Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணுரிமை...எல்லைகளும்...சிரமங்களும்

Featured Replies

பெண்ணுரிமை...எல்லைகளும்...சிரம

விகடகவி நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா ஆண்களும் பெண்களும் புரிஞ்சு நடந்தால் உந்தப் பிரச்சினைகளே இல்லை.

ஹீம்ம் யார்தான் கேக்கினம் எல்லாரும் தாங்கள் பிடிக்கிற முயலுக்கு மூன்று கால் என்று நிண்டால் என்ன செய்யிறது.

சப்போஸ் அக்கா முயலிற்கு மூன்று கால் தான் இருந்தால்

:idea: :idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தனைத்தடவைதான் பொண்ணுகளைப்பற்றி கதைப்பியள். பெண்சமத்துவம்..பெண்ணுரிமை திறமைகள்..உணர்வுகள் எல்லாம் பக்கம் பக்கமா கதைப்பியள் கடைசியில் என்ன நடக்கும்.

ஆண் ஆதிக்கம் தலைதூக்கி எல்லாவற்றையும் மழுங்கடிக்கும்

கேளுங்கள் கொடுக்கப்படும். கொடுக்காட்டிக்கு தட்டுங்கள்( பெரிய கட்டை எடுத்து மண்டையில்) கட்டாயம் கிடைக்கும்.

:lol: :P :lol: :P :lol: :P :smile2:

மயிலே மயிலேனா இறகு தா என்று கேட்டா மயில் இறகு கொடுத்துடுமா???

நமக்கு தேவைனா நாமதான் புடுங்கிக்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலையிலா இரண்டு தட்டு தட்ட வேண்டும் வாசகன் சார்

கறுப்பி சொன்னமாதிரி எத்தனையோ தலைப்புக்களில் இந்த விடயத்தை பற்றி கதைத்தாச்சு. மீண்டும் கதைக்க போனால் ஒரே கருத்து ஒரே முரண்பாடு தான் திருப்பியும் வரப்போகுது.

என்னைப்பொறுத்தவரையில் பெண்களுகளுக்கு சுகந்திரம் முதலில் வீட்டில் கிடைக்க வேண்டும். முக்கியமாக படிப்பு விடயத்தில். இந்த நாகரிக காலத்தில் வித்தியாசமான பாடத்திட்டங்கள் புதிது புதிகா வரும் காலத்தில் இப்பவும் எங்கள் பெற்றோர்கள் அது ஆண்பிள்ளைகள் செய்யும் வேலை. நீ எப்படி செய்யப்போகின்றாய்? என்றும் என்ன பெடியங்கள் மாதிரி றோட்டு றோட்டாக திரிந்து வேலை செய்யப்போகின்றாயோ? என்று கத்துவதை நிற்பாட்டி அவர்கள் விரும்பும் பாடத்தை படித்து விரும்பும் தொழில் ஈடுபட முதலில் சுகந்திரத்தை கொடுக்க முன் வரணும்.

பெண்கள் என்றால் இந்த வேலை தான் செய்ய முடியும் என்றா மூடநம்பிக்கை நமது இனத்தவர்களிடம் இருந்து முற்று முழுதாக நீங்க வேண்டும். அத்தகைய சுகந்திரத்தை தான் நம் பெண்கள் விரும்ப வேண்டும் என்பது எனது கருத்து.

தட்டுறதுனா தட்டுங்க கறுப்பி உதுக்கள்லாம் நான் பயப்பட மாட்டேன். என்ட மனிசி தட்டாத தட்டையா நீங்கள் தட்டிட போறீங்கள்.

முதலில் சுகந்திரத்தை கொடுக்க முன் வரணும்.

