Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் 

ஆத்மா சாந்தியடையட்டும் 1f64f.png?

Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
  • Replies 3.9k
  • Views 332k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணங்களை நினைக்கும் போது....முரண்பட்டாலும் மனம் வலிக்கின்றது

 
Image may contain: 1 person , people smiling
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட கண்டத்தின் விடிவெள்ளி..நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு தினம்.!


கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம்…ஒளிர மறுத்து அணைந்துவிட்டது.
ஆம்..அழுவதும், தொழுவதும், அடிமைகளாய் அடங்கிக்கிடப்பதும் விதி என்று வீழ்ந்து கிடந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களை, எழுவதும், எதிர்த்து நிற்பதும்,தடைகளை தகர்த்து விடுதலை பெறுவதும் காலம் அவர்களுக்கிட்ட கட்டளை என்பதை உணர்த்தி அவர்களின் அடிமை விலங்குடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த நெல்சன் மணே;டேலா என்ற மாபெரும் போரளி, மாபெரும் தலைவர் மறைந்துவிட்டார்.
அந்த மாபெரும் தலைவனின் மறைவையிட்டு தென்னாபிரிக்க மக்கள் மட்டமல்லால், உலக கறுப்பின மக்கள் மட்டுமல்லாமல் உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து இன மக்களும் கலங்கி நிற்கின்றனர்.

1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. 13 குழந்தைகள் கொண்ட
குடும்பத்திலிருந்து முதன் முதலாக பாடசாலைக்குச் சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்து வந்தார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தென்னாபிரிக்கா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
கறப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னாபிரிக்காவை மிகச் சிறுபான்மையாக உள்ள வெள்ளையின நிறவெறி அதிகார வாக்கம் அடக்கியாண்டதை எதிர்த்து நெல்சன் மண்டேலா தனது 21 வது வயதில் போர்கொடி தூக்கினார்;.தன்னுடைய வயதையுடைய கறுப்பின இளைஞர்களை திரட்டி தென்னாபிரிக்காவின் மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களுக்கு ஆக்கிரமிப்பாளராக வந்து குடியேறிய வெள்ளை இனவாதிகள் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய தேவையை உணர்த்தினார்.அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து வாழ்வதால் மாற்றம் வந்துவிடாதென்பதையும், எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலம் தான் விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அவர் புரியவைத்தார். 
1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய வெள்ளை இனவாதஅரசாங்கம் கறுப்பின மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிகளவுக்கு அடக்குமுறையை திணித்தது. மண்டேலா அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து அந்த அரசாங்கத்தின இனஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
ஆனால் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேரமாக அரசியலுக்குள் புகுந்தார். விரைவிலேயே கறுப்பின மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
அதுவரை மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை நெல்சன் மண்டேலா தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார். அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மகக்ள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளை நிறவெறி; அரசாங்கம் 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று குற்றம் சாட்டி நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்ட அவரது தோழர்களையும் கைது செய்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கும் சர்வதேச அழுதங்களுக்கும் பின்பு 1961ல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 ம் ஆண்டு; கறுப்பின மக்களுக்கு தனியான கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக மண்டேலா ளூயசிநஎடைடந சார்பெவில் நகரில் ஊர்வலம் ஒன்றை; நடாத்தினர். இந்த ஊர்வலத்தை கலைப்புதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 
இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்திய மட்டுமல்லாமல் நெல்சன் மண்டேலாவின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
ஆம் உரிமைகளை யாசித்துப் பெறமுடியாது பேராடித்தான் பெற வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்
அது வரை மென்போக்கு அரசில் கட்சியாக இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்ட விடுதலை அமைப்பாக மாறியது.
ஏற்கனவே லத்தீன் அமெரிக்காவில் சேகுவராவால் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான கெரில்லா போர் முறையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது

1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது.அதன் பின் தொடர்ச்சியாக வெள்ளை நிறவெறி அரசாங்கப் படைகள் மீதும் அதன் நிர்வாக கட்டமைப்புகள் மீதும் நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களால் தென்பிரிக்க நிறவெறி அரசு ஆட்டங்கண்டது.1961ல் நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.
ஆனாலும் அவர் தலைமை மறைவாக இருந்து விடதலைப் பேரை வெற்றிகரமாக நடத்தினார்.மண்டேலாவின் எழுச்சி ஆபிரிக்காவை தாண்டி அமெரிக்க ஐரொப்பா மற்றும் ஆசிய கண்டங்களிலும் எதிரொலித்தது..அவரது பேராட்டத்துக்கான ஆதரவுத்தளம் விரிந்தது.
ஆடக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கும் தங்களின் விடுதலைக்காக பேராடும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா வழக்கப்போல தென்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபடுகிறது என்றும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி என்றும் பிரகடனப்படுத்தியது.அதேரிக்காவின் நேச நாடுகளும் அதை பின்பற்றின. ஆனால் அவற்றைவிட அதிகமான நாடுகளும் பெரும்பாலான உலக மக்களும் அவரை ஒரு விடுதலைப் போராளியாகவே பார்த்தனர்.

1962ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினர் அவரையும் அவரது 10 முக்கிய தோழர்களையும் சுற்றிவளைத்து கைதுகைது செய்தனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தது அரசைக் கவிழ்க்க முயன்றது அமைதியைக் குலைத்தது, கலகத்தை உருவாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டன. 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
;உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.
பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுத்தலைவராக பதவிக்கு வந்த டெக்ளார்க் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

11.2.1990 அன்று அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.அதன்படியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்..அப்போது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதுமண்டேலாவின் விடுதலையை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன.
1994ம் ஆண்டு மே 10 ந் திகதி அவர் தென்னாப்பிரிக்காவின் முதன் முதல் கறுப்பின அரசுத்தலைவர் ஆனார்.1999 இல் பதவியை விட்டு விலகிய அவர் 2வது முறை அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் ‘நேரு சமாதான விருது’ ‘பாரத ரத்னா’ விருது மகாத்மா காந்தி சர்வதேச விருது உட்பல பல சர்வதேச விருகளைப்பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.
இன்று நெல்சன் மண்டேலா என்ற மனிதர் மறைந்துவிட்டார்.அவரது உயிர் மூச்சு ஓடங்கிவிட்டது.ஆணால் எழுப்;பிய விடுதலைக்குரல் ஓய்ந்துவிடவில்லை புரட்சித்தீ அணைந்துவிடவில்லை.
ஏனென்றால ;உலகில் இன்னமும் நிறவெறியும் இனவெறியும் ஒழிந்துவிடவில்லை.பாரபட்சமும் பிறப்பைக் கொண்டும் நிறத்தைக் கொண்டும் மனிதனை மனிதம் இழிவுசெய்து கெடுமையும் மறைந்துவிட வில்லை.

11.2.1990ல் நெல்சன் மண்டேலே சிறையிலிருந்து வெளியே வந்த போது ‘இனவெறி நிறவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது என்றும் கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த வார்த்தைகள் இன்னும் அர்த்த முள்ளவையாக தென்னாபிரிக்க மக்களினது மட்டுமல்லாமல் விடுதலை வேண்டி நிற்கும் உலகிலுள்ள அனைத்து மக்களினதும் குரலாக அது என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நெல்சன் மண்டேலா என்ற மாமனிதனுக்கு விடுதலைiயும் சமத்துவத்தையும் மாநிடத்தையும் நேசிக்கும் உலக மக்களுடன் கைகோர்த்து நாமும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 5 ↔ உலக மண் தினம்

 
 
உலகின் இயற்கைச் சூழலில் மண்வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது.  சுற்றுச்சூழல் நிலைத்திருக்கவேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவியரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக உலக மண் தினமானது கொண்டாடப்படுகின்றது.

