Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூல் கவிதைகள் சில....

Featured Replies

உன் இடுப்பில்

 

எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வ‌லி நான்
உண‌ர‌வில்லை…
தாவ‌ணிப்ப‌ருவ‌த்தில் தோழி
வீடுசென்று தாம‌த‌மாக‌ திரும்பும்
நாட்க‌ளில் உன் அவ‌ஸ்தையின் வ‌லி
நான் உண‌ரவில்லை…
க‌ல்லூரிப்ப‌ருவ‌த்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை…
 
ம‌ண‌ப்ப‌ந்த‌லில் உன் காலில்
விழுந்தெழுந்த‌ போது என்
உச்சி முக‌ர்ந்த‌ உன‌து
முத்த‌த்தில்தான‌ம்மா உண‌ர்ந்தேன்
நம் பிரிவின் வலியை
 
 
*****************************************************************************************************************************
 
எனதருமை மகனே !
 
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
 
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
 
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
 
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
 
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
 
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
 
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
 
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
 
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
 
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
 
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
 
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
 
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
 
இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
 
உரையாடல் உடைந்து போகலாம்!
 
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
 
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
 
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
 
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
 
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
 
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
 
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
 
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா?

 

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

நான் கழுதை

 

 
முட்டாள்களின்
                              உருவகம் நான்!
 
                              மூடர்களின்
                              உவமானம் நான்!
 
                              மதி குறைந்து
                              போனதால்
                              பொதி சுமக்கப்
                              பிறந்தவனாம்!
 
                              குரல் வளத்தில்
                              காக்கையும் நாங்களும்
                              கைவிடப் பட்டவர்கள்.
 
                              குட்டிகளாய் இருக்கும்போது
                              குதிரைகளைப்போல் 
                              நாங்களும் அழகுதான்!   
        
                              கழுதை வளர்ந்து
                              குதிரை ஆனதா
                              குதிரை தேய்ந்து
                              கழுதை ஆனதா?
                              டார்வினிடம்தான்
                              கேட்கவேண்டும்
 
                              கத்திப் பேசுபவர்கள் எல்லாம்
                              எங்கள் பாலை கொஞ்சம்
                              அதிகம் குடித்தவர்களாம்.
 
                               "என்னைப்பார் யோகம் வரும்"
                               என் படத்தை  மாட்டி
                               எழுதி வைத்திருக்கிறீர்கள்.
 
                                உங்களுக்கு
                                யோகம்வரும்;
                                எங்களுக்கு?
 
                                பிறரை  ஏசும்போதும்
                                எங்கள் பெயரே
                                உங்களுக்கு நினைவு வரும்!
 
                                மாடுகள்கூட
                                மதிப்பிழந்துபோன வேளையில்
                                கழுதைகளுக்கு ஏது கவனிப்பு?
 
                                எங்களுக்கு  
                                தெரியாதுதான்;
                                கற்பூரவாசம்!
 
                                நாங்கள்  
                                தேடியும்  கிடைக்காதது 
                                அன்பு, நேசம் 
 
                                கட்டிப்  பிடிக்க
                                யாரும் இல்லாததால்
                                எட்டி  உதைத்து 
                                எங்கள் கோபத்தை 
                                வெளிப்படுத்துகிறோம்
 
                                காலச் சுழற்சியில்
                                எங்களினம் 
                                காணாமல் போகும்!
 
                                ஏளனப் பொருட்களாக 
                                எங்களை பார்ப்பவர்களே!
                                உங்களிடம்
                                ஒன்றுமட்டும் சொல்கிறேன்.
 
                                முட்டாள்களுக்கும்
                                இந்த  மண்ணில்
                                கொஞ்சம் இடம் கொடுங்கள்
 
                                ஏனெனில்
                                அவர்களை வைத்துதான்
                                அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைப் பகிர்வுக்கு  நன்றி ..எனதருமை. மகனே மிகவும் அழகான  கவிதை...

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
 அம்மா 
 
மழையில் நனைந்து கொண்டே 
வீட்டுக்கு வந்தேன்
குடை எடுத்துட்டு 
போக வேண்டியது தானே 
என்றான் அண்ணன்.
எங்கயாச்சும் 
ஒதுங்கி இருக்க வேண்டியது தானே
என்றாள் அக்கா.
சளி பிடிச்சுக்கிட்டு 
செலவு வைக்க போற பரு 
என்றார் அப்பா.
தன் முந்தானையால் 
என் தலையை 
துவட்டிக்கொண்டே 
திட்டினால் அம்மா 
என்னை அல்ல
மழையை.........
 
