Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் தெளிவான பதில்!! தமிழ்த் தேசியத்தின் பதிலென்ன??.

Featured Replies

விடுதலைப் புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவோமே தவிர ஒர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரதமர்

(சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 06:33 ஈழம்)(ந.ரகுராம்)

விடுதலைப் புலிகளின் வசமுள்ள பகுதிகளை இன்னும் இன்னும் கைப்பற்றுவோமே தவிர சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இடங்களிலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சிறிலங்கா பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=28718

தமிழ் தேசியத்தின் பதில் நல்ல பதிலாக சிங்களத்திற்கு விரைவில் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் போர் என்று அறிக்கை விடாமல் குள்ள நரிபோலல்லவா தன்னைக்காட்டிக்கொள்கிறான். இவனுக்கு தக்கவிதத்தில், தக்க நேரத்தில் பதில் கொடுப்பார்கள். நாங்கள் கேட்கத் தேழ்வையில்லையே!

அவர்கள் அறிக்கையிலேயே அவர்கள் பயம் தெரிகிறது..

மற்றும்..வீராப்பு.. சண்டாளத்தனம்..வாய்ச்சவடால் என்பன..சிங்களத்திற்கு மட்டுமே கை வந்த கலை..

ஆயுதங்களை மட்டுமே..பிரதானப்படுத்தும் அயோக்கியத்தனம்...

நாட்டுப்பாதுகாப்புக்காக பணத்தை ஒதுக்கி அதில் பங்குதாரிகளான தமிழ்மக்களை கொன்றொழிப்பதும்..அதற்கான விளக்கங்களை தயாராக வைத்திருந்து உலக நாடுகளுக்கு

செயல்விளக்கம் வழங்குவதும் வழக்கமாகிவிட்டது.

இவர்களாக திருந்த இவர்கள் திருடர்களல்ல பாதகர்கள்..

இவர்கள் திருத்தப்படவேண்டியவர்கள் பாடம் புகட்டப்படவேண்டியவர்கள்.

சிங்களத்தின் பதிலில் கள்ள நரித்தனம் எதுவுமில்லை. அவர்கள் தெளிவாகப் புலிகளை ராணுவ வழியில் எதிர்கொள்ளத் துணிந்துவிட்டார்கள்.

ஆனால் தமிழர் தரப்புத்தான் சரியான தெளிவான நிலைப்பாடு எடுக்காமல் இருப்பதுபோல் தெரிகிறது.அல்லது சிங்கள அரசுடனான யுத்தநிறுத்தம் குலையாமல் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்று நினைக்கிறார்களொ தெரியாது.

இல்லாவிட்டால் சம்புூரில் படையினர் தாக்குதல் நடாத்தி அப்பட்டமாக யுத்தறிறுத்த உப்பந்தத்தின் முக்கியமான விதியை மீறிக் கொண்டிருக்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்தை வழங்கி இந்த நேரத்திற்குள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பழைய நிலைக்குத் திரும்பாவிட்டால் நாங்கள் உப்பந்தத்திலிருந்து விலகப்போகிறோம் என்று உறுதியாக அறிவித்திருக்கலாம்.இதன்பின் அனுசரணையாளாகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம்.

இப்போது கூட குறித்த நிபந்தனையை விதிக்கலாம் . ஆனால் நாங்கள் இன்னும் 'மட்டுப்படுத்தப்பட்ட' நடவடிக்கைகளையே எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பின்னர் தவறான நெரத்தில் சரியான முடிவை எடுத்து ஒப்பந்தத்தைக் குழப்பிய குற்றத்தையும் தலையில் சுமக்கப் போகிறோம்.

இப்படி எழுதவதற்காக என்னை யுத்த வெறியனாக நினைக்க வேண்டாம்.

சரி அப்படி இல்லாவிட்டால் சிங்கள அரசுடன் பேச்சுக்குப் போய் அவாகள் என்ன தருகிறார்களோ அதை வாங்கிக் கொண்டு இருந்துவிடுவோம்.

