Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பதற்றம்
செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014 23:25
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் இன்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று மாலை எட்டு மணியளவில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனையறுப்பான் எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
கள்ளச்சாராய விற்பனையாளர்களைக் கைது செய்வதற்காக அங்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.
போலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்ஹ (60217) மற்றும் விக்கிரமசிங்ஹ (43029) ஆகியோர் மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பொலிஸாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகக் கூறப்படும் கிராமவாசியான வள்ளியம்மை (வயது 52) என்பவர் வயிற்றில் காயம்பட்ட நிலையிலும், ஆறுமுகம் சறோஜினி (வயது 24) என்பவர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையிலும் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
கொக்கட்டிச்சோலைப் பகுதிக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/121884-2014-08-12-17-56-11.html
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிசின்ரை நம்பர் போட்டு நியூஸ் சொல்லுற அளவுக்கு சிறிலாங்கா முன்னேறீட்டுது. :lol:

காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்! 3 காவல்துறையிரும் 2 பொதுமக்களும் படுகாயம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காவல்துறையினர் தரப்பில் மூவரும் பொதுமக்கள் தரப்பில் இருவருமாக ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்:

நேற்று செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா பனையறுப்பான் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையாளர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்த சென்றபோது எட்டுப்பேர் அடங்கிய காவல்துறை அணியினர் மீது பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதன்போது 3 காவல்துறையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காவல்துறையினரின் ஜீப் வாகனமும் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் படுகாயமடைந்த வீரசிங்ஹ (60217), விக்கிரமசிங்ஹ (43029) ஆகிய இருவரும் , பொதுமக்கள் தரப்பில் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து வள்ளியம்மை (அகவை 50), ஆறுமுகம் சறோஜினி (அகவை 24) ஆகிய இருவருமாக நால்வரும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அவசர சிகிற்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு நிலவும் பதற்றம் காரணமாக மேலதிகமாக காவல்துறையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.http://www.pathivu.com/news/33100/57/3-2/d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புதன், ஆகஸ்ட் 13, 2014 - 03:21 மணி தமிழீழம் | மட்டக்களப்பு, மதிரூபன்

DSC04283(1).JPG

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  (படங்கள்: எஸ்.ரவீந்திரன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்)

DSC04290(1).JPG

DSC04267(1).JPG

DSC04279(1).JPG

DSC04294(1).JPG

DSC04301(1).JPG

DSC08163(1).JPG

DSC08164(1).JPG

IMG_6104.JPG

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் இன்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதென்ன  பொது மக்கள்

கள்ளர் என  எழுதவேண்டியது தானே...

காவல்த்துறையினர்  நலமடைய  வேண்டுகின்றேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.