Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எதிர்ப்பை சமாளிக்க வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அழைத்துவர ராஜபக்சே திட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அழைத்துவர அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் 26-ந் தேதி நடைபெறும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடமாகாணத்தின் முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனை தம்முடன் அழைத்துவர மகிந்த ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பாக விக்கினேஸ்வரனை தம்முடன் இந்தியா வருமாறு ராஜபக்சே அழைப்பும் விடுத்திருக்கிறார்.
 
இருப்பினும் விக்கினேஸ்வரன் இதை ஏற்றுக் கொண்டு இந்தியா வருவாரா? என்பது உறுதியாகவில்லை.

Read more at: http://tamil.oneindia.in/news/india/rajapaksa-invites-wigneswaran-join-modis-swearing-in-201768.html

"He has invited the Chief Minister of Lanka's Tamil provinces to join his delegation to India.CV Wigneswaran, the Chief Minister of Northern Provinces, is yet to confirm his participation, but Sri Lankan officials say they are "hopeful."Mr Modi's invitation to Mr Rajapaksa has upset regional parties in Tamil Nadu, including his BJP's ally MDMK."

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140410#entry1011626

பாவம் மோடைய சிறி லண்கன்ஸ்.

தமது அரசியல் சொதப்பலால் சந்திர சூரிய சக்கரைவத்தி இந்தியாவிற்கு கூட போக பயபடுறார்.

ஈழத்தமிழர் கையை பிடிச்சு கூட்டிக்கொண்டு போகோணும்.

தமிழக உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியருக்கு இடைஞ்சல்

 

போனால் தமிழகத்தை இழக்கணும்

போகாது விட்டால்

மகிந்த சொல்வார்

வா  இந்தியா சொல்வது போல்  செய்கின்றேன் என்று கூப்பிட்டனான்

அவருக்கு புலித்திமிர்

வீம்பு காட்டி வரமறுத்துவிட்டார் என்று.

நீங்களே பாருங்கள்

சமாதானத்தை விரும்புவது நானா?

தமிழர்களா? என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சேவுக்கு மூக்குடைப்பு! டெல்லி வர விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் நிராகரித்தார்!
 
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அழைத்துவர அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட முயற்சி படுதோல்வி அடைந்தது.
 
ராஜபக்சேவுடன் தாம் இந்தியா வர இயலாது என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். டெல்லியில் 26-ந் தேதி நடைபெறும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
 
இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடமாகாணத்தின் முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனை தம்முடன் அழைத்துவர மகிந்த ராஜபக்சே திட்டமிட்டிருந்தார்.
 
இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் ராஜபக்சேவின் அழைப்பை நிராகரித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கும் ஜனாதிபதி ராஜபக்சே அழைப்பு அனுப்பியுள்ளார் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி.
 
எங்களது வடமாகாண அமைச்சர்களுடன் இதுபற்றி ஆலோசித்தேன். நரேந்திர மோடியின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது வடமாகாணத்துடன் இலங்கை அரசை இணைந்து செயல்பட வைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. வடமாகாண மக்களின் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் ஆகியவையே தற்போது உள்ள சூழல்கள். இலங்கை மத்திய அரசுக்கும் வடக்கு மாகாணத்துக்கும் நல்ல உறவு இல்லை. வடமாகாண மக்கள் மத்தியில் ராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கின்றனர். மக்கள் இப்போதும் பதற்றத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கட்டுப்படுத்தபப்ட்டுள்ளது.
 
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்றால் உண்மையை நிலையை மறைத்து சம்பிரதாயத்துக்கு ஏற்பதாக அமையும். அதனால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க இயலாது. இவ்வாறு விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/rajapaksa-invites-wigneswaran-join-modis-swearing-in-201768.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் விக்னேஸ்வரன் ஐயா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவை அழைக்கக் கூடாது என்ற தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை BJP நிராகரித்தது:-

 

 

rejected_CI.jpg

 மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை அழைக்கக் கூடாது என்ற தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: "மோடி பிரதமராக பதவியேற்க உள்ள விழா, ஜனநாயகத்தின் மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக நடைபெறுகிறது. அந்த விழாவில் பங்கேற்பதற்காகதான் அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுவொரு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியாகும். அண்டை நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த வேண்டுமென்றதற்காக அந்நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த அடிப்படையில்தான் ராஜபக்சவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதை தமிழக கட்சிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்." இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதேபோல் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறுகையில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அண்டை நாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை கடைப்பிடித்து வந்தார். அதை தற்போது மோடி பின்பற்றுகிறார்"  தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "நாட்டின் நலன் கருதி அண்டை நாடுகளின் நல்லுறவை இந்தியா வளர்த்து வருகிறது. அதனால்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது"  எனக் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107305/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.