Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொன்னா கேளுங்கடாப்பா ..!

Featured Replies

காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன் காத்த இவன் திரும்பி வாளியை போட்டுட்டு என்னடா என்பான் மறுபடியும் கத்துவான் காலில விழுந்திட்டு என்று இப்படி அக்கப்போர் பட்டு குளிச்சு ..முகம் கழுவி வந்து டீ குடிச்சு ஓட தொடங்க இரண்டு பேர் குறையும் எங்கடா என்று கேட்ட ஒருவனுக்கு காச்சல் ..மற்றவன் வயித்தை கலக்குதாம் என்று போயிட்டான் என்பான் உடனம் வாத்தி சொல்லும் ஆக்களை உடனம் கூட்டி வா பம்மி பழகீட்டு என்று பேச்சு விழும் அப்புறம் மெடிசின் காரன் வந்து இல்லை உண்மைக்கும் காச்சல் என்று சொன்னதான் சரி என்று விடுபடும் ...

 

அதிலும் ஒரு நக்கல் குருப் இருக்கும் என்ன வெங்காயா காச்சலா என்று கேட்கும் ..இல்ல மச்சி நேற்று அவன் கிச்சின் பக்கம் போகவில்லை என்று பின்னாடி இருத்து மற்றது குரல் கொடுக்கும்... காச்சல் காரன் கடுப்பாகி இரடி உனக்கு இருக்கு ஒருநாளைக்கு என்பான் ...என் மச்சான் ஆமி அடிக்க என்னை விட்டுடு ஒடுவியே என்பான் அடுத்தவன் இப்படி காலை பொழுது பெரிய கலகமா தொடங்கம் பாசறையில் இப்படி கூடி இருந்து விட்டு வேலை நிமித்தம வேறு வேறு இடத்துக்கு போனா சிலவேளை எங்காவது கண்டால் உண்டு அல்லது காணாமல் போனதும் உண்டு நினைவுகள் மட்டும் மனங்களில் நிழல்லாடும் ..

 

இப்படி இருந்த சந்திரன் திருகோணமலை பிறப்பிடம் கெட்டிக்காரன் எதிலும் ஒரு அசாத்திய வேகம் ஒருவர் ஐந்து நிமிடம் செய்யும் வேலையை அவன் மூணு நிமிடத்தில் செய்வான் அது ஒரு பரபரப்பான ஆள் எதவது நொண்டிட்டிட்ட்டு  இருப்பான் சும்மா இருக்க மாட்டாம் மிக சிறந்த ஒரு வேவுக்கரன் பல கள அனுபவங்களை கொண்டவன் அவன் ஜெய சுக்குறு புளியங்குளத்தில் வைத்து தளபதி தீபன் மறித்து சண்டை பிடித்த வேளை இவனுடைய அணியே முன்னரங்க வேவு வேலைகளில் இடுபட்டு இருந்தது தண்ணியில படுத்து கிடந்தது வேவு பார்த்திட்டு விடிய நடந்து வருவான் விறைத்து போய் நடுங்கி... என்னடா அவனுகள் சேற்றில் இறங்க மாட்டனுகள் அதுதான் நல்ல கவர்... என்று கிழக்கு போராளிகளின் கதை மொழி அழகா இருக்கும் பெண்பிள்ளைகள் நெஞ்சளவு தண்ணியில் ரைபிளை தோளில் வைத்து சென்ரி பார்ப்பதை பார்த்துட்டு வந்து கவலை படுவான் இவனுகளை அடிச்சு பின்னுக்கு தள்ளவேணும் பாவம்டா பிள்ளைகள் ஈரத்தில் நிக்குராளுகள் என்று சொல்லும்போது தன்னை அறியாமல் அவன் முகம் மாறி இருக்கும் இந்த முறை உள்ளுக்கு போறன் வந்து காட்டுறன் யார் என்று ....

