Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை.

............................

http://www.eelampage.com

அரச அனுமதியுடன

K-Faction எனப்படும் ஒட்டுக்குழுவினரால் நூற்றுக்கு மேற்பட்ட, கிழக்கு மாகாணத்தின் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கடத்தப்பட்டுள்ளதாக அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் (AP) தெரிவித்துள்ளது.

கட்டாய நிர்ப்பந்தத்தின்பேரில் கடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் யுத்தத்திற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட சிறுவர்களின் வயது பன்னிரண்டு வரை உள்ளதாகவும், சாட்சிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களைப் பேட்டி கண்டபோது இதனை அறியக்கூடியதாக இருந்தது என அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கருணா குழுவினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு - விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான ஆதரவுக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக Janes Defence Weekly யின்ஆசியப் பிராந்தியத்திற்கான பொறுப்பாளர் Robert Karniol தெரிவித்தார்.

.....

நூற்றுக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதை இலங்கை கண்காணிப்புக் குழுவினைச் சேர்ந்த Bjorn Kjelsaas உறுதிப்படுத்தியுள்ளார்.

------

கருணா குழுவினருடன் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லையென ஸ்ரீலங்கா அரசு தெரிவித்துவந்தாலும், ஒட்டுக் குழுவினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதை மட்டக்களப்பு பிரதேச மக்கள் தமக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-.........................

இந்த விடயம் குறித்து கருணா குழுவின் பேச்சாளரை அவர்களது அலுவலகத்தில் பேட்டிகண்ட அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம்,

அங்கு சிறுவர்கள் வெளியிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு உதவிகள் செய்வதை அவதானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

---------------

டத்தப்பட்ட சிறுவர்களைப் பார்வையிட்ட பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு இராணுவப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு அனுப்பப்படவுள்ளார்கள் எனத் தெரிவித்ததாக Smith மேலும் குறிப்பிட்டார்.

-----------

சமாதானம் நீங்க சொல்லுற ஜனநாயக அரசாங்கத்தின் முகம் இதில் வெிப்படையாகத் தெரிகிறது

.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • Replies 211
  • Views 26.9k
  • Created
  • Last Reply

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஜனநாயக தன்மையானது அல்ல என்று நான் எழுதியவுடன் துள்ளிக்குதித்து மறுப்பு எழுதிய கனவான்கள் மேற்படி செய்தியை வாசித்துவிட்டு பாராமுகமாக இருப்பது ஏன்?

கபொத சா/த பரீட்சைக்கு இன்னும் சிலவாரங்களே இருக்கும் போது மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரிப்பதன் பின்னணி என்ன?

புலிகளின் இந்த பகிஸ்கரிப்பை வேண்டாமென்று வெளிப்படையாக அறிவித்து மக்களின் நலன்களில் அவர்களது அக்கரையை வெளிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

ஏக்கப் பிரதினித்துவம் என்றால் எதற்கு என்று ஏற்கனவே விளக்கம் அழிக்கப் பட்டுள்ளது.அதற்கு நீர் எதுவித பதிலும் எழுதவில்லை,உம்மால் அந்த விளக்கத்துக்குப் பதில் எழுத முடியாது.அப்படி எழுதுவதானால் வழக்கம் போல் விதண்டாவாதமாக நான் சொல்லுவது தான் உண்மை என்று எழுத வேண்டும், ஏனெனில் யதார்த்தை நிராகரிக்கும் எந்தக் கருத்தும் பொய்யானதே.மேலே நீர் சுட்டிக் காட்டியது புலிகள் 'சர்வாதிகாரிகள்' அல்ல என்பதற்கு நல்ல உதாரணம்.

முதலில் புலிகள் பகிஸ்கரிக்கச் சொன்னாதாக எங்கே உள்ளது? அதற்கான ஆதாரம் எங்கே? அவர்கள் எதாவது அறிக்கை இது சம்பந்தமாக விட்டனரா?விட்டால் எனக்குக் காட்டும்.

அடுத்தது மணவர்களின் ஒரு பகுதியினர் என்று பங்குத்தந்தை கூறி உள்ளார்.பங்குத் தந்தைக்கு இந்தக் கருத்தைச் சொல்ல இருக்கும் அத்தனை உரிமையும் மாணவர்களுக்கும் இருக்கிறது.தங்கள் கல்விச் செயற்பாடு,தங்கள் எதிர்காலம்,தங்கள் பாதுகாப்பு,தங்கள் சுதந்திரம் இவை சம்பந்தமாக சிந்தித்துச் செயற்பட அவர்களுக்கும் உரிமை இருகிறது.அது தான் ஜனனாயகம்.இங்கே சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைச் சொல்லும் சுதந்திரம் இருக்கிறது.ஆகவே புலிகளின் ஏகப் பிரதிந்துவம் என்பது எதற்கானது என்பதை நிரூபிக்கும் ஒரு செய்தியாக மேல உள்ள செய்தி உள்ளது.இங்கே எந்தைச் செய்தியையும் திரித்து ,புலிகளை ஒரு சர்வாதிகாரிகளாக, ஜனனாயகம் அற்றவர்களாகக் காட்ட முற்படும், உமது உள் நோக்கம் இப்போது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இங்கே மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஏன் அவர்களின் வாழும் உரிமையைக் குலைக்கும் சக்தியாக யார் இருகிறார்களோ அவர்களை நோக்கிப் போராடாமல் மாணவர்கள் எவ்வாறு தமது கல்விச் செயற்பாடுகளை நெறிப்படுத்துவது?தமது கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் உரிமை அந்த மாணவர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு இருக்கமுடியும்?

மேலும் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் பற்றி நீர் வைக்கும் விமர்சனங்கள் எவ்வளவு நியாயமானவை என்பதை சிந்தித்துப் பாரும்.முனைப்பாக இயங்கிய ஜோசப் பரராசசிங்கம்,சந்திர நேரு, என்று பலர் சிறிலங்கா கைகூலிகளால் உமது பாசையில் தமிழரின் பிரதினிதிகள் என்று நீர் கூறுவோரினால் படுகொலை செயப்பட்டனர்.இவ்வாறு முனைப்பாக அரசியல் ரீதியாக செயற்படுவோர் படுகொலை செய்யப்படும் போது எவ்வாறு ஜன நாயக ரீதியாக கூட்டமைப்பினரால் அரசியற் போராட்டங்களை ,சந்திப்புக்களை சுதந்திரமாக முன் நெடுக்க முடியும்?அரசியற் போராட்டங்களை,சுதந்திரமான செய்தியாளர்களைப் படு கொலை செய்து ஜனாயக மறுப்பை இராணுவ அடக்குமுறையை தனது ஆயுதமாகப் பாவிக்கும் ஒரு பயங்கரவாத அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.இவ்வாறான அரசாங்கம் சமாதான வழிமுறைகளில் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழருக்குத் தீர்வை வழங்கும் என்பது எப்படிச் சாத்தியம் ஆகும்?

