Jump to content

விதையால் வந்த வினை... உலகமே உற்றுநோக்கும் ஒரு வினோத வழக்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறச்சலூர் செல்வம்

கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்!

இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோஜோனப் கிராமத்தையும் இரண்டாக்கிவிட்டது இந்தச் சண்டை. இதற்குக் காரணம்... பணமோ, புகழோ, பொன்னோ... ஏன், மண்ணோகூட இல்லை. பாக்ஸ்டர் பயிரிட்ட 'மரபணு மாற்று கனோலா’ என்கிற பயிர்தான். இது, எள் போன்றதொரு எண்ணெய்வித்துப் பயிர்.

pv28a.jpg

நீண்டகாலமாகவே இருவரும் ரசாயன விவசாயம்தான் செய்து வந்தனர். இடையில், இயற்கை விவசாயத்துக்கு மாறினார் மார்ஷ். 2010-ம் ஆண்டு, 'வளம் குன்றாத வேளாண்மை'க்கான ஆஸ்திரேலிய அமைப்பிடம், இயற்கை விவசாயச் சான்றிதழையும் பெற்றுவிட்டார். கோதுமை, கனோலா மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றையெல்லாம், இயற்கை விவசாய வழியில் விளைவித்து ஏற்றுமதி செய்தார். இந்த நிலையில்தான், சனியாக வந்தது, மேற்கு ஆஸ்திரேலிய அரசின் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கும் முடிவு.

அரசின் அறிவுறுத்தல்கள்படி, மான்சான்டோவின் மரபணு மாற்றப்பட்ட 'ரவுண்டப் ரெடி கனோலா'வைப் பயிரிடப் போவதாக அக்கம்பக்கம் உள்ள விவசாயிகளுக்குத் தெரிவித்தார் பாக்ஸ்டர். இதை, நண்பர் ஸ்டீவ் மார்ஷுக்கும் தெரிவித்தார். இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர், அக்கம்பக்கம் உள்ள விவசாயப் பயிர்களில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியபடி, பக்கத்து வயலில் இருந்து 15 மீட்டர் இடைவெளி கொடுத்து, கனோலாவைப் பயிரிடுகிறார் பாக்ஸ்டர் (மான்சான்டோ அறிவுறுத்தியிருப்பது 5 மீட்டர்தான்).

கனோலாவை அறுவடை செய்த பாக்ஸ்டர், நிலத்தின் அருகிலேயே அதை காய வைத்தார். நண்பர்களின் போதாத காலம்... பலத்த சூறாவளி வீச, அந்த மரபணு மாற்று கனோலா, வேலி தாண்டி ஸ்டீவ் மார்ஷ் நிலத்துக்குள் பரவிவிட்டது. தன்னுடைய 400 ஹெக்டேர் நிலத்தில், கிட்டத்தட்ட 350 ஹெக்டேர் பரப்பில் இந்த கனோலா விளைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் மார்ஷ். மேற்கு ஆஸ்திரேலியாவின் வளம் குன்றாத வேளாண்மைக்கான அமைப்பும் இதை உறுதி செய்து... அந்த 350 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை, ஏற்கெனவே தான் வழங்கிய இயற்கை விவசாயச் சான்றிலிருந்து நீக்குகிறது (அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், இயற்கை விவசாய விளைபொருட்களில் 0.9 முதல் 5% வரை கலப்படம் இருக்கலாம் என்று விதிகளை வைத்துள்ளன. ஆனால், மிகக் கடுமையான விதிகளை வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா). இதையடுத்து, 'எனக்கு 47.6 லட்ச ரூபாய் நஷ்டம்' என்று பாக்ஸ்டர் மீது குற்றம்சாட்டி, 2011-ம் ஆண்டு நீதிமன்ற படியேறிவிட்டார் மார்ஷ்.

pv28c.jpg

மரபணு மாற்றுப் பயிர்கள், எந்த ரூபத்தில் அடுத்தவரின் தோட்டத்துக்குள் பரவினாலும், 'விவசாயிகள் திருட்டுத்தனமாக எங்களுடைய விதைகளைப் பயன்படுத்துகிறார்கள்’ என்று உலக அளவில் ஒவ்வொரு மூன்று வாரத்துக்கும் ஒரு விவசாயி மீது வழக்கு போட்டு வருகிறது மான்சான்டோ. 97-ம் ஆண்டு மரபணு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்தியது தொடங்கி, இந்த 16 ஆண்டுகளில், இப்படி பல லட்சம் டாலர்களை நஷ்டஈடாகவும் பெற்றிருக்கும் மான்சான்டோ, இந்தத் தடவை மார்ஷ் மீது வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. 'இந்தச் சூழல் வருந்தத்தக்கது’ என்று அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு, வாயை மூடிக் கொண்டுவிட்டது. அதேசமயம், பாக்ஸ்டருக்காக மான்சான்டோதான் வழக்கையே நடத்திக் கொண்டிருக்கிறதாம். ஒரு தொண்டு நிறுவனம், மார்ஷின் வழக்கை நடத்தி வருகிறது. வழக்குச் செலவுக்காக இசைக் கச்சேரிகள் நடத்தி, பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறது, அந்தத் தொண்டு நிறுவனம். வழக்கு, இன்று இருவரின் கைகளை விட்டு மாறியிருப்பினும்... 'என் நண்பனைக் கஷ்டப்படுத்துவது வருத்தமளிக்கிறது’ என்றே இருவரும் பரஸ்பரம் கூறி வருகின்றனர்.

