Jump to content

நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன?


Recommended Posts

நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன?

 

 

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் போராட்டமின்றி சரணாகதி அடைவதற்கு பல காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது நல்ல பந்து வீசப்படுகிறது என்பதும் கூறப்படுகிறது.

 

விராட் கோலி, புஜாராவை முன் வைத்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் நல்ல பந்து ஏன் வீச அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் ஒரு புறம் வைத்துக் கொள்வோம்.

 

கிரிக்கெட்டில் ஆடமுடியாத, மிகச்சிறந்த பந்துகளுக்கு எப்போதும் அவ்வளவாக விக்கெட்டுகள் விழுவதில்லை. குறிப்பாக வேகப்பந்துக்குச் சாதகமான ஆட்டங்களில் பந்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் பந்து மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் செல்லும்போது அது குட் பால் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பந்தை கணித்து ஆடாமல் விடும் போது அது சாதாரணப் பந்தாகவே இருந்து விடுகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் அபாயகரமான பல பந்துகளை, விக்கெட்டுகளை வீழ்த்தும் அச்சுறுத்தலான பல பந்துகளை உலகின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களுக்கு வீசியுள்ளார். ஆனால் விக்கெட்டுகள் அவருக்கு அந்தப் பந்துகளில் கிடைத்ததில்லை. மாறாக அந்த நல்ல பந்தை எதிர்நோக்கியே அச்சப்படும் பேட்ஸ்மென்கள் சாதாரண பந்தை சொதப்பலாக விளையாடி அவுட் ஆகிவிடுவார்கள்.

 

கிளென் மெக்ரா அதிகப்படியான விக்கெட்டுகளைக் குவித்தது நல்ல பந்துகளில் அதிகம் அல்ல என்பதும் நாம் அவரது பந்து வீச்சை வீடியோ ஆய்வு செய்தால் தெரியவரும். அதேபோல் ஷேன் வார்ன் எடுத்த பாதி விக்கெட்டுகள் பேட்ஸ்மெனை மனரீதியாகக் குழப்பிவிட்டு எடுக்கப்பட்டவையே. காரணம் அவரது அந்த பெரிய ஸ்பின் பந்து விழுந்து விடும் என்ற அச்சத்தில் அவரது நேர் பந்துகளை ஆடாமல் விட்டு, அல்லது தவறாக ஆடி அவுட் ஆன வீரர்களே அதிகம்.

 

இங்குதான் சச்சின் டெண்டுல்கரின் திறமையை நாம் விதந்தோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் ஷேன் வார்னின் பந்துகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியே எடுத்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவர் ஒரு தொடர் முழுதும் பின்னி எடுத்தார். ஷேன் வார்னை சகல விதமாகவும் அவரால் ஆட முடிந்தது. மேலேறி வந்து தூக்கி அடித்தல் அல்லது ஸ்வீப், அல்லது ஸ்லாக் ஸ்வீப், விக்கெட் கீப்பர் பின்னால் பெடல் ஷாட் ஆடுவது, ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடிப்பது பின்னால் சென்று கட், மற்றும் புல் ஆடுவது என்று சகல ஷாட்களையும் அவர் வார்ன் பந்துகளில் அடித்துள்ளார்.

வார்ன் அப்போது நல்ல பந்துகளை வீசவில்லையா? வீசினார். ஆனால் அது மிகநல்ல பந்தாக விடாமல் சச்சின் ஆடியதுதான் ஆதிக்கத்திற்குக் காரணம்.

ஆலன் டோனல்ட் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் தொடுத்தபோது ஸ்டீவ் வாஹ், கிரெக் ப்ளூவெட், டேமியன் மார்ட்டின், கில்கிறிஸ்ட் ஆகியோர் பின்னி எடுத்தனர், காரணம் நல்ல பந்துகளை அவர்களை வீச விடாமல் செய்தது.

 

மிகச்சிறந்த இந்திய உதாரணம் விரேந்திர சேவாக்:

சேவாக் ஏன் பெரிய பேட்ஸ்மென் என்றால், அவர் பவுலர்களை நல்ல பந்துகளை வீச அனுமதிக்க மாட்டார். எப்போது கங்குலி சேவாகைத் துவக்க வீரராகக் களமிறக்கினாரோ அதன் பிறகே 1ஆம் நிலையில் களமிறங்கிய திராவிட் பெரிய அளவுக்கு இந்திய அணிக்காக பல டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் என்பதைப் புள்ளி விவரங்களைக் கொண்டு சுலபமாக நிறுவ முடியும்.

