Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பை ஐநாவுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்

Featured Replies

கே.பி- கருணாவை விசாரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்பு கூறலை தொடங்கலாம் – றணில் தலைமையிலான ஐதேகவின் பலே ஐடியா!

Mahinda%20Ranil_CI.jpg

இலங்கை அரசாங்கம்- கே.பி என்றளைக்கப்படும் குமரன் பத்மநாதன்  அல்லது செல்வராசா பத்மநாதன் மற்றும் கருணா எனப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக் கூறலை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை கூறியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்டவர்களர்கள் எனவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பை ஐநாவுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ள ஐக்கிய தேசிக் கட்சி, அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கப்படாவிட்டால் அது அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக அமைந்துவிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. இவற்றின் மூலம் சர்வதேச விசாரணையில் இலங்கை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் வகை செய்ய முடியும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பில் வெளியான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/

 

  • கருத்துக்கள உறவுகள்

வேள்விக்குரிய ஆடுகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற சூட்சமத்தையும் தமிழனே கற்றுக் கொடுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வேள்விக்குரிய ஆடுகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற சூட்சமத்தையும் தமிழனே கற்றுக் கொடுத்தான்.

 

 

கேபி  வெளியில் வந்தால்

சிங்களவனது குறி  தவறலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

கேபி  வெளியில் வந்தால்

சிங்களவனது குறி  தவறலாம்......

 

புரிகிறது விசுகு அவர்களே! வெளியேவரச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், நிலத்திலும், புலத்திலும் வாழும் நண்டுகள் விடுமா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கவுணாவத்தை வேள்விக்கு ஆடுகள் ரெடி.....

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தெளிவாக உள்ளார்கள், நாங்கள்தான் நாய்கள் போன்று நாப்பது வருசமா அடிவேண்டியும் திருந்தவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.