Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் இப்ப இப்படித்தான் சொல்லுவார் பிறகு மகிந்த வந்து கி....... குடுத்த உடனே முஸ்லிம்களை இலங்கை ராணுவம் கொலை செய்ய இல்ல எங்களுக்கு புலிகள் மேல் தான் சந்தேகம் , நான் முதலில் இந்த கொலைக்கு காரணம் ராணுவம் எண்டு சொல்லவே இல்ல , என்ட பேட்டிய ஊடகங்கள் திரிபு படுத்தி வெளியிட்டிட்டினம் எண்டு தொப்பிய பிரட்டிப் போடுவார்.

  • Replies 53
  • Views 9k
  • Created
  • Last Reply

சிறு திருத்தம்.

சம்பவம் நடந்த இடத்தின் பெயர் . . .

பாணமை.

நொட் . .

பனாமா.

நன்றி.

பக்கத்தில இருக்கிற கால்வாயின்ரை தாக்கமா இருக்கும்

அம்பாறை படுகொலைக்கு சிறப்பு அதிரடிப்படையே காரணம்: பி.பி.சி

அம்பாறையில் 11 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று பெரும்பான்மையோர் குற்றம் சாட்டுவதாக அம்பாறையிலிருந்து பி.பி.சியின் கொழும்புச் செய்தியாளர் டுமீத்த லுத்ர தெரிவித்துள்ளார்.

இது குறித்த பி.பி.சியின் செய்தி:

முஸ்லிம் சமூகத்தினருக்கும் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் இடையே முறுகல் நிலை இருந்ததாக அம்பாறையிலிருந்து பி.பி.சியின் டுமீத்த லுத்ர தெரிவிக்கிறார்.

இப்படுகொலைக்கு சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று நகரின் பெரும்பான்மையோர் கூறுகின்றனர். தற்போது உள்ளுர் சிறிலங்கா காவல்துறை குழு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. அதிரடிப்படை இக்குற்றச்சாட்டை மறுக்கிறது.

அம்பாறையில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் முகாமிட்டுள்ளார். அவர் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதால் இந்தப் படுகொலையானது பாரதூரமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28849

அம்பாறையில் உயிர்பிழைத்த நபரையும் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவம்

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அதிரடிப்படையின் கொடூரக் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த எம். மீரா மொகைதீன் (வயது 55), இராணுவத்தினரின் அத்துமீறல் நடவடிக்கையால் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மீரா மொகைதீனை சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிறிலங்கா இராணுவத்தினர், "கொழும்பு உத்தரவின் பேரில்" தடுப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால் மீரா மொகைதீனைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரையும் சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=28846

பொத்துவில் முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பேரியல் கோரிக்கை..

பொத்துவில் பிரதேசத்தில் 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணித்து பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு தேசிய ஐக்கிய முன்னணித் தலைவியும், வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சருமான பேரியல் அஷ்ரப், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிறு இரவு இந்த 10 அப்பாவிப் பொது மக்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் பேரியல் அஷ்ரப் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை விசேட அதிரடிப்படைத் தளபதிக்கும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் ஹர்த்தாலை அமைதியாக முடிவுக்குக் கொண்டு வருமாறும் பொதுமக்களை ஆத்திரமடையாமல் பொறுமை காக்குமாறும் அவர் கேட்டுள்ளார்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

பொத்துவில் முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பேரியல் கோரிக்கை..

பொத்துவில் பிரதேசத்தில் 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணித்து பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு தேசிய ஐக்கிய முன்னணித் தலைவியும், வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சருமான பேரியல் அஷ்ரப், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிறு இரவு இந்த 10 அப்பாவிப் பொது மக்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் பேரியல் அஷ்ரப் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை விசேட அதிரடிப்படைத் தளபதிக்கும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் ஹர்த்தாலை அமைதியாக முடிவுக்குக் கொண்டு வருமாறும் பொதுமக்களை ஆத்திரமடையாமல் பொறுமை காக்குமாறும் அவர் கேட்டுள்ளார்http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

