Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியின் அயர்லாந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014

Featured Replies

734568_704562952939703_80359263476188545

இலங்கை அணி  அயர்லந்து அணியுடன் 2 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணதில் உள்ளூர் அணிகளான எஸ்செக்ஸ்,கென்ட், சச்செக்ஸ் அணிகளுடன் ஒரு நாள் பயிற்சி போட்டிகளிலும்,  இங்கிலாந்து அணியுடன் ஒரு T20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டியிலும் பங்கு  பற்றுகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடுவார்களா?

  • தொடங்கியவர்

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்காக இலங்கை அணி பயணமானது
வெள்ளிக்கிழமை, 02 மே 2014

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களுக்காக இன்று அதிகாலை பயணமாகியுள்ளது. இன்று காலை (02) இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அவர்களின் வாழ்த்துகளுடன் பயணமானது. அவர்களின் பயணத்தின் முன்னர் பௌத்த மத பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

 

இலங்கை கிரிக்கெட் அணியானது அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு 20 - 20 போட்டியிலும், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

 

இன்று பயணமாகிய குழுவில் சில முக்கிய வீரர்கள் பயணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து போட்டிகள் நிறைவைடைந்த பின்னர் அவர்கள் இங்கிலாந்தில் அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/108970-2014-05-02-11-40-51.html

  • தொடங்கியவர்

இங்­கி­லாந்தின் சவால்­களை முறி­ய­டிக்க முயற்­சி : இலங்கை அணி பயிற்­று­நரும் தலை­வரும்


இங்­கி­லாந்­துக்கு எத­ிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் சவால் மிக்­கவை என்ற போதிலும் சிறந்த வியூ­கங்­களை அமைத்து சவால்­களை முறி­ய­டித்து வெற்­றி­பெற முயற்­சிக்­க­வுள்­ள­தாக இலங்கை அணி பயிற்­றுநர் மார்வன் அத்­தப்­பத்­துவும் அணித் தலைவர் அஞ்­சலோ மத்­யூஸும் தெரி­வித்­தனர்.


ஐக்­கிய இராச்­சி­யத்­திற்­கான கிரிக்கெட் விஜ­யத்தின் முதற்­கட்­ட­மான அயர்­லாந்­துக்கு இலங்கை கிரிக்கெட் குழா­மினர் புறப்­ப­டு­­கையில் இவர்கள் இரு­வரும் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

இலங்கை அணி பயிற்­று­ந­ராக மார்வன் அத்­தப்­பத்­துவும் அணித் தலை­வ­ராக அஞ்­சலோ மத்­யூஸும் இங்­கி­லாந்­துக்­கான முழு­மை­யான கிரிக்கெட் தொடர்­களை முதற்­த­ட­வை­யாக எதிர்­கொள்­ள­வுள்­ளனர்.

இந்த இரண்டு விஜ­யங்­களில் அயர்­லாந்­து­ட­னான தொட­ரின்­போது இளம் வீரர்­களின் திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தெ­னவும் அவர்கள் இலங்கை அணியில் நிலை­யான இடத்தைப் பிடிப்­ப­தற்­கான முயற்­சியில் இறங்­குவர் எனவும் பயிற்­று­நரும் அணித் தலை­வரும் குறிப்­பிட்­டனர்.

எவ்­வா­றா­யினும் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்கட் தொடர்கள் கடும் சவா­லாக அமையும் எனத் தெரி­வித்த அவர்கள், அந்த நாட்டின் ஆடு­க­ளத்தின் தன்­மைகள், டியூக் பந்­துகள், சீதோ­ஷனம் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப இலங்கை வீரர்­களை தயார்­ப­டு்த்த வேண்­டி­யுள்­ள­தாகக் கூறினர்.

இங்­கி­லாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்­றி­கொள்­வது கடி­ன­மா­ன­போ­திலும் அது இய­லாத காரி­ய­மல்­ல­வென மார்வன் அத்­தப்­பத்து குறிப்­பிட்டார்.