அநியாயமாக இரண்டும் கெட்டான் நிலையிலிருந்து அப்பாவிப் பொதுமக்களையும் போராளிகளையும் எதற்காகப் பலி கொடுக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் வெளியிடப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் சிறீலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள், ஆட்கடல்தல்கள், கொலைகள் போன்றவிடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் விசனம் தெரிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் விடுதலைப் புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தியும் அதேவேளை துணைக்குழுகளால் சிறீவர்கள் கடத்தப்படுவதும் அதற்காக சிறீலங்காப் படையகள் அதரவு அளிப்பது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குள்ள நரித்தனமென்பது, சந்திரிக்கா செய்ததுபோல், "புலிகள்தான் முதல் போரைத் தொடங்கினார்கள்" என்று உலகநாடுகளுக்கு பரப்புரை செய்வதே - என் எண்ணம்!

அல்லிகா,

அதனைத் தான் நானும் சொல்கிறேன்.

சம்புூர்த் தாக்கதல் நடந்துகொண்டிருந்தபோது அவாகள் நான் சொன்ன நிபந்தனையை வைததிருந்தால் சண்டை வேண்டாம் என்று சொல்கின்ற நாடுகள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காரணம் இரு பிரிவினருக்கும் இடையேயான எல்லைகள் சுூனியப்பிரதேசம் என்பன ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்துக்கள்.

சண்டைபிடித்துத்தான் இலக்கை அடைய முடியும் என்று நினைத்தால் (அப்படித் தான் நினைக்கிறோம். அதற்காகத் தான் மகிந்த பதவிக்கு வருவதற்கு வழி செய்து கொடுத்தோம்) ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டோம்.

நாங்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தால் அவர்கள் தமிழரைக் கொன்று குவித்துக் கொண்டேயிருப்பார்கள்.

கடைசியில் வெறும் சுடுகாட்டில் தான் தமிழீழம் காண வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியன் நாங்கள் இங்கிருந்து கொண்டு எதையும் எழுதலாம். ஆனால் கள நிலமைகளையும் சுமைகளையும் தாங்கப்போவது அங்கிருக்கும் மக்கள்தான். எனவே அங்கிருக்கும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் போர் எங்கே எவ்வாறு என்பதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியன்,

உங்களைப் போலத்தான் நானும் கருதுகிறேன்.

அருமையான சந்தர்ப்பங்களைத் தொலைக்கிறோமோ என்று தோன்றுகிறது.

_______________________________

புலிகள் செய்திருக்க வேண்டியவைகளாக நான் நினைப்பவை:

படையினர் பின்வாங்க வேண்டுமென்று நோர்வேயையும் கண்காணிப்புக் குழுவையும் கொண்டு பகிரங்கமாகச் சொல்லவைப்பது.

அப்படி அவர்கள் சொல்லாத பட்சத்தில் பகிரங்கமாக நோர்வேயினதும் கண்காணிப்புக் குழுவினதும் நடுநிலைமை மீதான விமர்சனத்தை முன்வைப்பது. (இவற்றை அவர்களை நேரில் சந்திக்கும்போது செய்வதுதான் இன்னும் வலிமையானது)

நோர்வே அப்படிச் கூறும் பட்சத்தில் சிங்களத்தரப்பிலிருந்து வரும் கடுமையான கண்டனத்தையும் இனவாதக் கருத்துக்களையும் கொண்டு நோர்வேயை நெருக்குதல். நோர்வே கடுமையான மறுப்பையும் கண்டனத்தையும் சிறிலங்கா அரசை நோக்கித் தெரிவித்தல்.

____________________________

இந்த இக்கட்டிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெளிவரும். அதுவும் மிகவிரைவாக. ஆனால் குறைந்தபட்சம் யுத்தம் தொடங்குவதற்கு அரைப்பங்காளிகள் என்ற பெயரோடு. சிறிலங்கா அரசின் நல்லபிள்ளை வேடத்தைக் கலைத்து, அதன் முகமூடியை நடுவர்களைக் கொண்டே கிழிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் அதை நழுவ விட்டுவிட்டு போரிற் குதிப்பதுதான் என்கவலை. பொறுமைக்கும் கொடுக்கப்பட்ட உயிர் விலைக்கும் முழுமையான பயனைப் பெறாமல் போகும் நிலைதான் தெரிகிறது.

______________________________

மேற்படிக் கருத்துக்களோடு நானெழுதிய பதிவு:

அரசியல் வெறுமை = உதார்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13878

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் :oops: :oops: கெகலிய ரம்புக்வெல, ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இவர்கள் எல்லாம் இப்பொழுது இலங்கை அரசியலில் கிட்டியடித்து விளையாடும் சிறுவர்கள் அவர்கள் அப்படித்தான் அலட்டுவார்கள். ஆனால் மகிந்தவின் இதயம் அடிக்கும் அடி யாருக்கப்பா புரியும் :P :P

  • தொடங்கியவர்

சத்தியனின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்!! ...

