Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்!

Featured Replies

சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது.

பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.

சுமார் நான்கு அல்லது ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் கமல்ஹாசன். ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த இவர் தம் குடும்பத்தாரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தான் திரையுலக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். எட்டாம் வகுப்புக்கு பிறகு பள்ளியென்றாலே வேப்பங்காயாக இவருக்கு கசந்தது. இவரது சகோதரர்கள் நன்கு படித்து வக்கீலாக உயர்ந்தும் இவர் மட்டுமே உருப்படாமல் போய் விட்டதாக இவர் தந்தை இவரை பலமுறை கடிந்து கொண்டிருக்கிறார்.

சிறுவயது திரையுலக அறிமுகம் இவருக்கு இருந்திருந்தாலும் தகுந்த வயதில் எந்தத் துறையில் ஈடுபடுவது என்ற குழப்பம் இவருக்கு மிக அதிகமாக இருந்திருக்கிறது. எப்படியாவது திரையுலகில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தால் தங்கமணி என்ற டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் "அன்னை வேளாங்கண்ணி" திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இயேசுவாக கமல் சிலுவை சுமந்தார் :-)

சில காலம் அவரிடம் பணிபுரிந்திருக்கிறார். அதன்பிறகு இயக்குனர் பாலச்சந்தரிடம் எப்படியாவது உதவியாளராகச் சேர்ந்து விட வேண்டும் என்று தனக்குத் தெரிந்த திரையுலகப் புள்ளிகளிடம் சிபாரிசுக்குச் சென்றிருக்கிறார். அதுபோல ஒரு முறை எம்.ஜி.ஆரை சந்தித்து பாலச்சந்தரிடம் தன்னை உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளச் சொன்னபோது "நீ நடிக்கலாமே? நடிகன் ஆகலாமே? எதற்கு இயக்கமெல்லாம் உனக்கு" என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு கமல் "ஓணான் மாதிரி இருக்கேன். எம் மூஞ்சிய எல்லாம் எவன் சினிமாவுல பார்ப்பான்?" என்று கேட்டாராம்.

எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்தாரோ அல்லது பாலச்சந்தருக்கு கமலின் முகவெட்டு பிடித்து விட்டதோ தெரியவில்லை. கமல்ஹாசனுக்கு அடித்தது யோகம். பாலச்சந்தரின் படங்களில் சிறு சிறு வேடங்களில் கமல்ஹாசன் தலைகாட்ட ஆரம்பித்தார். சிறு வேடங்கள் என்றாலும் கமலுக்கு இயல்பிலேயே ஊறிவிட்ட நடிப்பாற்றலால் மக்களிடையே கவனம் பெற ஆரம்பித்தார்.

பாரதிராஜாவின் "பதினாறு வயதினிலே" கமல்ஹாசனுக்கு தமிழ்த் திரையுலகில் சிகப்புக் கம்பளம் விரித்தது எனலாம். 76ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் கமலுக்கு மட்டுமல்ல ரஜினி, ஸ்ரீதேவி, பாரதிராஜா, இளையராஜா, கவுண்டமணி என பலருக்கு இன்னிங்ஸ் ஆரம்பித்துக் கொடுத்தது. 77ஆம் ஆண்டு மட்டும் கமல்ஹாசன் நடித்தப் படங்களின் எண்ணிக்கை 30.

இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் வளர்ந்து வந்த கமல் வழக்கமான வேடங்களிலேயே தொடர்ந்து நடிப்பது குறித்து சலிப்புற்றார். தன் திரையுலக அறிவை மற்றத் துறைகளிலும் விசாலாமாக்கிக் கொள்ள முனைந்தார். பாடல் பாடினார். பாதி படத்தில் தன் படத்தின் இயக்குநர் மரணமுற்றதால் மீதி படத்தை தானே இயக்கி வெளியிட்டார். தனது 100வது படமான ராஜபார்வையை கலைப்படமாக எடுத்தார். விதவிதமான கதாபாத்திரங்களில் சோதனைமுயற்சி செய்து வித்தியாசமாக நடித்தார்.

தயாரிப்பாளராகவும் "விக்ரம்" படத்தின் மூலம் களமிறங்கினார். அந்தத் திரைப்படம் கமல்ஹாசனுக்கு பெருத்த இழப்பினை பொருளாதாரரீதியிலாக கொடுத்தாலும் புதுப்புது முயற்சிகளை தமிழ்த் திரைப்படங்களில் செயல்படுத்தி பார்க்க வித்தாக அமைந்தது. உலகிலேயே முதன்முறையாக (அப்படித்தான் விளம்பரப்படுத்தப் பட்டது) ஒரு படம் நெடுகிலும் குள்ளனாக அபூர்வசகோதரர்களில் நடித்தார். தென்மாவட்ட ஜாதிக்கலவரங்களை கண்டிக்கும் வகையில் தேவர்மகன் எடுத்தார்.