இதற்கு முன்னர் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வெற்­றி­பெற்­றி­ருந்­ததை நினை­வு­ப­டுத்­திய மார்வன் அத்­தப்­பத்துஇ தொடரில் வெற்­றி­பெற்றால் அது ஒரு பெரு வெற்­றி­யாக அமையும் என்று தெரி­வித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2014/05/03/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

  • தொடங்கியவர்

இலங்கை - அயர்லாந்து ஒருநாள் தொடர் ஆரம்பம்

 

அயர்­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணிக்கும் அயர்­லாந்து அணிக்­கு­மி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி சற்று முன்னர் டுபி­ளினில் இன்று ஆரம்பமாகியது.


இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

மத்­தியூஸ் தலை­மையில் கள­மி­றங்கும் இலங்கை அணியும் வில்­லியம் போர்ட்­டர்­பீல்டு தலை­மையில் கள­மி­றங்கும் அயர்­லாந்து அணியும் மோதும் இன்றைய போட்­­டியில் வெற்­றியை தம­தாக்­கப்­போகும் அணி எது என்­பது எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எதிர்­வரும் 20 ஆம் திகதி முதல் இங்­கி­லாந்து அணி­யு­ட­னான ஒரே­யொரு இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோது­வ­தற்­காக இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை அணி, அத்­தொ­ட­ருக்கு முன்­ன­தாக அயர்­லாந்து அணி­யு­ட­னான 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோது­வ­தற்­காக அயர்­லாந்­துக்கு பய­ண­மா­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே, இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இரு அணி­களும் இதற்கு முன்னர் ஒரே­யொரு சர்வதேச ஒருநாள் போட்­டி­யி­லேயே ஒன்­றை­யொன்று சந்­தித்­துள்­ளனர். அதில் இலங்கை அணியே வெற்­றியை பெற்­றுள்­ளது.

ஆசிய கிண்ணத் தொடரில் சம்­பியன் பட்­டத்தை வென்ற இலங்கை அணி அத்­தொ­ட­ருக்கு பின்­ன­தான நீண்ட இடை­வெ­ளியின் பின் ஒருநாள் போட்­டியில் இன்று களமி­றங்­கு­கின்­றமை எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/05/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

 

அயர்­லாந்து அணிக்கு 220 ஓட்டங்­களை வெற்றி இலக்­காக நிர்­ண­யித்த ஆசிய நட ப்பு சம்­பியன் இலங்கை அணி, 79 ஓட்­டங்­களால் முத­லா­வது ஒருநாள் போட்­டியை வெற்றி கொண்­டது.

5 ஓட்­டங்­க­ளைப்­பெ­று­வ­தற்குள் அடுத்­த­டுத்து இரு விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்து ஆரம்­பமே தடு­மா­றிய அயர்­லாந்து தன் சொந்த மண்ணில் முதல் போட்­டியை பறி­கொ­டுத்­தது.
அயர்­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி க்கும் அயர்­லாந்து அணிக்­கு­மி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி டுபி­ளினில் நேற்று நடை­பெற்­றது.

இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை அணி எதிர்­வரும் 20 ஆம் திகதி முதல் அவ்­வ­ணி­யு­ட­னான ஒரே­யொரு இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோத­வுள்ள நிலையில் அதற்கு முன்­ன­தான அயர்­லாந்­து­ட­னான இத்­தொடர் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில், நேற்று நடை­பெற்ற தொடரின் முதல் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்றி பெற்ற அயர்­லாந்து களத்­த­டுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 219 ஓட்ங்­க­ளைப்­பெற்­றது.

உப்புல் தரங்­க­வுடன் அணியின் தொடக்க வீர­ராக கள­மி­றங்­கிய குஷல் ஜனித் பெரேரா ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்­சி­ய­ளிக்க, அடுத்து வந்த அணியின் உப­த­லைவர் திரி­மான்னே 8 ஓட்­டங்­க­ளுடன் அரங்­கு­தி­ரும்­பினார்.