-முகநூல் கவிதை-
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 அம்மா 
 
மழையில் நனைந்து கொண்டே 
வீட்டுக்கு வந்தேன்
குடை எடுத்துட்டு 
போக வேண்டியது தானே 
என்றான் அண்ணன்.
எங்கயாச்சும் 
ஒதுங்கி இருக்க வேண்டியது தானே
என்றாள் அக்கா.
சளி பிடிச்சுக்கிட்டு 
செலவு வைக்க போற பரு 
என்றார் அப்பா.
தன் முந்தானையால் 
என் தலையை 
துவட்டிக்கொண்டே 
திட்டினால் அம்மா 
என்னை அல்ல
மழையை.........
 
-முகநூல் கவிதை-

 

 

ஒரு தகப்பனாக  இதில் எனக்கு உடன்பாடில்லை

 

நன்றி  தொகுப்புக்கும்  நேரத்துக்கும்

  • தொடங்கியவர்

காதலித்து கெட்டு போ.

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனாலும் நகர்ந்து செல்

கடிதமெழுத கற்றுக்கொள்

வித,விதமாய் பொய் சொல்

விழி ஆற்றில் விழு

பூப்பறித்து கொடு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து சிதை

உளறல் வரும் குடி

ஊர் எதிர்த்தால் உதை

ஆராய்ந்து அழிந்து போ

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி..

 

- நா.முத்துக்குமார்-

  • தொடங்கியவர்
அம்மாவின் வாசம்
 
அம்மாவின் வாசம்
வெள்ளிக் கிழமை 
பூஜை முடித்து 
வியர்வையில் நனைந்த 
விபூதிக் கீற்றின் 
மெல்லிய வாசம் 
அதில் மெல்ல கலந்த 
மஞ்சளின் நேசம் 
கொண்டை நுனியில் 
ஊசலாடிய 
மல்லியின் வாசம் 
புளிக் கரைத்து 
புடவையில் துடைத்த 
சமையலின் வாசம் 
கைக்கழுவியும் கழுவப் படா 
இஞ்சி பூண்டு வாசம் 
கட்டியணைத்த அம்மாவிடம் 
கலந்துவந்த அந்த வாசம் 
இதயம் தொட்ட அந்த நேசம் 
இன்றும் மணக்கிறது 
நாசி சிலிர்க்கிறது..... 
எத்தனை சந்தனம் 
ஜவ்வாதும் அவ்வாறு மணக்கவில்லை 
என் தாய் மன(ண)த்திற்கு 
ஈடில்லை 
காற்றில் கலந்து 
கவிதையில் நனைந்து 
இன்றும் வீசிக் கொண்டு தானிருக்கிறது.....
 
  • தொடங்கியவர்
 
கரையிலந்த கண்மாய்கள் இங்கு கணக்கிலாடங்கா
தரையாய் போன ஏரி குளங்கள் எல்லாம் ஏராளம்
நாரைக் கூட்டங்கள் கூடிய ஓடை ஓரங்கள் எல்லாம்
கூரை, ஓடு வீடுகளாச்சு
 
ஆறுகளில் எல்லாம் ஆலை கழிவும்
திருப்பூரு சாயகழிவும் பொங்கிப்போகுது
ஊற்று நீர் கிணறுகளின் உயிரினையும்
உருஞ்சிவிட்ட்து ஆழ் துளை கிணறுகள்
 
மழை தரும் மரங்களை எல்லாம்
முறையின்றி வெட்டிப் போட்டோம்
மாதம் மும்மாரி பொழிந்த்து போய்
மாமாங்கத்துக்கு ஒரு மழை வருவதே அரிதானது
 
காவிரிக்கு கரை கட்டிய கரிகாலனின்
குல வழியாகிய நாம் இன்று
தரை தட்ட மணலை வெட்டிக்
கொள்ளையடிக்கிறோம்
 
தண்ணீர் வேண்டி கண்ணீர் விடும்
தமிழ் தேசமே இனியாவது விழிப்பாயா?
உன்னிடம் உள்ள நீர் வளங்களை
உடனே கவணிப்பாயா?
 
சு.பாஸ்கரன்
  • தொடங்கியவர்
மரம் தின்ற மனிதர்கள் 
 
leo_s_africhhan_pictures_gallery_14.jpg
 
இளமையும் இல்லை
இலைகளும் இல்லை 
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை 
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ 
.ஒருவேளை கானல் நீர் கொண்டு 
இனி வரும் 
அவன் தாகம் தீர்ப்பானோ....!????
 
