Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க சென்னை மாநகராட்சி... : 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க முடிவு

Featured Replies

சென்னை: சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், நகர் முழுவதும் 1,000 கி.மீ., துார சாலைகளில், 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. போதுமான நீர்நிலைகள் இல்லாத நிலையில், ஆறுகளும் கடுமையாக மாசடைந்துள்ளதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது.

20 மீ., இடைவெளியில்...

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கவும், சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை நகர சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

கடந்த நிதியாண்டில், 5,000 இடங்களில் மழைநீர் வடிகால்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாநகராட்சி உருவாக்கியது. இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த நிதியாண்டில், சாலையோரங்களில், 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதிலும், கான்கிரீட் சாலைகள் அமைய உள்ள எல்லா இடங்களிலும் 20 மீ., இடைவெளிக்கு ஒரு மழைநீர் சேகரிப்பு அமைப்ைப உருவாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில், கடந்த நிதியாண்டில் 1,063 கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, 800 சாலைகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சாலையின் இருபுறமும் 'பேவர் பிளாக்' அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த 'பேவர் பிளாக்' அமையும் பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஒரே வடிவமைப்பு கொண்டதாக இருக்கும்.

பெசன்ட் நகரில்...

சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூலம் இதை அமைக்கலாமா அல்லது தனி ஒப்பந்தம் மூலம் ஒரே நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.

புதிய மழைநீர் சேகரிப்பு அமைப்பில், 20 அடி ஆழம், ஒரு அடி அகலத்திற்கு ஆழ்துளை குழாய் பதிக்கப்படும். அதில், ஜல்லி, மணல் கொட்டப்பட்டு, சாலை மட்டத்தில் வடிதொட்டி அமைப்பு உருவாக்கப் படும்.

அதில் இரும்பு 'கிரில்' பொருத்தப்படும். மழைக் காலத்தில் சாலைகளில் இருந்து வழியும் மழைநீர், கால்வாய்களுக்கு செல்லும் முன் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பில் விழும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். சாலைகளில் இந்த அமைப்புகளை உருவாக்குவது இதுவே முதல் முறை. அதேநேரம், மணல் பாங்கான பெசன்ட் நகர் பகுதி பேருந்து சாலைகளில் மழைநீர் வடிகால் கிடையாது. அங்கு நடைபாதைகளில் இதுபோன்ற மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 

 

 

எத்தனை சாலைகள்?

சென்னையில் பேருந்து சாலைகள் - 353.94கி.மீ.,

உட்புற சாலைகள் - 5,563.06கி.மீ.,

பேருந்து சாலைகளில் கான்கிரீட் சாலை - 3.68 கி.மீ.,

உட்புற சாலைகளில் கான்கிரீட் சாலை - 1,292.54 கி.மீ.,

புதிதாக அமைக்கப்பட உள்ள கான்கிரீட் சாலைகள் -1,063

புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலைகள் - 9,000

மொத்தம் உள்ள 6,000 கி.மீ., துார சாலைகளில் முதல்கட்டமாக இந்த நிதியாண்டு 1,000 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது.

 

http://www.dinamalar.com/district_detail.asp?id=966107

இதைப் போன்ற ஒரு திட்டம் வடக்கு கிழக்கில் - முக்கியமாக நிலத்தடி நீரை பெருவாரியாக நம்பியிருக்கும் யாழ் குடா நாட்டிற்கு மிக அவசியம். ஐங்கரநேசன் போன்றவர்கள் இவை பற்றி அக்கறை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போன்ற ஒரு திட்டம் வடக்கு கிழக்கில் - முக்கியமாக நிலத்தடி நீரை பெருவாரியாக நம்பியிருக்கும் யாழ் குடா நாட்டிற்கு மிக அவசியம். ஐங்கரநேசன் போன்றவர்கள் இவை பற்றி அக்கறை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நீங்கள அவரை நம்புறீங்கள் அவர் உங்களை(புலம் பெயர் மக்களை) நம்புகிறார்.

இதைப் போன்ற ஒரு திட்டம் வடக்கு கிழக்கில் - முக்கியமாக நிலத்தடி நீரை பெருவாரியாக நம்பியிருக்கும் யாழ் குடா நாட்டிற்கு மிக அவசியம். ஐங்கரநேசன் போன்றவர்கள் இவை பற்றி அக்கறை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நானும் நினைத்ததை எழுதிவிடீர்கள்.

இதற்கு தேவையான பொருள், மனித வளங்கள் பிரச்சினையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

தமிழகத் தண்ணீர் பிரச்சினை: ஒப்பீடும் தீர்வும்

  • 429xNxwater02_1876592g.jpg.pagespeed.ic.
    மேட்டூர் அணை - கோப்புப் படம் / அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயற்கைக் கோள் மூலம் ஆய்வுசெய்ததில் தமிழகத்தில் 15,000 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது தெரிந்தது. /
  •  
  • கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது தமிழகத்தின் தண்ணீர் நிலவரத்தைப் பார்த்தால் கவலை யாக இருக்கிறது. நமக்கான நீர் ஆதாரங்கள்: மழை, நீர்நிலைகள், நிலத்தடி நீர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மூன்று அம்சங்களுமே கடந்த ஆண்டைவிடக் கவலை யளிக்கின்றன.
  • நிலத்தடி நீர்மட்டம்

     

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது. அதிகபட்சமாக நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் 1,000 1,300 அடிவரை தோண்டினால் மட்டுமே நிலத்தடி நீர் கிடைக்கிறது. இது ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்கள் அளிக்கும் சராசரிப் புள்ளிவிவரங்கள். கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தமிழக அரசின் நிலத்தடி நீர்மட்ட அளவீடுகளின்படி கடந்த ஆண்டைவிட மிக அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3.42 மீட்டர் குறைந்துள்ளது. மிகக் குறைந்த அளவாக கரூரில் 0.01 மீட்டர் குறைந்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், சுமார் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கவலையளிக்கும் வகையில் (பார்க்க: பெட்டிச் செய்தி) ஒரு மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

    மத்திய நிலத்தடி நீர் பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி மிகவும் கவலை தரக்கூடிய வகையில் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயற்கைக் கோள் மூலம் ஆய்வுசெய்ததில் தமிழகத்தில் 15,000 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது தெரிந்தது.

