Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !

 

அதென்ன தமிழ் பெண்களுக்கு.........? பரதநாட்டியம் தமிழ் பெண்களின் கலாச்சார நடனம் அல்லவே?

 

தமிழர்களின் நாட்டிய வடிவம் கூத்து ஆகும் என்பது என் அபிப்பிராயம். பரதநாட்டியம் இந்தியாவின் வடக்கில் இருந்து வந்தது. தன் சொந்த கலை வடிவங்களை இழந்து இரவல் கலாச்சாரத்தினை தன் சொந்தமாக்கிக் கொள்ளும் தமிழரின்  குணத்தால் இன்று எம் இன நாட்டியமாக கருதும் அளவிற்கு பரத நாட்டியம் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? சொல்லுங்கள் எந்த வடநாட்டவரின் கலையைப் பின்பற்றி பரதநாட்டியம் தமிழகத்தில் வந்தது என்று... அப்படி எம்மிடம் வந்த கலையின் எந்த அடிப்படை அடையாளமும் அவர்களிடம் இல்லையே.. உங்களுக்கு எல்லாவற்றையும் மற்றவர்களுக்குத் தாரை வார்த்தே பழகிப் போய்விட்டது? இல்லை?? ஆக தமிழன் ஒரு கலையைத் தான் பின்பற்றினான். வேறு ஒன்றுமே அவனிடம் இல்லை என்கின்றீர்களா? வடநாட்டவரே அதைத் தென்னகத்துக் கலை எனும்போது, இவர்கள் பேச்சு... என்னவென்று சொல்வது

  • கருத்துக்கள உறவுகள்

சிவனின் நடராஜவடிவத்துக்கும்(கூத்தன்) பரதநாட்டியத்துக்கு எத்தனை வகை உறவு எனத் தெரியவில்லை. ஆனால் நடராஜவடிவம் என்பது கலை சார்ந்து தென்மாவட்டத்தை முக்கியமாகத் தமிழகம் சார்ந்தே உள்ளது. வடநாட்டில் அந்த வடிவம் என்பது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

The original names of Bharata Natyam were Sadir, Chinnamelan and most commonly Dasi Attam.[7] A possible origin of the name is from Bharata Muni, who wrote the Natya Shastra.

 

 

 தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரதநாட்டியம் ஆகும். கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது.

 

மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

 தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரதநாட்டியம் ஆகும். கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது.

 

மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

 

ஆதித்ய இளம்பிறையன்,

 

..ஆனால் சதிர் ஆட்டத்தினை  நெறிப்படுத்தி அதனை பரத நாட்டியமாக ஆக்கியது ஆரியர் என்றும் தகவல் இருக்கின்றதல்லவா? 

அத்துடன் நடராஜர் வழிபாடு தமிழர்களின் கலாச்சாரத்தில் தொன்று தொட்டே இருக்கும் வழிபாடா அல்லது சிவனை முழுமுதற் கடவுளாக கொள்ளத் தொடங்கிய பின் வந்த வழிபாடா?

 

விக்கி பீடியா இப்படிச் சொல்கின்றது
 

 

பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை "கூத்து" என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.

 

கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.இவர்களது வாழ்க்கைப்பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன

 

 

 

இன்றும் வன்னி, மன்னார் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சில கிராமங்களிலும் பரத நாட்டியத்தில் இருந்து கடும் வேறுபட்டு கூத்து நடனம் நிகழ்த்தப்படுகின்றது. இந்த கூத்துக்கும் பரத நாட்டியத்திற்கும் சாதாரண பார்வையாளர்களால் கூட புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் வேறுபாடுகள் உள்ளன. அத்துடன் இன்றும் கூட 'கூத்து' ஆடுகின்றவர்களை மதிக்காமல் தாழ்ந்த நடனம் ஆடுகின்றவர்கள் என்று ஒதுக்கப்படுவதும் நிகழ்கின்றது

 

 

 

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழில் நாட்டியத்திகேன்று  "நாட்டிய நன்னூல்"ஒன்று இருந்ததாகவும் அது பின்னாளில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. இன்று நாம் காணும் பாரத நாட்டியம் இவைகளின் மேம்பட்ட வடிவமே!!