உமது கருதுக்கள் எவ்வளவு விசமத்தனமானை என்பதுவும்,அதன் பின்னால் இருக்கும் முரண்பாடுகளும், நயவஞ்சகமும் மிகத் தெளிவாக எல்லோருக்கும் இங்கு தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

p5-l.jpg

எரிபொருளைப் பெறுவதற்காக யாழ் நகர எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்களை காண்கிறீர்கள்

படம்: தினக்குரல்

யாழ்பாணத்தில் ஒரு லீட்டர் பெற்றோல் வாங்குவதற்காக சனம் நிற்கின்ற நேற்றைய படம் இது. இவ்வாறு ஒவ்வொன்றும் வாங்குவதற்காக, சனம் வரிசையில் நின்று அவதிப்படும்போது இயல்பான சூழ்நிலை என்று எவ்வாறு கருதமுடியும். அதுவும் ஒரு மாணவனால், பசிக் கொடுமையோடு நின்று, எவ்வாறு கல்வி நடவடிக்கையைத் தொடர முடியும்.

95களில் கூட, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்நகர் இருந்தபோது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால், இப்படியொரு உணவுத்தட்டுப்பாட்டை எம் சனம் எதிர்நோக்கியிருக்கவில்லை. அன்று வன்னி மண் ஓரளவாவது உணவுத் தேவையை நிவர்த்தி செய்தது. ஆனால் இன்று, தீப்பெட்டி வாங்கக் கூட, வரிசையில் நின்று கொண்டு படி என்றால், எவ்வாறு படிக்க முடியும்?

உலகத்தை ஏமாற்றுவதற்காக சிறிலங்கா அரசு போடும் நாடகத்தில், பங்கேற்கும் நடிகர்களாக, மதிப்புக்குரிய பாதிரியார் அவர்கள் பங்கேற்பது சரியானது அல்ல. ஏற்கனவே காணாமல் போன பாதிரியார் குறித்தான அச்சம், அவர் துணிந்து இதை எதிர்க்கின்ற நிலையை மட்டுப்படுத்தியிருப்பதாகவே உணர முடிகின்றது. எது இருந்தாலும் அவரின் பாதுகாப்பும் வேண்டப்படுவதே!

  • தொடங்கியவர்

நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்போம்; கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பியுங்கள் மாணவர்களிடம் உயர்கல்விச் சமூகம் வேண்டுதல்

கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டு எமது கல்வியை முன்னெடுக்க வேண்டியது இன் றைய காலத்தின் தேவையாகிறது எனக் கருது கிறோம்.

எனவே பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மிக விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு உயர்கல்விச் சமூகத்தின் சார் பில் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்.பல் கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரி யர் இ.குமாரவடிவேல் தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள் பங்குகொண்ட யாழ்ப்பாணத் தின் இன்றைய கல்வி நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.

மு.ப. 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12.45 மணி வரை மேற்படி கலந்துரையா டல் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாண வர் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.

குடாநாட்டின் இன்றைய கல்வி நிலை குறித்து பல கோணக் கருத்துக்களும் நேற் றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.

அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின் பிர காரம் பதில் துணைவேந்தர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையின் முழு விவரமும் வருமாறு

கடந்த 11.08.2006 இற்குப் பின் ஏற் பட்ட மிகவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக எமது கல்விச் செயற்பாடுகள் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளமை வேத னைக்குரிய விடயமாகும். இப்பாதிப்பு எமது எதிர்கால சந்ததியின் நலனிற்கு ஊறு விளை விப்பதாகவே அமையும். ஆகவே எத்துணை நெருக்கடிகள் மிகுந்துவரினும் கல்வியே எமது மூலதனம். அதுவே எமது ஆணிவேர் என்பதை மனதில் இருத்தி வலிகளைத் தாங் கும் வல்லமையோடு கற்றல் செயற்பாடு களை முன்னெடுக்குமாறு மாணவ சமூகத் தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

தீராத பிரச்சினைகள்

அரை வயிறு உணவும், சீரற்ற போக்கு வரத்து ஒழுங்குகளும், பொருளாதார நெருக் கடிகளும், உயிர் அச்சுறுத்தலும், இதர தீராத பிரச்சினைகளும் தொடரும் எமது நிலை மையை மாற்ற உயர் கல்விச் சமூகம் தனது முழுமையான பலத்தைப் பிரயோகித்து செயற்படும் என உறுதி வழங்குகின்றோம்.

பெற்றோர்களை குடும்ப பொருளாதார சுமை மிகவும் அழுத்துவதை அறிவோம். இச்சுமைகளுக்கு மத்தியிலும் உங்கள் பிள்ளை களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர்களது கல்வி தொடர்வதற்கு உங்களால் இயன்ற சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தியாகங்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட கல்விப் பயிர்

தியாகங்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட எமது கல்விப் பயிரை அழியவிடாது பேண மிக விரைவாக பாடசாலைகளுக்குத் திரும்பி கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டு மென மாணவர்களை விநயமாகக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பும் தள ராத பற்றுறுதியும் கல்வியிலும் நிலைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு எமது கல்வியை அழிய விடாது நிலைக்க வைக்க திடசங்கற்பம் பூணுமாறும் வேண்டுகின்றோம்.

நாம் எமது கல்வியை இடைநிறுத்தி வைப் பதால் தேசியப் பரீட்சைகள் பிற்போடப்பட மாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டு உங்கள் கல்வியைத் தொடரவேண்டும். பாட சாலை தவிர்ந்த நேரங்களில் கல்வியில் அக்கறை செலுத்தி எமது கல்வியை நாமே மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

சுமுகநிலை ஏற்பட்டு விட்டதாக எவரும் கருதக்கூடாது

நாம் கல்விச் செயற்பாடுகளை ஆரம் பிக்குமாறு கேட்டுக்கொள்வதைக் கொண்டு தற்போது எமது பிரதேசத்தில் சுமுக நிலை ஏற்பட்டுவிட்டதாக எவரும் கருதக்கூடாது. கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் மன வுறுதியோடு எதிர்கொண்டு எமது கல்வியை முன்னெடுக்கவேண்டியது இன்றைய காலத் தின் தேவையாகவிருக்கிறது எனக் கருது கிறோம். எனவே பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மிக விரை வில் மீள ஆரம்பிக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.