சகோதரி ரமா இந்த வார்த்தைகளில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. பெற்றோர்கள் மனம் வருந்தும்படியும் நடப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் மகிழ்ச்சியே எமது பிறப்பாக இருந்தாலும் அவர்கள் எங்களைப்பற்றி குறைவாகவே (எல்லோரும் இல்லை) மதிப்பிட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு அந்த படிப்பால் நாங்கள் செய்யபோகும் வேலையை எனது பிள்ளையின் உடம்பு அல்லது மனது தாங்குமா என்ற கவலை மட்டும்தான். அதை சரியான முறையில் அனுகுமிடத்து அல்லது அந்த துறை மீதுள்ள எமது ஆர்வத்தை சரியான முறையில் எம்மால் அவர்களுக்கு புரிய வைப்பதன் மூலம் அந்த பிரச்சனையை எளிதாக நீக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனென்றால் பெற்றோர்கள்ளுக்கும் பெண்ணடிமைதனத்துக்கும் சம்மந்தம் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

பெண்ணடிமைதனம் அதிகம் கணவன் மனைவி படிக்கும் இடங்கள் வேலைதளங்கள் போன்ற இடங்களிளேயே அதிகம் காணப்படுவதாக நான் நினைக்கின்றேன்.

இன்னமும் ஆழமாக சொன்னால் உதாரணத்துக்கு: "நான் எனது மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து இருக்கிறேன். அவள் விருப்பமான இடத்துக்கு போகலாம் வரலாம்" என்று நான் சொல்வேன் ஆனால் இது முதலாளி தொழிலாளி உறவுதான் கணவன் மனைவி உறவல்ல. இப்படி பேசுபவனும் ஆணாதிக்க வாதிதான்.

சுதந்திரம்(தனிப்பட்ட) கொடுத்து வாங்குவதல்ல. அதை அவர் அவர்கள்தான் அநுபவிக்க வேண்டும். யாரும் யாருக்கும் வாங்கிக் கொடுக்க முடியாது. எவர் எவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்று தோன்றுகிறதோ அவர்கள் அதை எதிர்க்க வேண்டியதுதான். சரியான முறையில் செயற்ப்பட்டால் வெற்றி நிச்சயம்.

உண்மையில் நான் இப்பொது செய்யும் வேலையை பெண்கள் செய்வதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. மிகவும் உடம்பபை வருத்தும் வேலை. அதை பெண்கள் செய்வதை நான் விரும்பவில்லை. இது உடல் சார்ந்த வேலை இங்கு பெண்களை பூக்களாகவே பார்க்கின்றோம் அவர்கள் எங்களை பூதங்களாய் பார்கிறார்கள் என்பதை விட்டு விடுறன்.

உண்மையில் சொன்னால் பெண்ணடிமைதனம் என்பது எனக்கு எப்போதும் புரியாத விடயம். நான் ஆணாய் இருப்பதாலும் எனக்கு சகோதரிகள் மட்டும் இருப்பதால் எனக்கு இப்படிப்பட்ட விடயங்கள் புரியாமல் போயிருக்கலாம். அவர்களால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். இல்லாட்டிக்கு ......... என்ட பெயரையும் போட்டு வரலாறு எழுதியிருப்பார். கேக்குறவன் கேக்க வேண்டியதுதான்.

சகோதரிகளே உங்களுக்கு ஆராவது அடிமை விலங்கு போட்டிருந்தால் நீங்கள்தான் அதை உடைக்க வேண்டும். அதை நீங்களே உங்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும்.

சப்போஸ் அக்கா முயலிற்கு மூன்று கால் தான் இருந்தால்

:idea: :idea: :idea:

தங்ச்சி அக்கா சிட்னிக்கு வந்து இதுக்கு பதில் சொல்லுறனம்மா :evil:

:roll: பொண்ணுக ஏனுங்க நாங்க அடிமை என நினைக்கிறீங்க? :twisted: என்னைப் பொறுத்தளவில் நான் யாருக்கும் அடிமையும் இல்லை. யாராலும் அடக்கவும் முடியாது. (காரணம் என்னில் எந்த தப்பும் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன். யாரும் குற்றம் சுமத்தி அடக்க நினைப்பார்களேயானால்) எந்த ஆணும் ஒரு பொண்ணையும் அடக்கவும் இல்லை. பொண்ணுக தான் அடங்கி வாழுகிறார்கள். அப்புறம் என்னடா என்றால் புருசன் அடக்கிறான் அப்பா அடக்குகிறார். அண்ணா திட்டுவார் அப்படி இப்படின்னு ஆண்வர்க்கத்தின் மேல் குற்றம் சாட்டி தாம் தான் பயந்து வாழுகிறார்களேயன்றி இங்கு அடக்குதல் அடிமை என்று யாரும் யாரையும் வதைக்கவில்லை. :P பொண்ணுக எல்லோரும் எம்மை யாரும் அடக்கவில்லை. நாமும் மற்றவர்கள் அடக்குவது போல் நடந்துகொள்ளாமல் எது சமுதாயத்துக்கும் உங்களுக்கும் நல்லதென நினைத்து வாழ நினைக்கிறீங்களோ அன்றே அடிமை அடக்குதல் என்ற எண்ணம் விட்டு போகும் :lol: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன் அம்மணி

  • தொடங்கியவர்

வெண்ணிலா நல்ல கருத்து உங்களை மாதிரி எல்லோரும்..

மனஉறுதியும்..

நல்ல தெளிந்த சிந்தனையும் கொண்டவர்களாக இருக்க என் வாழ்த்துக்கள்..

வெண்ணிலா சொல்வது கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. படித்து சொந்தக்காலில் நிற்கும் பெண்கள் நாம் இப்படி வாய் வீரம் பேசலாம். ஆனால் எத்தனை வீட்டில் பெண்கள் எல்லாவற்றிக்கும் ஆண்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கு. உடுத்திக் கொள்ளும் உடுப்பைக் கூட தெரிவு செய்து மனைவிக்கு கொடுக்கும் கணவன்மார்களும் நம்ம சமுதாயத்தில் இருக்கின்றார்கள். பல பெண்களின் ஆசைகள் கலாச்சாரம் என்ற போர்வையால் போர்த்தி மறைக்கபடுகின்றது.

வேலை போவதற்கு கூட சில பெண்களுக்கு சுகந்திரம் கொடுக்கமால் வைத்திருக்கும் ஆண்களும் இங்கு உண்டு. வேலைக்கு மனைவி போய் கஸ்டப்படக்கூடாது என்றா நினைப்பில் தான் போக விடலை என்று யோசிக்காதீர்கள். அப்படி யோசிப்பவர் கட்டாயம் தான் கஸ்டப்பட்டு வேலை செய்து குடும்ப செலவை கவனிப்பார். மனைவி வேலைக்கு போய் நாலு விசயம் தெரியவந்தால் தனக்குத் தான் தலையிடி என்று நினைக்கும் கணவன்மார்களும் நம் மத்தியில் இருக்கின்றார்கள் நிலா.

சுகந்திரம் என்பது ஒவ்வொருவரின் வெறுப்பு விருப்புக்கு மாறுபடும். எனக்கு சுகந்திரமாக தெரிவது உங்களுக்கு அது அடிமைத்தனமாக இருக்கும். எனக்கு அடிமைத்தனமாக இருப்பது உங்களுக்கு சுகந்திரமாக இருக்கும். எப்படியாயினும் பெண் ஏதோ ஒரு வகையில் கட்டாய முறையில் அடிமை அக்கப்படுகின்றாள். அது எமது காலச்சாரத்தின் கட்டாயமாகிவிட்டது என்பது தான் எனது கருத்து.

தட்டுறதுனா தட்டுங்க கறுப்பி உதுக்கள்லாம் நான் பயப்பட மாட்டேன். என்ட மனிசி தட்டாத தட்டையா நீங்கள் தட்டிட போறீங்கள்.