    காரணங்கள் என்ன?

    சில உதாரணங்கள், சென்னையின் குடிநீர் பெருமளவு பாலாற்றுப் படுகையிலிருந்து கிடைத்தது. இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது. சுமார் 800 தோல் தொழிற்சாலைகள் பாலாற்றைப் பாழாக்கியதில் ஆற்றுப் படுகையிலேயே 1,000 அடி வரை துளையிட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது- ரசாயன நெடியுடன். பாலாற்றுப் படுகையை நம்பியிருக்கும் சுமார் 46 ஊர்களில் 27,800 கிணறுகள் வற்றி, ரசாயன உப்புப் படிமங்கள் பூத்துள்ளன. மதுரையின் வைகைக் கரை ஓரங்களில் 41 இடங்களில் ராட்சதக் குழாய்களைப் பதித்து, நகரில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகளின் கழிவுகளைச் செலுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் மணல் கொள்ளை. மணலைத் திடப்பொருளாகப் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு மணல் துகளிலும் தண்ணீர் உறைந்திருக்கிறது. அதை ‘மைக்ரோ டிராப்ஸ்' என்பார்கள். இதுவும் ஒரு மறைநீர் தத்துவம்தான்.

    கைவிட்ட மழைப் பொழிவு

    தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 92 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். 2012, 2013 ஆண்டுகளில் முறையே 16 , 31 சதவீதம் மழை குறைந்துவிட்டது. தவிர, கடந்த ஆண்டு இறுதியில் வந்த ஐந்து புயல்கள் தமிழக வளிமண்டலத்தின் மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு சென்றுவிட்டது. கடந்த 2013, ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் 70.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆனால், 2014 ஜனவரி முதல் இதுவரை பதிவான மழையின் அளவு வெறும் 0.13 மில்லி மீட்டர் மட்டுமே. ஆக, அடுத்த மழைப்பொழிவு ஜூலை மாதம்தான்.

    விவசாயம் கேள்விக்குறிதான்

    அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவே. கடந்த 2013ம் ஆண்டின் இதே நேரத்தில் தமிழகத்தின் மொத்த அணைகளிலும் 628.71 அடி நீர்மட்டம் இருந்தது. நேற்றைய நிலவரப்படி 595.09 அடி நீர்மட்டம் மட்டுமே உள்ளது. (பார்க்க: பெட்டிச் செய்தி) குடிநீர்ப் பஞ்சத்தை சிரமப்பட்டுச் சமாளித்துவிடலாம். ஆனால், விவசாயம் கேள்விக்குறிதான். உதாரணத்துக்கு, மேட்டூர் அணையில் 33 அடி தண்ணீர் இருந்தாலும் அதில் 20 அடி வெறும் சகதி மட்டுமே. தமிழகத்தில் மொத்த அணைகளின் நிலையும் இதுதான். அணைகளைத் தூர்வாருவது மட்டுமே எதிர்காலத்தில் நிலைமையைச் சீராக்கும்.

    இது சென்னை நிலவரம்

    சென்னையின் குடிநீர்ப் பிரச்சினை கடந்த ஆண்டைப் போல மோசமாக இருக்காது. ஏனெனில், கடந்த 2013 மே மாதத்தில் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் 45.8 அடி தண்ணீர் இருந்தது. ஆனால், இப்போது 51.97 அடி தண்ணீர் இருக்கிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி)

    நிலத்தடி நீர் பெருக என்ன செய்யலாம்?

    மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் கட்டாயமாக்கலாம். நிலத்தடி நீரை உறிஞ்சும் பெரும் நிறுவனங்கள், சுத்திகரித்த பின்பு நீரைக் கழிவுநீர்க் கால்வாய்களில் விடாமல் நீரை உறிஞ்சும் பகுதிக்கு அருகிலேயே நவீன நீருட்டல் மூலம் பூமிக்குள் செலுத்தலாம். விவசாயிகள் மழை தொடங்கும் முன்பே நிலங்களை உழவுசெய்ய வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள லட்சக் கணக்கான ஏக்கர் தரிசு, மானாவாரி நிலங்களை இப்படி உழவுசெய்தாலே மழைநீர் வீணாகாமல் நிலத்தில் இறங்கும்.

    மரங்களை வளர்ப்போர் ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் வட்டப் பாத்தி வெட்டலாம். மலைச்சரிவுகளில் மரம் வளர்ப்போர் மரத்தைச் சுற்றிப் பிறை வடிவ வாய்க்கால் வெட்டலாம். நெல் சாகுபடிக்கு 1,400 1,600 மில்லி மீட்டர் தண்ணீர் தேவை. உளுந்து, எள் மற்றும் சிறு தானியங்களுக்கு 200 - 300 மி.மீட்டர் தண்ணீர் போதும். கோடையில் தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் மாற்றிமாற்றிச் செய்யலாம். இதில் அரசு செய்ய வேண்டியது, தமிழகத்தில் ஏழு தட்பவெப்ப மண்டலங்களில் இருக்கும் 22 வகையான மண்ணைப் பரிசோதித்து, எங்கெங்கு என்ன பயிர் செய்யலாம் என்று ‘மைக்ரோலெவல்' பயிர்த் திட்டம் வகுக்க வேண்டும்.

     

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.