எமது சமூகம், சிறப்பாக மாணவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரியவர் களின் கவனத்திற்கு விரைவாகக் கொண்டு வந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தர உயர் கல்விச் சமூகம் தன்னா லான முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று உள் ளது.

http://www.uthayan.com/Pages/news/today/09.htm

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் ஞானத்தால் துணிவது கல்வி. கல்வியை தாமதிப்பது சமூகத்தை இருளுள் தள்ளுவதற்கு சமம்.

கல்வியற்ற சமூகத்தில் விடுதலை என்ன நெருப்புப் பொறி கூட தீ மூட்டாது.

எங்களது போராட்டத்திற்கு இப்போது புலிகளின் ஏகபிரதினிதித்துவம் அவசியமானதாக இருக்கிறது. பிற்காலங்களில் அது அவசியமற்றதாக இருக்கலாம். அவர்கள் என்றுமே விலை போகாத சக்திகளாக இருப்பதே அவர்கள் மேல் தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கான அடிப்படைக் காரணியாக இருகின்றது.அதனாலையே பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்க அவர்களால் முடிந்தது.

நீங்கள் கூறுவதன் அவசியம் புரிந்து கொள்ள தக்கதே. யாராவது ஒருவர், அதிலும் பல அர்ப்பணிப்புகளை செய்து ஈழப் போரின் தலைமை சக்தியாக விளங்கும் புலிகள் தமிழரின் பிரதிநிதிகளாக பேச்சு வார்தகளில் கலந்து கொள்வது எமக்கு வய்ப்பான நிலகளையே கொண்டு வரும். ஆனால் 'ஏக பிரதிநிதித்துவம்' என்பது அன்பாலும் அரவணைப்பாலும் விழைந்த ஒன்று போலும் ஜனநாயகத்தின் இன்னொரு முகம் போலவும் காட்ட முயல்வதை மட்டும் தான் விமர்சனத்துக்குள்ளாக்க விரும்புகிறேன். தமிழ் இயக்கங்கள் ஆரம்ப காலம் முதல் ஒன்றையொன்று விழுங்க முற்பட்டமையும் 80களில் அது தீர்த்து வைக்கப் பட்டமையுமே 'ஏக பிரதிநிதிதுவத்தின்' தோற்றுவாய்.

எவ்வாறாயினும் வெளி உலகைப் பொறுத்த வரை, எப்படி சிங்கள பேரின வாதக் கட்சிகள் தமக்குள் குத்து வெட்டுகளை செய்தாலும் தமிழனை அழிப்பதில் ஒன்று படுகிறார்களோ அது போல் எமது குரலும் ஒத்து ஒலிக்க வேண்டும்.

யார் குற்றியாவது அரிசியானால் சரி

மேற்கோள்:

நாம் கல்விச் செயற்பாடுகளை ஆரம் பிக்குமாறு கேட்டுக்கொள்வதைக் கொண்டு தற்போது எமது பிரதேசத்தில் சுமுக நிலை ஏற்பட்டுவிட்டதாக எவரும் கருதக்கூடாது. கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் மன வுறுதியோடு எதிர்கொண்டு எமது கல்வியை முன்னெடுக்கவேண்டியது இன்றைய காலத் தின் தேவையாகவிருக்கிறது எனக் கருது கிறோம். எனவே பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மிக விரைவில் மீள ஆரம்பிக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.

எமது சமூகம், சிறப்பாக மாணவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரியவர் களின் கவனத்திற்கு விரைவாகக் கொண்டு வந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தர உயர் கல்விச் சமூகம் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று உள் ளது.

http://www.uthayan.com/Pages/news/today/09.htm

:idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தாயகம் என்ற கொள்கையோடு இன்று வரை உறுதியாக உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே. தமிழ் மக்கள் பெரும்பாலானோரின் கனவும் வாழ்வும் அதுவே.

அந்த முறையிலும் கடந்த தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி ஆதரவோடு போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுவும் ஜனநாயக வழியில் தான். நெல்சன் மண்டேலா கூட சமாதானத்தின் பின் தான் ஜனாதிபதியானார். சமாதானத்துக்கு முன்னர் அவரின் கட்சி ஜனநாயக அரசியல் நடத்தவில்லை.

அவரை உலகம் பயங்கரவாதி என்று சிறையில் அடைக்கவில்லையா? இன்று நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கவில்லையா? இவையெல்லாம் எந்த ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையில் சாத்தியமோ அதே அடிப்படைகளை தமிழீழ மக்களுக்கும் உரித்துடையதாகும்.

alternative எழுதியது

எவ்வாறாயினும் வெளி உலகைப் பொறுத்த வரை, எப்படி சிங்கள பேரின வாதக் கட்சிகள் தமக்குள் குத்து வெட்டுகளை செய்தாலும் தமிழனை அழிப்பதில் ஒன்று படுகிறார்களோ அது போல் எமது குரலும் ஒத்து ஒலிக்க வேண்டும்.

யார் குற்றியாவது அரிசியானால் சரி

இதுகள் அவங்கட எடுபிடியள் தான் என்று உனக்குத்தெரியாதோ மோனே இதுகள வழிக்கு கொண்டுவாறத விட அவன வழிக்கு கொண்டுவரலாமே!

இதுகளின்ர உழைப்பும் தேசியத்துக்கு தேவை என்றுதான் நினைக்கிறாய் போலகிடக்கு

இதுகள் இல்லாட்டி அவன்ர எச்சில் நக்க ஆக்கள் வேறு கிடைக்கமாட்டான்களோ?

காலத்தால் ஞானத்தால் துணிவது கல்வி. கல்வியை தாமதிப்பது சமூகத்தை இருளுள் தள்ளுவதற்கு சமம்.

கல்வியற்ற சமூகத்தில் விடுதலை என்ன நெருப்புப் பொறி கூட தீ மூட்டாது.

எந்த கல்வியை சொல்கிறீர்கள்.. அரசாங்க வேலைக்காகவும். வெளிநாட்டில் உயர்படிப்புக்காகவும் போகப்பயன் படுகிறதே அந்த கல்வியா.....???

தேசத்தின் நிலை அறிவாளிகள் பஞ்சமே தவிர கல்வியாளர்கள் கிடையாது... இண்றய காலகட்டத்துக்கு எது தேவையோ அதை படிப்பதுதான் கல்வி... விஞ்ஞானமும் கணக்கியலும் மட்டும் அல்ல....! நேற்றய மனிதன் அறிவார்தமாக உணர்ந்ததை இண்றைய நீங்கள் படிக்கிறீர்கள்.... அதைத்தான் நீங்கள் கல்வி என்கிறீர்கள்...!

