Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தயார்: பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தயார்: பொன்சேகா
வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 13:06
யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தாம் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
 
இலங்கை செய்தி இணையதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறியுள்ள அவர், 'இலங்கை மீதான விசாரணை தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இலங்கைக்கு விஜயம் செய்தவுடன் முதலில் அக்குழு என்னிடமே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்' எனவும் கோரியுள்ளார். 
 
'அன்று யுத்த காலத்தில் எனது தலைமையிலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இரர்ணுவத்தினர் எந்தவொரு போர்க்குற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இது தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் சென்று பதிலளிக்க நான் தயார். 
 
இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால், எந்தவொரு குழு இலங்கைக்கு வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அந்த குழுவுக்கு பதிலளிக்க நான் தயார். யுத்தம் தொடர்பான எந்தவொரு பொறுப்பையும் ஏற்க நான் தயார்' என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். 
 
'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டார்கள் என்றே அர்த்தப்படுத்தப்பட்டுவிடும். 
 
அது யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரின் பெயருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கமாகும். அதனால், விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயங்கத் தேவையில்லை' என்றும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/114116-2014-06-13-07-37-58.html

உங்களை பதிலளிக்கவிட்டால் தானே தளபதி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கிடையே ஒற்றுமை இல்லையப்பா? :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை பதிலளிக்கவிட்டால் தானே தளபதி.

 

இவரது இந்த  வசனத்துக்கு காரணம் தப்பித்தல்

மகிந்த குடும்பத்திடமிருந்து பாதுகாப்புத்தேடுதல்

தனக்கு எதுவும் தெரியாது என கையை  விரித்தல்

ஆனால் விசாரணைக்குழுவில் உள்ளவர்களின் கேள்விகளும்

அவர்களிடமுள்ள  ஆதாரங்களும்

அண்ணை  எதிர்பாராதபடி  இருக்கும்

சிலவேளை  அண்ணைக்கே புதிதாக இருக்கும்

அங்கதான் அண்ணை  மாட்டுவார்

தனக்கெடாச்சிங்களம் தலைக்கு வந்தது என்று....

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த இறுதி நாட்களில் இவரும், மகிந்தரும் நாட்டில் இல்லை. திட்டமிட்டுத்தான் செய்துள்ளார்கள். சரணடைந்தவர்களை சுட்டதில் தமக்க ஒரு பங்கும் இல்லை என்று ஏமாற்றிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.மகிந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார் எ,்று தெரிந்து கொண்டே வாய்ச்சவடால் விடுகிறார்.வடி வேலுவின் நானும் ரவுடிதான் பகிடி போல இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.