Jump to content

நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவுப் பழக்கத்தில் தமிழர்களின் ரசனையே தனி.
பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான
உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்.

 

 

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர்
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

--

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
-
2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
-
3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
-

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
-
5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
-
6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
-

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
-
8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
-

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
-
10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
-
11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது
-

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.—
-

-------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது - இதுதான் நம்ம ரகம் 

 

"நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்" : வாழையிலையில் சாப்பிட்டுவிட்டு, கடைசியாக ஒரு நக்கு நக்கி சாப்பிடுவதிலிருக்கும் சுகம் கோப்பையில் இல்லை :D

 

குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.: சிலர் குடித்தால், மாடு களனி தண்ணி உறிச்சி குடிக்கிற மாதிரி சத்தம்தான் கேட்க்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் பிஞ்சுமிளகாய் ஒரு நாலைப் போட்டுக், குஞ்சுத் திரளிமீன் சொதியோட சாப்பிட்டு முடிச்ச பிறகு, மிச்சத்தை ஒரு, உறிஞ்சலில இழுத்தெடுக்கிற போது, வாற சுவை இருக்கே, அதை அனுபவிச்சவனுக்குத் தான் தெரியும்! :D

 

நன்றிகள் நிலாக்கா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.