ஆனால் அது அப்படி இல்லை இண்றைய மக்கள் படும் பாடுகளையும் அனுபவங்களையும் நாளைய கல்விச்சமூகம் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்...

தனியொரு மனிதனிக்கு உணவில்லை எண்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்றான் பாரதி... பசியோடு இருப்பவரை படிக்க்க போ என்பது உங்களின் செருக்கைத்தான் காட்டுகிறது...!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை என்பது சகல அடக்குமுறைகளுக்கும் எதிரானது என்ற திலீபனின் வசனங்களை நினைவுபடுத்துங்கள். எனவே, கல்வி கற்பது கூட தமிழ்மக்களுக்கு மிகவும் அத்தியவசிய தேவையாகும். அதை யாருமே மறுக்கவில்லை. அதன் வளர்ச்சிக்கு எல்லோரும் பங்கெடுக்கத் தான் வேண்டும்.

ஆனர்ல பொருளாதாரத் தடையை சிங்கள அரசு நீக்கியிருந்தால் இத்தனை பிரச்சனை வருமா? ஒரு குழந்தையால், பசிக்கொடுமையோடு நின்று எவ்வாறு கல்வி கற்ற மனம் வரும்?

அத் தடைக்கு,தமிழர் சமுதாயம் எவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்கின்றதோ, அதற்கு ஆதரவினை வளங்கி, எம் குழந்தைகள், உறவுகளின் உயிர்களைக் காக்க வேண்டியது எம் கடமையாகும்.

நீங்கள் கூறுவதன் அவசியம் புரிந்து கொள்ள தக்கதே. யாராவது ஒருவர், அதிலும் பல அர்ப்பணிப்புகளை செய்து ஈழப் போரின் தலைமை சக்தியாக விளங்கும் புலிகள் தமிழரின் பிரதிநிதிகளாக பேச்சு வார்தகளில் கலந்து கொள்வது எமக்கு வய்ப்பான நிலகளையே கொண்டு வரும். ஆனால் 'ஏக பிரதிநிதித்துவம்' என்பது அன்பாலும் அரவணைப்பாலும் விழைந்த ஒன்று போலும் ஜனநாயகத்தின் இன்னொரு முகம் போலவும் காட்ட முயல்வதை மட்டும் தான் விமர்சனத்துக்குள்ளாக்க விரும்புகிறேன். தமிழ் இயக்கங்கள் ஆரம்ப காலம் முதல் ஒன்றையொன்று விழுங்க முற்பட்டமையும் 80களில் அது தீர்த்து வைக்கப் பட்டமையுமே 'ஏக பிரதிநிதிதுவத்தின்' தோற்றுவாய்.

எவ்வாறாயினும் வெளி உலகைப் பொறுத்த வரை, எப்படி சிங்கள பேரின வாதக் கட்சிகள் தமக்குள் குத்து வெட்டுகளை செய்தாலும் தமிழனை அழிப்பதில் ஒன்று படுகிறார்களோ அது போல் எமது குரலும் ஒத்து ஒலிக்க வேண்டும்.

யார் குற்றியாவது அரிசியானால் சரி

யார் குற்றி இருக்கலாமெண்டு நீங்கள் சொல்கிறீர்கள்,ப்லொட்டோ?

உங்களின் ஆதங்கம் 'யார்' என்பதிலே இருப்பதாகவே படுகிறது.இங்கே அரிசி குத்தப்படுவது தான் முக்கியமே தவிரா யார் என்பது அல்ல.மேலும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் எல்லாமே அன்பினாலும் அரவணைப்பாலும் தான் முரண்பாடுகளைக் கையாண்டன என்று சொல்வீர்களா? அது வரலாறு அல்லவே ,அப்படியாயின் எப்படி புலிகள் மட்டும் அன்பினாலும் அரவணைப்பாலும் முரண்பாடுகளைக் கையாண்டிருக்க முடியும்.இங்கே புலிகள் எடுத்த நடவடிக்கைக்கு அடிப்படையாக இருந்தது போராட்டத்தைக் காப்பாற்றுவது என்ற நோக்கமே.தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்ற நிலமையே அன்று இருந்தது.பலர் கடிதத் தலைப்புக்களில் இயக்கங்களை உருவாக்குவதும், பின்னர் மிரட்டி வழிப்பறி கொள்ளை,கொலை என்று போராட்டத்தைக் காட்டி பல மோசடிகளைச் செய்ததும் தான் வரலாறு.மேலும் தமிழரின் போராட்ட்டத்தை அன்னிய சக்திகளுக்கு அடிபணிந்து காட்டிக் கொடுக்க வெளிக்கிட்டதும் தான் வரலாறு.இங்கே தமிழ் மக்களே ஒரு அரசியல் இயக்கத்தைப் புலிகளைத் தாங்கி நின்றார்கள்,தமிழ் மக்கள் பரந்து பட்ட ஆதரவு இல்லாமல் வெறும் ஆயுதத்தினூடாக மட்டுமே புலிகளால் இதனை நிறைவேற்றி இருக்க முடியாது.இதற்கு புலிகளின் விலை போகாத தன்மையே அடிப்படைக் காரணம்.இந்தியா இராணுவத்தின் இராணுவ வலிமையயிப் பார்க்கிலுமா புலிகள் வலிமை பெற்றவர்களாக இருந்தார்கள்? இருந்தும் இபிஆரெல்வின் வீழ்ச்சிக்கு என்ன அடிப்படைக் காரணம்?அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலசைகளைப் பிரதிபலிக்காததே.ஆகவே உங்களுக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திரிகாதீர்கள்.எங்களுக்கும் வரலாற்று அனுபவங்கள் உண்டு, உங்களின் பார்வையும் அனுபவமும் ,உங்கள் பழைய வரலாற்றின் கரிசனையில் இருந்து பக்கச் சார்பானதாக இருக்கலாம்.இப்போதும் உங்கள் கருதுக்களில் அந்த பக்கச் சார்புகளின் சாய்வைக் காணலாம். பொதுவாக பலராலும் ஏற்றுக் கொண்ட பொது அனுபவங்கலே வரலாறாக முடியும்,உங்களினதோ எனது சொந்த அனுபவமோ ,மட்டுமே வரலாறு ஆக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் இங்கு அரிசி குத்தி மாவு இடிக்கிறீர்களோ தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின் எந்த ஆயுதப் போராட்டமும் தனித்து வெற்றியீட்டியது இல்லை.

