Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                 தொட்டால் பூ மலரும்

பெண் :     தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்  :     சுட்டால் பொன் சிவக்கும்

பெண் :     சுடாமல் கண் சிவந்தேன்    (இசை)   

ஆண்  :     தொட்டால் பூ மலரும்

பெண் :     தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்  :     சுட்டால் பொன் சிவக்கும்

பெண் :     சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்  :     கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை

பெண் :     நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய்...
                ஆசை விடுவதில்லை

ஆண்  :     தொட்டால் பூ மலரும்

பெண் :     தொடாமல் நான் மலர்ந்தேன்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கெடக்குதுன்னா பாக்க வந்தீங்க
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க

 

இங்கே பழுத்த பழம் கெடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கெடக்குதுன்னா கொத்த
வந்தீங்க

            

பவளவாய்ப் பைங்கிளிகாள் எங்கே வந்தீங்க
என் பருவத்தோடு தோது பாக்க யாரு சொன்னாங்க 
பவளவாய்ப் பைங்கிளிகாள் எங்கே வந்தீங்க
என் பருவத்தோடு தோது பாக்க யாரு சொன்னாங்க 

 

தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க
தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க
நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க
நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க

 
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன்
நான் என்னோடு என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பெற்ற செல்வம்...
நான் பெற்ற செல்வம்...
நலமான செல்வம்... தேன் மொழி பேசும்...
சிங்காரச் செல்வம்...

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்

நான் பெற்ற செல்வம்

 

தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு

 

எட்ட இருந்தே நினைத்தாலும்
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ....

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்

நான் பெற்ற செல்வம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
 
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
 
பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
 
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க
  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
---
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
---
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
---
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா
பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
பருவம் சில காலம் ஏங்கும் 
கொஞ்சம் பதுங்கியே பின்பு வாங்கும் 
இரண்டும் சமமாக தாங்கும் 
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும் 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
என்ன இறைவா உன் படைப்பு 
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு 
சின்ன இதழ் என்ன இனிப்பு 
அது தேடும் சுகம் என்ன துடிப்பு 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
  • கருத்துக்கள உறவுகள்

மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
  மஞ்சள் நிற வளையல் இது
  வாழ்வு தரும் வளையல்
 

மங்கலப் பெண் குலம் பொட்டு வைத்தே மகிழும்...
  குங்கும நிறத்தோடு குலுங்கும் திருவளையல்
  வற்றாத மானில வளம் தனை விளக்கிடும்
  வற்றாத மானில வளம் தனை விளக்கிடும்
 

மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல்
  தும்பை மலர் போன்று இரு மனமும்
  மாசின்றி வாழ்கவென
  வாயாற வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
  வாயாற வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே
மான்தளிர் தேகம் தந்ததே
மான்தளிர் தேகம் தேகம்....தேகம்......தேகம்
மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பெண் என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி......கோடி........கோடி
  • கருத்துக்கள உறவுகள்

பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ


பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை
உனதுகண்ணில் வைத்தானோ... கண்ணில் வைத்தானோ


ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோ ... நெஞ்சில் வைத்தானோ
(பெண்)


வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோ... இன்னும் சொல்லவோ


காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோ... என்ன சுகமோ..

அன்னம் இட்ட வீட்டிலே 
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம்கொண்ட பாவிகள் 
மண்ணாய்ப் போக நேருமே
அன்னம் இட்ட வீட்டிலே 
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள் 
மண்ணாய்ப் போக நேருமே
வேஷம் கண்டு மயங்கியே...ஏ...
வீணாக ஆசைகொண்டு 
மோசமும் போன பின் தான் 
மனவேதனை அடைவதாலே 
லாபமென்ன
பாலை ஊற்றிப் பாம்பை 
நாம் வளர்த்தாலும் 
நம்மையே கடிக்கத் தானே வரும் அது
அடிச்சு கொல்ல நேருமே 
 
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா
  • கருத்துக்கள உறவுகள்

உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு
உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு.. நானே பொறுப்பு
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு

மறைமுகமா பேசுவதும் சரியா இதுவும் சரியா
அது தான் குறையா ?
உங்க மனசு இப்படி மாறுவதும் முறையா
உனக்கென வெறியா?
மறைமுகமா பேசுவதும் சரியா?

காதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா
பட்டா காலவதி ஆன உடனே முடியுமா
கொஞ்சம் கருணை வச்சி மனசிறங்கி கண்ணாளா
ஆசை கண்ணாள என சொன்னா போதும் ..திருமுகத்தை……..

கலியுக அர்ஜுனனை கண்ணால பாரு
திரும்பி கண்ணால பாரு
? கலங்கிடும் பாரு
கட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு
கட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு
எனக்கு விதி இல்லை வேறு
?காதலி நானே நல்ல கவனிச்சி பாரு..

மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலையைக் கட்டி நான் கோத்தேன்
பொன்னாரம் நீ தூவ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சரிகை வேட்டி சந்தனத்தில் மின்னுறியே
புடவை கட்டும் பெண்ணுகிட்ட 
மாட்டினியே மாட்டினியே
தாலி ஒண்ணு போட்ட பின்னே
இந்தக் கத ஒங்ககிட்ட
வாழுகின்ற வாழ்க்கை எல்லாம்
சீதனமாத் தந்துகிட்டேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

         நான் அளவோடு ரசிப்பவன்
         எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
         அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி
         உயிராக நினைப்பவன்

         நான் அளவோடு ரசிப்பவன் 
         எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
         அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி
         உயிராக நினைப்பவன் ( இசை )     

 

 

          மதுவோடு வந்து இதழ் தேடி
         இதமோடு தந்து இணையாகி
         மதுவோடு வந்து இதழ் தேடி
         இதமோடு தந்து இணையாகி
         பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல் வாழ
         யார் சொல்லித் தந்ததோ 

        

         நான் உனக்காகப் பிறந்தவள்
         உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
         உன்னை ஒரு போது தழுவி மறு போது உருகி
         தனியாகத் துடிப்பவள்

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக_ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக 
பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா_ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கறுக்குது மழைவரப் பாக்குது வீசியடிக்குது காத்து
காற்று..
ஆ அ காற்றில்லை காத்து
ஒயிலாக மயிலாடும் மனம்போல குயில் பாடும்..

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா



அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...



மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையில் தீமூட்டி போனவளே ஹே ஹே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே ஹே ஹே
பெண்ணே என் பூமியே முள்ளானதே
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே

 

என்னுயிரே என் தேகம் திண்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
என்னுயிரே என் தேகம் திண்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

 

பெண்ணே மெய்யென்பதே பொய்யாக்கினால்
ஐயோ பொய்யென்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ

 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே... 
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே....
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே.
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த 
பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த 
பூவையர் குலமானே
உன்னை புரிந்து கொண்டான்
உண்மை தெரிந்து கொண்டான்
இந்த புலவர் பெருமானே....
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த 
பூவையர் குலமானே...
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
உண்டோ பந்தம் ஐயனே உலகினில்
உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
உண்டோ பந்தம் ஐயனே (இசை)       
                 
தன்னை மறந்த...ஆ...ஆ 
தன்னை மறந்த தடியர் இவர் செய்யும்
தன்னை மறந்த தடியர் இவர் செய்யும்
தண்டனையை எண்ணித் தாபங்
கொள்வேனோ நான்
தண்டனையை எண்ணித் தாபங்
கொள்வேனோ நான் 
உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
உண்டோ பந்தம் ஐயனே (இசை)
                     
கவலை வேறிலையே குருவிடம்
காலங்கழிப்ப தொன்றே ததியில்லையே
கவலை வேறிலையே குருவிடம்
காலங்கழிப்ப தொன்றே ததியில்லையே
கவலை வேறிலையே (இசை)
   
த்யானம் செய்யத் தனியாக ஆனேனோ...ஆ...ஆ...
த்யானம் செய்யத் தனியாக ஆனேனோ
சாவையெண்ணி அழுவேனோ அஞ்ஞானனோ   
சாவையெண்ணி அழுவேனோ அஞ்ஞானனோ


உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
உண்டோ பந்தம் ஐயனே உலகினில்
உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
உண்டோ பந்தம் ஐயனே (இசை)       
                 
அஞ்ஞானனோ   
சாவையெண்ணி அழுவேனோ அஞ்ஞானனோ

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பந்தம் பந்தம் பந்தம்
பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே
கூடபிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்
கருவறை தொடங்கி காலங்கள் தோறும்
கடவுள் மாட்டிய கை விலங்கு

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

  • கருத்துக்கள உறவுகள்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?

 

உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே

 

கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்

 

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.