இவ்­வாறு ஆரம்­பமே அடுத்­த­டுத்து இரு விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்து ஆட்டம் கண்ட இவ்­வ­ணிக்கு நிதா­ன­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய உப்புல் தரங்க (24), சந்­திமால் (39), அணித்­த­லைவர் மத்­தியூஸ் (30), அஷ்கான் பிரி­ஜன்யன் (31), ஆகியோர் நம்­பிக்கை அளிக்க ஆட்­ட­மி­ழப்­பின்றி 42 ஓட்­டங்­க­ளைப்­பெற்ற நுவான் குல­சேகர மற்றும் அஜந்த் மென்டிஸ் (18) ஆகியோர் அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை ஸ்திரப்­ப­டுத்­தினர்.

இத­னை­ய­டுத்து 220 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதி­லெ­டுத்­தா­டிய அயர்­லாந்து 39.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்து 140 ஓட்­டங்­க­ளைப்­பெற்று தோல்­வி­யைத்­த­ழு­வி­யது.

5 ஓட்­டங்­க­ளைப்­பெ­று­வ­தற்குள் 2 விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்த இவ்­வ­ணிக்கு அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்ட் (37), நீயல் ஓ பிரைன் (33), ஜோர்ஜ் டொக்ரெல் (18), மெக்ஸ் சொரன்சன் (17) ஆகியோர் நம்பிக்கை அளித்த போதிலும் ஏனைய வீரர்கள் 10 ஓட்டங்களைக்கூட தாண்டாது ஏமாற்றமளித்தனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/05/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டுவட் ப்றோட் விளையாட மாட்டார்
 

 

முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநாண் அழற்சி காரணமாக இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடப்போவதில்லை என்பதை இங்கிலாந்தின் சகலதுறை வீரர் ஸ்டுவட் ப்றோட் உறுதி செய்துள்ளார்.


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் கரிபியனில் ஏமாற்றம் அளித்த உலக இருபதுக்கு 20 கிரக்கட் ஆகிய போட்டிகளின்போது ஸ்டுவர்ட் ப்றோடின் முழங்காலில் உபாதை ஏற்பட ஆரம்பித்தது.

இலங்கைக்கு எதிராக மே 20ஆம் திகதி நடைபெறவுள்ள நெட்வெஸ்ட் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட றோயல் லண்டன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் ஸ்டுவட் ப்றோட் விளையாடமாட்டார்.

நடப்பு கிரிக்கட் பருவகாலத்தில் டர்ஹாம் அணிக்கு எதராக ட்ரென்ட் ப்றிஜ்ஜில் மே 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியிலும் அதனைத் தொடர்ந்து சசெக்ஸ் அணிக்கு எதிராக ஹோவில் நடைபெறவுள்ள போட்டியிலும் விளையாடுவதற்கு ஸ்டுவட் ப்றோட் விளையாட எண்ணியுள்ளார். (என்.வீ.ஏ)
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5411#sthash.yvMqkL3L.dpuf

 

 

  • தொடங்கியவர்

முதல் பக்கம்
மழையால் போட்டி ரத்து
மே 08, 2014.டப்ளின்: இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அயர்லாந்து சென்ற இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை வென்றது. இரண்டாவது போட்டி டப்ளினில் நேற்று நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட, ‘டாஸ்’ கூட போடாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

 

http://sports.dinamalar.com/2014/05/1399563410/cricketindia.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘டாஸ்’ கூட போடாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

 

http://sports.dinamalar.com/2014/05/1399563410/cricketindia.html

மழை விட்டது மற்றவையும் விளையாட வேணுமல்லோ

நடுவரிலை பிழை இருக்கு சிரிலங்காக்காரன் எதோ லஞ்சம் கொடுத்துட்டான்

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை ஒ.நா.ச அணி

புதன்கிழமை, 14 மே 2014 09:27
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, திலகரட்ன டில்ஷான் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ள அதேவளை, ஐ.பி.எல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் லசித் மாலிங்க, திசர பெரேரா ஆகியோரும் அணியுடன் விரைவில்  இணைந்து கொள்ள உள்ளனர். அதேவேளை இங்கிலாந்து கழகமான டேர்ஹாம் பிராந்திய அணிக்கு விளையாடி வரும் குமார் சங்ககார வெள்ளிக்கிழமை அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். டெஸ்ட் போட்டிகளை கருத்திற் கொண்டு ரங்கன ஹேரத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் அஷான் பிரியரஞ்சன், சகலதுறை வீரர் சத்துரங்க டி சில்வா ஆகியோரும் அணியில் தொடர்ந்தும் தமக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர். இதேவேளை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்தும் இந்த அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த சமின்ட எரங்க, உப்புல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, கீத்ருவான் விதனாகே ஆகியோர் நாடு திரும்புகின்றனர்.