சகோதரி ரமா இந்த வார்த்தைகளில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. பெற்றோர்கள் மனம் வருந்தும்படியும் நடப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் மகிழ்ச்சியே எமது பிறப்பாக இருந்தாலும் அவர்கள் எங்களைப்பற்றி குறைவாகவே (எல்லோரும் இல்லை) மதிப்பிட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு அந்த படிப்பால் நாங்கள் செய்யபோகும் வேலையை எனது பிள்ளையின் உடம்பு அல்லது மனது தாங்குமா என்ற கவலை மட்டும்தான். அதை சரியான முறையில் அனுகுமிடத்து அல்லது அந்த துறை மீதுள்ள எமது ஆர்வத்தை சரியான முறையில் எம்மால் அவர்களுக்கு புரிய வைப்பதன் மூலம் அந்த பிரச்சனையை எளிதாக நீக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனென்றால் பெற்றோர்கள்ளுக்கும் பெண்ணடிமைதனத்துக்கும் சம்மந்தம் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

பெண்ணடிமைதனம் அதிகம் கணவன் மனைவி படிக்கும் இடங்கள் வேலைதளங்கள் போன்ற இடங்களிளேயே அதிகம் காணப்படுவதாக நான் நினைக்கின்றேன்.

இன்னமும் ஆழமாக சொன்னால் உதாரணத்துக்கு: "நான் எனது மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து இருக்கிறேன். அவள் விருப்பமான இடத்துக்கு போகலாம் வரலாம்" என்று நான் சொல்வேன் ஆனால் இது முதலாளி தொழிலாளி உறவுதான் கணவன் மனைவி உறவல்ல. இப்படி பேசுபவனும் ஆணாதிக்க வாதிதான்.

சுதந்திரம்(தனிப்பட்ட) கொடுத்து வாங்குவதல்ல. அதை அவர் அவர்கள்தான் அநுபவிக்க வேண்டும். யாரும் யாருக்கும் வாங்கிக் கொடுக்க முடியாது. எவர் எவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்று தோன்றுகிறதோ அவர்கள் அதை எதிர்க்க வேண்டியதுதான். சரியான முறையில் செயற்ப்பட்டால் வெற்றி நிச்சயம்.

உண்மையில் நான் இப்பொது செய்யும் வேலையை பெண்கள் செய்வதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. மிகவும் உடம்பபை வருத்தும் வேலை. அதை பெண்கள் செய்வதை நான் விரும்பவில்லை. இது உடல் சார்ந்த வேலை இங்கு பெண்களை பூக்களாகவே பார்க்கின்றோம் அவர்கள் எங்களை பூதங்களாய் பார்கிறார்கள் என்பதை விட்டு விடுறன்.

உண்மையில் சொன்னால் பெண்ணடிமைதனம் என்பது எனக்கு எப்போதும் புரியாத விடயம். நான் ஆணாய் இருப்பதாலும் எனக்கு சகோதரிகள் மட்டும் இருப்பதால் எனக்கு இப்படிப்பட்ட விடயங்கள் புரியாமல் போயிருக்கலாம். அவர்களால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். இல்லாட்டிக்கு ......... என்ட பெயரையும் போட்டு வரலாறு எழுதியிருப்பார். கேக்குறவன் கேக்க வேண்டியதுதான்.

சகோதரிகளே உங்களுக்கு ஆராவது அடிமை விலங்கு போட்டிருந்தால் நீங்கள்தான் அதை உடைக்க வேண்டும். அதை நீங்களே உங்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும்.

நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கின்றேன். பெற்றோர்கள் நம்மீது உள்ள அக்கறையால் தான் சொல்லுகின்றார்கள் என்பது ஒருவகையில் உண்மையே. எத்தனை குடும்பங்களில் காலாச்சாரத்தை சாக்கு காட்டி நம்முடைய ஆசைகள் எல்லாம் மண்ணாக்கப்படுகின்றது? அதுவும் புலம்பெயர்ந்து வாழும் நாம் தான் அத்தகைய இன்னல்களை கூடுதலாக அனுபவிக்கின்றோம். எமது காலச்சாரத்திலும் முழுமையாக இருக்க முடியமாலும் இந்நாட்டில் இருக்கும் காலச்சாரத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியமாலும் இருக்கின்றோம். பெற்றோர்களும் ஒருவகையில் இதற்கு காரணமாகி விடுகின்றார்கள்.