ஆயுதப் போராட்டம் அரசுகளை சிந்திக்க வைக்கவே அன்றி அரசுகளை வெற்றி கொள்வதற்கு அல்ல.

விடுதலைப் புலிகள் கூட தங்கள் மண்ணை மக்களைக் காக்கத்தான் போராடுகின்றார்களே தவிர சிறீலங்கா அரசை வீழ்த்துவதற்கு அல்ல.

விடுதலைப் புலிகள் எதிர்ப்பது அரச பயங்கரவாததையே. அரசியல் ஜனநாயகத்தை அல்ல.

விடுதலைப் புலிகள் சர்வதேச அரசியல் கோட்பாடுகளை மதிக்கின்றார்கள் என்பதனாலேயே அவர்களுக்கு சர்வதேச மஸ்தியஸ்தம் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதற்கு உள்ள சோடிக்கப்பட்ட காரணிகளை விடுதலைப் புலிகள் வலுவிழக்கச் செய்யவே முயன்று கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் சமாதானத்தை இன்று அல்ல எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளனர். திம்பு தொடங்கி இறுதியில் ஜெனிவா வரை அவர்களின் சமாதானத்துக்கான பயணமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைப் புலிகளையும் சர்வதேச பயங்கரவாதிகளையும் பகுத்துக்காட்டக் கூடிய விடயங்களை விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கு தங்கள் நடவடிக்கைகள் மூலம் காட்ட வேண்டியதே 30க்கும் மேலான ஆண்டுகளாக நடக்கும் ஆயுதப் போரின் இறுதிப் பயனை மக்கள் அடைய உதவும்

சமாதானம் போர் தேர்தல் இவை எல்லாம் ஜனநாயகத்துள் விரும்பியோ விரும்பாமலோ கலந்தவிட்ட விடயங்கள் தான்.

அமெரிக்கா சார்பானது தான் ஜனநாயகம் என்பது தவறான கோட்பாடு. மக்களின் உரிமைகளை மக்களே தீர்மானிப்பதுதான் ஜனநாயகம். அதைத்தான் புலிகள் வலியுறுத்துகின்றனர். சுயநிர்ணயக் கோரிக்கை மூலம்.

அமெரிக்க ஜனநாயகம் என்பது வேறு மக்கள் ஜனநாயகம் என்பதான ஜனநாயகத்தின் உண்மைத் தோற்றம் வேறு. ஆனால் உலகம் அமெரிக்க வல்லாதிக்கத்தின் கீழ் அமெரிக்க ஜனநாயகத்தைத் தான் பின்பற்ற வேண்டி உள்ளது. உண்மையில் அது ஜனநாயகமல்ல. சர்வாதிகாரம்.

ஏன் நீங்கள் இங்கு அரிசி குத்தி மாவு இடிக்கிறீர்களோ தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின் எந்த ஆயுதப் போராட்டமும் தனித்து வெற்றியீட்டியது இல்லை.

ஆயுதப் போராட்டம் அரசுகளை சிந்திக்க வைக்கவே அன்றி அரசுகளை வெற்றி கொள்வதற்கு அல்ல..

அப்ப வியட்நாம், எரித்திரியா, ஆப்கானிஸ்தான், இப்பிடி கனக்க நாடுகள் சுத்ந்திரம் அடஞ்சாச்சு..... நீங்கள்தான் இன்னுமும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னால அறிவை வளர்க்கவே இல்லை....

புதுசு புதுசா எல்லாம் தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்தாச்சு.... அதைப்போலவே இப்பவும் யாரும் சுதந்திரம் அடையேல்லை நாங்களும் சுதந்திரம் அடைய ஏலாது எண்டு சொல்லுறதை விட்டுவிட்டு புதுசா ஏதாவது சொல்ல முயற்ச்சி செய்யுறது நல்லது...

[u]நெடுக்காலபோவானே! உமக்கு முனிகினியா அடிச்சு வைச்சிருக்கு

என்டாமோனே இப்ப யார் சமாதானம் வேண்டாம் என்று அடம்பிடிக்கிறாங்கள்

எதிரி போர்வெறியில் என்னதான் செய்தாலும் புலிகள் சமாதானத்தின் பற்றைத் துறக்கவே கூடாதென்று வற்புறுத்துவதுதான் உமது எழுத்துப்பிழைப்பின் நோக்கமா?

நீங்க எத்தனை அவதாரம்தான் எடுத்தாலும் நரித்தனம் வெளிச்சமாகிறதே இலகுவாய்.

அது என்ன ஆயுதப்போராட்டம் அரசுக்கு சிந்தனையைத் தூண்டுவதற்க்காகவோ அவர்கள் அதிகாரத்துக்கு தோல்வி ஏற்ப்படுத்துவதற்க்காக இல்லயா?

அது என்ன அப்ப சிந்தனைச்சுரப்பியா?

அட வியட்னாம் படிஅளந்ததை அமரிக்கா செலவு செய்து முடித்துவிட்டதனால்த் தான் இப்படி அமரிக்க ஆடுகிறதோ?

என்ன அர்புதமான சிந்தனை

பொறுக்கித்தின்னித் தத்துவங்கள் என்றால் அட அது இப்படித்தானா?

அப்ப வியட்நாம், எரித்திரியா, ஆப்கானிஸ்தான், இப்பிடி கனக்க நாடுகள் சுத்ந்திரம் அடஞ்சாச்சு..... நீங்கள்தான் இன்னுமும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னால அறிவை வளர்க்கவே இல்லை....

அவர் குறிப்பிட்டது எந்த போராட்டமும் வெளி நாடுகளின் துணை இல்லாமல் வெல்லவில்லை என்று தான். நீங்கள் சொன்ன 3 நாடுகளில் எரித்திரியா தவிர்ந்த மற்றைய இரு நாடுகளும் ரஷ்ய மற்றும் அமெரிக்க துணையுடன் போராடி வென்ற நாடுகள்.

அத்தோடு எதியோப்பியாவிற்கு உதவி வந்த சோவியத் யூனியனின் உடைவும், அதை தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டின் மூலம் நடந்த பேச்சு வார்தையின் வெற்றியாக நடந்த வாக்கெடுப்பு மூலமே இறுதியில் எரித்தியா சுதந்திரம் அடைந்ததை மறுக்க முடியாது தானே.

ஆயுதப் போராட்டம் அரசுகளை சிந்திக்க வைக்கவே அன்றி அரசுகளை வெற்றி கொள்வதற்கு அல்ல.

விடுதலைப் புலிகள் கூட தங்கள் மண்ணை மக்களைக் காக்கத்தான் போராடுகின்றார்களே தவிர சிறீலங்கா அரசை வீழ்த்துவதற்கு அல்ல.

