம் அமைந்துள்ளது. இந்த இணையத் தளச் செய்தி ? லங்கா பிரச்சினை சம்பந்தமாக வக்கிரமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

-திவயின விமர்சனம்: 01.10.2006-

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொலிஸ் படையினரே புலிகளின் பாரிய தாக்குதல்களை முறியடிக்கின்றனர்

புலிகள் இயக்கத்தினர் மூன்று பக்கங்களாலும் சுற்றிவளைத்து முன்னேறி நடத்திய பாரிய தாக்குதல்களை பொலிஸ் படையினரே தனித்து நின்று பதில் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர்.

இவ்வாறு மன்னார் பிரதேசத்தில் முருங்கன் பொலிஸ் நிலையத்தைக் கைப்பற்றுவதற்காக பெருந்தொகையான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை பல பக்கங்களாலும் வந்து திடீர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஆயினும் அந்தத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த சாதாரண பொலிஸ் படையினர் மற்றும் விசேட அதிரடிப் பிரிவைச் சேர்ந்த பொலிஸாரும் ஒன்றிணைந்து தீவிர பதில் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காகப் புலிகள் இயக்கத்தினர் கடந்த 3 ஆம் திகதி 2.10 மணிக்கே சுற்றிவளைத்து மோட்டார் மற்றும் சகல ஆயுதங்களைப் பிரயோகித்து முகாம்கள், பொலிஸ் நிலையம் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தொடர்ந்து பொலிஸ் படையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே சுமார் ஒரு மணி நேரம் பரஸ்பரம் சூட்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் இவ்வாறு புலிகள் மீது கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தி அவர்கள் பொலிஸ் நிலையத்துக்குள் புகாதவாறு பாதுகாத்துக் கொண்டதாகவும் பொலிஸ் படையினரின் தாக்குதல்களால் புலிப் படையினர் பின்வாங்கித் தப்பியோடி விட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முருங்கன் பொலிஸ் நிலையத்தைக் கைப்பற்ற வந்த புலிகள் இயக்கத்தினர் சிலாபத்துறையிலுள்ள புலிகளின் முகாமிலிருந்து வந்ததாகவும் இவ்வாறு தாக்குதலுக்காக வந்த சுமார் 60 புலிகள் இயக்கத்தினரில் கூடுதலானோர் பெண் புலி உறுப்பினர்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கன் பொலிஸ் நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட தாக்குதல்கள் அதிகாலை 2.10 மணியிலிருந்து 4.30 மணிவரை நீடித்த போதும் பொலிஸ் படையினரின் பதில் தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்காத நிலையில் புலிகள் பின்வாங்கி ஓடியதாகவும் ஓடும் போது காயமடைந்த தமது சகாக்களையும் தூக்கிச் சென்றதாகவும், அவர்களின் செய்திப் பரிமாறல்களை அவதானித்தபோது அவர்களில் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் படையினர் கூறியுள்ளனர்.

இவ்வாறு பாரிய அளவில் புலிகள் இயக்கத்தில் தாக்குதல்களை மேற்கொண்ட போதும் பொலிஸ் படையினர் தரப்பில் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

-லங்காதீப: 4.10.2006-

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வைத் தொடர்ந்து கருணா குழுவினர் இராணுவப் பிரிவாகும் சாத்தியம்

கடந்த வாரம் கருணாவால் பத்திரிகைக்காக வெளியிடப்பட்ட கருத்துகளுக்கேற்ப தனது குழுவினர் ஆயுதப் படைகள் அல்ல எனவும் அரசியல் கட்சியினர் எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பைவிட்டு விலகியபின், இவ்வாறு பரந்த அளவில் அரசியல் நோக்கத்தைச் செயற்படுத்தும் நடவடிக்கைகளைத் தான் செய்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து தமது குழுவினரைப் பாதுகாப்பதற்கு வேண்டிய போதிய ஆயுதங்கள் தனது குழுவினரிடம் இருப்பதாகவும் ஏற்ற அரசியல் தீர்வு காணப்பட்டால் அதன் பின்னர் தனது படையணியினரால் ஆயுதங்கள் கைவிடப்படுமெனவும் ஆயினும் அது சம்பந்தமாகப் பல விடயங்களைதான் ஆலோசித்த பின்னரே ஆயுதங்களைக் கைவிடத் தீர்மானிக்கப்போவதாக கருணா கூறியுள்ளார். இதற்கேற்ப அவருடைய கட்சியினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்தீர்வு ஒன்று ஏற்பட்டால் மட்டுமே, கருணா படையணியினர் ஆயுதங்களைக் கைவிடுவர் எனத் தெரிகிறது.

மேலும், கருணா தெரிவித்துள்ள கருத்துகளுக்கேற்ப மேற்படி விதமாக அரசியல்தீர்வு ஒன்று கிடைத்தால் அதன்பின்னர் அவருடைய குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தொடர்ந்து ஷ்ரீலங்கா நாட்டைப் பாதுகாப்பதற்காக ஷ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து நிரந்தர இராணுவப் பிரிவாக உருவெடுப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

-லங்காதீப :4.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/7/...s_page12407.htm

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விரும்பும் தீர்வு

எங்களுக்குத் தனியான தமிழீழ அரசு தேவையில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாம் விரும்புவது சமஷ்டி (பெடரல்) முறையிலான ஒரு அரசியலமைப்பும் அதன் அடிப்படையிலான ஒரு ஒன்றுபட்ட ஷ்ரீலங்கா நாட்டையும்தான். இவ்வாறான சமஷ்டி அரசியலமைப்பு மூலமான தீர்வுக்கு சார்பாகவே நாம் செயற்படுவோம். வடக்கு,கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளும் தெளிவானதும் விபரமானதும் பூரணமானதுமான அரசியலமைப்பு எங்களுக்கு வேண்டும்.

