Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்: கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர் காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே அவன் அழகுகளை

மிக அருகினிலே அவன் இனிமைகளை

தின்றேன் தின்றேன்

தெவிட்டாமல் நான் தின்றேன்...

பெண்: கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர் காதல் நான் கொண்டேன்

ஆண்: நீ வளையல் அணியும் கரும்பு

நான் அழகை பழகும் எறும்பு

பெண்: ஆ, நீ தழுவும் பொழுதில் உடும்பு

நாள் முழுதும் தொடரும் குறும்பு

ஆண்: சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு

தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு

பெண்: பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு

ப- ஆடு நானும் இல்லை தேன்கூடு

ஆண்: ஒரு விழி எரிமலை

மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு

பெண்: மேல் இமைகள் விரதம் இருக்க

கீழ் இமைகள் பசியில் துடிக்க..

ஆண்: கால் விர-ல் கலைகள் வசிக்க

கை விர-ல் கலகம் பிறக்க

பெண்: எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட

இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட

ஆண்: தணியாத தாகம் உன்னை தாழ்பூட்ட

கனவோடு நீயும் வந்து போர் மீட்ட

பெண்: ஜனனமும் மரணமும்

பலமுறை வரும் - என்

தலையணை நினைவூட்ட

பெண்: கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர் காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே அவன் அழகுகளை

மிக அருகினிலே அவன் இனிமைகளை

தின்றேன் தின்றேன்

தெவிட்டாமல் நான் தின்றேன்...

http://youtu.be/aiyFGYRYfq4

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

விழியிலே மலர்ந்தது

உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே

அடடா எங்கெங்கும் உன் அழகே

உன் நினைவே போதுமடி

மனம் மயங்கும் மெய் மறக்கும்

புது உலகின் வழி தெரியும்

பொன் விளக்கே

தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னை போல்

ஓரழகை கண்டதில்லையே

காவியத்தில் நாயகி

கற்பனையில் ஊர்வசி

கண்களுக்கு விளைந்த மாங்கனி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன் வண்டுதான் பார்த்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா

(பூங்கொடி..)

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்

அதுதானே குடம் தன்னில் எறிகின்ற தீபம்

மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்

மழை

நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது

துணிச்சல்கள் பிறக்காமல் கடஹ்வுகள் திறக்காது

காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்

(பூங்கொடி..)

தாய்க்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே

பசியென்று பறிவோடு பாலூட்ட வருவாள்

உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட

முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே

மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்கு காதலென்ன ஊமைக்கும் பாடலென்ன ஓ

(பூங்கொடி..)

http://youtu.be/L8rbH3dR7HE

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழைவருது

குடை கொண்டுவா

மானே உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது

நிழல் கொண்டுவா

மன்னா உன் பேரன்பிலே

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி - தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி - தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்

மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்

மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண

சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண

சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்

மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் - இனி

முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம் தித்தாங்கிட தக தரிகிடதோம்

தகதித் தாங்கிடதக தரிகிடதோம் தித்தாங்கிடதக தரிகிடதோம்

தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம்

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ஸரிகம பதநி ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு நாதகீத ராகபாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி

தத்ததிம் ணம்தகிட தகஜுணுத கிடதகதரிகிடதோம் தகதணதோம் தத்திம்

தத்தகிட கிடதகதரிகிடதோம் தகதகிட கிடதகதரிககிடதோம்

தகிடதத்தோம் கிடதத்தோம் கிடதத்தோம் தத்தா

காதற் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி

ததகிதகண தஜுண தாகிடகத தஜுணததிமி தரிகிடதக தத்தா தாங்கிடதக

தகதித் தாங்கிடதக தரிகிடதக தத்தா

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே

மன்னவன் வந்தானடி

கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தரிகிட தரிகிட

கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தத்தா

தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

தாங்கததிமி தாங்கதஜுன தாங்கிடதக தரிகிடதா

சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் .......

தத்தித்தா கிடதகதரிகிடதோம் தித்தா கிடதகதரிகிடதோம் த கிடதகதரிகிடதோம்

கிடதகதரிகிடதோம் தரிகிடதோம் தகிட தத்திம் தகிடதத்திம் தகிடதத்தா

விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா பா தாமதமா மா மயிலென் கா

விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா தாமதமா மயிலென்கா நிதபமக நிதபமக

ஸ.... ஸதமது தரவா

திம் தகதகதரிகிடதகதா

ரி.... ரிகமபதநிஸ்

தத்திம் தத்திம் தஜம் தரிகிடதகதா

க.... கருணையின் தலைவா

திரிகிடதத்திம் தகதத்திம் தகதத்திம் தா

ம.... மதி மிகு முதல்வா

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தா

ப.... பரம் பொருள் இறைவா த.... தனிமையில் வரவா

நி.... நிறையருள் பெறவா

ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்..

ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்..

