Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெனாலிராமன் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி

தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்

இயக்கம்: யுவராஜ் தயாளன்

திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்!

19-tenaliraman-vadivelu-meenakshi55-600.

விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை. அவரது நவரத்ன அமைச்சர்களோ, மகா ஊழல் பேர்வழிகள், சோம்பேறிகள், நாட்டையே அந்நியனுக்கு விற்பவர்கள். தங்களுக்குள் நேர்மையாக இருந்த ஒரு அமைச்சரை போட்டுத் தள்ளவும் உடந்தையாக இருக்கிறார்கள்.செத்துப் போன அந்த அமைச்சருக்குப் பதில், தடைகளைக் கடந்து தேர்வாகிறான் தெனாலிராமன். புரட்சிக் குழுவைச் சேர்ந்த அவன், மன்னனைக் கொல்லத்தான் தந்திரமாக வருகிறான். ஆனால் மன்னனின் இளகிய மனதைப் புரிந்து கொள்கிறான். தனது மதியூகத்தால் மன்னனுக்கு நெருக்கமாகிறான். மன்னன் மகள் இளவரசியின் இதயத்திலும் இடம்பிடிக்கிறான்.

19-tenaliraman1-600.jpg

தெனாலிராமனால் தங்கள் ஊழல்கள் அம்பலமாவது உறுதியானதும், மன்னனையும் வடிவேலுவையும் சதி செய்து பிரிக்கிறார்கள் மற்ற அமைச்சர்கள். ஆனால் சதியைப் புரிந்து தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் அழைத்துக் கொள்கிறார் மன்னர்.அப்போதுதான் நாட்டில் மக்கள் படும் அவலங்கள், திட்டங்கள் மக்களைப் போய்ச் சேராதது, சீன வணிகர்களிடம் நாட்டின் பொருளாதாரமே விற்கப்பட்டிருப்பதையெல்லாம் எடுத்துச் சொல்கிறான் தெனாலிராமன். நம்ப மறுக்கும் மன்னனை ஒரு நாள் மக்களோடு வாழ்ந்து பார்க்கச் சொல்கிறான் தெனாலி. மன்னனோடு பத்து நாள் தங்குவதாகச் சபதம் போட்டு அரண்மனையிலிருந்து வெளியேறுகிறார்.மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்க்கும் மன்னன், அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

19-tenaliraman3-600.jpg

கிட்டத்தட்ட இம்சை அரசன் 23-ம் புலிக்கேசியின் ஜெராக்ஸாக திரைக்கதை அமைப்பு. அதைத்தாண்டி வடிவேலு வெளியில் வர விரும்பவில்லை போலத் தெரிகிறது. இம்சை அரசனின் வெற்றிக்குக் காரணமே, அந்த நேரத்தில் அது புதுசாக வந்ததுதான்.பெரிய இடைவெளிக்குப் பிறகு வருகிறார் வடிவேலு... அதுவும் கோடை நேரம்... குழந்தைகள்தான் அவரது பெரிய ரசிகர்கள்.. குடும்பம் குடும்பமாகப் பார்க்க வருவார்கள்... காட்சிக்குக் காட்சி சிரிப்பில் அரங்கம் அதிர வேண்டாமா... ம்ஹூம்!படம் முழுக்க வசனங்கள்... வள வளவென்று காதைப் பதம் பார்க்கின்றன. வடிவேலுவின் பலம் வசனங்களில் இல்லையே!மன்னனாகவும், தெனாலிராமனாகவும் வடிவேலு. இரண்டு பாத்திரங்களுமே புத்திசாலித்தனமானவை. அதனால்தான் எங்குமே அவரது இயல்பான நகைச்சுவை வெளியில் வர வாய்ப்பே அமையவில்லை. ஆனால் வடிவேலுவின் நடிப்புத் திறன், உடல் மொழி... அவரது சொத்தான குரல் அப்படியேதான் இருக்கிறது.குடும்ப சுகத்தில் திளைக்கும் மாமன்னனை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். பானைக்குள் யானை போக வேண்டும் என அடம்பிடிப்பதிலும், ஒரு அமைச்சரின் தாய்மொழி தெலுங்கு என்பதைக் கண்டுபிடிப்பதிலும் தெனாலிராம வடிவேலு மிளிர்கிறார்.நாயகியாக வரும் மீனாக்ஷி தீக்ஷித் முகத்தைக் காட்டுவதை விட முன்னழகைக் காட்டுவதற்குத்தான் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். முகம் சுமார்தான்! பெரிதாக நடிப்பைக் காட்ட வேண்டிய அவசியமும் படத்தில் அவருக்கு இல்லை.ராதாரவி, பாலா சிங், ஜிஎம் குமார், மனோபாலா, ஜோ மல்லூரி, சந்தான பாரதி, தேவதர்ஷினி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகவே செய்து கொடுத்திருக்கிறார்கள்.ஒரு சரித்திரப் படத்தை உருவாக்குவது சாமானிய விஷயமல்ல. ஆடம்பர செட்கள், அன்றைய கிராமங்கள், மக்களின் தோற்றங்களை அப்படியே கொண்டு வருவது பெரிய சாகசம். அந்த வகையில் இந்தப் படத்தை வரவேற்க வேண்டியதுதான்.