இவாவை போல அரசுடன் ஒட்டிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கர்த்தால் கூட மேற்கொளவேண்டாம் என சொல்லும் போலியான தம் நலத்துக்காக அரசியல் செய்யும் முஸ்லீம் தலைவர்களை புரிந்து கொள்ளுவரா முஸ்லீம் சகோதரர்கள் :?: :?: :?: :evil: :evil: :evil: :shock: :shock: :x :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.athirvu.com/index.php?option=com_content&task=view&id=229&Itemid=9]முஸ்லீம் இளைஞர்கள் படுகொலையை அரசியல் வியாபாரமாக்குகின்றது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்.இராணுவம் தான் படுகொலையை புரிந்தது என்பதை மறுக்கின்றார் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்.15:47:01

பொத்துவில் படுகொலைகளை இராணுவம் தான் புரிந்தது என்று கூறுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இன்றி அதனை தெரிவிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று மாலை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பிரதேசத்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.nitharsanam.com/?art=20460]முஸ்லிம் இளைஞர்கள் கொலையை கண்டித்து அம்பாறையில் இன்று ஹர்த்தால்; ஏனைய மாவட்டங்களில் துக்கம் அனுஷ்டிப்பு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்.

(செவ்வாய்கிழமை 19 செப்ரெம்பர் 2006 யோகராஜன் )

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் 10 முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் நடத்துமாறும் ஏனைய தமிழ் மாவட்டங்களில் கறுப்பு கொடிகளை ஏற்றி துக்கம் அனுஷ்டிக்குமாறும் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவிக்கையில், முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமையை தலைமைப்பீடம் வன்மையாக கண்டிப்பதாகவும் இன்று அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தாயகத்தின் ஏனைய மாவட்டங்களில் துக்கம் அனுஷ்டிக்குமாறும் தலைமைப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகம் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19647]Pottuvil massacre survivor alive, conflicting reports

Tamilnet.com reports :roll: :roll: :roll: :shock:

[TamilNet, Tuesday, 19 September 2006, 11:26 GMT]

அப்படி எண்டால் தொப்பியின் சாயம் வெளுக்குது எண்டா அர்த்தம் :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.eelampage.com/?cn=28873]அம்பாறை விசாரணைக்கு சர்வதேச வல்லுநர்கள் உதவி தேவையில்லை: சிறிலங்கா அரசாங்கம்

[புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 06:39 ஈழம்] [தெ.சந்திரநாதன்]

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கு சர்வதேச வல்லுநர்கள் உதவி தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அம்பாறை படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச வல்லுநர்களின் உதவி தேவையில்லை.

அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச வல்லுநர்களின் உதவியைக் கோரும் அதிகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்குக் கிடையாது. வெளிநாட்டவர் தலையீடின்றி நீதியான விசாரணைகளை நாங்களே நடத்துவோம். இது விடயத்தில் அரசாங்கம் திறந்த மனதுடன் உள்ளது. கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீது நாம் நேரடியாக குற்றம்சாட்டினோம்.

இப்படுகொலைக்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று நம்புவோர் விசாரணைகளுக்காக காத்திருக்க வேண்டும். எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் வெளிநாட்டவரை அழைக்கும் ஒரு புதிய அணுகுமுறை இப்போது உருவாகி வருகிறது. வெளிநாட்டவருக்கு இணையாக வல்லுநர்கள் இங்கே உள்ளனர் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். இதேபோன்ற விசாரணைகளை பலமுறை நாம் முன்னர் நடத்தியிருக்கிறோம். முக்கிய சம்பவங்களைத் தவிர இதர சம்பவங்களுக்கு வெளிநாட்டவர் உதவி தேவையில்லை.

இணைத் தலைமை நாடுகளின் அறிவிப்புக்கு முன்னதாக நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். அமைதிப் பேச்சுக்களில் ஈடுபாட்டுடன் புலிகள் இருப்பதாக வெளிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் நிபந்தனைகளை இளந்திரையன் தெரிவிக்கிறார்.

அமைதிப் பேச்சுக்களில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேபோன்ற உறுதியை தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து எமக்கு வழங்கப்பட வேண்டும். அந்த உறுதியானது தமிழ்ச்செல்வனிடமிருந்தோ இளந்திரையனிடமிருந்தோ அல்லது மற்றொரு நபரிடமிருந்து அல்ல.

