Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்!
மே 7, 2014
 
 சிறிலங்காவில் கடுமையான வரட்சி ஏற்பட்டதால்; தேயிலை உற்பத்தி தொடர்ந்தும் இரண்டாவது மாதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளதால் சிறிலங்கா பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
முன்னைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தேயிலை உற்பத்தி 21.9 வீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
 
இதனால் இலங்கை முதன்மையான விவசாய ஏற்றுமதிப் பொருளான தேயிலை ஏற்றுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி 4.2 வீதத்தினால் அதிகரித்து 340.2 மில்லியன் கிலோ என்ற உச்ச அளவை எட்டியிருந்தது. இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டிலேயே 331.4 மில்லியன் கிலோ என்பதே அதிகபட்ச உற்பத்தியாக இருந்தது.
 
மேலும் தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 1.54 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலங்கை பெற்றிருந்தது. இந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதால் ஏற்றுமதி வருமானம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கையின் 67 பில்லியன் டொலர் பொருளாதாரத்தில் தேயிலையே வெளிநாட்டு நாணய வருமானத்தைத் தேடித்தரும் பிரதான ஏற்றுமதிப் பொருளாக இருக்கின்றது. தற்போது தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.http://www.sankathi24.com/news/41233/64//d,fullart.aspx
  • கருத்துக்கள உறவுகள்

இனிப்பினூட்டம் வரும் பாருங்களேன். நாங்கள் தேத்தண்ணி குடிக்காம விட்டு இலங்கையை விழுத்தீட்டம் பார் எனறு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லை தாங்கள் இலங்கை தேயிலையை புறக்கணித்ததால் தான் இலங்கை தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து விட்டது என அவர்கள் சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைப்பட வேண்டாம்.. :unsure: நீங்கள் இரண்டுபேரும் எடுத்தது ஒரே வாந்திதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒரு நாளைக்கு 5 டொலருக்கு வேலை செய்ய விட்டு அதில குடித்தனம் நடத்து என்று விட்டால் தான்.. உந்த வாந்தி எடுக்கிற சிங்கள எஜமான விசுவாசிகளுக்கு சில வலிகள் புரியும். இது வெளிநாட்டில கள்ளப் பொய் சொல்லி அசைலம் அடிச்சு.. அரசாங்கக் காசில வாழுறதுகளுக்கு அது எங்க தெரியப் போகுது.

 

இது வரட்சி அல்ல. மலைய மக்களின் வேதனையின் வெளிப்பாடு. இந்த வரட்சி அவர்களையும் பாதிக்கும் ஆனாலும்.. இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல. ஏனெனில் அவர்களின் வாழ்க்கையே பாலைவனமாக்கப்பட்டு விட்டது சிங்கள பேரினவாத வெறியர்களாலும் அவர்களுக்கு எலும்பு பொறுக்கும் மலையக முதன்மை அரசியல் கூலிகளாலும்..! :icon_idea:

புலம்பல்பெயர்சுகளுக்கு விடிய வெள்ளனையே உரு பிடித்துவிட்டது.

தாமே புலம்பி தாமே ஒப்பாரி வைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேத்தண்ணி குடிக்காமல் விட்டதாலும், தேயிலைய புறக்கணிச்சாதலும் தான் இலங்கை பொருளாதராம் வீழ்ந்திருக்கு. மகிந்தருக்கு இப்ப தெரிஞ்சிருக்கும்... யார்கிட்ட  :icon_idea:

Edited by செங்கொடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.