 

2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் சேவாக் ஒரு 40 அல்லது 45 ரன்களை விரைவில் அடித்த பிறகு திராவிட் களமிறங்குவார் பவுலர்கள் சேவாகிற்கு வீசிவிட்டு திராவிடிற்கு வீச வரும்போது திண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில்தான் அடிலெய்டில் திராவிட் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 78 நாட் அவுட் என்று எடுத்து இந்தியாவை அரிய ஒரு வெற்றிக்கு இட்டுச் செல்ல முடிந்துள்ளது.

 

அதே போல் பாகிஸ்தானில் சேவாகுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய திராவிட் அவருடன் இணைந்து சதமெடுக்க இருவரும் இணைந்து 400 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர்.

 

இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அஜந்தா மெண்டிஸின் புதிர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சச்சின், திராவிட், லஷ்மண், கங்குலி என்று பெரும் தலைகள் சொற்ப ரன்களில் வெளியேற சேவாக் மட்டும் ஒருமுனையில் அனைத்துப் பந்துகளையும் சாத்தி எடுத்து இரட்டைச் சதம் கண்டு கடைசி வரை ஆட்டமிழக்கவேயில்லை.

 

திராவிடின் எழுச்சி பற்றி பேசும்போது நாம் சேவாகின் பங்கை மறந்துவிடலாகாது.

கோலி, தவான், புஜாரா ஆகியோரது பிரச்சனைகள் என்ன?

 

கோலி பேட்டிங் உத்தி ஐபிஎல் பாணியில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஆடினாரே, நியூசிலாந்தில் ஆடினாரே என்று கேட்கலாம். தவானுக்கும் இது பொருந்தும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய இந்தியா பாணி களம் அமைக்கப்பட்டதே அங்கு அவர் சோபித்ததற்குக் காரணம். ஆனால் ஜோகன்னஸ்பர்கில் முதல் நாளில் ஸ்டெய்ன், மோர்கெலுக்கு எதிராக சதம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அங்கு அவர் ஷைன் ஆனதற்குக் காரணம் அவரது பலவீனமான பகுதிகளில் பீல்டிங் சரியாக அமைக்கப்படவில்லை.

 

இங்கிலாந்து அதனை, குறிப்பாக ஆண்டர்சன் பிடித்து விட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்சர்கள், பவுண்டரிகள் அடிப்பதற்காக பேட்டிங் செய்யும் போது ஷாட்களில் வலது கையை அழுத்திப் பிடித்து அடிக்கும் பழக்கத்திற்கு கோலி, தவான் அடிமையாகியுள்ளனர். ரோகித் சர்மாவுக்கும் அதே சிக்கல்தான்.

டெஸ்ட் போட்டிகளில் அதே முறையை மாற்றியமைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் ஐபிஎல் முடித்துவிட்டு அடுத்து முக்கிய டெஸ்ட் தொடரை ஆடும்போது அதே பாட்டம் ஹேண்ட் பேட்டிங்தான் வருகிறது. இதனால்தான் ரோகித் சர்மா கவர் திசையிலும் மிட் ஆஃப் திசையிலும் கேட்ச் கொடுக்கிறார்.

 

கோலி பாட்டம் ஹேண்ட்டை அழுத்துவதால் பந்துகள் எளிதில் ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகிறது. முன்னங்காலில் வந்து டிரைவ் ஆடும் போது இடது கை மணிக்கட்டு நிலை பந்துக்கு நேர்கோட்டில் இருப்பது அவசியம். வலது கையில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் பந்து தரைக்குச் செல்லாமல் கேட்ச்தான் ஆகும். இதெல்லாம் பாலபாடங்கள் அவர்களுக்கும் தெரியும். ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் ஆடியாடி இதனை மாற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

 

புஜாரா நல்ல டெஸ்ட் வீரராக இருந்தார். ஆனால் அவருக்கும் இந்த பாட்டம் ஹேன்ட் பிரச்சினை இருக்கிறது. தவன் இடமே பறிபோயுள்ளது. ஆனால் மாற்று வீரர் கம்பீரும் பாட்டம் ஹேண்ட் பிரச்சினையால்தான் சரியாக ஆட முடியாமல் சொதப்ப நேரிட்டது. ஆகவே தவனுக்குப் பதிலாக கம்பீரைக் களமிறக்கியது சிறந்த மாற்று கிடையாது.