 

அதன் படி பின்னணி வேவு தகவல் எடுப்பதுக்கு சந்திரன் ...மணி ..சீலன் என மூவரும் அழைக்கபட்டு பாதை குறித்து கொடுத்து விட்டு ஜெரி அண்ணை சொன்னார் காடு பாதை மட்டும் பாவிக்க வேணும் எந்த காரணம் கொண்டும் ஒற்றையடி பாதை ...வண்டில் பாதை பாவிக்க கூடாது சொன்னா கேளுங்கோ ஓகே கவனம் அவன் கண்டா அலேட் ஆகிடுவான் முக்கியம் உருமறைப்பு விளையாட்டு வேணாம் மணிக்கூடு எலாம் எல்லாம் நிப்பாட்டு வேக்கி இத்தினை மணிக்கு மட்டும் ஒன்னுக்கு வரட்டும் மற்றும்படி நிப்பாட்டு சரி ..இரவு இறங்கிட்டு காலை லையினுக்கு வாங்கோ எங்க நிக்கிறியள் என்று  கொம்பாஸ் ...மேப் ...சாப்பாடு ..மருந்து ..எல்லாம் பார்த்து எடுத்து வையுங்கோ என்று சொல்லிட்டு போக இங்கால நடக்கும் தம்பியல் அண்ணன் வவுனியா போறன் என்ன வேணும் ஒரு லிஸ்ட் தாங்கோ என்று போன ஜெரி அண்ண திரும்பி பார்த்து சிரிச்சிட்டு போவார் அடங்க மாட்டன் இவன் என்று ..

 

அன்று பின்னேரம் செக்கள் பொழுதில் வெளிகிட்டு மூவரும் போக அதில் சீலனுக்கு சிங்களம் கொஞ்சம் தெரியும் அவன் படுவான்கரை பெடியன் பாதை பிடிச்சு இறக்கி விட்டுட்டு திரும்பி வந்து இருந்து கைகாட்டி போகும் அவங்க நினைவுகளை பேசியபடி அன்றைய இரவு பொழுது போகும் .....

 

மூவரும் காட்டில் நடந்து களைச்சு போக கொஞ்ச தூரம் வண்டில் பாதையால போவம் என்று யோசனை தோன்ற வேகமா நடக்கலாம் என்று எண்ணத்தில் நடக்க முன்னணி பாதுகாப்பு ஆமியிட்டா மாட்டிடாங்க படுத்து கிடந்தவன் சிங்களத்தில் யார் என்று கேட்க முன்னுக்கு போன சீலன் காமினி என்று ஒரு சிங்கள பெயரை சொல்லிட்டு நடக்க சந்தோகம் கொண்ட ஆமி பாதுகாப்பு விசையை கீழே தட்ட சத்தம் இவர்கள் காதுக்க வர சுடப்போறான் என்று எண்ணியபடி அவனை நோக்கி வேகமா சுட தொடங்கிய சீலன் மச்சான் கவர் எடு என்று கத்தியபடி சுட்டுக்கொண்டு முன்னாடி ஓட இடையில் வந்த சந்திரன் சீலனுக்கு அடிச்சுட்டு பின்னுக்குவா என்றபடி பின்னோக்கி வர நிலைமை மாறிட்டு கால் இடுக்குக்கு நடுவால் போன ஒரு ரவை சந்திரனின் விதையை தாக்கி போயிட்டு ஓடியவன் மணி என்னால எழாமல் இருக்கு இருக்க போறன் என்கிறான் ...

 

இல்லை சந்திரன் கொஞ்சதூரம் உள்ள போட்டு இருப்பம் சந்திரனுக்கு வெடி பிடித்தது மணிக்கு தெரியாது இல்லடா இரத்தம் வருது வெடி பிடிச்சிட்டு எங்க என்று தெரியவில்லை தலை சுத்துது என்கிறான் திரும்பி மணி பொறு என்று தனது ரைபிளை தோளில் கொளுவிட்டு சந்திரனின் ரைபிளை ..கோல்சர் எல்லாம் கலட்டி தான் கொழுவிக்கொண்டு அவனை தூக்கி தோளில் போட்டு நடக்கிறான் பொறு மச்சான் பெரிய தூரம் இருக்காது போயிடலாம் என்று இரத்தம் வரும் இடத்துக்கு பஞ்ச்சை வைத்து கட்டுவம் என ஒரு இடத்தில் இருந்து ஆடைகளை களைந்தது பஞ்சை வைத்து கட்டிவிட்டு இனி கடினம் என தெரிந்த சந்திரன் சொல்கிறான் விடிய சிலவேளை கிளியர் பண்ண ஆமி வருவான் நீ போ இந்தா கொம்பாஸ் இதில நூற்றி எண்பதை குறை நாங்க வந்த பாதை பிடிக்கும் நீ போடா என்கிறான் ..