19-vadivelu-tenaliraman-66600.jpg

இமானின் இசை பரவாயில்லை ரகம்தான். பாடல்களை இன்னும் கூட இனிமையாகக் கொடுத்திருக்கலாம்.ஆனால் ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. அதுவும் வடிவேலு நடந்து வர, முன்னாள் ஒரு பறவை பறந்து வரும் காட்சியும், அந்த க்ளைமாக்ஸ் நிகழும் பள்ளத்தாக்கு காட்சியும் பிரமாதம்.இந்தப் படம் வடிவேலு என்ற பெருங்கலைஞனின் மறுவருகையின் தொடக்கம்தான். அவரை ரசித்து ரசித்து திரைக்கதை உருவாக்கும் படைப்பாளிகளுடன் அவர் மீண்டும் இணையப் போகும் படங்களில் மீண்டும் அந்த நகைச்சுவை சாம்ராஜ்யம் விரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது!நகைச்சுவைக் காட்சிகள் குறைவு... அல்லது இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், வடிவேலுவுக்காக இந்த தெனாலிராமனை குழந்தைகளோடு ஒருமுறை பார்க்கலாம்!

நன்றி தட்ஸ் தமிழ்

http://tamil.oneindia.in/movies/review/tenaliraman-review-198576.html

வடிவேலு ஒரு சிறந்த நகைசுவை தமிழ் நடிகர். அரசியல் காரணங் களுக்காக அவர் இரு வருடங்கள் இல்லாமல் இருந்தது நகைசுவை சினிமாவில் வெற்றிடம். படம் வெற்றி பெற்று இன்னும் பல படங்களை தர வாழ்த்துக்கள்

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலிராமனின்.... மீள் வருகையுடன், வடிவேலு... தமிழ் திரையுலக நகைச்சுவையில், மீண்டும் ஒரு கலக்குக் கலக்க வேண்டும்.
அவரது... அபாரமான நடிப்பை, அரசியல் பழி வாங்கலால்... வீணடிக்கக் கூடாது.
தமிழ் திரையுலகில்... நாகேஷுக்கு அடுத்து மக்களின் மனதை கவர்ந்தவர் வடிவேலுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அற்புதமான நடிகன், அப்பவே காந்துடன் கதைத்து சமரசமாகியிருக்கலாம். மண்குதிரையை நம்பி காலை வைச்சுட்டார்...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து அரசியல் செய்யும் திராவிடர்களை காட்டிக் கொடுக்கும் தெனாலிராமன் .