இன்று (24) இலங்கை அணி முதற்ப் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்
அஞ்சலோ மத்தியூஸ் (தலைவர்), லஹிறு திரிமன்னே (உப தலைவர்), திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, தினேஷ் சந்திமால், அஷான் பிரியரஞ்சன், சசித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், சத்துரங்க டி சில்வா, லசித் மாலிங்க, நுவான் குலசேகர, திசர பெரேரா, சுரங்க லக்மால், தம்மிக்க பிரசாத்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/110404-2014-05-14-03-59-15.html

 


இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு
செவ்வாய்க்கிழமை, 13 மே 2014
இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ட்வென்டி ட்வென்டி மற்றும் முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குமான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. ரிம் பிரஸ்னன் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, மைக்கல் காபெரி மீண்டும் இரு அணியிலும் இணைக்கப்பட்டுள்ளார். உலக டுவென்டி டுவென்டி தொடரில் சதமடித்த அலெக்ஸ் கேல்ஸ், டுவென்டி டுவென்டி அணியில் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்த இயன் பெல்லுக்கு மீண்டும் இரு அணிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் அலஸ்டயர் குக், ஜேம்ஸ் அன்டேர்சன், கரி பலன்ஸ், ரவி போபரா, ரிம் பிரஸ்னன், ஜோஸ் பட்லர், மைக்கல் காபரி, ஹரி கேர்னி, கிரிஸ் ஜோர்டான், ஒய்ன் மோர்கன், ஜோ ரூட், ஜேம்ஸ் ரெட்வெல், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இம் மாதம் 20ஆம் திகதி டுவென்டி டுவென்டி போட்டி நடைபெறவுள்ள அதேவேளை 22ஆம் திகதி 5 போட்டிகள் கொண்ட கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/110390-2014-05-13-15-36-42.html

  • தொடங்கியவர்

இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஒருநாள் தொடர் : இலங்கை குழாமில் சங்கா, மஹேல

 

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக 22 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ருக்­கான இலங்கை கிரிக்கெட் குழாமில் சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜெய­வர்­த்தன, குமார் சங்­கக்­கார ஆகியோர் இணைத்துக்கொள்­ளப்பட்டுள்ளனர்.

முன்னர் அறி­விக்­கப்­பட்ட இங்­கி­லாந்­து­ட­னான இரு­பது-–20 போட்­டி­க்கான குழாமில் இரு­வரும் கழற்­றி­வி­டப்­பட்டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது ஒருநாள் போட்­டிக்­கான 15 பேர் கொண்ட குழாமில் இடம்­பெற்­றுள்­ளனர்.

அயர்­லாந்­து­ட­னான 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடர்ந்து இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளது.

இதில் இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஒரே­யொரு இரு­பது–-20 போட்டி எதிர்­வரும் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து 22 ஆம் திகதி முதல் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரி­லிலும் இரு அணி­களும் மோத­வுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே, ஒருநாள் போட்­டிக்­கான இலங்­கையின் 15 பேர் கொண்ட குழாம் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

இதில் சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜெய­வர்­தன குமார் சங்கக்­கார மற்றும் லசித் மலிங்க ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

இதே­வேளை மத்­தியதர வரிசை துடுப்­பாட்ட வீரர் ஆஷான் பிரியஞ்சன், சத்­து­ரங்க டி சில்வா ஆகி­யோரும் குழாமில் இடம்­பெற்­றுள்­ளனர். இதில் கைவி­ரலில் ஏற்­பட்ட உபா­தை­யி­லி­ருந்து மீண்­டுள்ள ரங்­கன ஹேரத்­திற்கு மேலும் ஓய்வு கொடுத்து அவரை டெஸ்ட் அணியில் இடம்­பெறச் செய்யும் நோக்­கி­லேயே சத்­து­ரங்க டி சில்­வா­வுக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.