கடல்வழிப் போக்குவரத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சரத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் மற்றும் நோர்வே அனுசரணையாளர்களை சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார் கேகலிய ரம்புக்வெல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: Lone survivor says attacked by Tigers

The lone survivor of the Pottuvil massacre, now receiving treatment at the Ampara hospital, told the police that a group of Tigers armed with firearms, knives and axes had killed his colleagues at the Anicut.

dailymirror reports

http://www.dailymirror.lk/2006/09/20/front/3.asp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எண்டால் தொப்பியின் சாயம் வெளுக்குது எண்டா அர்த்தம் :lol::)

-------------------------

சரியான பதிலை கொடுத்தீர்கள்....

clapping_hands2.gif

உங்களுக்கு ஒரே ஒரு பரிசாக:

52484t.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=525&Itemid=1]மேலும் மூன்று முஸ்லீம் இளைஞர்கள் அதிரடிப்படையால் படுகொலை

- எல்லாளன் 20-09-2006 11:12

பொத்துவில் பகுதியில் வைத்து முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த 11 படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று உல்லைப்பகுதியில் கதவடைப்புப்பில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் மீது சிங்கள அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 முஸ்லீம்களின் படுகொலையைக் கண்டித்து இன்று காலை உல்லைப்பகுதியில் கதவடைப்புப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, அங்கு குவிந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கியதாகவும், தொடர்ந்து தர்க்கம் ஏற்படவே அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

படையினரின் மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டில் மூன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலியாகியுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தம்மை எதிர்த்து எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இதேகதிதான் ஏற்படுமென இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் அப்பகுதி மக்களிடம் சிங்கள அதிரடிப்படையினர் எச்சரிக்கை விடுத்துச் சென்றதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-------------------------

சரியான பதிலை கொடுத்தீர்கள்....

clapping_hands2.gif

உங்களுக்கு ஒரே ஒரு பரிசாக:

52484t.jpg

ஆகா வேணாமுங்கோ வெட்டிபுடுவாங்கோ :lol::lol:

அம்பாறை விசாரணைக்கு சர்வதேச வல்லுநர்கள் உதவி தேவையில்லை: சிறிலங்கா அரசாங்கம்

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கு சர்வதேச வல்லுநர்கள் உதவி தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அம்பாறை படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச வல்லுநர்களின் உதவி தேவையில்லை.

அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச வல்லுநர்களின் உதவியைக் கோரும் அதிகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்குக் கிடையாது. வெளிநாட்டவர் தலையீடின்றி நீதியான விசாரணைகளை நாங்களே நடத்துவோம். இது விடயத்தில் அரசாங்கம் திறந்த மனதுடன் உள்ளது. கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீது நாம் நேரடியாக குற்றம்சாட்டினோம்.

இப்படுகொலைக்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று நம்புவோர் விசாரணைகளுக்காக காத்திருக்க வேண்டும். எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் வெளிநாட்டவரை அழைக்கும் ஒரு புதிய அணுகுமுறை இப்போது உருவாகி வருகிறது. வெளிநாட்டவருக்கு இணையாக வல்லுநர்கள் இங்கே உள்ளனர் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். இதேபோன்ற விசாரணைகளை பலமுறை நாம் முன்னர் நடத்தியிருக்கிறோம். முக்கிய சம்பவங்களைத் தவிர இதர சம்பவங்களுக்கு வெளிநாட்டவர் உதவி தேவையில்லை.

இணைத் தலைமை நாடுகளின் அறிவிப்புக்கு முன்னதாக நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். அமைதிப் பேச்சுக்களில் ஈடுபாட்டுடன் புலிகள் இருப்பதாக வெளிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் நிபந்தனைகளை இளந்திரையன் தெரிவிக்கிறார்.

அமைதிப் பேச்சுக்களில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேபோன்ற உறுதியை தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து எமக்கு வழங்கப்பட வேண்டும். அந்த உறுதியானது தமிழ்ச்செல்வனிடமிருந்தோ இளந்திரையனிடமிருந்தோ அல்லது மற்றொரு நபரிடமிருந்து அல்ல.