விடுதலைப் புலிகள் சர்வதேச அரசியல் கோட்பாடுகளை மதிக்கின்றார்கள் என்பதனாலேயே அவர்களுக்கு சர்வதேச மஸ்தியஸ்தம் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதற்கு உள்ள சோடிக்கப்பட்ட காரணிகளை விடுதலைப் புலிகள் வலுவிழக்கச் செய்யவே முயன்று கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் சமாதானத்தை இன்று அல்ல எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளனர். திம்பு தொடங்கி இறுதியில் ஜெனிவா வரை அவர்களின் சமாதானத்துக்கான பயணமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைப் புலிகளையும் சர்வதேச பயங்கரவாதிகளையும் பகுத்துக்காட்டக் கூடிய விடயங்களை விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கு தங்கள் நடவடிக்கைகள் மூலம் காட்ட வேண்டியதே 30க்கும் மேலான ஆண்டுகளாக நடக்கும் ஆயுதப் போரின் இறுதிப் பயனை மக்கள் அடைய உதவும்

சமாதானம் போர் தேர்தல் இவை எல்லாம் ஜனநாயகத்துள் விரும்பியோ விரும்பாமலோ கலந்தவிட்ட விடயங்கள் தான்.

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானமும், வசம்புவும் கண்களை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனைகள்.

தமிழ்த் தேசியத்துக்கு குளிபறிக்கத்துடிக்கும் அரசவாதத்தின் சகுனிப்படையின் கூலிகள்.

இந்த துரோகக்குணம் படைத்தவர்களின் வாழ்க்கையின் கேவல வரலாறு உலகம் அறியாதது அல்ல.

சமூகமரியாதையின் வாசல் வரவேற்க்காத கழிசடைச் சீவியங்கள்

மனித உடம்பு வடிக்கும் பச்சை இரத்தத்தில் பஞ்சம் பிழைக்கின்ற அயோக்கியர்கள்.

யார் குற்றி இருக்கலாமெண்டு நீங்கள் சொல்கிறீர்கள்,ப்லொட்டோ?

உங்களின் ஆதங்கம் 'யார்' என்பதிலே இருப்பதாகவே படுகிறது.இங்கே அரிசி குத்தப்படுவது தான் முக்கியமே தவிரா யார் என்பது அல்ல.

இதைத் தான் நானும் சொன்னேன் அதற்கு நீங்கள் பொழிப்பு கொடுத்திருக்கிறீர்கள். வவுனியாவிலோ நெடுந்தீவிலோ அல்லது வேறு எங்கோ அரசுடன் குலாவிக் கொண்டிருப்பவர்களை நான் எம்மவர்கள் என்று சொல்லவில்லை. விழுந்தடித்துக் கொண்டு முத்திரை குத்துவதில் நீங்கள் காட்டிய அவசரம் நான் எழுதியதை வாசிப்பதில் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பரவாயில்லை, இதற்காக நானும் அதே வேலையை செய்வதாக இல்லை. தொடர்ந்து கருத்து பரிமாற்றங்களை செய்வோம் நாரதரே.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குறிப்பிட்டது எந்த போராட்டமும் வெளி நாடுகளின் துணை இல்லாமல் வெல்லவில்லை என்று தான். நீங்கள் சொன்ன 3 நாடுகளில் எரித்திரியா தவிர்ந்த மற்றைய இரு நாடுகளும் ரஷ்ய மற்றும் அமெரிக்க துணையுடன் போராடி வென்ற நாடுகள்.

அத்தோடு எதியோப்பியாவிற்கு உதவி வந்த சோவியத் யூனியனின் உடைவும், அதை தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டின் மூலம் நடந்த பேச்சு வார்தையின் வெற்றியாக நடந்த வாக்கெடுப்பு மூலமே இறுதியில் எரித்தியா சுதந்திரம் அடைந்ததை மறுக்க முடியாது தானே.

சரி இண்றும் ஆப்கானும் , ஈராக்கும், போராடுகிண்றன... அதோடு சேர்ச்சின்னியா, கொங்கோ, தென்சுடான், நேபாளம், இந்தோநேசியா, பிலிப்பீண்ஸ், இந்தியாவின் பலமானிலங்களில், பாக்கிஸ்தானில், இப்படி இன்னும் பலநாடுகளில் போராட்டம் நடக்கின்றது...

அங்கெல்லாம் கேக்காத சமாதானக்குரல்களும்... மற்றய நாடுகளின் தலையீடுகளும் ஈழத்துக்கு மட்டும் இருப்பதன் இரகசியம் என்ன....??? யாருக்கு என்ன தேவை...??? இல்லை சிங்களவன் தோற்றுப்போக கூடாது என்னும் அக்கறையா...??

எங்கெல்லாம் அரசதரப்பு தோல்வி கொள்கிறதோ, அல்லது தோல்வியுறும் நிலையில் இருக்கிறதோ.... அங்கெல்லாம்தான் பேச்சுவார்த்தையும் சமாதானமும் போதிக்கபடுகிறது....! மற்றய இடங்களில் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை....!

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

சோவியத் அமெரிக்க பனிப்போர் காலத்தில்தான் வியட்னாம் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் சோவியத்துக்கு எதிராகவும் சோவியத் சார்பு எதியோப்பியாவுக்கு எதிராக அமெரிக்க சார்பு எரித்திரியா வெல்லக்கூடிய ஒரு ஆயுதப் போரை செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. வியட்னாம் விடுதலைப்போருக்கு சோவியத் யூனியன் மட்டும் அல்ல சீனாவும் மிகப்பொரிய உதவிகளை செய்தது வெளிப்படையான வரலாறு.

ஆனால், தமிழர் தேசியப் விடுதலை மேற்குறித்த மூன்று போராட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்கக்கூடியது அல்ல. எமது போராட்டம் இன்று எதிர்கொள்ளும் உலக யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு எம்மால் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்க முடியாத நெருக்கு வாரத்தின் அளவை புலிகளின் தலைமை தாம் பேசத் தாயாரென அறிவித்ததில் இருந்து உணர்ந்து கொள்ள ஆபார அரசியல் அறிவு தேவை இல்லை.

தற்போதையை உலக வல்லரசும் பிராந்திய வல்லரசும் எமக்கு நேசக்கரம் நீட்டத் தயாரில்லாத நிலையில் இருந்தாலும் கூடப்பரவாயில்லை...... களத்திலும் புலத்திலும் புலிகளை பலவீனப்படுத்தும் பல இரகசிய நிகழ்ச்சி நிரல்களுக்கு இவர்களின் பங்களிப்பை செய்யாமல் இருப்பதே மேலானது என்பதை நாம் விவாதித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.