"உலகில் உணவு பாதுகாப்பினை பேணுவதற்காக மண்ணின் ஆரோக்கியத்தினை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் 2002ம் ஆண்டு உலக மண் தினமானது கொண்டாடப்படுகின்றது.  
 
2012-08-20-12-33picc.jpg
 
 
 
  • புவியின் மேற்பரப்பில் 29% ஆன வகிபாகத்திற்கு நிலப்பரப்பு சூழ்ந்துள்ளது.  உலகில் வாழ்கின்ற 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கும், மேலும் பிற உயிரினங்களுக்கும் தேவையான வாழ்வாதார வசதிகளினை நிலங்களே வழங்குகின்றன.   
·   மண், சூழலின் உயிரற்ற கூறாகக் கருதப்படுகின்ற போதிலும் அதிற் பல முக்கிய பகுதிகளான நுண்ணங்கிகளும் வேறு பல இன அங்கிகளும் உள்ளன. பாறைகள் அழிவடைந்தே மண் உண்டாகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதியிலுள்ள மண்ணின் இயல்பு அதன் தாய்ப்பாறையின் இயல்பிலும் அப்பாறை அழிவதற்கான காரணிகளிலும் காலநிலையின் இயல்பிகளிலும் தங்கியிருக்கும். 
 
·  மண்ணிற் பலவகை உண்டு. அவை பெளதிக, இரசாயன இயல்புகளில் வேறுபடுகின்றன. மண்ணின் இவ்வியல்புகள் யாவும் அவற்றில் வளரும் தாவரங்களினைப் பாதிக்கின்றன. எனவே, ஒரு பகுதியில் உள்ள மண்ணை எதற்காக உபயோகிக்கலாம் என்பதை அம்மண்ணின் இயல்புகளே தீர்மானிக்கின்றன. 
 
·  மண் உருவாதல் என்பது ஒரு நீண்ட காலச் செயற்பாடாகும். ஒரு அங்குல தடிப்பமுடைய மேல்மண் படை உருவாகுவதற்கு சராசரியாக 500 ஆண்டுகள் ஆகின்றன.
 
· மண் மாதிரியொன்றில் சராசரியாக 45%  கனிப்பொருட்கள், 25% நீர், 25% வளி, 5%நுண்ணங்கிகள் உள்ளடங்கியுள்ளன.
 
·  ஒரு கிராம் மண்ணில் 5000 – 7000 வகையான பக்றீரியாக்கள் இருக்கின்றன. ஒரு ஏக்கர் மண்ணில் 5 – 10 தொன் வரையிலான உயிரிகள் வாழ்கின்றன. 
 
·  புவியின் மேற்பரப்பில் எண்ணிக்கையற்ற மண் வகைகள் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் அண்ணளவாக 70000 வகையான மண் மாதிரிகளையும், ஐரோப்பாவில் அண்ணளவாக 10000 வகையான மண் மாதிரிகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
 
worldorders.jpg
 
·  சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களிலான வகையான மண் வகைகள் காணப்படுகின்றன. ஆனால் உலகில் அதிக எண்ணிக்கையான மண் வகைகள் கறுப்பு, பிறவுண், சாம்பல் நிறங்களிலேயே காணப்படுகின்றன. 
 
c23.jpeg
 
 
·  மண்ணின் வளத்திற்கு மண்புழுக்கள் அத்தியாவசியமானவையாகும். வருடாந்தம் ஒரு மண் புழுவானது ஏக்கரொன்றுக்கு 15 தொன்கள் உலர்மண்ணினை வெளியாக்குகின்றது. 
 
 
· ஒரு ஏக்கர் பயிர் நிலமொன்றில் அண்ணளவாக 1.4மில்லியன் மண்புழுக்கள் காணப்படுகின்றன.
 
sos.jpg
 
· மண்படைகளில் அதிக உற்பத்திக்கு காரணமானது மேல்மண் ஆகும்.
 