தெனாலிராமன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மன்னரின் அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் இறந்து விடுவார். அந்த இடத்தை நிரப்புவதற்கு மன்னர் ஒரு நேர்முகத் தேர்வை வைப்பார் . அந்தத் தேர்வில் கலந்து கொள்ள தெனாலிராமன் வருகிறார். கூடியிருக்கும் அமைச்சர்கள் தெனாலிராமனைப் பார்த்து பல கேள்விகளை கேட்கின்றனர் . அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுகிறார் தெனாலிராமன். இருந்தும் ஒரு அமைச்சர் தெனாலிராமனை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் .

அமைச்சர் முன்வைக்கும் கேள்வி: " எனக்கு தெலுங்கு , தமிழ், கன்னடம், துளு , மலையாளம், மராத்தி, சம்ஸ்கிரிதம் என ஏழு மொழிகள் தெரியும். இதில் எது என்னுடைய தாய் மொழியென உன்னால் சொல்ல முடியுமா ? " என்கிறார்.

முடியும் என்கிறார் தெனாலிராமன். 'என்ன சொல்லு பார்ப்போம்' என்கிறார் அமைச்சர். மேலும் கீழும் பார்க்கும் தெனாலிராமன் , உமது தாய் மொழி தெலுங்கு என்கிறார். இதை கேட்டு சிரிக்கும் அமைச்சர் , 'தெனாலிராமன் சிக்கிக் கொண்டான் எனது தாய் மொழி தமிழ் தான் மன்னரும் அறிவார் , இந்த அவையும் அறியும்' என்று கூறுகிறார். ஆனால் தெனாலிராமன் உறுதியாக சொல்கிறார், இந்த அமைச்சரின் தாய் மொழி தெலுங்கு தான் என்று. அமைச்சர் அதை மறுத்து இல்லை மன்னா என் தாய் மொழி தமிழ் தான் என்று சொல்ல தெனாலிராமனோ , தெலுங்கு தான் என வாதாடுகிறார் . அமைச்சர் மீண்டும் மீண்டும் 'தமிழ்' என்கிறார் , தெனாலிராமனோ இல்லை 'தெலுங்கு' தான் அமைச்சரின் தாய் மொழி என்கிறார்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் என் தாய் மொழி தமிழ் தான் என்று அடித்துக் கூறுகிறேன் என சத்தியம் செய்கிறார் . உடனே தெனாலிராமன் 'இவர் தாய் மொழி தெலுங்கு தான் என்று நானும் அடித்துக் கூறுகிறேன் " என்று அமைச்சரின் முதுகில் ஓங்கி ஒரு அடி விடுகிறார் . அப்போது அமைச்சர் வலியில் 'தேவுடா' என கத்துகிறார் .

அப்போது தான் மன்னருக்கு அந்த அமைச்சர் ஒரு தெலுங்கர் என்றே தெரிகிறது. அமைச்சரும் அதை ஒப்புக் கொள்கிறார் . கோபம் வந்த மன்னர், "தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட நீ அமைச்சர் பதவிக்காக ஒரு தமிழரைப் போல இத்தனை காலம் நாடகமாடி இருக்கிறாயே" என்று அமைச்சரை கண்டபடி திட்டுகிறார்.

இந்த காட்சியில் உண்மையில் படம் சொல்லும் செய்தி என்னவெனில் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தெலுங்கர்கள் தான் . இருந்தும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க தங்களை தமிழர்களாக காட்டிக் கொண்டே வாழ்கிறார்கள். வீட்டில் ஒரு மொழியும் வெளியில் ஒரு மொழியும் பேசிக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். பலநூறு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசிக் கொண்டிருந்தால் எந்த சிக்கலும் இல்லை. தமிழை ஏற்று தமிழர் பண்பாட்டோடு இணைந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் பல நூறு ஆண்டுகள் இங்கு தெலுங்கர்களாக வாழ்ந்தாலும் தங்கள் உண்மையான அடையாளத்தை மறைத்து தமிழர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தெனாலிராமன் படம் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது. இப்படம் திராவிட அரசியலைப் பற்றி மட்டும் பேசவில்லை, தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்தும் நகைச்சுவையோடு பேசி உள்ளது.