ஒரு மிகச்சிறிய தேசிய இனம் இலகுவில் வெல்லமுடியாத ஒரு இராணுவ பலத்தில் நின்று தனது அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்க கோருவது ஒரு காலவரையறைக்குள் நிகழாது போயின் அதன் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிடுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை முன்னுணர்ந்து கொள்ள காய்த்தல் உவத்தல் அற்ற நடுநிலை விமர்சன பார்வை அவசியம்.

ஆனால், தமிழர் தேசிய விடுதலை எதிர்கொள்ளும் புறநிலை யதார்த்தத்தை எம்மில் பலர் இங்கு விளங்கிக்கொண்டதாக தெரியவில்லை. தமிழ் மக்களின் பலம் பலவீனம் இரண்டும் இங்கு கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

சமாதானம் என்பதை ஏதோ சரணாகதி என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொண்ட, அபத்தமான அரசியல் சிந்தனையில் ஊறிப்போனவர்களின் ஆய்வுகளில் இருந்து, சாதகமான வினைத்திறன் ஏதும் கிடைக்கமாட்டாது என்பதைவிட பாதகமான விளைவுகளுக்கே வழிகோலும் என்பதை நிரூபிக்க அமிலப்பரிசோதனை ஒன்றும் தேவை இல்லை.

காலம் இவர்களுக்கு கற்பிக்க போகும் கசப்பான பாடத்திற்கு கன நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் இங்கு கீழ் கோடிட்டுக் காட்டவேண்டிய செய்தி.

Alternative எழுதியது:

//அத்தோடு எதியோப்பியாவிற்கு உதவி வந்த சோவியத் யூனியனின் உடைவும், அதை தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டின் மூலம் நடந்த பேச்சு வார்தையின் வெற்றியாக நடந்த வாக்கெடுப்பு மூலமே இறுதியில் எரித்தியா சுதந்திரம் அடைந்ததை மறுக்க முடியாது தானே//

மீண்டும் வரல்லாற்றைத் திரிக்கிறீர்கள் ,எதியோபீயாவின் பொருளாதார நெருக்கடிகளும் எரிட்ரிதிரிய மக்களின் ஆயுதப் போராட்டமும் தான் அவர்களுக்கு விடுதலையைத் தந்தது.இங்கே அமெரிக்கா வந்து அவர்களுக்குப் பிச்சை போடவில்லை. உமது எருத்ரியா சம்பந்தாமன புனை கதைகளுக்கான மூலம் எங்கிருந்து வருகிறது?

தனது இராணுவ நலங்களுக்காக அமெரிக்காவே எதியோப்பிய அரசுக்கு முண்டு கொடுத்து வந்தது,ஈற்றில் எரித்ரிய மக்களின் ஆயுதப் போர் தான் அமெரிக்காவையும் எதியோப்பியாவையும் மண்டி இட வைத்தது.வரலாறு தெரியாமல் கதையளப்பது தான் உமது கருத்தாடலாக இருகிறது இங்கே.உமது ஓட்டையைச் சுட்டிக் காட்டினால் எனக்கு முதிரை குத்துகிறார்கள் எண்ட ஓலம்.உங்கள் வேடங்கள் இன்னும் எத்தனை நாளுக்கு இங்கே செல்லும் மாற்று?

For the next 30 years, Eritrea's plight was virtually ignored by the international community. Frustration at the lack of room for political manoeuvre finally resulted in the launch of the armed struggle. Ethiopia's Haile Selassie was supported for decades by the United States for geopolitical and Cold War reasons. For the US's unrestricted use of a military base, Selassie was given "aid" (i.e. military aid). This unfortunately was used against Eritrean secessionists and Ethiopian guerillas in brutal wars.

1961 - 1977 From guerrilla to an army

The armed struggle began in September 1961 when a contingent of eleven fighting men, under the leadership of Idris Hamid Awate formed the first armed forces of the Eritrean Liberation Front (ELF). By mid 1962 some 500 men were successfully harassing Ethiopian troops around Agordat. On December 19th 1962, a group of policemen deserted to the ELF in Massawa, taking with them rifles machineguns, and ammunition

In the first decade, attacks by ELF guerrillas were answered by Ethiopian reprisals, often directed against any civilian population. Ethiopian forces burned villages, sometimes massacring hundreds of villagers. Waves of refugees began to pour into Sudan. As a result the sympathy that might once have existed among some sectors of the population for a close relationship with Ethiopia rapidly disappeared.

The period 1970 to 1974, when the ELF and the newly-emerged EPLF fought a civil war, is a bleak period in Eritrea's history. This ended when the revolution in Ethiopia made it imperative for the fronts to hold a common position to confront any proposals that might come from Addis. By this time the EPLF was establishing itself as a powerful force. During 1974/75 it further strengthened itself by successfully recruiting Eritreans with military training from the Ethiopian police force in Eritrea, and from Eritrean commando units which it had successfully defeated. A large influx of young people joined the EPLF after 56 students were garroted with electric cable in Asmara in January 1975.

By mid 1976, began the launching of the 'Peasant Army' offensive against Eritrea. The Eritrean guerrilla forces (estimated to number 20,000) managed to win considerable victories against the occupying Ethiopians. The EPLF laid siege to Nacfa in September 1976. In 1977 they took Karora, Afabet, Elaberet, Keren and Decemhare. They also surrounded Asmara, Eritrea's capital and organized the escape of 1,000 political prisoners from Asmara's jail.

The ELF took Tessenei, Agordat and Mendefera. By the end of 1977 the mainland Massawa was in the hands of the EPLF, which now had captured tanks and armored vehicles. They were close to final victory in early 1978, but had not planned on the Soviet Union's crucial intervention in the form of military aid for Mengistu's regime in Ethiopia.

History pics (Ertra.com)

1977 - 1988 Soviet intervention

The Soviet Union intervened in December 1977. The Soviet navy, by shelling EPLF positions from their battleships, prevented the EPLF from taking the port section of Massawa. A massive airlift of Soviet tanks and other arms allowed the Ethiopian army to push back the Somali forces in the Ogaden, and by May/June 1978 these troops and heavy Armour were available for redeployment in Eritrea. In two offensives the Ethiopian army retook most of the towns held by the Eritrean fronts.

For the EPLF the return to the northern base areas was 'a strategic withdrawal'. It minimized civilian and military casualties. It also allowed the EPLF to give battle at strategic points of its choosing, to evacuate towns and to remove plant and equipment to its base area.