அஞ்­சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), லஹிரு திரி­மான்ன, திலக்­க­ரட்ன டில்ஷான், குஷல் ஜனித் பெரேரா, குமார் சங்­கக்­கார, மஹேல ஜெய­வர்­தன, தினேஷ் சந்திமால், ஆஷான் பிரியஞ்சன், சச்சித்ர சேனாநாயக்க, அஜந்த மெண்டிஸ், சத்துரங்க டி சில்வா, லசித் மாலிங்க, நுவன் குலசேகர, திஸர பெரேரா, சுரங்க லக்மால்.

 

http://www.virakesari.lk/articles/2014/05/14/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2

  • தொடங்கியவர்

லசித் மலிங்க இங்கிலாந்து பயணமாகவுள்ளார்

இங்கிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி விளையாடவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக லசித் மலிங்க இங்கிலாந்து பயணமாகவுள்ளார்.


இந்தியாவில் இடம்பெற்றுவரும் 7 ஆவது ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் மலிங்க விளையாடிவந்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சம்பியனான மும்பை அணி இத் தொடரில் தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. இதுவரை மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலையில் உள்ளது.

மேலும் நேற்று கொல்கத்தாவுடன் மோதிய போட்டியிலும் தோல்வி கண்டதால் மும்பை அணியின் பிளே ஓப் சுற்று கனவு நிறைவுக்கு வந்து விட்டது.

இதனால் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்க்காக இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=5476

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் இலங்கைக்கு முதல் வெற்றி
சனிக்கிழமை, 17 மே 2014 11:48

இலங்கை அணிக்கும் இங்கிலாந்தின் பிராந்திய அணியான கென்ட் அணிக்குமிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 123 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுபாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 51 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 49 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கென்ட் அணி சார்பாக ரொபி ஜோசப் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய கென்ட் அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் பிலேக் 60 ஓட்டங்களையும், ஷாம் பில்லிங்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால், திசர பெரேரா, அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இலங்கை அணியில் லசித் மாலிங்கவை தவிர்த்து முழுமையான அணி போட்டியில் பங்குபற்றி இருந்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/110762-2014-05-17-05-40-52.html

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இலங்கை, இங்கிலாந்து டுவென்டி 20 இன்று
செவ்வாய்க்கிழமை, 20 மே 2014 15:31

இலங்கை- இங்கிலாந்து  அணிகளுக்கிடையிலான ஒற்றை டுவென்டி 20 போட்டி இன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலக டுவென்டி 20 தொடருக்கு பின்னர் நடைபெறும் முதலாவது டுவென்டி 20 போட்டி இது என்பது குறிப்பிடத்தகது. த ஓவல் மைதனத்தில் இன்று இலங்கை நேரப்படி இரவு 10.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. உலக சம்பியன் இலங்கையிடம் இங்கிலாந்து பல சோதனைகளை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பல பிரச்சினைகளின் பின்னர் பல மாற்றங்களுடன் புதிய அணியாக களமிறங்குகின்றது இங்கிலாந்து அணி. இலங்கை அணி அவர்களின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களும், இங்கிலாந்து ஆடுகளம் பற்றி நன்கு அறிந்தவர்களுமான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன இன்றி களமிறங்கவுள்ளது. இவர்கள் இருவரினது உதவி இலங்கை அணித் தலைவர்களுக்கு சாதாரணமாக கிடைப்பது வழமை. அவர்கள் இல்லாதது இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்கவிற்கு சோதனையாக அமைய வாய்ப்புகள் உள்ளன. அதை வென்று தனது தலைமை பொறுப்பை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

 

உலக டுவென்டி 20 தொடரில் இருந்து விலகிக் கொண்ட தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை கீத்ருவான் விதானகே, சத்துரங்க டி சில்வா, அஷான் பிரியரஞ்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

 

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டு டுவென்டி 20 போட்டிகளிலும் இலங்கை அணியானது இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை உலக டுவென்டி 20 தொடரில் இலங்கை அணியானது இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/111180----20--.html