சரி.... தெனாலிராமன் அவ்வளவு உறுதியாக அந்த அமைச்சரின் தாய் மொழி தெலுங்கு தான் என்று எதை வைத்துக் கூறினார்? அதை திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Face Book

"எந்த தலைவனும் லட்சியம் நிறைவேறும் வரை மறந்திருப்பதே நல்லது, இது அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும்" இதுவும் வடிவேலின் ஒரு வசனம்

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஒரு கட்டத்தில் அமைச்சர் என் தாய் மொழி தமிழ் தான் என்று அடித்துக் கூறுகிறேன் என சத்தியம் செய்கிறார் . உடனே தெனாலிராமன் 'இவர் தாய் மொழி தெலுங்கு தான் என்று நானும் அடித்துக் கூறுகிறேன் " என்று அமைச்சரின் முதுகில் ஓங்கி ஒரு அடி விடுகிறார் . அப்போது அமைச்சர் வலியில் 'தேவுடா' என கத்துகிறார் .

-----

இந்த காட்சியில் உண்மையில் படம் சொல்லும் செய்தி என்னவெனில் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தெலுங்கர்கள் தான் . இருந்தும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க தங்களை தமிழர்களாக காட்டிக் கொண்டே வாழ்கிறார்கள். வீட்டில் ஒரு மொழியும் வெளியில் ஒரு மொழியும் பேசிக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். பலநூறு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசிக் கொண்டிருந்தால் எந்த சிக்கலும் இல்லை. தமிழை ஏற்று தமிழர் பண்பாட்டோடு இணைந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் பல நூறு ஆண்டுகள் இங்கு தெலுங்கர்களாக வாழ்ந்தாலும் தங்கள் உண்மையான அடையாளத்தை மறைத்து தமிழர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தெனாலிராமன் படம் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது. இப்படம் திராவிட அரசியலைப் பற்றி மட்டும் பேசவில்லை, தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்தும் நகைச்சுவையோடு பேசி உள்ளது.

-----

 

உங்கள் விமர்சனத்தைப் பார்க்கும்... போது, வடிவேலுக்காக... இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் வருகின்றது.

கப்டன் விஜயகாந்தும், தெலுங்கரே. அவர் வீட்டில் கதைப்பதும்.... தெலுங்கு என்று, எங்கோ... வாசித்தேன். அவருக்கும், தமிழ்நாட்டு முதலமைச்சர்... ஆக‌ ஆசை உள்ளது. :rolleyes:

 

வெடிவேலு... சந்தர்ப்பம் பார்த்து, அந்த ஆசையை... குளப்பி விட்டார் போலுள்ளது. :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது. காந்துக்கு எப்பவும் வெடிவேலு சிம்ம சொர்ப்பனம்.

இந்த காட்சி  விஜயகாந்துக்கு அம்மா வைத்த வேட்டுவோ தெரியாது... இது கருணாநிதிக்கும் பொருந்தும்..இல்லை என்றால் வருமோ வராதோ என்று இருந்த படம் சரியாக தேர்தல் நேரம் வருகிறது.....

 

அம்மாவை எல்லாருமே எப்போதுமே பார்பாத்தி, கன்னடகாரி என்று முதலே முத்திரை குத்திவிட்டதால்...அவர் இதற்கு பயப்பட தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலிராமன்: வடிவேலுவின் மறுவரவு ஜெய.சரவணன்