இரு தரப்பிலிருந்தும் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 வல்லுநர்கள், உலகின் மிகமிக அரிதான இந்த வழக்கில் சாட்சி அளிக்க உள்ளனர். 'மார்ஷ் மீது குறையோ, குற்றமோ சொல்ல முடியாது' என்று சொல்லியிருப்பதுடன்... 'இந்த வழக்கு பொதுமக்கள் அதிக அக்கறை காட்டும் வழக்காக உள்ளதால், வழக்கு சார்ந்த எல்லா விவரங்களையும், இணையத்தில் வெளியிடுங்கள்' என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி கென்னத் மார்ட்டின். மார்ஷ் மீது எப்படி எந்தக் குற்றமும் காணமுடியாதோ... அது போலவே பாக்ஸ்டர் மீதும் எந்தக் குற்றத்தையும் காண இயலாது. அவர், அரசாங்கம் அறிவுறுத்திய எல்லா விதிகளையும் கடைப்பிடித்திருக்கிறார்.

pv28d.jpg

வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தன்னுடைய அறுவடை முறையை பாக்ஸ்டர் மாற்றிக் கொண்டுவிட்டதால், மறுபடியும் மரபணு மாற்றப்பட்ட கனோலா பயிரிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. மார்ஷுக்கும் இயற்கை விவசாயச் சான்று திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களின் விவசாயத்தைத் தொடரலாம் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே! அதேசமயம், 'சிக்கல்... இருவேறு வகையிலான விவசாய முறையில்தான் இருக்கிறது. எனவே, இரண்டில் ஒன்று மட்டும்தான் இருக்க முடியும்' என்கிற ரீதியிலான சண்டையாக இது மாறியுள்ளது.

''என்னுடைய 1,175 ஹெக்டேரின் பசுமை சூழ்ந்த  நிலப்பரப்பில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை, இப்படி சிதைந்து போகும் என்று நான் நினைக்கவில்லை. மான்சான்டோ போன்ற நிறுவனங்களின் கைக்கூலி போலவும்... அக்கம்பக்கத்து விவசாயிகளின் நிலத்தைத் தெரிந்தே கலப்படம் செய்தேன் என்பது போலவும் மக்களால் நான் சித்தரிக்கப்படுகிறேன். 'நான் அத்தகையவன் அல்ல’ என்பது பலருக்கும் தெரிந்தாலும், இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறேன். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்ததை நினைத்துப் பார்க்கையில் கசப்பும் வருத்தமுமே மிஞ்சி நிற்கிறது. நீண்ட கால நட்பில் விரிசல், தேவையில்லாத கெட்ட பெயர், மோசமான விளம்பரம் எனப்பலவும் கசப்பாகவே உள்ளன'' என்று மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்ஸ்டர்.

மரபணு மாற்றுப் பயிர்கள்... மண்ணை மட்டுமல்ல... நட்பையும் கெடுக்கும் போலும்!

- பசுமை விகடனிலிருந்து...

Link to comment
Share on other sites

நேற்று TVO இல் ஒரு விஞ்ஞான விவரண நிகழ்ச்சி போனது. அதில் மரபணு மாற்ற விதைகளினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாக ஒரு விவசாயத்துறை முனைவர் சொன்னார். அவர் சொன்ன விவரம் என்னவென்றால், களைநாசினி, பூச்சி கொல்லி போன்றவற்றின் பாவனையை இவ்வகை விதைகள் குறைப்பதால் நன்மையே என்றார். :blink:

அவர் ஒரு விதை ஆராய்ச்சியாளர் என்பதால் அப்படித்தான் சொல்வார் என நம்ப இடமுண்டு. ஆனால் விவரண வழங்குனரும் அதற்கு ஆதரவு என்பதுபோல் பட்டது. நான் குறிப்பிடுவது Brian Cox வழங்கும் Wonders of the Earth என்கிற வாராந்திர விவரண நிகழ்ச்சி.

Link to comment
Share on other sites

விவசாயத்தைப் பெருக்குவதற்காக இயற்கைக்கு மாறாக உருவாக்கப்படும் மரபணு மாற்றம்பெற்ற பயிர்களால் இயற்கைச் சுற்றாடலுக்கும் மனிதருக்கும் எவ்வாறான பாதகங்கள் உண்டாகின்றன என்பதை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகளும் மந்த நிலையிலேயே உள்ளன. இப் பயிர்ச்செய்கை பரவலாக்கப்பட்டால்  வரும்காலத்தில் இயற்கையான அரிய பயிர் இனங்கள் பல முற்றாக அழிந்து போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
GM FARMER’S WIN IS A LOSS FOR ALL ORGANIC AND NON GM FARMERS

The future of organic and non GM food in Australia is uncertain after a WA farmer today lost his legal battle with a neighbouring farmer.