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா வெற்றி

  • தொடங்கியவர்

திஸரவின் அதிரடியில் இங்கிலாந்தை வென்றது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் திஸர பெரேரா அதிரடி காட்ட மலிங்க பந்து வீச்சில் மிரட்ட இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு ஒரு இருபதுக்கு -20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு - 20 போட்டி நேற்று இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிரடியில் மிரட்டிய திஸர பெரேரா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் திரிமான்னே 40 ஓட்டங்களையும் விதானகே 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் க்குருணி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹெலிஸ் 66 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் லசித் மலிங்க 4 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு -20 போட்டியை இலங்கை அணி 1-0 என கைப்பற்றியது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/05/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

நேற்றைய ஆட்டம் பார்த்தேன் .சூப்பர் .லண்டன் மண்ணில் வெளிநாட்டவர்கள் சற்று திணறுவார்கள் .சங்கா ,மேகலா இல்லாமாமல் மிக திறைமையான ஆல்றவுண்ட் ஆட்டம் .பீல்டிங் அபாரம் .

 

கொடி பிடிப்பவர்களை தான் காணவில்லை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய ஆட்டம் பார்த்தேன் .சூப்பர் .லண்டன் மண்ணில் வெளிநாட்டவர்கள் சற்று திணறுவார்கள் .சங்கா ,மேகலா இல்லாமாமல் மிக திறைமையான ஆல்றவுண்ட் ஆட்டம் .பீல்டிங் அபாரம் .

 

கொடி பிடிப்பவர்களை தான் காணவில்லை . :icon_mrgreen:

 

1000812_469778169774737_1890438622_n.jpg

 

உங்களுக்கு எதைக்கண்டால் பயம்?  :lol:

  • தொடங்கியவர்

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் இன்று

இலங்கை-– இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.


இங்­கி­லாந்து அணி­யு­ட­னான இரு­பது–-20 போட்­டியை அதன் சொந்த மண்ணில் வெற்றி கொண்ட இலங்கை அணி அந்த வெற்­றியின் உத்­வே­கத்­துடன் இன்று ஒருநாள் தொடரில் கள­மி­றங்­க­வுள்­ளது.

இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி இங்­கி­லாந்து அணி­யு­ட­னான ஒரே­யொரு இரு­பது–-20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோத­வுள்­ளது.

இந்­நி­லையில், இரு­பது-–20 போட்டி நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிலையில் இன்று ஒருநாள் தொடரின் முத­லா­வது போ ட்­டியில் இரு அணி­களும் மோத­வுள்­ளன.

இரு அணி­களும் இது­வ­ரையில் 51 ஓருநாள் போட்­டியில் மோதி­யுள்­ளன. இதில் இங்­கி­லாந்து 26 போட்­டி­க­ளையும் இலங்கை 25 போட்டிகளையும் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.virakesari.lk/articles/2014/05/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E2%80%93%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81

  • தொடங்கியவர்

இலங்கையை வெற்றி கொண்டது இங்கிலாந்து
Fri, 05/23/2014 - 11:53

இலங்கைக்கு எதிரான  முதலாவது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றது. இந்நிலையில் முதலாவது போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 101 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இந்நிலையில் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக பெல் 50 ஓட்டங்களையும் பெலன்ஸ் 64 ஓட்டங்களையும் ரூட் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சேனநாயக்க 3 விக்கெட்டுகளையும் குலசேகர 2 விக்கெடடுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 247 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 32 ஓவர்களில் 226 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

226 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு இங்கிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு முகங்கொடுக்க முடியாது விக்கெட்டுகள் சரிய, 27.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 81 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் ஜோர்டன் மற்றும் டிரெட்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக டில்சான் 33 ஓட்டங்களையும் ஜெயவர்தன 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கிலாந்து அணியின் ஜோர்டான் தெரிவுசெய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/05/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

  • தொடங்கியவர்

99 ஓட்டங்களுடன் சுருண்டது இங்கிலாந்து; 157 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி
2014-05-25 21:23:54

இங்கிலாந்துஅணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

செஸ்டர் லீ ஸ் ரீட்டில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் 257  ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களுடன் சுருண்டது.