.... இங்கு புலத்தில் சந்திக்கும் பல தேசிய ஆதரவாளர்கள், பொறுமையிழந்து விரக்தி நிலைக்கு சென்றிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விரக்தி, வெறுப்பு நிலைக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமான விடயம்!!! அவர்கள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய நிலையில் யாருமில்லை!!! ஆனால் ....

.... கள நிலமை முற்றிலும் வேறுபட்டது!!! இன்றைய தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு சிறு நகர்வுகளைக் கூட செய்மதியூடாக பார்க்கக்கூடியதாக இருக்கும். நாமே கணனியூடாக இச்செய்மதிகளினால் பெறப்படும் பலதைப் பார்க்க முடியுமானால், ஒரு அரசு, சில வல்லரசுகளின் புலனாய்வுச் செய்மதிகளின் துணைகளோடு எவ்வளவற்றை அவதானிக்கலாம். அல்லது பல புலானாய்வு செய்மதிகளை வாடகைக்கு அமர்த்தியே அவதானிக்கலாம். ஆகவே சில கால அவகாசங்கள் தேவைப்படும், காலநிலை மாற்றத்துக்கு!!! மற்றும் சிங்கள் இராணுவத்தில் பல கட்ட நகர்வுகளை அவதானிக்க சில காலங்கள் பிடிக்கலாம்!!!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை!!! இனி நாம் விரும்பியோ விரும்பாமலோ யுத்ததிலிருந்து விலக முடியாது!!!! ஒரு சமாதானம் வருவதானாலும் யுத்த மூலம்தான் வரலாம்!!! இராணுவ சமநிலை எமக்கு சாதகமாக மாறவிடில் எல்லாம் சூனியமாகி விடும்!!!!

பதில்களுக்காகக் காத்திருப்போம்!!! ... நம்பிக்கையுடன்!!!!....

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து சத்தியன்...

ஏனப்பா அவசரப்பாடுகிறீர்கள்...???

சம்பூரை பிடித்த உடனேயே, அதுக்காததான் காத்திருந்தது போலவும். அதற்கேற்றாது போல சண்டைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. எதிர்மாறான விளைவுகளைத்தான் தரும்...

சம்பூரில் இருந்து வேண்டும் எண்றே கடற்படை முகாமை தாக்கி இராணூவத்தினரை சம்பூர் பகுதிகளை கைப்பற்ற தூண்டி அந்த இடத்தை இராணுவத்துக்கு விட்டு கொடுத்து விட்டு சர்வதேச அனுதாபத்துக்காக நாடகமாடுகிறார்கள் எண்று சொல்லும் நிலை வரலாம்...! அப்படி வரக்கூடாது...

இப்போ சரியாவ முறையில்.. அதுக்கேற்றால் போல இராணுவத்தினரை வெளியேறுமாறு கேட்க்கும் இண்றைய புலிகளின் வேண்டுகோள் சரியானதாகத்தான் படுகிறது...!

அதேபோல இலங்கை படைகளின் கௌரவப்பிரச்சினையாக்க பட்டுக் கொண்டிருக்கும் சம்பூர் பிரதேசத்தை அவர்கள் விடப்போவதும் இல்லை...!

உதவிவளங்கும் நாடுகளின் கூட்டம் நடைபெற இருக்கும் இந்த வேளையில்.... புலிகளை தடை செய்த நாடுகளிடம் இருந்து கண்டனத்தை இலங்கை மீது கொண்டு வரவேண்டியது முக்கியமானதாகிறது... அதன் பிறகு வேறு வளியில்லாமல் போருக்கு போவதுதான் நல்லது...! இல்லாவிட்டால் போர் நிறுத்தத்தை மீற தூண்டியவர்கள் தமிழர் தரப்பு எண்றாகிவிடும்... அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல...!

பிடித்த பிரதேசத்தை விட்டு போகச் சொல்லிக் கேட்பதை விட பிடிக்க முயலும் போது எம் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயல்வது பாரதூரமான யுத்த நிறுத்த மீறல் என்று கூறுவது தான் வலுவானதாக இருந்திருக்கும்.

இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி வழங்கும் நாடுகள் இலங்கை அரசைக் கடுமையாகச் சாடி கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு வெளியெறுங்கள் என்று கேட்கும் என்று நாங்கள் நினைப்போமானால் அது முட்டாள்தனமானதாகத் தான் இருக்கும்.

காரணம் அவர்கள் நியாயத்தின் படி பேசுபவாகள் அல்ல. தங்கள் நலன்களின் அடிப்படையில் பேசுபவர்கள்.

சர்வதேச நாடுகளில் நம்மவர்களின் அழுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்காகப் பட்டும் படாமலும் அரசைக் கண்டித்துவிட்டு அதைவிடக் காரசாரமாகப் புலிகளைக் கண்டிப்பதைத் தான் அறிக்கையில் காணமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன்... இப்ப அல்ல கடந்த நில வருடங்களுக்கு முன்னரே ஒரு விடயம் தெளிவாகிவிட்டது.. பேச்சுக்கள் மூலம் எமது உரிமைகளை ஒருபோதும் சிங்களம் தரப்போவதில்லையென்பது..

பிரச்சனையே ஒப்பந்தத்தை குழப்பிய கெட்டபெயர் இல்லாமல் போரைத்தொடங்குவதுதான்.. அதற்காகதான் புலிகள் பல முறைகள் பல சந்தர்ப்பங்களில் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பதான் அந்தப்பழி மெதுவாக அரசாங்கத்தின் தலையில் விழ ஆரம்பித்துக்கொண்டு இருக்கின்றது..

அந்த சந்தர்ப்பத்திற்காகதான் புலிகள் இப்ப பல இழப்புக்களுக்கு மத்தியிலும் பொறுமைகாத்துகொண்டு இருக்கிறார்கள்..

அது உலக மத்தியில் வெளிப்படும்பொழுது புலிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்..

முன்னையரைபோல நாம் விரும்பியநேரம் எல்லாம் போரை ஆரம்பிக்கக முடியாது.. தற்பொழுது சர்வதேசம் அது இது என்று பல முக்கிய புள்ளிகளுக்கு தண்ணிகாட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது..

அவர்களை நாம் எப்படித்தான் வெறுத்தாலும் அவர்களுடைய பங்களிப்பு இல்லாமால் தனியரசு அமைப்பது என்பது சாத்தியமற்றது.. சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் தனியரசை எவ்வாறு நடத்துவது என்ற முக்கிய கேள்வியும் உள்ளது..

பொறுத்தார் பூமி ஆழ்வார்! தலமை அந்த விடயத்தில் தெளிவாக இருக்கிறது என்றுதான் எனது சிறிய அறிவுக்கு எட்டுகின்றது.. புலப்படுகின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இங்கு புலத்தில் சந்திக்கும் பல தேசிய ஆதரவாளர்கள், பொறுமையிழந்து விரக்தி நிலைக்கு சென்றிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விரக்தி, வெறுப்பு நிலைக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமான விடயம்!!! அவர்கள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய நிலையில் யாருமில்லை!!!//

நான் இதிலிருந்து முரண்படுகிறேன்.

வெற்றிச் செய்தி தந்தால் தான் உசாராய் இருப்போம் இல்லையென்றால் சோர்வடைவோம் என்ற மனப்பான்மையை நியாயப்படுத்த முடியாது. அது ஆபத்தானதும்கூட. இவர்கள் பதில் சொல்வதற்காகவும், வெற்றிச் செய்தி கேட்டுக் குதூகலிப்பதற்காகவும் அங்கு சண்டை தொடங்குவது பற்றி நாங்கள் கதைக்க முடியாது.

இப்போது என் பிரச்சினை, சூழ்நிலையைச் சரிவரப் பயன்படுத்தாதது தொடர்பில் மட்டுமே.

படையினரை விலக வேண்டுமென்று நோர்வேயைக் கொண்டு கேட்க வைப்பது, சிங்களதேசத்தை இக்கட்டுக்குள்ளாக்குவது மட்டுமன்றி பன்னாட்டுச் சக்திகளையும் நடுவர்களாக நாடகமாடுபவர்களையும் இக்கட்டுக்குள்ளாக்குவதும் தான்.

நானும் நல்லவனுடன் உடன்படுகிறேன்.

