Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

Featured Replies

a5502e0cad.jpg

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

  • தொடங்கியவர்

ஆயுத உதவியை நிறுத்திவிட்டு சமாதான முயற்சிகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் - யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை

- பண்டார வன்னியன் 21/09/ 2006 16:41

சிறிலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்கும் நோக்கத்தை அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் நிறுத்திவிட்டு சமாதான முயற்சிகளை ஊக்குவிக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என யாழ். ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவிற்கான புதிய அமெரிக்கத் தூதுவரிற்கு யாழ்.ஆயரால் அனுப்பப்பட்ட வாழ்த்துச்செய்தியில் அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா போன்ற நாடுகளிற்கான ஆயுத உதவியை நிறுத்திவிட்டு சமாதான முயற்சிகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என இவர் அழைப்புவிடுத்துள்ளார்.

http://sankathi.org/news/index.php?option=...id=538&Itemid=1

கேள்வி: ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் என்ன முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைக்கப் போகிறீர்கள்? இந்தப் பேச்சு வெறும் பத்தோடு பதினொன்றுதானா? அல்லது உருப்பாடியான விளைவுகள் ஏற்படுமா?

பதில்: ஒஸ்லோப் பேச்சுக்கள் என ஊடகங்களில்தான் குறிப்படப்படுகின்றதே தவிர எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும் பேச்சுக்கானதொரு சூழல் உருவாகவில்லை. சிறிலங்காப் படைகள் பெரியதொரு இன அழிப்பு யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. படுகொலைகளும், இடப்பெயர்வுகளும், ஆட்கடத்தல்களும் எனப் பெரும் அவலநிலையை தமிழ்மக்கள் மீது திணித்துக்கொண்டு பேச்சுவார்த்தை எனக் கதைப்பது அர்த்தமற்றது. இவ் அவலங்களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்.

இவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிக்காமல் இழுத்தடிக்கும் சந்தர்ப்பத்தில் பேச்சுக்களைப்பற்றி சிந்திக்க முடியாதவர்களாகவே நாங்களிருப்போம்.

கேள்வி: அமைதிப் பேச்சில் நீங்கள் கலந்துகொள்ள உங்களுக்கு நெருக்குதல்கள் ஏதாவது உண்டா?

பதில்: அமைதிப் பேச்சுக்களில் கலந்துகொள்ளும்படி சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. நாங்களும் அமைதிப் பேச்சுக்களை புறந்தள்ளவில்லை. அமைதி வழியில், யுத்தமற்ற வழியில் எமது மக்களுக்குத் தீர்வு காண விரும்புவதையே எமது தலைமைப்பீடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் அதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் சீர்குலைத்து வருகின்றது. எம்மைப் பொறுத்த வரையில் சிறிலங்கா அரசாங்கம் வன்முறைகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சு மேசைக்கு வருமாகவிருந்தால் நாமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

ஆனால் இந்த நிலையில் இன்று சிறிலங்கா அரசாங்கம் அப்படி இல்லை. அது போர் வெறிகொண்டு பெரும் இன அழிப்பில் இறங்கிவிட்டதால் இதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: இலங்கைப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

பதில்: இலங்கையை பொறுத்தவரையில் தமிழர்களின் தேசத்தை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைத் அடையக்கூடிய சூழல் உருவாகின்ற போதே இலங்கைத்தீவில் அமைதி பிறக்கும்.

சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமிழர்களை ஆக்கிரமிக்க வேண்டும் தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என எண்ணங்கொண்டு செயற்படுவார்களேயானால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை. இந்தத் தீவு அமைதியடையப் போவதுமில்லை.

ஆகவே தமிழ் மக்களை சுதந்திரமாக சுயநிர்ணய அடிப்படையில் அரசமைத்து நிம்மதியாக வாழவிடுவார்களேயானால் அதுவே தீர்வுக்கு சிறந்த வழியாகும்.

சு.ப.தமிழ்ச்செல்வன்

http://www.eelampage.com/?cn=28905

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

ஒரு சிறிய பறவையே தன்னை பொடச் சட்டத்தில் தானாகவே தடை செய்ய முன் சமாதனமாக வேறு பெயரில் பதிவு செய்து விட்டு சுய தடை செய்யும் போது மகிந்த சிந்தனை என்ன சும்மாவா? :P :P

எந்த தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் உண்டு....!

உதாரணம்...

http://www.eelampage.com/?cn=28909

http://www.atimes.com/atimes/South_Asia/HI22Df01.html

  • தொடங்கியவர்

எளிதில் தீர்க்கமுடியா போர் குறித்த சிக்கலான சூத்திரங்கள் .