மனிதன் மகிழ்ந்து வாழ 
அனைத்தும் தந்த மரங்களுக்கு 
மனிதன் தந்த 
பரிசு மரண தண்டனை..!
 
வெட்டப்படும் மரங்களின் 
அழுகை சத்தம் 
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும் 
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன 
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....
 
எத்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின் 
தாய்பால் பறித்தோம்...... 
 
வித விதமாய் 
தினம் தினம் புதிது புதிதாய் 
சிரித்த எத்தனை பூக்களின் 
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்.... 
 
விதை ஊன்றி 
உயிர் கொடுக்க வேண்டிய 
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து 
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே 
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால் 
வலி என்கிறோம் 
பூக்கள் காயம் கண்டால் 
அதன் விதி என்கிறோம்...... 
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த 
மனூட அரக்கர்களுக்கே உரிய 
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!? 
 
சிறு நரை முடி உதிர்ந்தாலே 
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!? 
 
நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும் 
என் தலைமுறை சுவாசிக்க 
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?
 
எண்ணிப் பார்க்கும் 
ஒவ்வொரு நொடியும் 
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.
* * * * * * *
- பனித்துளி சங்கர்.
 

Los_Arboles_2-03.jpg


விதைத்திட்ட எங்கும் 
விளைந்த காலங்கள் போய் 
வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது 
நிலங்கள்... 

றட்சியின் போர்வையில் 
புகுந்து கொண்ட உலகத்தை 
கருகருக்கும் மேகங்கள் 
காணவரும் நாள் இனிகுறைவே...!

டையாய் இருந்த மரங்கள் 
அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண கோளத்தில் தான் 
இன்றைய காடுகள்.. 

தென்றலாய் தவழ்ந்து வந்த காற்றினம்
மாசுக்களின் மடியில் 
மரணித்துப்போயிருக்கிறது..
இவற்றின் உயிரிழப்புகளால்தான் 
ஓசோனின் ஓட்டைகள்...! 


ஞ்சை புஞ்சை நிலங்களில் 
இன்று அமோகமாக விளைவது 
வீடுகள் மட்டுமே..


றுகள் குளங்கள் கூட 
மனிதக்கறையான்களால்
உருமாறிப் போயிருக்கிறது..
 
நாகரீகம்.. புரட்சி... என்ற பெயரில் 
நாம் செய்துகொண்டிருப்பது
‌ஐம்பூதங்களை அழிக்கும் பணியே...

காற்றுக்கும் தண்ணீருக்கும் 
மரணதண்டனை கொடுத்துவிட்டு 
பிறகெப்படி எதிர்பார்ப்பது 
ஆரோக்கிய வாழ்வு...!


புதிய கோளை தேடி அலையவேண்டியது 
இனி அவசியம்தான்
பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
மூச்சடைப்பு...
 
முருகனின் மயிலையும்...
ஏசுவின் காலடித்தடமும்....
புத்தனின் போதிமரமும்...
அல்லாவின் அருளும்...
சுமந்துக்கிடக்கும் இந்த பூமியை 
அழிக்கவா நம் அவதாரங்கள்...
 
நாளை சங்கதிக்கு
நாம் வழங்கும் வாழ்க்கை
இந்த பூமியாக இருக்கட்டும்...
 
ண்ணீர் அதன்
கற்பி‌ழக்காமல் காப்போம் ..! 


காற்றை வடிக்கட்டி 
காயம் ஆற்றுவோம்..!


புகைக்கு தடைப்போட்டு
கதவடைப்போம்..!


சுமை வளர்க்க 
முதலில் வழிவிடட்டும் 
நம் வாசற்படிகள்...


ப்போதுதான்...
துளிர்விடும் இந்த உயிர்கோளம்...!

sustainable.jpg 
 
உலக சுற்றுச்சூழல் நாள்  விழிப்புணர்வு கவிதை

http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post_06.html


.

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
பிள்ளையில் படிக்கும் புத்தகம் மழலை
பள்ளியில் படிக்கும் புத்தகம் நட்பு 
இளமையில் படிக்கும் புத்தகம் காதல் 
வளமையில் படிக்கும் புத்தகம் வாழ்வு!
 
கட்டிலில் படிக்கும் புத்தகம் மனைவி
தொட்டிலில் படிக்கும் புத்தகம் மதலை 
சட்டியில் படிக்கும் புத்தகம் சோறு 
பெட்டியில் படிக்கும் புத்தகம் செல்வம்!
 