இவ்வாறான சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு மக்கள் தமது நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏற்றவகையில் பரந்துபட்ட முறையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்மையில் சர்வகட்சி மாநாட்டில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவது பற்றியே பேசப்பட்டது. இந்த சர்வகட்சி மாநாட்டின் இறுதிப் பிரதிபலன் மாவட்ட மட்டத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவது போன்றதே. இந்த நிலை எம்மை மீண்டும் இருந்த இடத்துக்கே இட்டுச் செல்வது போன்றதாகும். இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கங்கள் மூலம் தமிழ் மக்களைத் திசைதிருப்ப சிங்களத் தலைவர்களால் முடியாது. சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் தீர்வு காணப்படுவதற்கான ஏற்பாடு இருந்தால் மட்டுமே நாம் தற்போது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் பங்களிப்பும் வழங்குவோம்.

அரசாங்கமும் எதிரணியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் எங்களுடைய பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் புலிகள் அமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதையே.

இவ்வாறு அண்மையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகை சார்பில் கருணா கருத்துத் தெரிவித்துள்ளார்.

- லங்காதீப: 04.10.2006 -

http://www.thinakkural.com/news/2006/10/9/...s_page12555.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா விரும்பும் தீர்வு

அரசாங்கமும் எதிரணியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் எங்களுடைய பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் புலிகள் அமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதையே.

அப்படி ஒரு தீர்வு கிட்டினாலும், இவர்கள் விடமாட்டினம்போல? முதலில் இந்த கரிநாகம் கருணாவை தீர்த்துக்கட்டணும்!!! :twisted:

பாவம் இப்ப கருணாவும் கேட்பாரற்று சங்கரியின்ரை நிலமைக்கு போட்டுது. உப்பிடி அறிக்கைகள் விட்டுத்தான் கிழக்கின் விடிவெள்ளிகள் தங்களை மற்றவர்கறுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு.

நிலமை படுமோசந்தான்.

  • தொடங்கியவர்

கருணா விரும்பும் தீர்வு

எங்களுக்குத் தனியான தமிழீழ அரசு தேவையில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாம் விரும்புவது சமஷ்டி (பெடரல்) முறையிலான ஒரு அரசியலமைப்பும் அதன் அடிப்படையிலான ஒரு ஒன்றுபட்ட ஷ்ரீலங்கா நாட்டையும்தான். இவ்வாறான சமஷ்டி அரசியலமைப்பு மூலமான தீர்வுக்கு சார்பாகவே நாம் செயற்படுவோம். வடக்கு,கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளும் தெளிவானதும் விபரமானதும் பூரணமானதுமான அரசியலமைப்பு எங்களுக்கு வேண்டும்.

இவ்வாறான சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு மக்கள் தமது நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏற்றவகையில் பரந்துபட்ட முறையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்மையில் சர்வகட்சி மாநாட்டில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவது பற்றியே பேசப்பட்டது. இந்த சர்வகட்சி மாநாட்டின் இறுதிப் பிரதிபலன் மாவட்ட மட்டத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவது போன்றதே. இந்த நிலை எம்மை மீண்டும் இருந்த இடத்துக்கே இட்டுச் செல்வது போன்றதாகும். இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கங்கள் மூலம் தமிழ் மக்களைத் திசைதிருப்ப சிங்களத் தலைவர்களால் முடியாது. சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் தீர்வு காணப்படுவதற்கான ஏற்பாடு இருந்தால் மட்டுமே நாம் தற்போது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் பங்களிப்பும் வழங்குவோம்.

அரசாங்கமும் எதிரணியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் எங்களுடைய பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் புலிகள் அமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதையே.

இவ்வாறு அண்மையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகை சார்பில் கருணா கருத்துத் தெரிவித்துள்ளார்.

- லங்காதீப: 04.10.2006 -

http://www.thinakkural.com/news/2006/10/9/...s_page12555.htm

அவனேல்லாம் ஒரு ஆலேண்டு அவன்ர கதைய வேற நீங்கள் :lol:

  • தொடங்கியவர்

இந்தோனேசிய முன்னாள் கடற்படை ஜெனரலுக்கும் பிரபாகரனுக்கும் நெருங்கிய தொடர்பு

அமெரிக்காவில் குவாட் தீவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கடத்தல்காரர்களில் இந்தோனேசிய கடற்படையில் முன்னாள் ஜெனரல் தரத்தில் பணியாற்றியவர் எனக் கூறப்படும் எரிக் வோட்ரலோ என்பவரும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவரான ஹனிமா பின் என்பவரும் உள்ளனர். இவர்களிடம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவுகள் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து ஆயுதக்கடத்தல்காரர்கள் என்று கருதப்பட்ட இந்த இரண்டு நபர்களும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சார்பாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட அந்த இயக்கத்தின் பிரதிநிதிகளே என்பது தெரிய வந்துள்ளது.

இவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை ஜெனரலான எரிக் வோட்ரலோவுக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதுபற்றி அமெரிக்க இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மேற்படி எரிக் வோட்ரலோ என்பவரால் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி அமெரிக்காவில் போல்மோர் நகரிலுள்ள சுங்கப்பிரிவு அலுவலகத்துக்கு குறித்த சுங்க விசாரணை உத்தியோகத்தருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் எரிக் வோட்ரலோ, ஹனிபா பின் ஆகியோருக்கிடையே உள்ள தொடர்பு பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரபாகரன் நஸ்மான் என்பவரையும், எரிக் வோட்ரலோ என்பவரையும் போல்மோர் நகரத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்ததாகவும் அக்கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளது. -திவயின: 8.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/11...s_page12639.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.