போர்முனையில் எப்போதும் வெற்றிச் செய்தி கிடைக்க வேண்டுமென்றொ அல்லது உடனடியாகப் போரை ஆரம்பிக்க வேண்டுமென்றொ நான் சொல்லவில்லை.

மாறாக ஒரு பெரும் ஆக்கிரமிப்பைச் செய்த போது கடுமையான அந்த யுத்த நிறுத்த மீறலை தங்களது கடுமையான வார்த்தைப் பிரயோகம் (அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுதல்) நோர்வேயையும் சாவதேச நாடுகளையும் சிஙக்ள அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையைச் செய்யவில்லை.

அதன் வெளிப்பாடு இன்று அடுத்த களமுனையைத்திறந்து எழுதுமட்டுவாளைக் கைப்பற்ற முயலுகிறது சிங்களப் பயங்கரவாதம்.

அடுத்ததாக கிசன் சொல்வதுபோல சர்வதேசத்தின் அனுசரணை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றால் சிங்கள் அரசிடமிருந்து மாவட்ட சபையையொ அல்லது மாகாண சபையையோ வாங்கிக் கொண்டு சமாதான வழிக்கு வந்துவிட வேண்டியதுதான்.

காரணம் இந்தச் சர்வதேசம் எற்கனவே எடுத்துவிட்ட தீர்மானத்துடன் உறுதியாக இருக்கிறது.

ஈழத்திலே இத்தனை குழந்தைகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் கொல்லப்பட்ட போது அமரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ அல்லது இந்தியாவோ ஏதாவது சொன்னார்களா?

ஆனால் கொழும்பில் ஒரு சிறு சம்பவம் நடந்ததுமே கண்டன அறிக்கைகள் பறக்கினறன.

புலிகள் ஒரு தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தால் சமாதானத்தைப் பற்றிக் கதைப்பவர்கள் அரசு வெற்றி பெறும் நேரத்தில் வாயே திறப்பதில்லை.

அப்படியானால் நாம் என்ன செய்யப்போகிறோம்.

உடனடியாக முடிவெடுப்பது பல உயிர்களைப் பாதுகாக்கும் என்பதே என்னுடைய கருத்து.

பிடித்த பிரதேசத்தை விட்டு போகச் சொல்லிக் கேட்பதை விட பிடிக்க முயலும் போது எம் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயல்வது பாரதூரமான யுத்த நிறுத்த மீறல் என்று கூறுவது தான் வலுவானதாக இருந்திருக்கும்.

இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி வழங்கும் நாடுகள் இலங்கை அரசைக் கடுமையாகச் சாடி கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு வெளியெறுங்கள் என்று கேட்கும் என்று நாங்கள் நினைப்போமானால் அது முட்டாள்தனமானதாகத் தான் இருக்கும்.

காரணம் அவர்கள் நியாயத்தின் படி பேசுபவாகள் அல்ல. தங்கள் நலன்களின் அடிப்படையில் பேசுபவர்கள்.

சர்வதேச நாடுகளில் நம்மவர்களின் அழுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்காகப் பட்டும் படாமலும் அரசைக் கண்டித்துவிட்டு அதைவிடக் காரசாரமாகப் புலிகளைக் கண்டிப்பதைத் தான் அறிக்கையில் காணமுடியும்.

மாவிலாற்றை இராணுவம் கைப்பற்ற முனைந்தபோது போர்நிறுத்த மீறல் எண்டு சொல்லியிருக்கலாம் தானே ஏன் சம்பூர் வரை காத்திருக்க வேணும் எண்டு கேள்வி கேக்க இல்லை...???

மக்களின் அடிப்படை பிரச்சினையை காரணம் காட்டி புலிகளை சிக்கவைத்து வலிந்து போருக்கு இளுப்பதுதான் இலங்கை அரசின் விருப்பம்... அதாவது மதகின் கதவுகளை திரந்துவிடாத புலிகள் வலிந்து தங்களை சண்டைக்கு இளுத்தனர் எண்றது அரசு...!

அப்பிடி ஒரு காரணத்தோடுதான் சம்பூரை பிடித்தது... ஆனால் புலிகள் மண்டைதீவை பிடித்தபோதும், மூதூரை பிடித்த போதும் சத்தம்போட்ட சர்வதேசம் இப்போது வாயை திறக்கவில்லை...!