உறங்கையில் படிக்கும் புத்தகம் கனவு
கிறங்கையில் படிக்கும் புத்தகம் கள்ளு 
உறவினில் படிக்கும் புத்தகம் காமம்
துறவினில் படிக்கும் புத்தகம் ஞானம்!
 
உவகையில் படிக்கும் புத்தகம் சிரிப்பு
உணர்ச்சியில் படிக்கும் புத்தகம் கோபம் 
கவலையில் படிக்கும் புத்தகம் கண்ணீர் 
கோவிலில் படிக்கும் புத்தகம் கடவுள்!
 
முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம் 
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம் 
பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு 
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!
 
- கவிஞர் வாலி-
 

அரங்கேறும் சொற்கள் – கண்ணதாசன்
 
கன்று தான் சிங்கம் என்பான் 
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான் 
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான் 
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம் 
வேதமல் லாமல் என்ன?
 
பள்ளமே இமயம் என்பான் 
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ; 
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான் 
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம் 
உண்மையல் லாமல் என்ன?
 
நதிபோகும் திசையை மாற்றி 
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு 
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம் 
இனிக்கட்டும் தேன் போல் என்பான் 
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?
 
சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே?
  • 3 months later...
  • தொடங்கியவர்
ஏ மிலேச்ச நாடே!
ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
 
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
 
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
 
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
 
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
 
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
 
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
 
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
 
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
 
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
 
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
 
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
 
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
 
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
 
அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.
 
நன்றி - கவிஞ்ர் தாமரை
 
 
 
தமிழன் கனவு
 
பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!
 
தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்
 
கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...
 
கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?
 
ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய
 
மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்
 
நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து
 
மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
 
கவிஞர் : காசி ஆனந்தன்
 

எறும்பும்  எள்ளல்  செய்யும்
 
  
 
                        எழுகதிரைப்   பார்க்காமல்   உறங்கு   கின்ற
 
                                    எவருமிங்கே   புதுச்சுவட்டைப்   பதித்த   தில்லை
 
                        தழுவாத   புதுச்சிந்தை   மாந்த   ரென்றும்
 
                                    தரைமாற்றும்   புதுப்பாதை   அமைத்த   தில்லை
 
                        உழுதுமண்ணைப்   பண்படுத்தா   நிலத்தி   லென்றும்
 
                                    உயிர்ப்புடனே   பசும்பயிர்கள்   வளர்ந்த   தில்லை
 
                        எழுச்சியுடன்   உழைக்காதோன்   ஞாலம்   தன்னில்
 
                                    எந்தவொரு   சாதனையும்   படைத்த   தில்லை !
 
 
 
                        நடக்காதான்   கால்களிலே   சிலந்தி   கூட
 
                                    நாக்காலே   வலைதன்னைப்   பின்னப்   பார்க்கும்
 
                        முடங்கிமூலை   சோம்பலிலே   மூழ்கி   ருந்தால்
 
                                    முதுகேறி   எறும்புகூட   எள்ளல்   செய்யும்
 
                        அடக்கமின்றிச்   சினம்கொண்டோன்   செயல்கள்  என்றும்
 
                                    ஆக்கத்தைத்   தாராமல்  அழிவே   செய்யும்
 
                        இடமறிந்து   காலத்தே   செயல்செய்   யாதான்
 
                                    இடம்தேடித்   தோல்விகளே   முகத்தைக்   காட்டும் !
 
 
 
                        தடைகண்டு   துவளாமல்   தடையு  டைக்கும்
 
                                    தகுவுறுதி     கொண்டோன்தான்   முன்னே   செல்வான்
 
                        விடைகாண    முயல்வோன்தான்   புதிர   விழ்த்து
 
                                    வியக்கின்ற   விளக்கத்தை   எடுத்து   ரைப்பான்
 
                        உடைமையென    ஊக்கத்தைக்    கொண்ட   வன்தான்
 
                                    ஊழ்தனையே    பின்தள்ளி   வெற்றி   காண்பான்
 
                        படையெனவே   தன்னம்பிக்கை   நாளும்  நெஞ்சில்
 
                                    பக்கதுணை   கொண்டவன்தான்   எதையும்  வெல்வான் !
 
பாவலர் கருமலைத்தமிழாழன்
  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் மணக்கும் கவிதையில் இழந்த வாழ்வு இழையோடுகிறது கனவாய்.  நல்ல கவிதைப் பதிவைச் சுட்டியதற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.