 

 

மணி சொல்கிறான் நான் போய் ஆக்களை கூட்டி வரான் நீ அவசரபட்டு ஒரு முடிவும் எடுக்க வேணாம் குப்பிய கலட்டி தா இல்லடா நான் அப்படி ஒன்றும் செய்ய மாட்டம் முடிச்சா கூட்டிவா சிலவேளை கிளியபன்ன வாறவன் கண்டா குண்டை கலட்டி வைப்பன் அப்படி இல்லாட்டி இருப்பன் நீ முதல் போடா என்று மணியை அனுப்பி விட்டு தன வேதனையை தாங்கி ரைபிளை அணைத்தபடி சந்திரன் இருப்பதை பார்த்து கண் கலங்கியபடி முன்னணி நிலைக்கு வந்து சேர்த்தான் மணி ...நடந்தவற்றை பொறுப்புக்கு சொல்ல உடனம் தீபன் அண்ணையின் இடத்துக்கு பொறுப்பாளர் கூடி போய் பிரச்சினை சொல்ல தீபன் அண்ணை உடனம் சந்திரனா அவன் எங்களுக்கு மிக தேவையான ஆள் அவனை வெளியில எடுப்பது முக்கியம் என்று செயலில் இறக்குகிறார் எந்த லையினுக்கு கிட்டவா எவ்வளவு தூரம் இருக்கும் என்று எல்லா விபரமும் கேட்டுவிட்டு இரவு இறங்குங்கோ என பகுதி தளபதிகளுக்கு தகவலை அனுப்பி தனது பிரதான இடத்துக்கு அழைக்கிறார் அனைவரும் கூடி முடிவெடுத்து இரவு ஒரு மணிக்கு உள்ள போங்கோ ஒரு கொம்பனி போங்கோ போய் வெளியில நிலைஎடுங்கோ ஏழு பேர் மட்டும் உள்ளே போங்கோ தூக்கிட்டு வார சாக்கு கொண்டு அப்படி அவன் கண்டா அடிச்சு வெளியில வாங்க காணாட்டி பிரச்சினை இல்லை அப்பன் ...

 

இவ்வாறு ஒழுங்கு படுத்தி இரவு நகர்வு செய்ய படுகிறது பட்டு வேலி பக்கத்தில் அணிகளை நிலையெடுக்க வைத்து விட்டு உள்ளே போன ஏழு பேரும் சுருள் கம்பி வேலியை கடக்கும்வரை நெஞ்சு படபடப்பு காணக்கூடாது அவனை எடுத்து வரும் வரை  கண்டால் சிக்கல் ஆகிடும் என்று மிக மிக அமைதியா அவதானமா உள்ளே போன அணி வெற்றிகரமா அவன் இருப்பிடம் போக அவன் குறை மயக்கத்தில் முனகியபடி இருக்கிறான் அப்படியே தூக்கி சாக்கு கட்டிலில் போட்டு மீள தொடங்கிய அணி தகவல் தருது வேலி பிரிக்காமல் கொண்டுவர முடியாது கிட்டவா வந்து சொல்லுறம் அடிச்சு பிரியுங்கோ என்று உள்ளே போன சிறைவாணன் சொல்ல சரி முயற்ச்சி பண்ணுங்கோ பார்ப்பம் என்று தீபக் மாஸ்டர் பதில் அளிக்க வெற்றிகரமா சந்திரனை கொண்டுவந்து சேர்க்கிறார்கள் அவனின் எல்லையில் இருந்து எதோ எங்களுக்குள் ஒரு பெரிய சாதித்த உணர்வு வென்று விட்டம் என்று ...

