Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே மாதம் 15 : குமுதினிப் படகுப் படுகொலை நினைவு நாள்

Featured Replies

Kumuthini-boat-massacre.jpg

2009 ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை இலங்கை இனப்படுகொல அரசு அழித்துப்போட்டது. மே மாதம் 15 ஆம் திகதி மற்றொரு படுகொலை மக்கள் நேயம் உள்ளவர்களை உலுக்கிப்பார்த்தது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, ஆறு இலங்கை கடற்படையை படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்

நெடுந்தீவு மக்களை வெளியுலகத்துடன் இணைத்தது இந்தப் படகுச் சேவை மட்டுமே.

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://inioru.com/?p=40175

gse_multipart49106.jpg

 

gse_multipart49075.jpg

gse_multipart49112.jpg

 

குமுதினி ………

இந்தப் பெயரை,

உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட

துக்கத்தால் ஒரு கணம்

ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்

இனிய தீவினை ……..

பட்டணத்தோடு இணைத்த

பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,

எங்களின் பனாட்டும், பாயும்…….

ஓலையும், ஒடியலும் ………

பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,

எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்

அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்

நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,

பனம்கிழங்குக் கூறுகளாய்……..

கிழிபட்டுக் கிடந்த என் மக்களை

“மனிதமே, நேயமென்று”

தன் மடிமீது சுமந்து ……

பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய

புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,

கடமையை மட்டும் செய்த

கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..

காலில் நசிபடும் செருப்பு ……..

தீபாவளிப் புத்தாடை …..

பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….

அப்புவையும்,ஆச்சியையும்,

கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….

எல்லாமே …… எல்லாமே ……….

அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்

கல்தாக் கொடுத்துவிட்டுக்

கடும் வேகக் கப்பலாய் – என்

துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்

ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….

மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்

கைகட்டிப் பணிந்து,

மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……

அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு

புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே

பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்

துண்டுகளாய் ……….

காலறுபட்டு ……..கையறுபட்டு ……..

துடிக்கத் துடிக்க ………

அவ்ள் மடியில் உயிர் போன,

என்னுயிர்த் தங்கைகளின்

அழகான கனவுகள் பற்றி …….

இன்னமும் ……. அவர்கள் ……..

வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….

பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி

கணப்பொழுதில் கருவுடனேயே ……..

சிதையில் எரிந்த என் நண்பனின்,

மனைவி பற்றி ……..

பதைக்கப்,பதைக்க

கொலையுண்டு கிடந்த

பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,

எதிரியிடம் மண்டியிடாது

உயிர் விட்ட என்னூர்- வீர

அன்னைகள் பற்றி ……

என்னினிய உணர்வில்

தமிழைக் கலந்து,

தன்னுயிரைக் கூலிப்படைக்கு

காவு கொடுத்திட்ட

தமிழாசிரியன் பற்றி …….

எவரைப்பற்றி …….

எவரைப்பற்றி ……..

நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….

குடவிலி, குவிந்தா …….

எத்திசை நோக்கினும்

எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..

பெருந்துறையீறாய்………

ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,

காக்கையும், கூட மார்பில்

அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,

ஆண்ட திருத்தீவு

விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்

நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்

கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,

பொட்டெனப் போற்றிடும் …….

நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்

காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய

தமிழின் இலக்கணத்தீவு ……..

அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்

காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.

மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!

மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..

அலைகடலின் மடியிருந்து ……

வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்

விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!

gse_multipart49106.jpg

 

கடலம்மா…

கடலம்மா…!கடலம்மா… நீயே சொல்

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?-எம்மவா¢ன் அவலங்களைச்சடலங்களாய்ச் சுமந்துகொண்டு

குமுதினி குருதி வடிய வந்தாள்.

கடலம்மா கண்டாயோ?

கார்த்திகேசு என்னவானான்?

எந்தக் கரையில்உடலு¡திக் கிடந்தானோ? ஓ…! சோழகக் காற்றே

நீ,வழம்மாறி வீசியிருந்தால்…குமுதினிவரமாட்டாள் என்றுநெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.

பாவம்மரணங்களின் செய்தி கூடக்கிட்டாத தொலைதீவில்,

ஏக்கங்களையும் துக்கங்களையும்

கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்காத்திருக்கும் மக்கள்…கடலம்மா நீ மலடி

ஏனந்தத் தீவுகளைஅனாதரவாய்த் தனியே விட்டாய்?

கடலம்மா…உன் நீள் பரப்பில்அனாதரவாய் மரணித்த எம்மவரைபுதிய கல்லறைகளை எழுப்பியு

அனாதைக் கல்லறைகள் என நினைவூட்டு.

ஆனால்,இனிவருங் கல்லறைகள்வெறும்இழப்புக்களின் நினைவல்ல,

எமதுஇலட்சியங்களின் நினைவாகட்டும்!

நிலாந்தன்

gse_multipart49106.jpg

http://thesakkaatu.com/doc2371.html

goshan_che

உறுப்பினர்

  • photo-thumb-10626.jpg?_r=1380224584
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.png
  • 473 posts
  • Gender:Male

Posted Today, 02:32 AM

நீதியாவது நியாயமாவது - நிம்மதியா வாழவிடுங்கப்பா என்பதுதான் நான் சொல்வது.

இறந்தவர்களுக்கு நியாயம் தேடப்போய் இருப்பவர்களையும் இழக்க முடியாது.

நியாயம், மானம், இனம், வீரம் இப்படி எல்லாம் வீரவசனம் பேசுவது ஒன்றில் சோக்காய் வாழும் புலப்பினாமிகளுக்கு அல்லது பிள்ளைகளை புலத்துக்கு அனுப்பி விட்டு தேசியம் பேணும் அரசியல்வாதிகளுக்கு லாபகரமாய் இருக்கலாம். மக்களுக்கு ஒரு பயனுமில்லை.

கடந்த 50 வருடமாக முஸ்லீம் சமூகம் எப்படி பட்டும் படாமல் வாழ்ந்ததோ அப்படி வாழ்வதே மக்கள் முன்பு இப்போ உள்ள தெரிவு.

 

 

ஒரு பெரியவர், சிந்தனையாளர் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியிருக்க நீங்கள் பழைய குமுதினி படுகொலையை இங்கு வந்து இணைத்திருக்கின்றீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

குமுதினிப் படகில், உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும், நினைவுநாள் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் ஒரு அங்கமே இது. அது இன்று வரை தொடர்வதே தமிழர்களின் சாபக்கேடு.

 

நினைவஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.