ஆனால் இனி வரும் சமுதாயம் இத்தகைய பிரச்சனைகளை அனுபவிக்காது என்று நம்புகின்றேன்.

பெற்றோருக்கு புரிய வைப்பது மிகவும் எளிதான காரியம். ஆனால் பெற்றோர் சூழலுக்கு புரிய வைப்பதை நினைத்து தான் பல காரியங்களுக்கு தடை போடுகின்றார்கள் என்பது எனது கருத்து.

வெண்ணிலா சொல்வது கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.

நன்றி

படித்து சொந்தக்காலில் நிற்கும் பெண்கள் நாம் இப்படி வாய் வீரம் பேசலாம்.

ஓ அப்படியா?

ஆனால் எத்தனை வீட்டில் பெண்கள் எல்லாவற்றிக்கும் ஆண்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கு.

இங்கு கஸ்டம் அதாவது வறுமைதான் முக்கிய பங்கு வகிக்கின்றதே தவிர அடிமை இல்லையே அக்கா

உடுத்திக் கொள்ளும் உடுப்பைக் கூட தெரிவு செய்து மனைவிக்கு கொடுக்கும் கணவன்மார்களும் நம்ம சமுதாயத்தில் இருக்கின்றார்கள்.

இது காதல் அன்பு. அடிமை இல்லையே

பல பெண்களின் ஆசைகள் கலாச்சாரம் என்ற போர்வையால் போர்த்தி மறைக்கபடுகின்றது.

இங்கு பெண்கள் மீதுள்ள நம்பிக்கையின்மைதான் காரணம். அதற்காக அடிமைத்தனம் இல்லையே.

வேலை போவதற்கு கூட சில பெண்களுக்கு சுகந்திரம் கொடுக்கமால் வைத்திருக்கும் ஆண்களும் இங்கு உண்டு.

இங்கு பெண்கள் மீதுள்ள நம்பிக்கையின்மைதான் காரணம். அதற்காக அடிமைத்தனம் இல்லையே.

வேலைக்கு மனைவி போய் கஸ்டப்படக்கூடாது என்றா நினைப்பில் தான் போக விடலை என்று யோசிக்காதீர்கள். அப்படி யோசிப்பவர் கட்டாயம் தான் கஸ்டப்பட்டு வேலை செய்து குடும்ப செலவை கவனிப்பார். மனைவி வேலைக்கு போய் நாலு விசயம் தெரியவந்தால் தனக்குத் தான் தலையிடி என்று நினைக்கும் கணவன்மார்களும் நம் மத்தியில் இருக்கின்றார்கள் நிலா.

இப்படிப்பட்ட கணவன்மார்கள் தத்தம் பொண்டாட்டி மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களே தவிர இதைப்போய் அடிமைத்தனம் என சொல்ல முடியாது. அப்படிப்பார்க்க போனால் பொண்டாட்டியும் ஓகே நான் வேலைக்கு போகவில்லை என சொல்லி வேலைக்கு போகாமல் இருக்கலாம் அல்லவா? ஒவ்வொரு குடும்பத்தையும் அலசி ஆராய முடியாதுதானே, அவர்களுக்குள் எவ்வளவோ இருக்கும் ஆனால் பொதுவாக பொண்ணுகளுக்கு அடிமை என்னும் சங்கிலி ஆண்களால் பூணப்படுவதில்லை.

சுகந்திரம் என்பது ஒவ்வொருவரின் வெறுப்பு விருப்புக்கு மாறுபடும். எனக்கு சுகந்திரமாக தெரிவது உங்களுக்கு அது அடிமைத்தனமாக இருக்கும். எனக்கு அடிமைத்தனமாக இருப்பது உங்களுக்கு சுகந்திரமாக இருக்கும்.