பாரத நாட்டியம் என்ற பெயரே 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம்பிள்ளை, கிருஸ்ணையர், பாலசரஸ்வதி, ருக்குமணிதேவி அருண்டேல் போன்ற பலர் தமிழரின் சதிராட்டத்துக்குப் புது வடிவமும், புத்துயிரும் கொடுத்ததாகவும்  சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்ததாகவும்  தகவல் உண்டு.

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்களில் ஒன்றுதான் நடராஜர் என்றும்  மேலும் நடராஜர் வழிபாடு 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்புதான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
 

குதித்து குதித்து ஆடுவதால்தான் கூத்து எனப்பட்டது. இந்த கூத்துதான் எல்லா ஆடல் கலைகளின் அடிவாரமும் கூட..

நடராசர் என்ற சொல் முதன் முதலில் சேக்கிழார் புராணத்தில் தான் கையாளப்படுகிறது. அதாவது 13 ஆம் நூற்றாண்டில்தான் நடராசர் என்ற சொல்லே அறிமுகமாகிறது .. உருவாக்கப்பட்டது என்பதே பொருத்தமாகும். ஆடல் வல்லன் , கூத்த பெருமான் போன்ற பெயர்களுக்கு இணையாக நடராசன் என்ற பெயர் வடமொழியை தழுவி உருவாக்கப்பட்டது.

முதலாம் ராசராசன் காலத்தில்தான் நடராசனுக்கு பிரத்யோகமாக முதன் முதலில் கோவில் கட்டப்பட்டது. நடராசர் வழிபாடு சிவ வழிபாட்டின் நீட்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜரைப் பற்றிக் கதைப்பதால் இந்த விடயத்தையும் மீள ஞாபம் செய்ய வேண்டும். கடவுளின் துகள்கள் பற்றிய ஆராட்சி ஜெனிவாவில் நடந்தன என்பது தெரிந்த விடயம். அணுவைப் பகுப்பது பற்றிய செயற்திட்டம் அது... அது யாழ்களத்தில் நாத்திகம் பேசுபவர்கள் ... இந்த கடவுளை கண்டாச்சு... மனிதர்களும் கடவுள்கள்... ஆத்திகத்துக்கு விழப் போகுது அடி என்ற கணக்கில் கருத்து எழுதிக் கொண்டிருந்தனர்... என்னவேடிக்கை எனில் கடைசியில் நடராஜர் சிலையை அவர்கள் அந்த ஆராட்சிக்கூடம் முன்பு நிறுவினார்கள்... இவர்கள் அடங்கிப் போய்விட்டார்கள் என நினைக்கின்றேன்.. இது கடவளின் செயல், அது இது என்று சொல்லவரவில்லை. முன்னோர் செய்ததை விமர்சிக்கும்போது, அதை முழுமையாக மறுப்பு அங்கே வரவேண்டும்.... இன்று விஞ்ஞானம் கடவுள் இல்லை என்று மறுதலிப்பதில்லை என்னவென்றால், இல்லை என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இல்லை...

இங்கு பரதநாட்டியம் பற்றிய விமர்சனமும் அப்படித் தான். பரதநாட்டியம் எம் அடையாளம் இல்லை என்று சொல்ல 100 வீதம் ஆதாரம் இருக்க வேண்டும். தமிழனுடைய சொத்து இல்லை என்று வாதிட்டால், நாளை எவனோ ஒருவன் தன்னுடையது என்பான். அவனுடைய வரலாற்றை அதற்குப் பாவிப்பான்.. நேற்று முளைத்தன் தன்னுடைய அடையாளம் என ஒழுங்காகப் பட்டியலிடும்போது நம்மிடம் வெறுமையே மிஞ்சி நிற்கும்...எச் சந்தர்ப்பத்திலும் எம்முடைய அடையாளங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்... அதில் உள்ள தவறுகளை மட்டுமே திருத்தம் செய்யுங்கள்... இல்லைஎன்றால் தமிழனின் வரலாறு உங்களது பாட்டன் காலத்தில் கூட ஆரம்பிக்காது....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23160

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.