243873368_b1d8945c3c.jpg

பழுத்த இலைகள்

உதிர்ந்து விடைகொடுக்க

சாம்பர் வானக்குதிரையிலேறி

மிதக்குமென் பயணம்

மழையாக முடிவுறுகிறது

யுத்தபூமிகளில்

கந்தக வெடிலையும்

இரத்தச் சகதியையும் சுமந்தபடி

ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை

தமக்கான இரையாக்குகின்றன

வட்டமிடும் வல்லூறுகள்

புறமுதுகிட்டு

பிள்ளை ஓடினானெனின்

முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்

போரை விதந்தேத்திய

கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி

இறந்துபோன பிள்ளைகளை

நினைவுகூர்கிறாள்

தன்முலைகளை அறுத்தெறிந்து

ஓர் அரும்பு

மலர்வதைப் போல

மரணித்தவர்களை உயிர்ப்பிக்கவும்

காற்று வீசுவதைப் போல

விழுப்புண்களை ஆற்றவும்

இயற்கையால் முடியவில்லையெனும் ஆதங்கத்தில்

பரிதி

பூமிபிளந்து

தனக்கான புதைகுழியைத் தோண்டத்தொடங்குகின்றது

அடர்ந்த காட்டில்

மூன்று நாட்களாய் சாப்பிடாதலையும்

ஒரு கெரில்லாப்போராளி

புழுக்கள் மிதக்கும்

அழுக்குத்தண்ணீரை அருந்துகையில்

விழிகளில் விரியும்

மக்களுக்கான கனவுகள்

பிரசவித்துவிடுகின்றன

எளிதில் தீர்க்கமுடியா

போர் குறித்த சிக்கலான சூத்திரங்களை.

2006.09.13

http://djthamilan.blogspot.com/2006/09/blo...og-post_15.html

அய்யா சமாதானம் நீங்கள் கைய்யெழுத்தாக இட்டிருக்கும்

There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble.

பற்றி கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

push-magi-l.jpg

Tom Pachayaa (GB): "மஹிந்தப்பு .வாங்கோ... என்ன .... வாய் மணக்குரமாதிரி யிருக்கு?"

Boru Maththayaa (MR): " ...இல்ல மத்தயா.... அது வந்து பாருங்கோ...என்ட மனிஷி காலையில 'வெங்காய சூப்' தான் செஞ்சி தந்தவள்... பின்ன இரண்டு கிலாசு கசாயமும் குடிச்சனான். நாட்டிட நிலமைய பற்றி நினச்சே எனக்கு நித்திர வாரது குறைவு. அது தான் ஊரில வெதமாத்தயா கசாயம் செஞ்ஞி தந்தவர்... நல்ல தூங்கச் சொல்லி...

Tom Pachayaa (GB): அது சரி ... இப்ப 'Trinco' வை நல்ல பாது காப்பா தான் வச்சியிருக்களே?

Boru Maththayaa (MR): ஓம் ..ஓம் நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் செட்டப் பன்னி வச்சிருக்கு....மாத்தயா.... நீங்க ஈரானுக்கு அடிக்கைக்க அது ரெடியா இருக்கும்

Tom Pachayaa (GB): ...ம்ம்ம் ... கப்பல் வேலை எல்லாம் சரிதானே....மற்றது பின்லாடன்ட ஆக்கல் அங்க திரியினமாம் ... உது சரியில்ல...எங்கட ஆக்கல் என்ட கழுத்த் நசிக்க பாக்கிராங்க.... உடனே எதாவது செய்யனும்... சரியே...

Boru Maththayaa (MR): எல்லாம் சரி மாத்தயா... இப்பவே ஒரு Call தான் மாத்தயா... என்ட தம்பி மார்கள் 'நியமட வெடே தெனவா ... மாத்தயா..

Tom Pachayaa (GB): Cool man ! do it now man... and don't foget the 'வட்ட மேச' meeting

Boru Maththayaa (MR): "Budhu பிஹிட்டய்" ... மாத்தயா

hisbulr8.jpg

hisbulr8.jpg

செய்தியறிக்கையில்

பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஹெஸ்பொல்லா தலைவர் உரை

தமிழோசை

இஸ்ரேலுக்கு எதிராக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி - ஹெஸ்பொல்லா தலைவர்

இஸ்ரேலுக்கு எதிராக தாம் ஒரு தெய்வீக, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நசருல்லா அவர்கள், பெய்ரூட்டில் உள்ள லெபனானிய தீவிரவாதக் குழுவின் பேரணி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜூலையில் நடந்த ஒரு மாதகால மோதலுக்குப் பின்னர் முதல் தடவையாக பொது மேடையில் தோன்றிய நசருல்லாவுக்கு, இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலில் நிர்மூலமான லெபனானிய தலைநகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில், பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

பொதுமக்களின் உறுதியைப் பாராட்டிய அவர் லெபனானின் மக்கள் தொடர்ந்து பலமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது பச்சை மற்றும் மஞ்சள் பதாதைகளைத் தாங்கிய கூட்டத்தினர் வெற்றி கீதங்களை இசைத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் படுகொலைசெய்யப்படவும் தயாராக இருப்பதாகவும் நசருல்லா கூறினார்

BBC Tamil oosai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.