Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெரோமி கொன்சலிற்றா வழக்கு, பாதிரியார்கள் மன்றில் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு பாதிரிமாரும் மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர்.

“எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை”

என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார்.

பாலியல் ரீதியாக பாதிரியார்கள் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிரியார்கள் சார்பாகச் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், மு.றெமீடியஸ் ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமா க மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.e-jaffna.com/archives/24773

சொல்வது உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தர் மேல சத்தியமாவா..???! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=686692993812384564#sthash.XzRSfHR3.dpuf

கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான குயின்ஸ்ரன் பெர்னாண்டோ மன்றில் சாட்சியமளித்தார்.

கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி பாதிரிமார்கள் இருவரும் மன்றிற்கு சமுகமளித்திருந்ததுடன் கொன்சலிற்றாவின் சாவு குறித்தும் சாட்சியமளித்திருந்தனர். அதன்போதே பாதிரியார் குயின்ஸ்ரன்  பெர்னாண்டோ மேற்கண்டவாறு மன்றில் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

நான் பெரியகோயிலினுடைய பாதிரியாக கடந்த 2 வருடங்களாக உள்ளேன். அங்கே மறைகல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 500 மாணவர்களும் 30 தொடக்கம் 35 வரையான ஆசிரியர்களும் உள்ளனர்.

அதன்படி மறைக்கல்வி ஆசிரியர்களுள் ஒருவராக கடந்த நவம்பர் மாதம் முதல் கொன்சலிற்றா இருந்தவர். கடந்த ஒன்றரை மாதங்களாக கொன்சலிற்றா சமுகம் தரவில்லை.

எனினும் ஆசிரியர்களாக பலர் வருவார்கள் போவார்கள் அதனால் அவர் சமுகம் தராதமை குறித்து நான் தேடவில்லை. அதுபற்றி எனக்கு தெரியாது. சக ஆசிரியர்களே அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

மறைக்கல்வி தொடர்பான விடயங்களை தெரிவிப்பதற்கு சிலவேளைகளில் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளேன். அத்துடன் தேவை கருதியும் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளேன். எனினும் கொன்சலிற்றா இறப்பதற்கு முன் ஒன்றரை மாதங்களாக தொடர்பு கொள்ளவில்லை.

இருப்பினும் கொன்சலிற்றா கிணற்றுக்குள் இறந்த நிலையில் இருந்தமை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி 3 மணிக்கு மக்கள் கூறியே தெரியும்.  எனினும் மறையாசிரியர் என்பதைத் தவிர எனக்கும் கொன்சலிற்றாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

அத்துடன் சாதாரண தொடர்பை வைத்துக்கொண்டு கொன்சலிற்றாவின் பெற்றோரும், ஊடகங்களுமே பெரிதாக்கியுள்ளன. இவர்கள் கூறுமளவிற்கு எந்தவிதமான விடயமும் இல்லை என்றார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=686692993812384564#sthash.XzRSfHR3.dpuf

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.