நிறைவேறியதும் நிறைவேறாததும்

அண்மையில் வெளியாகியிருக்கும் தெனாலிராமன் படத்தில் வைகைப் புயல் என்றழைக்கப்படும் நகைச்சுவை புயல் வடிவேலுவுக்கு ஏற்ப தெனாலிராமனின் பிம்பத்தை மாற்றி, இயக்குநர் யுவராஜ் தயாளன் தன் திரைப்பட விருந்து படைக்க முயற்சித்திருக்கிறார். நமக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் பால்ய வயது நண்பனான தெனாலிராமனை நினைவுபடுத்தப் போகும் படம் என்றும், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தானாகவே மாட்டிக்கொண்ட சில அரசியல் சிக்கல்களிலிருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் தன் பயணத்தைத் தொடர வந்த வடிவேலுவின் மறுவருகைப் படம் என்றும் இரட்டிப்பு எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் தெனாலிராமன் படத்திற்கான வெற்றி சாத்தியங்கள் எப்படி இருக்கின்றன? வடிவேலுவின் மீட்கப்பட்ட திரைப் பயணத்துக்கு இது எந்த அளவுக்குப் பயனளிக்கப் போகிறது?

கதைச் சுருக்கம்

விகட நகரத்தை ஆளும் வெகுளியான அரசன் தன் அமைச்சர்களை நம்பி நாட்டை ஒப்படைத்துவிட்டு, தன் 36 மனைவிகளையும் 52 குழந்தைகளையும் கவனிப்பதிலேயே பொழுதைக் கழிக்கிறார். நாட்டைக் காக்கும் பொறுப்பை கொண்ட ஒன்பது அமைச்சர்களுள் எட்டுப் பேர் தங்கள் சுய வளர்ச்சிக்காக நாட்டை சீனர்களின் வணிக நோக்கங்களுக்கு விற்க நினைக்கிறார்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மீதமுள்ள ஒருவர் சீனர்களால் கொல்லப்படுகிறார். அந்த இடத்தை நிரப்புவதற்கான போட்டியில் பங்கேற்கிறான் தெனாலிராமன். தன் அகட விகட வித்தையை முதல் நாளே தொடங்கிவிடுகிறான். அவனுடைய சமயோசித அறிவால் அந்த அமைச்சர் பதவியையும் பெற்றுவிடுகிறான்.

கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவனான தெனாலிராமன் மக்களின் நலனைப் பற்றி அக்கறைகொள்ளாமல் ஆட்சி செய்யும் அரசனைக் கொல்லவே அமைச்சராக சேர்கிறான். மன்னனோ அவனைத் தன் உற்ற நண்பனாகவே பாவிக்கிறான். மக்களுக்காக அரசன் செய்யும் அனைத்தும் மக்களை சென்று சேராமல் இருப்பதற்கு மந்திரிகளே காரணம் என்று தெனாலிராமன் அறிந்துகொள்ளும் சமயத்தில், தெனாலிராமனை விரட்டியடிக்க நினைக்கும் மற்ற மந்திரிகளுக்கு அவன் வந்திருக்கும் நோக்கம் பற்றி தெரியவர, அவனை மன்னனிடம் காட்டிக்கொடுக்கிறார்கள். தெனாலிராமன் வெளியேற்றப்படுகிறான். மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கும் அப்பாவியான மன்னனுக்கு மந்திரிகளின் தந்திரத்தைப் புரிய வைத்து மக்களின் உண்மையான நிலையை புரியவைத்து நாட்டை நல்வழியில் நடத்திச் செல்ல நினைக்கும் தெனாலிராமனின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் மீதி கதை.

அலசல்

இந்தப் படத்திற்கு தெனாலிராமன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால் விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரைப் பற்றியோ, அவரது அரசவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன் பற்றியோ படம் பேசவில்லை என்றும், தெனாலிராமன் கதைகள் என்று நாம் கேள்விப்பட்ட கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைதான் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் கூறிவிட்டனர். அவர்கள் சொன்னபடிதான் படமும் வந்திருக்கிறது என்பதை ஏற்கலாம். படத்தில் மன்னன் தமிழன் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது, ஆனால் கிருஷ்ணதேவராயரோ தெலுங்கர். அதேபோல் நிஜத்தில் வாழ்ந்த தெனாலிராமனுக்கும் படத்தில் வரும் தெனாலிராமனுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் தெனாலிராமன் என்று படத்திற்கு பெயரிட்டுவிட்டு அவரை கிளர்ச்சியாளராக சித்திரித்திருப்பதற்கு காரணம் என்னவோ? கிளர்ச்சியாளர்களுக்கு மட்டும்தான் நாட்டின் மீதான அக்கறை இருக்குமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் தெனாலிராமன் கிளர்ச்சியாளராக இருந்ததற்கான பின்னணியும் விரிவாகச் சொல்லப்படவில்லை.