அவர்கள் வாயை எப்போதும் திறக்காமல் அடைக்க வேண்டும்... உதவி வளங்கும் நாடுகள் கூட்டத்தில் இலங்கையை பின்வாங்க சொல்லி அறிக்கை விடாமல் இருப்பதுதான் தமிழருக்கு மிகவும் பயன் தரும் செயல்... ஆனாலும் இலங்கை அரசின் செயற்பாட்டில் அதிர்ப்தி கொள்வது மட்டும்தான் நடக்கவேண்டியது...!

இனி எங்கு போர் நிறுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டு இலங்யின் எத்த பகுதியில் போர் நடந்தாலும்... அதுக்கு இலங்கை அரசே பொறுப்பு எனும் அளவுக்கு அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்... தேவை இல்லாத அழுத்தங்களை வழங்கி போர் நிறுத்தம் எண்று எல்லாம் சொல்லாதவாறு வைப்பது மிகவும் அவசியமாம செயல்....

மற்றது சர்வதேசம் எல்லாம் இலங்கையை கண்டித்து பிடித்த இடங்களில் இருந்து விலகு எண்று வெளிப்படையாக சொல்லும் என்பதெல்லாம் நாங்கள் நினைக்க கூட தேவை இல்லை.... நாங்கள் செய்வதை வேறு வளியற்று சரியாக செய்கின்றோம் என்பதை தெளிய வைத்தால் போதும்.....

தலா நீர் கண்ணைமூடிக் கொண்டு உப்பிடி சொல்லி திருப்த்திப்பட்டுக் கொள்ளும். எனக்கும் அதுதான் ஆசை ஆனா மற்ற பன்னாடைகள் அப்படி நினைக்குது இல்லையே களத்து நிலமையும் அப்படியாக தெரியவில்லை.

கனடா TVI இன் வாராந்த அரசியல் கண்ணோட்டத்தில் சில வாரங்களிற்கு முன்னர் ஒரு பரதேசி (தூசணத்தால் அந்த நாயை விளிக்கத்தான் ஆசை ஆன களவிகளை மதித்து தவிர்க்கிறன்) network warfare பற்றி பினத்தினது. அந்த நாய் மாவிலாறை புலிகள் எப்படி கையாண்டார்கள் என்று விளக்கம் கொடுத்தது என்று கவனித்தனீரோ? அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பன்னாட பரதேசியும் அதை திருத்தவில்லை. அது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் அது தணிக்கை செய்யப்படவில்லை.

புலம்பெயர்ந்தவர்களின் நடத்தை அவர்களின் ஊடகங்களின் நடத்தை தமிழர்களை அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளும் இனமாக காட்டாது வெளியாருக்கு. தமிழரை போர் வெறியர்களாகத்தான் காட்டுகிறது. இந்த கேவலத்திலிருந்து மீள வேண்டும் முதல்.

தமிழ்த் தேசியத்தின் பதில் மிக விரைவில் உறைக்கத் தக்க விதமாக வெளிவரும். தேசியத் தலைவர் பேச்சிலல்ல காரியத்தில் தான் செயலில் தான் காட்டுவர். அவரது அமைதிக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் பதில் மிக விரைவில் உலகமறிந்து கொள்ளும். உறுதியானதும் இறுதியானதுமான பதிலாக அது இருக்கும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

இப்போது தமிழர்களுக்கு ஒரு இராணுவ ரீதியிலான பெருவெற்றி ஒன்று தேவைப்படுகிறதுதான். ஆனால் சாதாரண எமது பொதுமக்களை எடுத்துக்கொண்டால் "ஓயாத அலைகள்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடியார்களே! ம்ம்ம்ம்.... ஐயோ! இனி கேள்வியும் வேண்டாம்! பதிலும் வேண்டாம்!! அடி!!!!!!!!!! அதொன்றே தேவையானது, அதுவும் நரம்படி தெற்கிலை!!!.... அதை விட்டுட்டு .... சும்மா போர்நிறுத்தம்! பொறுமை!! குழம்பும்!!! .... என்றிராமல் காரியத்திலை இறங்க வேண்டும்!!! அதுவே அரசியலும்!!!! உந்த அரசியல் தான் உலக அரசியலையும் நிர்னயிக்கும்!!!! பலம்தான் எல்லாவற்றுக்கும் பதிலாகும்!!!!