Steve Marsh lost organic certification on his Kojonup farm – and most of his livelihood – when his farm was contaminated by GM canola. He sued his neighbour in the WA Supreme Court for his losses, and to protect his farm into the future.

The court in its judgment stated the decision by NASAA (National Association of Sustainable Agriculture Australia) to decertify Steve was erroneous. Given the extent of the contamination of Steve’s farm we fail to see how NASAA could have taken any other decision. Certainly 100% of organic consumers would support the NASAA decision.

Because the court did not recognise the NASAA decertification the court did not recognise the economic loss Steve suffered, and dismissed the case that Steve had brought for negligence and nuisance.

Scott Kinnear, director of the Safe Food Foundation, says he is very disappointed and gravely concerned for Steve Marsh and his family and their farm and for the future of organic and non GM food in Australia remaining GM free.

“This is a huge setback for organic and Non GM farmers and their choice to remain GM Free.”

“This has been an important test case, of interest to many parties, locally and globally.

“If Steve on legal advice chooses to take this case further, the Safe Food Foundation will continue to work to legally protect the rights of Australian consumers to buy organic produce free of GM.”

“We also call on our legislators to work on finding a solution to this vexed issue. State and Federal governments have continuously stated that the solution to any GM contamination events is common law. This has clearly failed today and demonstrates that the law has not kept up with new technologies such as GM.”

“We thank Steve Marsh who has risked his farm to make a stand for all of us, a move that demonstrated his courage, tenacity and integrity.”

Mr Kinnear also thanked Slater & Gordon and the many people and businesses in more than 30 countries who contributed amounts large and small to this landmark case, but warned them that the battle may not be over.

While law firm Slater & Gordon donated its legal services, other costs were provided through a unique crowd-sourced funding campaign organised by the Safe Food Foundation.

 

http://safefoodfoundation.org/2014/05/28/press-release-gm-farmers-win-is-a-loss-for-all-organic-farmers/

 

VIDEOS

 

http://safefoodfoundation.org/what-we-do/help-this-farmer/

 

Organic farmer to appeal Supreme Court decision on GM canola contamination

Updated Thu 19 Jun 2014, 1:18pm AEST

A Western Australian organic farmer will appeal a Supreme Court decision in a landmark GM contamination case.

Kojonup farmer Steve Marsh launched legal action against his neighbour Michael Baxter after claiming GM canola blew from his crop onto Mr Marsh's land in 2010.

Mr Marsh claims the contamination caused him to lose his organic certification on more than half his property for almost three years.

He sought $85,000 in damages, but the claim was thrown out last month after a three-week trial, with Supreme Court Justice Kenneth Martin ruling in Mr Baxter's favour.

Slater and Gordon lawyer Mark Walters, who is representing Mr Marsh in the action, said a notice of appeal had been filed in the Court of Appeal.

Mr Marsh said after a lot of consideration, he and his wife Sue had decided to exercise their right to appeal.

Mr Baxter told the ABC he was aware of the appeal.

He said he was surprised because he thought the judge was very clear in his decision.

Case could have wide-reaching implications for farming

The case was closely watched by farmers and anti-GM activists as it was thought to have have wide-reaching implications on the production of genetically modified crops in WA.

Mr Marsh's campaign was financially backed by the Safe Food Foundation.

The foundation's director Scott Kinnear said at the start of proceedings it had invested at least $750,000 in the lawsuit.

Mr Kinnear said the foundation would support Mr Marsh's bid again.

He said people from 30 countries contributed to the last trial's fighting fund.

The Pastoralists and Graziers Association also set up a fund to provide financial backing to Mr Baxter in the first trial.

The Association's John Snooke said it was always expected that Mr Marsh would use his right to appeal.

"This [steve Marsh's organic decertification] did not need to occur," he said.

"This should have been solved over the fence, as neighbours do in the farming community, with a friendly chat."

GM canola production on the rise in WA

A moratorium was placed on the commercial cultivation of GM crops in WA in 2004. The order was enacted by the then Labor government under the Genetically Modified Crops Free Areas Act 2003.

The moratorium was lifted prior to the 2010 season, and the number of farmers growing GM canola has risen.

There were 317 farmers cultivating GM canola in 2010, jumping to 406 last year.

In 2013 almost 17 per cent of all canola sown in WA was a genetically modified variety, according to figures provided by the Department of Agriculture and Food.

The State Government recently made a submission to the Organic Industry Standards Certification Council seeking to lift the tolerance level of GM material in certified organic foods.

The council is due to meet again to consider the proposal in August.

 

http://www.abc.net.au/news/2014-06-18/org-farmer-to-appeal-supreme-court-decision-on-gm-contamination/5533742

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.   நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.   நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
    • இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.