கடல்வழிப் போக்குவரத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சரத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் மற்றும் நோர்வே அனுசரணையாளர்களை சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார் கேகலிய ரம்புக்வெல.

http://www.eelampage.com/?cn=28873

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.eelampage.com/?cn=28875]சிறப்பு அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு: 14 முஸ்லிம்கள் படுகாயம்- ஊரடங்கு உத்தரவு அமுல் (மேலதிக இணைப்பு)

[புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 13:39 ஈழம்] [ம.சேரமான்]

அம்பாறை மாவட்டம் உல்லைப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று புதன்கிழமையன்றும் முழு அடைப்புப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் உல்லைப்பகுதியில் கடைகளைத் திறக்குமாறு சிறப்பு அதிரடிப்படையினர் மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்க மறுத்தனர். கடைகளைத் திறக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர்களை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கத் தொடங்கினர். இதனால் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதில்

அகமெட் லெப்பை நூர்தீன் (வயது 34)

மொகைதீன் பிச்சை லத்தீப் (வயது 45)

எம்.ஐ.சீனி மொகமெட் (வயது 29)

ஜாஃப்பர் (வயது 35)

ஆகியோர் ஆபத்தான நிலையில் கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த

எம்.ஐ. ஜாஃபொர்தீன் (வயது23)

ஏ. மஜீத் (வயது 28 )

ஆர். ஹனீப் (வயது 19)

எம். காசீம் (வயது 33)

ஏ.கே. மொகைதீன் பாபா (வயது 64)

மொகமெட் லெப்பை (வயது35)

ரசீக் (வயது 19)

சுபைர் (வயது 25)

உள்ளிட்ட 10 பேர் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் படுகொலைக்குக் காரணமான சிறப்பு அதிரடிப்படை அதிகாரியை நீக்க வேண்டும் அல்லது இராத்தல்குளம் பகுதி சாஸ்திரவெளி சிறப்பு அதிரடிப்படை முகாமையே நீக்க வேண்டும் என்று அம்மக்கள் கோரி வருகின்றனர்.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமை அகற்ற வேண்டும் என்று பொத்துவில் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொத்துவில் மற்றும் உல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

பொத்துவில் பிரதேசத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை சிறப்பு அதிரடிப்படையினர் பிறப்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்புவில் ஆகிய தமிழர் பகுதிகளிலும் இன்று புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் முழுமைக்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச்சம்பவத்தில் முன்னர் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை. அப்பகுதியில் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளை அண்டிய உல்லை, பெரிய உல்லை பிரதேச சிங்கள, தமிழ் மக்கள் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[url=http://www.nitharsanam.com/?art=20481]இரத்தல்குளம் பகுதியிலிருந்து நுற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உடுத்த துணியுடன் ஓட்டம். - அரசியல் தம்பட்டம் அடிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்.

- சனிக்கிழமை 30 டிசெம்பர் 2006 (யோகராஜன்)

பொத்துவில், இரத்தல் குளம் பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து எழுந்துள்ள பதற்றம் காரணமாக பொத்துவிலில் சிங்களப் பகுதிகளை அண்டி வாழும் நு}ற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக அப்பிரதேசங்களை விட்டு உடுத்த துணியுடன் பாதுகாப்பான இடங்களக்கு ஓடுவதாக தஞ்சமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கூறுகையில்; அச்சம் காரணமாக பொத்துவில் செங்காமம், இக்ராநகர் உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு ஒடகின்றனர். சிங்கள கிராமங்களை அண்டியுள்ள பிரதேச முஸ்லிம்களே இவ்வாறு அச்சம் காரணமாக ஓடுகின்றனர். கடல்கோள் அனர்த்தம் காரணமாக ஏற்கனவே பெரும் இழப்பினை எதிர்கொண்ட மக்கள் மீண்டும் இடம் பெயர்ந்துள்ளனர். இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது பற்றி இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. செங்காமம் கிராமம் கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்கள் மீள் குடியேறிய பகுதியாகும். இப்பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் பெருமளவில் மேற்கொண்டிருந்தனர். இச் சம்பவத்தையடுத்து அவ்விவசாய உற்பத்திகளும் பாதிப்படையும் சுூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவிலுக்கு சென்ற அரசியல்வாதிகள், பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும்வாக்குவாதம்

பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அங்கு தோன்றியுள்ள பதற்ற நிலையைப் பார்வையிடச் சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொத்துவில் முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர்களான ஹுஸைன் பைலா மற்றும் மேர்வின் சில்வா உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் பொத்துவிலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டனர்.

விசேட ஹெலிக்கொப்டர் மூலம் அங்கு சென்ற இவர்கள் அறுகம்பை இராணுவ முகாமில் இச்சம்பவம் குறித்துக் கலந்துரையாடலை நடத்தினர்.

பின்னர், இவர்கள் பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கூடி நின்றுள்ளனர். இவர்கள் பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு விசேட அதிரடிப்படையினரே பொறுப்பென்றும் இவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் குரலெழுப்பியுள்ளனர்.

