Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு
2014-09-01 10:12:46
3023.jpg
யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரத்தைத் தரும்படி இராணு வத்தினர் கோரிய போதும் தான் அதனை மறுத்து விட்டதாக, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன. 

இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவுகள் போடமுடியாத நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, அரியாலைப் பகுதியில் பிரதேச சபைக்கு அன்பளிப்பாகக் கிடைத்த 2 ஏக்கர் காணியை கழிவுகள் கொட்டுவதற்கும், தொடர்ந்து அவற்றை பசளையாக்கும் திட்டமும் 2 மில்லியன் ரூபா செலவில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

ஆயினும், அப்பிரதேசம் நன்னீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ்வரும் பிரதேசமென்றும், மேலும் அந்தப் பகுதியைச் சூழ விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றமையால் அங்கு கழிவுகளைப் போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களமும், வடமாகாண விவசாய அமைச்சும் மறுத்திருந்தது. 

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைப் கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த 27ஆம் திகதி முதல் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை தவிசாளர் நிறுத்தியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதேச சபைக்குச் சென்ற இராணுவத்தினர் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும், ஆகையால் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படியும் தவிசாளரிடம் கேட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார் என மேலும் தெரியவருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு

2014-09-01 10:12:46

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைப் கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த 27ஆம் திகதி முதல் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை தவிசாளர் நிறுத்தியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதேச சபைக்குச் சென்ற இராணுவத்தினர் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும், ஆகையால் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படியும் தவிசாளரிடம் கேட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார் என மேலும் தெரியவருகிறது. 

தவிசாளருக்கு மூன்று தெரிவுகளே உள்ளன:
  • நல்லூர் நாறுவது தொடர்வதை தடுக்க உடனடியாக கழிவகற்ற மாற்றிடம் கண்டுபிடிக்க வேண்டும்.
  • இராணுவம் தரும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • பதவி விலகி வேறு ஆற்றல் மிக்கவருக்கு இடம் விட வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

தவிசாளர் அவர்களே..

1. இடைக்காலத் தீர்வாக பிற நகரசபைகளோடு பேசி தற்காலிகமாக கழிவைக் கொட்ட நடவடிக்கை எடுங்கள்.

2.குறிப்பிட்ட காலத்துக்குள் சரியான கழிவகற்றல் இடங்களைக் கண்டுபிடித்து.. சேதனக் கழிவுகள்.. செயற்கைக் கழிவுகள் என்று தரம் பிரித்து.. கழிவுகளில் இருந்து அடுத்த உற்பத்திகளுக்கு வழிபாருங்கள்.

3. சிவில் நடவடிக்கைகளுக்குள் எந்த இராணுவ ரீதியான தலையீடுகளையும் அனுமதிக்காதீர்கள்.

4. சதுப்பு நிலப் பிரதேசங்களை தெரிவு செய்து சேதனக் கழிவுகளை அங்கு கொட்டுவது.. எதிர்காலத்திற்கு நல்லது. செயற்கைக் கழிவுகளை சுழற்சி முறைக்குப் பயன்படுத்தும் வகைக்கு சேமிக்க முனையுங்கள். சுழற்சி முறை தொழில்நுட்பங்களை வரவழைக்க முயலுங்கள்.

5. இந்தப் பிரச்சனையை நகரசபை சரியான ஆற்றலுள்ளோர்களின் ஆலோசனையோடு.. யாழ் பல்கலைக்கழகத்தின் உதவியோடு.. நீண்ட கால நோக்கோடு தீர்ப்பதே சிறந்தது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

6. சேதனக் கழிவுகளில் இருந்து மிதேன் போன்ற எரிவாயு உற்பத்திக்கு வழிபாருங்கள். அத்தோடு விவசாயத்துக்கு தேவையான சேதன உரத்தையும் பெற்றுக் கொள்ளலாம். சரியான திட்டமிடலே அவசியம். இராணுவத் தலையீடு அல்ல...!

Biogas_plant_sketch.jpg

வீடுகளுக்கான திட்டம்.

Schematic-of-a-biogas-plant.jpg

நகரக் கழிவுகளுக்கான திட்டம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

6. சேதனக் கழிவுகளில் இருந்து மிதேன் போன்ற எரிவாயு உற்பத்திக்கு வழிபாருங்கள். அத்தோடு விவசாயத்துக்கு தேவையான சேதன உரத்தையும் பெற்றுக் கொள்ளலாம். சரியான திட்டமிடலே அவசியம். இராணுவத் தலையீடு அல்ல...!

தொலை தூரத்தில் இருந்து இந்த இணையம் ஊடாக நெடுக்கு அவர்கள் தன்னால் முடிந்ததை செய்ய முயல்வதற்கு பாராட்டுகள். மற்றவர்களும் இந்த முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.

தவிசாளரின் மின்னஞ்சலையும் தொலைபேசி இலக்கத்தையும் கண்டுபிடிக்க கூடியவர்கள் இந்த களத்தில் அதை பிரசுரித்தால் பலரும் அதை பயன்படுத்துவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.