அதை விடுத்து உலகம், சர்வதேசம், என்றால் இஸ்ரேல் அடிக்கும் போது அவை எங்கிருந்தன???? தற்போது சிங்களம் கொண்று குவிக்கும் போது அவை எங்கிருக்கின்றன?????

எங்கள் பதில்கள் எதிரிக்கு மட்டுமல்ல, உலகிற்கும் நகைப்பிற்கிடமாக போகக்கூடாது!!!! அவைகள் நடப்பது மாதிரியே தோன்றுகின்றது!!!

இதில் தமிழ்த் தேசியம் இராணுவ நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதல்ல, ஆனால் உறுதியான பதில்களை சிங்களத்திற்கு மட்டுமல்ல உலகிற்கும் தெளிவாக தெரியப் படுத்த வேண்டும்!!

ஆனால் எனக்கு விடுதலைப் புலிகள் மீதொரு தீராத கோபம் உள்ளது. இந்த யுத்த நிறுத்த காலத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று!!! இக்காலத்தில் இந்தக் கூலிகளையாவது கூண்டோடு யமலோகம் அனுப்பியிருக்கலாம்!!!! அதை தவற விட்டு விட்டார்கள்!!!!!

இனியாவது நல்லவைகள் நடக்கட்டும் ......

தலா நீர் கண்ணைமூடிக் கொண்டு உப்பிடி சொல்லி திருப்த்திப்பட்டுக் கொள்ளும். எனக்கும் அதுதான் ஆசை ஆனா மற்ற பன்னாடைகள் அப்படி நினைக்குது இல்லையே களத்து நிலமையும் அப்படியாக தெரியவில்லை.

கனடா TVI இன் வாராந்த அரசியல் கண்ணோட்டத்தில் சில வாரங்களிற்கு முன்னர் ஒரு பரதேசி (தூசணத்தால் அந்த நாயை விளிக்கத்தான் ஆசை ஆன களவிகளை மதித்து தவிர்க்கிறன்) network warfare பற்றி பினத்தினது. அந்த நாய் மாவிலாறை புலிகள் எப்படி கையாண்டார்கள் என்று விளக்கம் கொடுத்தது என்று கவனித்தனீரோ? அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பன்னாட பரதேசியும் அதை திருத்தவில்லை. அது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் அது தணிக்கை செய்யப்படவில்லை.

புலம்பெயர்ந்தவர்களின் நடத்தை அவர்களின் ஊடகங்களின் நடத்தை தமிழர்களை அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளும் இனமாக காட்டாது வெளியாருக்கு. தமிழரை போர் வெறியர்களாகத்தான் காட்டுகிறது. இந்த கேவலத்திலிருந்து மீள வேண்டும் முதல்.

TTN இல போட்டவை ஆனால் நான் பொறுமையாக இருந்து பாக்க இல்லை...! பல மாதிரி எண்டாலும் யாழ்களம் உண்மையில் அருமையான பல கருத்துக்களை கொண்டு வருகிண்றது..... ஆனால் அரசியலாய்வுக்குள் இராணுவ செயற்பாடுகளையும் போட்டு குளப்பி.... ஐயோ...!

உண்மையில் சொன்னால்... அரசியல் ஆய்வுக்கு கூட தகுதி இல்லாத கருத்தோட்டம் தெரிந்ததுதான் உண்மை இவர்கள் இராணுவ நோக்கர்களாய் கிட்டியதுக்கு TVI தான் கவலைப்பட வேணும்...

எமது ஊடகங்கள் ஒவ்வொரு தாக்குதல்களும் விடுதலை புலிகளால் ஆரம்பிக்கப்படும் போதே அத்தாக்குதல்களின் நோக்கங்கள் என்ன என்று அறியாமலே தாங்களாகவே கற்பனையாக செய்திகளை வெளியிட தொடங்கி விடுகிறார்கள். மட்டுப்படுத்தபட்ட நடவடிக்கைகளை புலிகள் தொடங்கினால் கூட " கிளாலி வீழ்ந்தது கொடிகாமம் மீட்கபட்டது" என்ற ரீதியில் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகப்படுகிறது. இதனால் மட்டுப்படுத்தபட்ட நடவடிக்கைகள் வெற்றியடையும் போதிலும் ஏமாற்றமே மக்களிடையே உருவாகிறது. உருவாக்கபடுகிறது.

வாசகன் உங்கள் கருத்து சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.