இங்கு கூடியிருந்த முஸ்லிம்கள் அமைதியற்று காணப்பட்ட அதேவேளை, முஸ்லிம் தலைவர்களுடனும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனும் பெரும் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகளும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் பொத்துவில் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டுமெனவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளனர்.

எனினும், இவர்களின் உறுதிமொழி வெறும் வாய் வார்த்தைகளாக இருக்காது. செயலில் நிரூபணமாக வேண்டுமென்றும் இங்கு கூடியிருந்த மக்கள் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளனர்.

இவர்கள் ஜும்மா பள்ளிவாசலை விட்டு வெளிச்செல்ல முயலுகையில் மீண்டும் இவர்களுக்கும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் இராணுவம் தலையிட்டு நிலைமையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரை பள்ளிவாசலின் பிரதான வாயிற்கருகில் வழிமறித்த பொதுமக்கள் அவர்களைச் செல்லவிடாது தடுத்துள்ளனர். தமக்கு நியாயம் வேண்டுமெனவும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை திட்டமிட்ட சதியெனவும் தெரிவித்துள்ளனர். எனினும், இவ்விருவரும் ஒருவாறு இராணுவ பாதுகாப்புடன் மீண்டும் அறுகம்பை இராணுவ முகாமைச் சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவினர் பொத்துவிலில் அமைந்துள்ள நீர்ப்பாசன காரியாலயத்தில் கொழும்பிலிருந்து வருகைதந்த குழுவினருடன் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இப்பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம்களை படுகொலை செய்தது விசேட அதிரடிப்படையினரென வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், இதனை ஏற்க மறுத்துள்ள விசேட அதிரடிப் படையினர் இச்சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸ் மா அதிபரின் வாக்குறுதியில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், இச்சம்பவத்தையடுத்து தாம் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அக்கட்சியின் தலைவரிடமும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினரே சம்பந்தப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளதுடன் இதுபற்றிய விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்துள்ள மு.கா. தலைவர் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன குழுவொன்று இதுபற்றி விசாரித்து உண்மை நிலையை வெளிக் கொணரும் பொருட்டு சர்வதேச சமூகத்திற்கு இதனை எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் படுகொலைகள்

பொத்துவில் இரத்தல் குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தொடர் படுகொலைப்படலத்தில் இன்னொரு கோரச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படுகொலைகளைச் செய்தது யார்? சம்பவம் நடைபெற்று சில மணி நேரத்துக்குள் அரசாங்கம் விடுதலை புலிகளை நோக்கி சுட்டு விரல் நீட்டியிருக்கின்றது. விடுதலைப் புலிகளோ இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளதோடு படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளனர். அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் படைத்தரப்பும், ஆயுதபாணிகளும் தம் கைவரிசையை காட்டிவிட்டு தம்மீது பழியை போடுவது அரசின் வழமையான நடவடிக்கையெனச் சுட்டிக் காட்டியிருக்கும் விடுதலைப் புலிகள், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படைத்தரப்பினர் அப்பாவி மக்கள் மீது அட்டூழியங்களைச் செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றது. சம்பவம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று திரும்பிய முஸ்லிம் தலைவர்களில் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துகள் முன்னுக்குப்பின் முரணானவையாகவே காணப்படுகின்றன. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுதலை புலிகளே இதனைச் செய்திருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த மாதிரியான சம்பவங்களை அவர்களால் தான் செய்ய முடியுமெனவும் புலிகள் இது குறித்து உலகுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பதில் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் படுகொலைகளைச் செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தன்னால் முடிவொன்றுக்கு வரக்கூடிய நிலை காணப்படவில்லை என்றும் இது குறித்து வெளிநாட்டு உதவியுடன் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையிலுள்ள ஐ.நா.அதிகாரிகளிடம் கோரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். `விடுதலை புலிகள் இதனைச் செய்திருக்கலாமென்ற எந்த முடிவுக்கும் நான் வரவில்லை. அதே சமயம் என்னைச் சந்தித்த பொத்துவில் பிரதேச மக்கள் புலிகள் இதனைச் செய்திருக்க முடியாது எனச் சொல்கிறார்கள். அப்படியானால் இந்தப் படுகொலைகளைச் செய்தது யார் என்ற உண்மையை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சார்கின்றது, எனவும் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