 

பின்னர் மூன்றுநாள் சீலன் வருகை எதிர்பார்த்து இருந்து விட்டு வரவில்லை என்பதால் வீரச்சாவா அறிவித்து விட்டு சந்திரனை பார்க்க மெடிசினுக்கு போனா குளுக்கோஸ் ஏறியபடி சிரிச்சுக்கொண்டு மச்சான் கலட்டி போட்டாங்க என்று அவனுக்கு உரிய அதே நக்கல் தொனியில் சொல்லி சிரிக்கிறான் காயம் மாறியாவுடன் அவனை அதிகாரிகள் படிக்க அனுப்பி விட்டினம் ஒரு ஆறு மாதம் மேல படிப்பை முடிச்சுட்டு வந்தவன் அடுத்த அணிக்கு மாஸ்டரா இருந்து பயிற்ச்சி கொடுக்க தொடங்கினான் அவனை கண்டால் என்ன மச்சான் சொன்னா கேளுங்கடப்பா கேட்டு இருந்ததா போயிருக்காது எல்லே என்று பெடியள் நக்கல் ..பகிடி என்று போகும் சிரிச்சுக்கொண்டு நலம் விசாரிப்பான் பெடியளை கேட்டதா அடிக்கடி சொல்லி விட்டுவான் அப்படியான ஒரு அனுபவ போராளி தனது மண்ணில் தம்பலகாமம் பகுதியில் வீரச்சாவு அடைகிறான் எதிரியின் சுற்றி வளைப்பை உடைக்க முயன்று ஒரு சாதாரண போராளி மேஜர் சந்திரனா உயர்தத்து அவனுடைய கடின உழைப்பே ..

 

அவன் வரலாறு அவனின் குள்ளமான உயரம் மாநிற தோற்றம் எல்லாம் அவனை போல எவரை கண்டாலும் அவன் நினைவை கொண்டுவந்து போகும் ஒரு நிழலாக எம்மை சுற்றி நிக்கிறான் அவன் கனவுகள் நிறைவேற வேணும் என்பதே ஒவ்வெரு போராளிகளின் இலட்சியமும் கூட ...தொடர்த்து உழைப்போம் உங்கள கனவுகள் நினைவாகும் வரை தோழர்களே இது சத்தியம் :(

 

இப்படியான சம்பவங்களை தொடர்ந்து எழுதி வாருங்கள் அஞ்சரன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி அஞ்சரன். இவையெல்லாம் எழுத்தில் வராவிட்டால் வெறும் தூற்றுதல்கள்தான் வரலாறு ஆகிவிடும்.

  • தொடங்கியவர்

நன்றி நிழலி அண்ணே ..புத்தன் ..கிருபன் அண்ணே வரவுக்கு கருத்துக்கும் ...விருப்புக்கும் .

 

இவையை எல்லாம் வரலாற்று காவியம் அண்ணே ஒரு கொம்பனி அனுப்பி வெளியில கொண்டுவந்த ஆள் என்று அப்ப பெருமையா சொல்லுவாங்க சந்திரன் மாஸ்டரை பார்த்து அப்படியான நாயகர்களை ஒரு கதையா எழுதுவது கொஞ்சம் வேதனையானதுதான்  :(  :(

 

முடிந்த அளவு எமக்கு தெரிந்த வற்றை எங்காவது ஒரு மூலையில் பதிந்து வைப்போம் அந்த களங்களில் நின்றவர்கள் யாராவது கண்களில் பட்டால் அவனின் மிகுதி வரலாறுகள் சொல்லப்படலாம் எழுதப்படலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்ற போரின் வடுக்களையும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் உண்மைகளையும் அறியாதவர்களுக்கு உங்கள் போன்றவர்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அஞ்சரன்
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளைத் தாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.