Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Featured Replies

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு கிடையாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரண நடத்தியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை தொடங்கினார்.

அப்போது குற்றவாளிகள் தண்டனை குறைப்பு - விடுதலை என இருபலன்களை பெறுவதால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றும், ஆயுள் தண்டனை குற்றவாளி விடுவிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றும், மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் வாதிட்டார். 

இதனையடுதது வரும் 18 ஆம் தேதி வரை ஆயுள் தண்டனை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம்  தடை விதித்து உத்தரவிட்டுள்ளது..மேலும் இது தொடர்பாக வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

 

http://www.dinamani.com/india/2014/07/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/article2322326.ece

பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியாக கண்டு அவருக்கு தண்டனை கொடுக்கும் வாய்ப்புகள் 50 வீதத்திற்கும் மேலாகக் காணப்படுவதால் ஜெயாவுக்கு மத்திய அரசின் உதவி முன்னெப்போதையும் விட இப்பொழுது  அதிகளவு தேவை. எனவே அவர் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதில் பின்னடிப்பார்.

 

இதனால் தான் மத்திய அரசின் ரயில்வே பட்ஜட்டில் தமிழகம் பெருமளவு ஒதுக்கப்பட்டு பயனளிக்கக் கூடிய புதிய திட்டங்கள் எதும் இல்லாத போதும் கூட ஜெயா அந்த பட்ஜெட்டினை புகழ்ந்து வரவேற்று பேசியிருக்கின்றார்.

 

மோடியின் முகமும் ஜெயாவின் முகமும் உண்மையான தோற்றத்தினை காட்டப் போவதால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் இனம்காணப்ப்ட்டவர்களுக்கு பாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். பாவப்பட்ட ஜென்மங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
மூவர் விடுதலை விவகாரம்; மீண்டும் ஏமாற்றியது உச்சநீதிமன்றம்!?

 

court-300x186.jpgராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கில், ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தடை விதித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதையடுத்து, அம்மூவருடன் வழக்கில் தொடர்புடைய ஜெயகுமார், ராபர்ட் பயஸ், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து ஏழு பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

அந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததால், தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. மாநில அரசு உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை நிறுத்திவைக்கப்பட்டதுடன், ஏழு பேரின் தண்டனைக் குறைப்புக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் ஏப்ரல் இறுதியில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் ஏழு பேரை தமிழக அரசு விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு தன்னிச்சையாக தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தினால், அதையே மற்ற மாநில அரசுகளுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

மேலும், சிபிஐ விசாரிக்கும் வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து, ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் இடைக்கால தடை விதித்த அரசியல் சாசன பெஞ்ச், இதுகுறித்து மாநில அரசுகள் இம்மாதம் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த விசாரணை நடைபெறும் 22-ஆம் தேதி வரை மாநில அரசும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilleader.com/?p=37190

இதில் அவர்கள் கூறியது "சகல" ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலையையும் நிறுத்துமாறும்...பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் அறிவுரை பெற வேண்டும் என்றும்....கருணாநிதி தனது பிறந்தநாளுக்கு நிறைய ரவுடிகளை எல்லாம் வெளியில் விட்டது போல் இனி நடக்காமலிருக்க இது ஒரு நல்ல ஆரம்பம்......மோடியின் ஆட்சியில் இந்தியா திருந்தினால் நல்லது......எங்களது வாடா-கிழக்கு மாகான அரசுகளும் மோடியை சந்தித்து நட்பை வளர்ப்பது நல்லது....

ராஜிவ் வழக்கு இந்தியாவின் உள்நாட்டு சட்டப் பிரச்சனை. 
 
இதற்கும் ஈழத்தில் அல்லல் படும் அப்பாவிப் பொதுமக்களுக்கும் தொடர்பில்லை.
 
நீதி எதுவோ அதை இந்தியாவில் இருக்கும் நீதியை மதிப்பவர்கள் நிலைநிறுத்தட்டும்.
 
 
இந்தியாவிற்கும் ஈழத்தமிழருக்கும் இடையே முள்ளாக இந்த வழக்கு இருக்கக் கூடாது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.