அனு தினம் உனை வழி படும் மட மயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை

தத்தித் தாங்கிடதக தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

http://youtu.be/5-y-J9Pabq8

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத்தமிழ்

எங்கள் உயிருக்குநேர் உயிருக்குநேர்

தமிழுக்கு நிலவென்றுபேர்

இன்பத்தமிழ் எங்கள்

சமூகத்தின் உயிருக்கு நேர்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிலாவத்தான் நா கையில புடிச்சேன் என் ராசவுக்காக எங்கே எங்கே ......

http://youtu.be/MeYzRM3uspk

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீயோ நானும்

அங்கே உன்னோடு

அதை தானே

கொண்டு வந்தேன்

உன் கண்ணோடு .......

கண்ணில் நீரைக் காணாமல்

கவலை ஏதும் கூறாமல்

என்னை எண்ணி வாழாமல்

உனக்கென நான் வாழ்வேன்!

காலம் வரும் என் கனவுகள்

எல்லாம் கனிந்துவரும்

காத்திருப்பேன் என் பாதையில்

தெய்வம் இணைந்துவிடும்

காதல் என்றால் சேயாவேன்

கருணை என்றால் தாயாவேன்

கண்ணா உந்தன் நிழலாவேன்

உனக்கென நான் வாழ்வேன்!'

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கண்டேனே முதல் முறை நான்

என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

உன்னை கண்டேனே..

காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்

ஹய்யோ ஹய்யயோ.. அச்சம் வருதே

தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே

ஹய்யோ ஹய்யயோ.. சீ என்னவோ பண்ணினாய் நீயே

உன்னை கண்டேனே..

எறிக்கிற மழை இது

குளிர்கிற வெயில் இது

கொதிக்கிற நீர் இது

அணைக்கிற தீ இது

இனிக்கிற வலி இது

இனமுள்ள பூ இது

இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..

நிஜமுள்ள பொய் இது

நிறமுள்ள இருது இது

மௌனத்தின் மொழி இது

மரணத்தில் வாழ்விது

அந்தரத்தின் கடல் இது

கட்டி வந்த கனவு இது

ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும்

உந்தன் தோற்றமே

உன் பேர் சொன்னாலே

உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்

கண்ணோடு இருக்கும் பல கடிதம்

பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்

புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ

மெய் சொல்லுதோ

ஓ.. காதல் எனை தாக்கிடுதே

சரிதான் எனையும் அது சாய்த்திடுதே

இரவில் கனவும் என்னை சாப்பிடுதே

பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே

உன்னை கண்டேனே..

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்

உடனே என் உள்ளே நீ வருவாய்

கோயில் உள்ளே கண் மூடி நின்றாய்

உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே

நான் உன்னால் தான் ஸ்வாசிக்கிறேன்

நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்

கடவுள் நிலையை நம் கண்ணிலே காத்திடும் காதல்

உன்னை கண்டேனே..

மனசுக்குள் ஏனோ சொல் சொல்

எதிரினில் வந்து நில் நில்

உயிருக்குள் ஏதோ ஜில் ஜில்

இது சரி தானா நீ சொல் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம்

நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன்

என்னை நீயும் அறியாய்

யாரென்று உணரு முதற்கட்டம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் ...

உன்னைத்தானே...

மலரின் கதவொன்று திறக்கின்றதா

மௌனம் வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா

கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தா

வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது

உறவே எனக்கின்று விலங்கானது

அடடா முந்தானை சிறையானது

இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே

உறவுக்கு உயிர் தந்தாயே

நானே எனக்கு நண்பன் இல்லையே

உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னத்தானே...

  • கருத்துக்கள உறவுகள்

முத்து நகையே முழுநிலவே குத்து விளக்கே கொடி மலரே

கண்ணிரண்டும் மயங்கிட கன்னிமயில் உறங்கிட

நான் தான் பாட்டெடுப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிலா நீ வானம் காற்று மழை

என் கவிதை மூச்சு இசை

துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா ....

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி

கொஞ்சும் தமிழ் குழந்தை

சினுங்கள் சிரிப்பு முத்தம்

மௌனம் கனவு ஏக்கம்

மேகம் மின்னல் ஓவியம்

செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்

உயிரென்றே உனை சொல்வேனே

நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்

நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம்....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா

அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே

அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே

அன்புள்ள படவா அன்புள்ள திருடா

அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா

அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே

அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்

என்னதான் சொல்ல சொல் நீயே

பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட

வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் ....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா

அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மான் விழியே ஆசையிலோர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர் காதலில் ஒரு கடிதம்

நலம் நலம் தானா முல்லைமலரே

சுகம் சுகம் தானா முத்துச்சரமே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ

வண்ண பூங்கொடி வாடி நின்றதோ

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

(இளைய நிலா)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்

விள் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

(இளைய நிலா)

விழியே கதை எழுது கண்ணீரில்

எழுதாதே மஞ்சள் வானம்

தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்..

மஞ்சள் வானம்

தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்...

மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மேகத்தைப் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக் கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன்..

( விழியே கதை எழுது)

  • கருத்துக்கள உறவுகள்

தாயக பாடலை இணைத்தமைக்கு மன்னிக்கவும்.