For the ELF the story was different. In attempting to hold territory its casualties were high. The balance of military power between the fronts had now shifted strongly towards the EPLF. Recognizing its weaker position, worsened by ethnic disputes, the ELF began in 1979 to respond to the Soviet proposals. In return for its agreement to autonomy within Ethiopia the ELF was offered the reins of government in Eritrea, while the EPLF stood for a secular and socialist state of Eritrea, rejecting ethnic differences.

A bitter civil war between the ELF and the EPLF resulted, that the EPLF finally won in 1981. ELF fighters either changed sides or fled to Sudan, and the EPLF became the single front with a military presence in Eritrea. The EPLF successfully resisted offensives in 1982 and 1983, while the Dergue organized genocidal responses to eliminate the broad civil support to EPLF liberation movement. But the EPLF lines held and the morale and confidence of the EPLF were given massive boost while the Ethiopian army was demoralized. Its net effect was to strengthen the range of military equipment at the EPLF's disposal.

Ethiopian forces tried to weaken the morale of the population of Eritrea by hanging

captured EPLF fighters and civil collaborators in the center of the Eritrean villages.

Through most of the war, Ethiopia occupied the southern part of Eritrea. The EPLF had to settle in the inhospitable northern hills towards the Sudanese border. These hills became a safe haven for the families of soldiers and the orphans and disabled. Consequently, much of the regions around Afabet and Nacfa in Sahel province became home to makeshift homes, schools, orphanages, hospitals, factories, printers, bakeries etc. in an attempt to live life as normally as possible under extraordinary conditions. Most structures were built either into the ground or in caves to avoid being bombed by Ethiopian jets. The steep narrow areas were chosen as they were the hardest for the jets to negotiate.

In 1984, while Mengistu was spending lavishly on a celebration of the tenth anniversary of his glorious revolution, one-sixth of the population of Ethiopia was in danger of dying of starvation, and ten thousand people per week were already dying. As part of the "politics of famine", Mengistu began using his power to block delivery of grain to areas he considered hostile to him, most notably Tigray and Eritrea. Innocent people starved to death while grain sat undelivered.

1988 - 1993 The victory

At the end of the 1980s, the Soviet Union informed Mengistu that it would not be renewing its defense and cooperation agreement with Ethiopia. With the withdrawal of Soviet support and supplies, the Ethiopian Army's morale plummeted and the EPLF began to advance on Ethiopian positions. In 1988, the EPLF captured Afabet, headquarters of the Ethiopian Army in northeastern Eritrea, prompting the Ethiopian Army to withdraw from its garrisons in Eritrea's western lowlands. EPLF fighters then moved into position around Keren, Eritrea's second largest city.

Series of stamps issued in 1988 on the occasion of the "victory" of Ethiopia. In the

the same year the Ethiopian army suffered heavy losses on the EPLF and the TPLF!

The EPLA (military branch of the EPLF) by this time includes twelve infantry brigades (some 20,000 fighters), 200 tanks and armored vehicles, and a fleet of fast attack speedboats, all captured in battle and in guerrilla raids from the Ethiopians. EPLA's disadvantageous combat ratio ranged from 1:4 to 1:8, but the battlefield mortality ratio was at least ten Ethiopians to one Eritrean, due to better trained and more committed fighters.

In 1990 the EPLF had captured the strategically important port of Massawa, and they entered Asmara, now the capital of Eritrea, in 1991. The Ethiopian army under Haile Mariam Mengistu (an army officer who deposed Haile Selassie in 1974) intensified the war against Eritrea, but it was easily defeated in 1991 after Mengistu fell from power.

It was at 10:00 a.m. on May 24, 1991 that Asmara residents realized EPLF fighters had entered their city. In a spontaneous outburst of happiness and relief, Asmarinos flung open their doors and rushed into the streets to dance in jubilation, some still in their pajamas. The dancing lasted for weeks.

On May 24th 1991, after thirty years of relentless struggle, the

EPLF entered Asmara to a universal and delirious welcome.

At a conference held in London in 1991 the Ethiopian People's Revolutionary Democratic Front (EPRDF), who were now in control of Ethiopia having ousted Mengistu and were sympathetic to Eritrean nationalist aspirations, accepted the EPLF as the provisional government of Eritrea. So began the long process towards independence and international legitimation of Eritrea as a country in its own right.

In April 1993 a referendum was held in which 1,102,410 Eritreans voted; 99.8% endorsed national independence and on May 28 Eritrea became the 182nd member of the UN. Later that year, Eritreans elected their first president, Isaias Afewerki, formerly secretary-general of the EPLF.

Thus it is now eligible to receive international aid to help reconstruct and develop its shattered economy. Since establishing a provisional government in 1991, Eritrea has been a stable and peaceful political entity, with all political groups represented in the transitional government.

The war has had a devastating effect on Eritrea. Around 60,000 people lost their lives, there are an estimated 50,000 children with no parents and 60,000 people who have been left handicapped. However, there is now great optimism with people pulling together to rebuild the country. The National Service, announced on July 14th 1994, required all women and men over eighteen to undergo six months of military training and a year of work on national reconstruction. This helped to compensate for the country's lack of capital and to reduce dependence on foreign aid, while welding together the diverse society.

Series of stamps issued on the occasion of May 24th 1999

celebration of the eight anniversary of Eritrean Independence

1997 The border conflict

Following Eritrea's independence in 1993, a boundary commission had been established to cover the Yirga Triangle (Badme) and other disputed areas. In 1997, the Ethiopian authorities issued a map of the Tigrayan Administrative Region which confirmed Tigrayan expansionism. The map proved to be the end of the good relations between Eritrea and Ethiopia, and resulted in an armed conflict in August 1997 and an all-out war in May 2000, when Ethiopia occupied large parts of Eritrea. An estimated 1.1 million Eritreans have been displaced by Ethiopian aggression and an estimated 100.000 Ethiopian and 20.000 Eritrean soldiers were killed in this two year war.

On June 19th 2000 both parties agreed on a ceasefire and on December 12th 2000 a peace agreement was signed in Algiers. A 4200-strong multinational UN peacekeeping force (UNMEE) was deployed for the de-mining and demarcation of the border.

On April 13th 2002 the Permanent Court of Arbitration in The Hague published the conclusions of the Eritrea-Ethiopia Boundary Commission. The lands bordering the Yirga Triangle, areas, including Badme in the Central zone and Eastern Sector and border town Tserona have been awarded to Eritrea. The border towns Zalambessa and Alitena (Central Sector) and Bure (Danakil Depression) were awarded to Ethiopia.

http://home.planet.nl/~hans.mebrat/eritrea-history.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.