மற்றபடி விஜயநகரத்தை விகட நகரமாக மாற்றியது, கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த அஷ்ட (எட்டு) அமைச்சர்களை நவ (ஒன்பது) அமைச்சர்களாக மாற்றியிருப்பது ஆகியவற்றை, வரலாற்றையும் புனைவையும் பின்னி சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சிக்கும் படைப்பாளியின் விளையாட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

தெனாலிராமன் படத்தின் அசலான பிரச்சினை அது உண்மையை ஒட்டி இருக்கிறதா அல்லது முழுவதும் கற்பனையா என்பதில் அல்ல. உண்மையாக வாழ்ந்தவர்களை இழிவுபடுத்தியிருப்பதாகவோ, தவறான நோக்கத்துடன் வரலாற்றை திரித்திருப்பதாகவோ இந்தப் படத்தின் மீது குற்றம்சாட்ட முடியாது. நிஜத் தெனாலிராமனின் நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனமும் மட்டும்தான் படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. அதைக் கையாண்ட விதத்தில்தான் பிரச்சினை இருக்கிறது.

படத்தில் தெனாலிராமன் மதியூகத்தைப் பறைசாற்றும் கதைகள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இயக்குநர் தெனாலிராமன் குறித்து முழுமையாக ஆராய்ந்திருந்தால். அவரின் தெரியாத கதைகளை, அதிகம் கேள்விப்பட்டிராத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க முடியும். மாறாக படத்தில் வருபவை அனைத்தும் அனைவரும் கேட்ட கதைகளாகவே இருக்கின்றன. திரைக்கதையில் அவை பயன்படுத்தப்பட்ட விதமும் இடமும் பொறுமையைச் சோதிக்கின்றன..

தெனாலிராமன் கதைகளுக்கு அப்பாற்பட்டு படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ பெரிய அளவில் மெனக்கெட்டிருப்பதாகத் தெரியவில்லை. சிலர் இதனை 23ஆம் புலிகேசி படத்தின் தழுவல் போலவே இருக்கிறதாகவும் பாத்திரப் படைப்புகளும் கதையோட்டமும் மட்டுமே மாறியிருப்பதாகவும் நினைக்க வாய்ப்புண்டு.

இந்த இடத்தில் இதே வடிவேலுவை நாயகப் பாத்திரமாக அறிமுகப்படுத்திய 23ஆம் புலிகேசி படத்தை வைத்து ஒப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படத்திற்கும் அதற்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் வேறுபாடுகள் நிறையவே உள்ளன. இரண்டு படங்களுமே அரசியல் பேசுகின்றன. சமகாலப் பிரச்சினைகள் குறித்த அங்கதம் இருக்கிறது. ஆனால் அதில் மன்னன் எடுப்பார் கைபிள்ளை, இதில் மன்னன் மக்களின் நலனுக்காக எதையும் செய்ய விரும்புபவன், ஆனால் அமைச்சர்களின் நயவஞ்சகம் அறியாத அப்பாவி. அரசியல் மாற்றத்திற்காக அதில் ஆள் மாறாட்டம் நிகழும், இதில் ஒரு புத்திசாலி அமைச்சர் நாட்டிலுள்ள உண்மையான அரசியல் பிரச்சினை என்ன என்பதை அறிந்து அதை சீர்ப்படுத்த முயற்சி செய்கிறார். அதில் ஆங்கிலேயர்கள் வருவார்கள் இதில் சீனர்கள் வருகிறார்கள். ஆனால் 23ஆம் புலிகேசியின் தரத்தில், அங்கதச் சுவையில், கதையோட்டத்தில் இருந்த சுவாரஸ்யத்தில் மூன்றில் ஒரு பங்குகூட தெனாலிராமன் படத்தில் இல்லை. காலத்திற்கேற்ற காட்சி அமைப்புகள் முற்றிலும் இல்லை, பாத்திரங்களின் பேச்சிலும் மன்னர் கால வழக்காடல் சரியாகப் பின்பற்றப்படவில்லை. 'சர்க்கரை வியாதி', 'இரத்த அழுத்தம்' போன்ற வார்த்தைகளைப் போலவே அரசியல் வசனங்களும் நிகழ்காலத்தையே பிரதிபலிக்கின்றன.