இருக்கலாம். ஆனால் உங்களுக்கு சுதந்திரமாக தெரிவது எனக்கு ஒருபோதும் அடிமைத்தனமாக தெரியாது. ஏனெனில் அடிமை என உலகத்தில் யாருமே இல்லை என்பது என் கருத்து. அடிமை என ஏன் தம்மை தாமே குறைத்துக்கொள்ளணும். நான் அடிமையே இல்லை நான் ஏன் அடிமையாக இருக்கணும் இப்படி பல கேல்விகள் மனதில் கிளர்ந்தெழுந்தாலே போதும். :arrow:

எப்படியாயினும் பெண் ஏதோ ஒரு வகையில் கட்டாய முறையில் அடிமை அக்கப்படுகின்றாள். அது எமது காலச்சாரத்தின் கட்டாயமாகிவிட்டது என்பது தான் எனது கருத்து.

கலாச்சாரத்தின் கட்டாயம் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் அடிமையாக வாழணும் என்பது அடாவடித்தனம்.. கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. இதனாலேயே நம்ம இனம் குன்றிப்போயுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக்காலில் இருக்க பழகுவாளாயின் கலாச்சாரத்துக்கு கட்டுப்படணும் என்ற எண்ணமே வராது.

நிலா

நீங்கள் சொன்ன வறுமை நம்பிக்கையின்மை எல்லாமே அடிமைத்தனத்தின் வெளிப்பாடு தான். நம்பிக்கையின்மையால் தான் கணவன் மனைவியை வீட்டில் பூட்டி வைத்து அடிமையாக்க நினைக்கின்றான். காதல் அன்பு என்றா போர்வையில் மனைவியின் ஆடைகளை தெரிவு செய்யும் கணவன் அந்த மனைவி என்ன வகை ஆடைகளை அணிய விரும்புகின்றாள் என்பதை ஏன் கேட்க மறுக்கின்றான்.

கணவனின் நம்பிக்கையின்மையை நினைத்து மனைவிமரர்கள் வேலைக்கு போகமால் இருக்கலாம் தான். ஆனால் வயிற்றுப் பசிக்கு யாரு தீனி போடுவது. பிள்ளைகளை படித்து பெரியவர்கள் ஆக்கும் பணிக்கு யாரு காசு கொடுப்பது. கணவனின் உழைப்பில் இவற்றை செய்ய முடியாமல் தான் அந்த மனைவி வேலைக்கு போகின்றாள். வேலைக்கு போனாலும் சொன்ன நேரத்திற்குள் வீட்டிற்கு வரணும். அது பனிக்காலமாக இருந்தாலும் சரி கோடை காலமாக இருந்தாலும் சரி. ஆண்கள் எல்லோரும் அடிமைச்சங்கிலியை கொண்டு போய் பூட்டுவதில்லை. ஒத்துக் கொள்கின்றேன். ஆனாலும் பல காரணங்களை காட்டி அதை பெண்களாகவே பூட்டி கொள்ளச் செய்கின்றார்கள்.

அடிமைத்தனத்தை விட்டு பொங்கி எழுவது இலகுவான காரியம் அல்ல. குடும்பம் குழந்தைகள் என்று ஏதோ ஒரு கயிறு அவர்களை அந்த அடிமைத்தனத்தில் கட்டி வைத்திருக்கும். கேள்விகள் எழுந்தாலும் அதற்கான விடைகள் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அவற்றிலிருந்து விடுபட முடியாது.

இன்னும் ஒன்று கலாச்சாரம் கட்டுப்பாடுகள் சில வேளைகளில் வந்து எமது கழுத்தை நெருக்கினாலும் வாழ்க்கையில் பல வேளைகளில் வரும் அளவில்லா சந்தோசத்திற்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பது மறுக்கமுடியாத உண்மை.

சில விபரங்கள் அனுபவரீதியில் வரும்...