·   உலகில் பயன்படுத்துக்கூடிய நிலங்களில் 23% ஆனவை மண்ணரிப்பு போன்ற இன்ன பல காரணங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
·  மண்ணரிப்பு, அளவுக்கதிகமான பயிர்ச்செய்கை, இரசாயன வளமாக்கிகள் மற்றும் பீடைகொல்லிகள் உபயோகித்தல், மண் அகழ்வு, நிலம் மாசடைதல், கால்நடைகளின் அளவுக்கதிகமான மேய்ச்சல் செயற்பாடுகள் போன்ற காரணிகளால் மண்ணின் வளமானது வீழ்ச்சியடைந்து செல்கின்றன.
 
MP9003901501.jpg
 
· புவியின் நீர்வளத்தில் 0.01% பங்கினையே நிலம் கொண்டுள்ளது.
 
படித்ததிலிருந்து....***
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் தமிழக முதல்வரின் பூதவுடல் நல்லடக்கம் .

1f337.png? கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆகிப்போனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு "அம்மு".அதிமுகவினருக்கு "அம்மா".

1f337.png? சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். "இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்" என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

1f337.png? போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத்தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். தற்போது ஹைதராபாத் செல்வதை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் தங்க வேண்டுமென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடு.

1f337.png? சினிமா காலத்தில் இருந்தே இவரை "வாயாடி"என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விடம் கேட்டதுக்கு, "அவர் கலகல, நான் லொட லொட" என்றாராம் சிரித்தபடி.

1f337.png? உடல்நலனில் ஆரம்பகாலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர். தற்போது சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்கிறார்.

1f337.png? இவர் நடித்த மொத்தப்படங்கள் 115.எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

1f337.png? "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"என்ற "அரசிளங்குமாரி" படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து அவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்கினார்.

1f337.png? "அரசியலில் நான் என்றைக்குமே குதிக்க மாட்டேன் "என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. "நாடு போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல "என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலிமாறன்.

1f337.png? ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில். பிறகு அடையாறில் சிலகாலம் இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில் தான் போயஸ் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியர் இவருடைய அம்மா சந்தியா. அதனால் "வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம். ஆனால் அம்மா வைத்த. வாசலை மட்டும் மாற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

1f337.png? எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல்லை.

1f337.png? போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

1f337.png? எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

1f337.png? பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

1f337.png? தினமும் காலையில் நிஷாகாந்தி எனப்படும் இருவாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார்நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழைவார். சமீபமாக துளசியும் பூஜையில் தவறாமல் இடம்பெறுகிறது.

1f337.png? யாகம் வளர்ப்பதிலும், ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.

1f337.png? சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார்.இந்திரா,சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

1f337.png? பரதம்,ஓரிண்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடினார்.

1f337.png? ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் *"நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா"* என்று பாராட்டப்பட்டவர்.

1f337.png? பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வ முள்ளவர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் இவருடைய விருப்பங்கள்.

1f337.png? ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

1f337.png? போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்தநாளை யொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்படுகின்றன.

1f337.png? இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங் களையும் தனது "வாக் அண்ட் டாக் "பேட்டிக்கு வரவழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை.கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.

1f337.png? ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி படித்து வந்தார். இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார்.ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் உள்ளன.

1f337.png? ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில்தான்.அங்கு சசிகலா, மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

1f337.png? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா!

1f337.png? திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத்தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

1f337.png? பாடசாலை மாணவி யாக இருக்கும்போதே ஜெயலலிதா பல்வேறு நாடகங்களில் நடித் துள்ளார். அதில் உன்று *TEA HOUSE* என்ற ஆங்கில நாடகம்.அதன் பின்னர் *THE EPISTLE* என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார்.