சமகால அரசியலைக் கேள்விக்குட்படுத்த ஒரு சாமான்யனின் ஒரு நாள் நிகழ்வு போதுமானது. ஆனால் அதற்கு ஒரு வலிமையான திரைக்கதை வேண்டும். அதற்கான முயற்சியையாவது எடுத்திருக்கலாம். பார்வையாளர்களை அரங்கில் அமர வைக்க அவர்களது நிகழ்கால அலுப்புகளைத் தூண்டுவதும் அதற்குத் தெனாலிராமன் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டதையும் தவிர, வேறு எதையும் யுவராஜின் திரைக்கதை செய்திருப்பதாகத் தெரியவில்லை. காதல் காட்சிகளும் பாடல்களும் படத்தின் நீளத்தை அதிகரிக்க மட்டுமே உதவியிருக்கின்றன. படத்தின் ஆதாரமான சிக்கல்களுக்கு சொல்லப்படும் தீர்வுகள் நகைச்சுவையின் போர்வையில் நிகழ்த்தப்படும் கேலிக்கூத்தாக அமைந்திருக்கின்றன.

இத்தனை குறைகளையும் ஈடுகட்டுவது வடிவேலு என்ற ஒற்றை மனிதர்தான். படம் அவரை நம்பித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து மனிதர் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இரண்டு பாத்திரங்களையும் வேறுபடுத்த மெனக்கெட்டிருக்கிறார். இரண்டிலும் நகைச்சுவையைப் புகுத்த முயன்றிருக்கிறார். விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வடிவேலு வகை நகைச்சுவை படத்தில் மிகக் குறைவுதான். ஆனாலும் வடிவேலுக்காகப் படம் பார்ப்பவர்கள் ஏமாற மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு நகைச்சுவையை தூக்கி நிறுத்தியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் தெனாலிராமன் படம் வடிவேலுக்கு நல்ல மறுவரவாகத்தான் அமைந்திருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து கேட்கப்படும் தெனாலிராமன் கதைகள் இன்று வரையிலும் எந்த எதிர்மறையான எண்ணங்களையும் எந்த காலத்திலும் எவர் மனதிலும் விதைக்காதவை. அறிவும் நகைச்சுவையும் ஒருசேர இருப்பது மிக அரிதான ஒன்று. அப்படிப்பட்ட அரிதான கலவையைக் கொண்ட மனிதன் தெனாலிராமன் என்பதே பொதுவான கருத்து. 'தெனாலிராமன்' திரைப்படத்தில் நகைச்சுவையும் அறிவும்தான் மையப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நகைச்சுவையும் அறிவுக்கான வேலையும் படத்தில் எந்த அளவு இருந்திருக்கிறது என்பதுதான் படத்தின் தரத்துக்கான அளவுகோள்.

இந்த அளவுகோலில் படம் பெருமளவு சறுக்குகிறது. வடிவேலு மீதான எதிர்பார்ப்பு என்ற அளவுகோல் பெருமளவு காப்பாற்றப்பட்டிருக்கிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=2bb9b2ba-9d6e-4ecd-afcf-c3aeaea16ef5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.