அரசாங்கம் எடுத்த எடுப்பிலேயே புலிகள் மீது குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல அவசரத்தில் தவறான முடிவுகளை, அறிவிப்புகளைச் செய்வதை அண்மைக் காலமாக வழக்கமாக்கிக் கொண்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக ஒருதலைப்பட்சமான தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார். பொத்துவில் சம்பவம் தொடர்பாகவும் இந்தப் போக்கையே அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்றே கூற வேண்டியிருக்கிறது. அப்பிரதேச மக்கள் இது விடயத்தில் புலிகளைச் சந்தேகிக்கவே இல்லை. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள் தொடருமானால் பாரதூரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உறுதியானது. படுகொலைகள் தொடர்பில் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தும் போக்குகளால் அவற்றைச் செய்பவர்களே தப்பித்துக் கொள்ள முடிகிறது. விசாரணை என்ற அறிவிப்புடன் விவகாரம் கிடப்பில் போடப்படுவதால் உண்மை வெளிப்பட வாய்ப்பே கிடைப்பதில்லை. மீண்டும் போர் மூண்டிருக்கும் நிலையில் இது போன்ற படுகொலைச் சம்பவங்களால் முழுக்க முழுக்கப் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே ஆவர்.

மூதூர் சம்பவங்களின் போது வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆணைக்குழு அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவுமே தெரியவில்லை. பொத்துவில் விவகாரமும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது. இந்தப் படுகொலைகள் தொடர்பில் நீதியான பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலையை பகிரங்கப்படுத்த அரசியல் சக்திகள் என்ன செய்யப் போகின்றன என்பதே இன்றைய கேள்வியாகும். வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து தங்களது நயவஞ்சகமான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கும் சக்திகள் குறித்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரு சமூகங்களையும் தூண்டிவிட்டு இரத்தக்களறி ஏற்படுத்துவதில் இச் சக்திகள் முனைப்புக் காட்டுகின்றன என்பதற்கு காரணமாக சான்றுகள் உண்டு.

உள்நாட்டு விசாரணைகள் மீது மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதில் இரகசியமெதுவுமில்லை. எனவே, சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே நாமும் வலியுறுத்த வேண்டியுள்ளது. இதனை தாமதப்படுத்தாமல் உடனடியாகச் செய்ய வேண்டும். சாக்குப் போக்குக் கூறி நாட்களை தள்ளிப்போட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்தால் நாடு விபரீதமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்பிழைத்த நபர் வாக்குமூலம் கொடுத்தது உண்மையா?: டெய்லி மிரர் கேள்வி

அம்பாறை படுகொலைச் சம்பவத்தில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் நபரை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சந்திக்க அனுமதிக்கப்படாததன் மூலம் எழுந்துள்ள சந்தேகங்களை கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.

இது குறித்து டெய்லி மிரர் நாளேடு வெளியிட்டுள்ள செய்தி:

அம்பாறை தாக்குதலில் உயிர்பிழைத்த ஒரே நபர் என்று கூறப்படுபவரை சந்தித்து அறிக்கை பெறுவதற்காக அம்பாறை மருத்துவமனைக்கு நேற்று புதன்கிழமை மாலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜோகன் சொல்வ்பெர்க் வருகை தருவதாக இருந்தது.

ஆனால் அந்நபரைச் சந்திக்க விடாமல் கண்காணிப்புக் குழுவினரைத் தடுத்ததன் மூலம் தாக்குதலில் ஒரு நபர் உயிர்பிழைத்ததாக சிறிலங்கா காவல்துறையினர் கூறுவது குறித்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்நபர் பேசும் நிலையில் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"எமது கண்காணிப்புக் குழுவினர் அந்நபரை சந்திக்க முயன்றனர். ஆனால் அம்மருத்துவமனையில் இருந்த காவல்துறையினர் எம்மைத் தடுத்துவிட்டனர். தொண்டையில் காயமேற்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு அந்நபரால் பேச முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்" என டெய்லி மிர்ரர் செய்தியாளரிடம் கண்காணிப்புக் குழு அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும் அந்நபரை சந்திக்கவாவது அனுமதி பெற தொடர்ந்து முயற்சிப்போம் என்றும் அவரது உடல்நிலை குறித்த முதல் நிலை அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்காணிப்புக் குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.