 

கேப்டன் தோனியின் ஆட்டமும் பார்க்க அசிங்கமாக இருப்பதற்குக் காரணம் பாட்டம் ஹேண்ட்தான்.

சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அயல்நாடுகளில் கிரீஸை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்பார். இதனால் எல்.பி. வாய்ப்பை முறியடிக்க முடிந்தது. மேலும் பவுலர்களை ஷாட்டாக வீச அவர் தூண்டினார். இதனால் லைன் மற்றும் லெந்த் கிடைக்காமல் பவுலர்கள் அவதியுற நேரிட்டது. பிறகு அவர்கள் அதனைக் கண்டுபிடிப்பதற்குள் சச்சின் டச்சிற்கு வந்து விடுவார்.

 

ஆகவே சச்சின், பாண்டிங், லாரா போன்றோரின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்தாவது கோலி, புஜாரா போன்றவர்கள் தங்கள் பலவீனத்தைக் கண்டடைய வேண்டும்.

எனவே நல்ல பந்து என்ற ஒன்றே கிடையாது என்று கூறவரவில்லை. பலமான பேட்ஸ்மென்கள் நல்ல பந்தை விழ விடாமல் செய்து விடுவர்.

ஆகவே கோலி நல்ல பந்தில் 4 முறை அவுட் ஆனார் என்று கூறுவது உயர்மட்ட கிரிக்கெட் ஆட்ட நிலவரங்களின் படி அபத்தமான கூற்றாகும். கோலியின் பாட்டம் ஹேண்ட் பிரச்சினை குறித்து திராவிடும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதில் சுதாரித்துக் கொண்டவர் அஜிங்கிய ரஹானே மட்டுமே. முரளி விஜய் கவனமாக ஆடுகிறார் அவ்வளவே. அதனால் அவரது பிரச்சினைகள் வெளியே தெரிவதில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6309291.ece?theme=true

 

 

 

Link to comment
Share on other sites

நல்ல பந்திற்கு அவுட் ஆகாமல் இலகுவான பந்திற்கு பலர் அவுட் ஆவது உண்மைதான் .காரணம் நல்ல பந்து என்றால் தடுத்து ஆடவே முயலுவோம் இலகுவான பந்து என்றவுடன் அடித்து ஆட அவுட் ஆகும் சந்தர்பங்களும் அதிகம் வரும் .

 

ஆய்வாளர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை கொஞ்சம் குழப்பி அடிக்கின்றார் .சேவாக் டிராவிட் உதாரணம் உண்மையல்ல .

Link to comment
Share on other sites

நல்ல பந்திற்கு அவுட் ஆகாமல் இலகுவான பந்திற்கு பலர் அவுட் ஆவது உண்மைதான் .காரணம் நல்ல பந்து என்றால் தடுத்து ஆடவே முயலுவோம் இலகுவான பந்து என்றவுடன் அடித்து ஆட அவுட் ஆகும் சந்தர்பங்களும் அதிகம் வரும் .

 

ஆய்வாளர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை கொஞ்சம் குழப்பி அடிக்கின்றார் .சேவாக் டிராவிட் உதாரணம் உண்மையல்ல .

 

உண்மைதான் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பிறகு எல்லோரும் குழம்பிதான் போய் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சும்மா இருந்த‌ சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்க‌ள் இனி ம‌னுஷ‌ன் இர‌வு பூரா இதுக்கை இருந்து எழுத‌க் கூடும்    சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁😂.............................................................
    • 👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 
    • அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .  
    • அவர் எத்தனையாம் மனைவி என்று ஒருவரின தனிப்பட்ட வாழ்வை ஏன் எட்டிப் பார்பான்? உலகறிய சட்டப்படி திருமணம் செய்து வாழ்கின்றனர். அரசியல் என்று வரும் போது, இருவருக்கும் கொள்கை என்ற ஒன்று அறவே இல்லை. தாம் எந்தக் கூட்டணியில் இருக்கின்றோம் என்று கூட சரியாக தெரியாமல் உளறிக் கொட்டியவர்கள்.  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.