கமல்ஹாசன் எனும் கலைஞனுக்கு சமூகத்தின் பால் இருந்த அக்கறையே அவரின் அன்பே சிவம் திரைப்படம். மேலும் எல்லாவற்றுக்கும் சிகரமாக இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே சர்ச்சைக்குறிய காந்தி கொலை வழக்கினை சப்ஜெக்டாக எடுத்துக்கொண்டு அவர் சொந்த இயக்கத்தில், சொந்தத் தயாரிப்பில் எடுத்த திரைப்படம் "ஹே ராம்". இந்த திரைப்படம் வெகுஜன ரசிகர்களை சென்றடையாது எனத் தெரிந்தும் பலகோடிகளை வாரி இறைக்க அவர் தயாராகவே இருந்தார்.

இவருக்குள்ளே ஒரு கடவுள் இருக்கிறார் என்று ஏன் தலைப்பிட்டிருக்கிறேன் என எண்ணலாம். இதை நான் சொல்லவில்லை, என் முன்னோர் சொன்னதை வழிமொழிந்திருக்கிறேன். முன்னோர் என்ன சொன்னார்கள் "செய்யும் தொழிலே தெய்வம்" என்றுதானே? அதைத்தானே நானும் சொல்கிறேன். கமலுக்கு தன் தொழில் மீது இருக்கும் அர்ப்பணிப்புணர்வை யாராலேயாவது குறை சொல்ல முடியுமா? அவர் தொழிலை அவர் திறம்படவே செய்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இல்லையென்றால் தேசியவிருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளை வாங்கிக் குவித்திருக்க முடியுமா?

அடுத்து கமல்ஹாசன் குறித்த விமர்சனங்கள் :

1) கமல்ஹாசன் பெண் பிரியர். இருமுறை விவாகரத்தானவர். பல இளம் நடிகைகளுடன் 50 வயது கடந்த நிலையிலும் கிசுகிசுக்கப்படுபவர்.

2) தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டவர்.

3) கமல்ஹாசன் பார்ப்பனீயத்தை ஓங்கிப் பிடிக்கிறார். சாதி வெறியர்.

4) கமல்ஹாசன் ஒரு கஞ்சன். ரஜினி மாதிரியோ எம்.ஜி.ஆர் மாதிரியோ அல்லது கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் மாதிரியோ வாரி வழங்காதவர்.

5) அவர் ஒரு ஆணாதிக்க சின்னம். திரைப்படங்களில் அசிங்கமாக நடிகைகளை கட்டிப்பிடித்து நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு கண்டிப்பாக முத்தம் கொடுப்பார்.

சரி இதுமாதிரி விமர்சனங்கள் வரும்போது கமல்ஹாசன் என்ன சொல்கிறார். "நான் ஒரு நடிகன், என் நடிப்பின் மீதான விமர்சனங்களை யார் வைத்தாலும் அதை வரவேற்கிறேன். தேவைப்பட்டால் பதில் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால் என் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் நிச்சயமாக எனது தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் விஷயம். அதுகுறித்த எந்த கேள்வி எழுந்தாலும் அதற்கு பதில் அளிப்பதோ அல்லது மவுனம் காப்பதோ எனது தனிப்பட்ட உரிமை" - இது அவரது பதில். அவரது பெண் தொடர்பு அவருடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்பதால் நமக்கும் அதுகுறித்து விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. வேண்டுமானால் கிசுகிசு எழுதியோ அல்லது படித்தோ சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

கமல்ஹாசனின் திரைப்படங்களில் இடம்பெறக்கூடிய "பொட்டை, தே.... பையா" வசனங்களுக்கெல்லாம் அவர் வசனகர்த்தாவாகவோ அல்லது இயக்குநராகவோ இல்லாதபட்சத்தில் அவரை பொறுப்பேற்கச் சொல்வது நிச்சயமாக கோமாளித்தனமே.