தமிழரசு எனக்கு இந்த போட்டியின் விதிமுறை தெரியாமையால் இணைத்து விட்டேன். மன்னித்து கொள்ளுங்கள்.

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே

கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே

கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே

என்னை நீ வெறுத்தால்

என்னாகும் என்று

நினைத்துதான் பாரு

நெஞ்சத்தை கேளு

முள்ளில்ஆடும் பறவை நான் தானே

பறவை நானே...

(கன்னீரில்)

அம்மாவாசை இரவினிலே

நிலவது உதிப்பதில்லை

அழகற்ற என் முகத்தை

அன்றொருத்தி ஏற்க்கவில்லை

அழகை வைத்து காதலிக்க

அவளை போல பலர் உண்டு

அன்பை வைத்து காதலிக்க

என்னை போல சிலர் உண்டு

பாலைவனத்தில் சோலை எதற்கு

காளை மனதில் சோகம் எதற்கு

திரிந்திட்ட பால் குடத்தில்

வென்னை அதில் தேடாதே

ஒரு தலை ராகத்திலே

காலந்தன்னை கழிக்காதே

அழகிய மயிலே என்னை நெருங்காதே

நெருங்காதே...

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே

உன் வானம் அழைப்பது வீணே

காம்பை விட்டு பூ உதிர்ந்தால்

மீண்டும் அங்கே பூப்பதில்லை

காதலித்து தோல்வியென்றால்

மீண்டும் அங்கே காதல் இல்லை

காளை உன்னை காம்பு என்றால்

பெண் அவளை பூ என்பேன்

காம்பில் அவள் பூக்கவில்லை

காதல் அவள் ஏற்கவில்லை

திரைப்படம்: மைதிலி என்னை காதலி பாடகர்கள்: S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் இசை: விஜய T. ராஜேந்தர்

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகப்பாடல்களை சினிமா பாடல்களுடன் வைத்து இந்தபகுதியில் விழையாடுவது சரியா ? எனதெரியவில்லை

என்னுடைய கருத்து அதற்கான தனியான திரி ஒன்றை தொடக்கி அத்திரியில் தாயகபாடல்களை மட்டும் வைத்து ஒரு போட்டியை நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன

எனக்கும் புரியாது

இருப்பது சில நாள் அனுபவிப்போமே

எதுதான் குறைந்து விடும்?

எதுதான் குறைந்து விடும்? உஷ்.. ச்ச்ச்ச்ச்ச்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்

இறைவன் படைப்பானா?

பயணம் போகும் பாதையில் திராட்சைக்

கொடியை வளர்ப்பானா?

பாவமென்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்

இறைவன் படைப்பானா?

பயணம் போகும் பாதையில் திராட்சைக்

கொடியை வளர்ப்பானா?

ஆனது ஆகட்டும் போனது போகட்டும்

அருகே வரலாமா? அருகே வரலாமா? ஹாங் ஹாங் விஷ்விஷ்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால்

போதை வரவில்லையா?

கல்லினில் வடித்த சிலைகளைப் பார்த்தால்

மயக்கம் தரவில்லையா?

எதிலே இல்லை யாரிடம் இல்லை

எவரிதை மறந்து விட்டார்?

எவரிதை மறந்து விட்டார்? உஷ்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

*முதல்வன் உங்களின் புரிதலுக்கு நன்றி*

Edited by தமிழரசு

உலகம், அழகுக் கலைகளின் சுரங்கம்

பருவச் சிலைகளின் அரங்கம்

காலமே ஓடிவா காதலைத் தேடிவா

  • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

பருவமே புதிய பாடல் பாடு

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

நான் வரும் போது ஆயிரம் ஆடல்

ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

பாடும் போது நான் ....

மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து ...

இதழில் தேனைக் குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து ...

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் ...

எல்லைகளில்லா உலகம்

என் இதயமும் அதுபோல் நிலவும் ...

புதுமை உலகம் மலரும்

நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ...

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் ...

  • கருத்துக்கள உறவுகள்

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ ஆ

மனதில் சுகம் மலரும் மாலை இது

மான்விழி மயங்குது ஆ ஆ

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் மெளனம் வந்ததோ

தென்றலே பாட்டெழுது அதில்

நாயகன் பேரெழுது

Edited by நிலாமதி

ஒ பாப்பா லாலி கண்மணி லாலி

பொன்மணி லாலி ஒ

பாடினேன் கேளடி

(ஒ பாப்பா லாலி)

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட

காதலன் குழந்தை தான் காதலி..

ஏன் செவ்விழி கலங்குது பூந் தென்றலில்

கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

(ஒ பாப்பா லாலி )

ஒ பாப்பா லாலி கண்மணி லாலி

பொன்மணி லாலி ஒ

பாடினேன் கேளடி

(ஒ பாப்பா லாலி)

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட

காதலன் குழந்தை தான் காதலி..

ஏன் செவ்விழி கலங்குது பூந் தென்றலில்

கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

(ஒ பாப்பா லாலி )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.