அது வெண்ணிலாக்கு விவாகமானதன்பின் ஓரளவு புரியும்..

காதல் தருணத்தில் பெண்ணுக்கு தலையாட்டும் ஆண்கள்..

திருமணத்தின்பின்.. பெண்கள் பொதுஇடத்தில் மூச்சுவிட்டாலே எரிச்சலடைவதைக் கண்டிருக்கிறேன்..

பாவம் வெண்ணிலா..வெளுத்ததெல்லாம் பால்..

சுட்டதெல்லாம் சட்டி என்றிருக்கிறா..

திருமணத்தின் பின்..

இந்த வெள்ளை நிலவு சுடுமா..

இல்லை..வீட்டுக்கார ஐயா சுடுவாரா என...

வெள்ளித்திரையில்...ஸாரி

வரும்நாளில் காண்க.. :wink:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

பார்ப்பமா? காத்திருங்கள் வரும்நாளில் காண்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் எதிர் பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றமும் அதிகம் இருக்காது.நான் விரும்புவதை செய்ய அனுமதிப்பது மட்டும் இல்லை. நான் விரும்பாததை செய்யாமல் இருக்க அனுமதிப்பதும் தான் சுதந்திரம்.(காந்தி)

அடிமைத்தனத்தை விட்டு பொங்கி எழுவது இலகுவான காரியம் அல்ல. குடும்பம் குழந்தைகள் என்று ஏதோ ஒரு கயிறு அவர்களை அந்த அடிமைத்தனத்தில் கட்டி வைத்திருக்கும். கேள்விகள் எழுந்தாலும் அதற்கான விடைகள் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அவற்றிலிருந்து விடுபட முடியாது.

இன்னும் ஒன்று கலாச்சாரம் கட்டுப்பாடுகள் சில வேளைகளில் வந்து எமது கழுத்தை நெருக்கினாலும் வாழ்க்கையில் பல வேளைகளில் வரும் அளவில்லா சந்தோசத்திற்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பது மறுக்கமுடியாத உண்மை.

பெண்களை யார் முதல் அடிமை ஆக்கியது?

இதுக்கு பதில் சொல்லுங்கள் பிறகு நான் விளக்கம் தருகிறேன்

உலகம் வளந்து விட்டது எங்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையே என்று சகோதரிகள் சொல்வது எனக்கு கவலையை தருகிறது. எங்கள் அறிவுந்தானே சேர்ந்து வளர்தது சகோதரிகளின் ஏக்கம் எனக்கு வேதனையை தருகிறது. சகோதரிகளின் அறிவுந்தானே சேர்ந்து வளர்தது அவர்களின் புலம்பல் எரிச்சலை தருகிறது.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று யேசுநாதர் சொன்னார். நீங்கள் கேட்டீர்களா???

தட்டுங்கள் திறக்கப்படும் அதுவும் அவர்தான் சொன்னார்.

நீங்கள் தட்டீனீர்களா???

ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்ட சொன்ன கருணையாளன் யேசுபிரான் அந்த மறுகன்னத்திலும் அடித்தால் முதுகை காட்ட சொன்னாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு பாரதியார் வந்து தான் விடுதலைக்குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் போலும். என்றைக்கு எவனும் மற்றவர்கள் தமக்கு கீழே படிந்து வாழவேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், அத் தடைகளைத் தாண்டி வரவேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

---------------------------------

ஒரு தடவை இளையதம்பி தாயனந்தா சொன்னவர் என நினைக்கின்றேன். தட்டுங்கள் திறக்கப்படும் என்றது எல்லோருக்கும் விளங்குகின்றது. ஆனால் எதைத் தட்டுவது என்று தான் யாருக்குமே புரியவில்லை என்று.

பெண்களுக்கும் அதே பிரச்சனை தான். பெண்விடுதலை, பெண் விடுதலை என்று கதைக்கத் தெரிகின்றதே தவிர, அது எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.