சச்சித்ர சேனநாயக்க  13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

5586lanka5_zpsa0ba0908.jpg

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8  விக்கெட்இழப்புக்கு 257 ஓட்டங்களைக் குவித்தது.

 

திலகரட்ன டில்ஷான் 101 பந்துகளில் 88 ஓட்டங்களைக் குவித்தார்.  அஷான் பிரியஞ்சன் 33 பந்துகளில் 43 ஓட்டங்களையும் 
குமார் சங்கக்கார 67 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஹரி கர்னி ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் மோர்கன் 40 ஓட்டங்களையும் இயன் பெல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். அவ்வணி 26.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் சச்சித்ர சேனநாயக்க 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்  நுவன் குலசேகர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
திலகரட்ன டில்ஷான் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5586#sthash.VZCoobyZ.dpuf

  • தொடங்கியவர்

கழற்றிவிடப்பட்டார் லக்மால் உள் நுழைந்தார் ரங்கன ஹேரத்

இங்­கி­லாந்து அணி­யு­ட­னான ஒருநாள் தொடரின் மீத­முள்ள போட்­டி­க­ளி­லி­ருந்து அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் சுரங்க லக்மால் நீக்­கப்­பட்­டுள்ளார்.


தொடரின் முத­லா­வது போட்­டியின் போது உபா­தைக்­குள்­ளான அவ­ருக்கு பதி­லாக 2 ஆவது போட்­டியில் தம்­மிக பிரசாத் கள­மி­றக்­கப்­பட்டார். இந்­நி­லையில் லக்மால் உபா­தை­யி­லி­ருந்து மீள சில நாட்கள் தேவை ப்­படும் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் அவர் மீத­முள்ள போட்­டி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.

எனினும் எதிர்­வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் இங்­கி­லாந்­து­ட­னான முதலா­வது டெஸ்ட் போட்­டியில் அவர் பங்­கேற்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இத­னை­ய­டுத்து சுரங்க லக்­மா­லுக்கு பதி­லாக அனு­பவ சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன கேஹரத் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார். ஏற்­க­னவே ஒருநாள் போட்­டி­க்கான இலங்­கைக்­கு­ழாமில் சுழற்­பந்து வீச்­சா­ளர்­க­ளாக அஜந்த மென்டிஸ்இ சச்சித்திர சேனநாயக்க ஆகியோர் உள்ள நிலையில் தற்போது ரங்கன ஹேரத்தும் இணைக்கப்ப ட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/05/28/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D

  • தொடங்கியவர்

இலங்கையை சுருட்டிய இங்கிலாந்து முன்னிலையில்

இங்கிலாந்துக்கெதிராக இடம்பெற்ற 3ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.


ஏற்கனவே இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்று 1-1 என்ற அடிப்படையில் இருந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று இடம்பெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 24 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 67 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சங்கக்கரா 13 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஒரு நாள் போட்டியில் இது இலங்கை அணியின் 3ஆவது மோசமான ஓட்டப் பெறுதியாகும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் மிக இலகுவான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தலைவர் அலிஸ்டயர் குக்கும் (30 ஓட்டங்கள்), இயான் பெல்லும் (41 ஓட்டங்கள்) இணைந்து 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணி சார்பாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோர்டான் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/05/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை 7 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் குக், இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக குமார் சங்கக்கார 112 ஓட்டங்களையும் (104 பந்துகளில் 14 பவுண்டரியுடன்), டில்ஷன் 71 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி குர்னே 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஹெண்டர்சன், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்ளை எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் புட்லெர் 121 ஓட்டங்களை (74 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ரன்–அவுட் ஆனார். இலங்கை அணி தரப்பில் மாலிங்க 3 விக்கெட்டும், அஜந்த மெண்டிஸ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இரு அணிகள் இடையேயான இறுதி ஒருநாள் போட்டி பர்மிங்காமில் எதிர்வரும் 3ஆம் திகதி நடக்கிறது.
 

 

http://www.virakesari.lk/articles/2014/06/01/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-7-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.