கண்காணிப்புக் குழுவினரை அனுமதிக்க மறுத்தது ஏன் என்பது தொடர்பாக அம்பாறை காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்திக்க நேற்று புதன்கிழமை மாலை டெய்லி மிரர் செய்தியாளர் முயற்சித்தார். ஆனால் அப்போது அலுவலகத்தில் அவர் இல்லை.

பொத்துவில் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று உயிர் பிழைத்திருப்பதாகக் கூறப்படும் மீரா மொகைதீன் (வயது 60) வாக்குமூலம் கொடுத்ததாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்திருந்தது தற்போது வேடிக்கையாக உள்ளது.

அரசாங்கம் கூறுவது போல் படுகொலைச் சம்பவத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் அல்ல- வேறு நபர்கள்தான் என்று பொதுமக்கள் கூறிவரும் நிலையில் அச்சம்பவத்தின் ஒரே சாட்சி இந்நபரே. அப்படியான நிலையில் கண்காணிப்புக் குழுவினரை அனுமதிக்க மறுத்திருப்பது முரண்பாட்டை அதிகரித்துள்ளது என்று டெய்லி மிரர் நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக் குழுத் தலைவர், நோர்வே தூதுவருடன் ஹக்கீம் சந்திப்பு: சர்வதேச விசாரணைக்கு வேண்டுகோள்

அம்பாறை முஸ்லிம்கள் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்த வேண்டும் என்பதை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜோகன் சொல்வ்பெர்க் மற்றும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் ஆகியோரிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வலியுறுத்தினார்.

இருவரையும் கொழும்பில் சந்தித்துப் பேசியமை தொடர்பாக ஹக்கீம் கூறியதாவது:

சர்வதேச தடவியல் வல்லுநர்கள் விசாரணை தொடர்பிலான எமது கோரிக்கையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிறட்ஸ்கரிடமும் சொல்வ்பெர்க்கிடமும் தெரிவித்துள்ளோம். மூதூர் படுகொலைக்கு அவுஸ்திரேலிய குழுவினரை அரசாங்கம் நியமித்துள்ளது.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இக்கொடிய, காட்டுமிராண்டித்தனமான படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூறிவருவதையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினோம். உரிய வலுவான சாட்சி இல்லாதவரை எமது கட்சி எதுவித முடிவுக்கும் தாவி விடவில்லை.

இருப்பினும் உயிர்பிழைத்த நபரை கல்முனை மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு செல்ல முயன்றபோது சிறிலங்கா இராணுவத்தினர் வழிமறுத்து அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திருப்பிவிட்டமையானது சில சக்திகள் மீது சந்தேகங்களை எழுப்பியிருப்பதையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினோம் என்றார் ஹக்கீம்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவிலில் இருந்து அதிரடிப்படை வாபஸ்

முகாம் பொறுப்பதிகாரியும் உடன் இடமாற்றம்!

முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்கியது அரசு

பொத்துவில் சாஸ்திரிவெளி மற்றும் அதனை அண்டிய பகுதி முகாம்களில் உள்ள விசேட அதிரடிப் படையினரை அகற்றிவிட்டு அங்கு இராணுவத்தினரைப் பணியில் அமர்த்தவும். சாஸ்திரிவெளி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் குணரட் ணவை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கும் அரசு இணங்கியுள்ளது.

பொத்துவில் பெரிய உல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களையடுத்து ஆளுங் கட்சியின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷவுடன் நீண்ட பேச்சுகளை நடத்தினர். இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

அமைச்சர்களான ஏ. எச். எம். பௌஸி, பேரியல் அஷ்ரப், அமீரலி, பிரதியமைச்சர்க ளான ஹுசைன்பைலா, அன்வர் இஸ்மாயில், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் இந்தப் பேச்சுகளில் கலந்து கொண்டனர்.

பொத்துவில் பகுதி முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக் குறித்து முஸ்லிம் அமைச்சர்மார் பாதுகாப்புச் செயலரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது பாதுகாப்புச் செயலருக் கும் அமைச்சர்களுக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

நீண்டவாதப் பிரதிவாதங்களின் பின்னர், பொத்துவில் பகுதியில் பாதுகாப்பை உறு திப்படுத்துவதற்காக அங்குள்ள விசேட அதிர டிப்படையினரை அகற்றுவதற்கும், அங்குள்ள அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியை மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதென்றும் நேற்றைய கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டிருக்கிறது. (ஐ)

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.