"அவர் தன்னை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்" - இதில் என்ன குற்றம் இருக்கிறதோ தெரியவில்லை. ஒருவர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்வதும் கடவுள் நம்பிக்கையாளர் என்று சொல்லிக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. கமல்ஹாசனே சொன்னபடி "நான் அக்ரஹாரத்தில் இருந்து தவழ்ந்து பெரியார் திடலுக்கு வந்திருக்கும் ஒரு குழந்தை" - அதாவது தான் இன்னமும் நாத்திகப் பாதைக்கு வந்திருக்கிறேன். பெரிய நாத்திக சிந்தனையாளன் எல்லாம் இல்லை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் பார்ப்பனர், தன்னை சுற்றி பார்ப்பனர்களையே வைத்திருக்கிறார் என்பது முந்தைய குற்றச்சாட்டுக்கு நேரெதிரான ஒரு குற்றச்சாட்டு. அவரைச் சுற்றி கிரேஸி மோகனும், சிங்கீதம் சீனிவாசராவும் மட்டுமில்லை. நாகேஷும், நாசரும் கூட இருக்கிறார்கள். அவர் பார்ப்பனீயத்தை ஓங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்ததில்லை. வர்க்கப் போராளியாக வறுமையின் நிறம் சிவப்பு, அன்பே சிவத்திலும் சாதீய எதிர்ப்பாளராக தேவர்மகன், விருமாண்டியிலும் கூட நடித்திருக்கிறார். தான் சார்ந்த மதநம்பிக்கையை தகர்க்கும் வகையில் "உடல்தானம்" செய்திருக்கும் புரட்சியாளர் என்று கூட கமல்ஹாசனை சொல்லலாம்.

ரஜினிகாந்தோ, விஜயகாந்தோ அல்லது எம்.ஜி.ஆரோ தங்களுக்கு திரண்ட ரசிகர் கூட்டத்தை தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தெள்ளத் தெளிவு. இதில் இரண்டு பேர் தங்கள் ரசிகர்களை வைத்து கட்சி ஆரம்பித்தார்கள். ஒருவர் சும்மாவேணும் கட்சி, ஆட்சி என்று பிலிம் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றுபவர். அந்த வகையில் கமல்ஹாசன் தன் ரசிகர்களை இணைத்து நற்பணி மட்டுமே செய்து வருகிறார். மற்றவர்கள் தங்கள் PROக்கள் புண்ணியத்தில் தங்களை வள்ளல்களாக காட்டிக்கொள்ளுவதைப் போல செய்ய வேண்டிய எந்த அவசியமும் கமல்ஹாசனுக்கு இல்லை. என் ரசிகர்களாக இருந்தால் என் படத்தை ரசியுங்கள். மற்றபடி கொடிபிடித்து ஊர்வலம் எல்லாம் வரவேண்டாம் என்பதே கமல்ஹாசனின் நிலைப்பாடு. தையல் மெஷின் கொடுத்தோ அல்லது பத்து பேருக்கு கல்யாணம் செய்தோ "வள்ளல்" என்று Brand Image செய்வதில் கமல்ஹாசனுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் ஒரு ஆணாதிக்கச் சின்னம் என்ற குற்றச்சாட்டை இது வரை அவர் மறுத்ததாகவோ அல்லது ஏற்றுக் கொண்டதாகவோ சொன்னதில்லை. படங்களில் முத்தம் கொடுப்பது என்பதெல்லாம் இயக்குநரின் விருப்பம். கமல் படமென்றால் முத்தக் காட்சிக்கு ஓகே என்று பல நடிகைகள் பேட்டி கொடுப்பதைக் காணலாம்.

மொத்தத்தில் கமல்ஹாசன் குறித்து விமர்சிப்பதென்றால் அவர் தொழில் மீதான விமர்சனம் என்றால் மட்டுமே அது நியாயமானதாக இருக்க முடியும்.

(http://madippakkam.blogspot.com)

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கண்ணேட்டம் சார்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் அவர் இந்த பாட்டை பாடினவரொ...

கடவுள் பாதி மிருகம் பாதி சேர்த்துவைச்ச கலவை நான்...............

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ம்ட்டுமா கடவுள் பாதி மனிதன் பாதி. பாதிப்பேர் அப்படித்தான் வாழ்கினம்

ஆம..அவரு கொடைகளை செய்யவில்லை....

ஆனால்..''கொடைகளை செய்கிறார் யாருக்கு....''

அது தானெ நீங்களெ வேனாம்னு ஒதுக்கிட்டிங்களே சார்...

அது தானே அவரை அழகாக வைத்திருக்கு...

எனக்கு எப்படி தெரியும்னா கேட்கிறீங்க...

கிசு..கிசுவில..பார்த்துட்டன்...

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம..அவரு கொடைகளை செய்யவில்லை....

ஆனால்..''கொடைகளை செய்கிறார் யாருக்கு....''

அது தானெ நீங்களெ வேனாம்னு ஒதுக்கிட்டிங்களே சார்...

அது தானே அவரை அழகாக வைத்திருக்கு...

எனக்கு எப்படி தெரியும்னா கேட்கிறீங்க...

கிசு..கிசுவில..பார்த்துட்டன்...

வன்னி மைந்தன்

அந்த கிசு கிசு வை இங்கே போடலாமே

எனக்குள்ளேயும் தான் கடவுள் இருக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.