1f337.png? திரையிலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு.அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

1f337.png? *சிவாஜியுடன்* இவர் நடித்துள்ள *தங்கமகன்* திரைப்படம் தான் *ஆஸ்காருக்கு* பரிந்திரை செய்யப்பட்ட *முதல் தமிழ் படம்.*

1f337.png? *ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரைப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றவை.*

1f337.png? "நான் அனுசரித்துப் போகிறவள் தான்.ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்டருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஜெயலலிதா சினிமாவில் நுழைந்தது எப்படி..?

Dec 06, 2016

 

செல்வி ஜெயலலிதா சினிமாவில் நுழைந்தது எப்படி..?

திரையுலகில் ஜெயலலிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திறமையாலும், கடுமையான உழைப்பாலும் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டவர்.

ஜெயலலிதா 1961-ம் ஆண்டு ‘ஸ்ரீசைல மகாத்மே’ என்ற கன்னட படத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெறும் பள்ளிக்கூட நாடக காட்சியில் பார்வதி வேடத்தில் நடிக்க வேண்டிய சிறுமி வரவில்லை. இதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க தனது தாயார் சந்தியாவுடன் சென்றிருந்த ஜெயலலிதாவை டைரக்டர் அரூர் பட்டாபி, பார்வதி வேடத்தில் நடிக்க வைத்தார். பார்வதி வேடத்தில் நடனக் காட்சியில் ஜெயலலிதா நடித்தார்.

அதன் பிறகு 1962-ல் கிஷோர் குமார் கதாநாயகனாக நடித்த ‘மன்மாஜி’ என்ற இந்தி படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் 3 நிமிட நடன காட்சியில் நடித்தார். பி.ஆர்.பந்துலு டைரக்‌ஷனில் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ படத்தின் நூறாவது நாள் விழா 1964-ம் ஆண்டு சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த படத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் நடித்து இருந்ததால், விழாவுக்கு தனது மகள் ஜெயலலிதாவையும் அழைத்து வந்து இருந்தார். அப்போது பி.ஆர்.பந்துலு தனது இயக்கத்தில் பிரபல நடிகர் கல்யாண்குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘சின்னத கொம்பே’ என்ற கன்னட படத்துக்கு புதுமுக கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்தார்.

விழாவுக்கு வந்திருந்த ஜெயலலிதாவை பார்த்த பி.ஆர்.பந்துலு, சந்தியாவின் அனுமதியுடன் ஜெயலலிதாவை ‘சின்னத கொம்பே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஜெயலலிதா, 2 மாதங்களில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர இருந்ததால், முதலில் அவரை நடிக்க வைக்க தாயார் சந்தியா தயங்கினார். “6 வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும், எனவே ஜெயலலிதா கல்லூரியில் சேருவதில் எந்த இடையூறும் இருக்காது” என்று பி.ஆர்.பந்துலு உறுதி அளித்ததால், ஜெயலலிதா நடிப்பதற்கு தாயார் சந்தியா அனுமதி அளித்தார்.

1964-ல் வெளியான ‘சின்னத கொம்பே’ படம் மகத்தான வெற்றி பெற்றதால், திரையுலகில் ஜெயலலிதா மிகவும் பிரபலம் ஆனார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் அவரது கல்லூரி படிப்பு கனவாகவே முடிந்து விட்டது.

சட்டம் படித்து வக்கீலாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம் ஈடேறாவிட்டாலும், அவரது வாழ்க்கை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்துக்கு சென்றுவிட்டது.

ஜெயலலிதா இனிமையான குரல் வளம் கொண்டவர். பல படங்களில் சொந்தக் குரலில் பாடியும் இருக்கிறார்.

அவர் பாடிய பாடல்களின் பட்டியல் :

1. அடிமை பெண்- அம்மா என்றால் அன்பு…

2. சூரிய காந்தி- ஓ மேரி தில் ரூபா…

3. சூரிய காந்தி- நான் என்றால் அது…

4. வந்தாளே மகராசி- கண்களில் ஆயிரம்…

5. வைரம்- இரு மாங்கனி போல்…

6. அன்பைத் தேடி- சித்திர மண்டபத்தில்…

7.திருமாங்கல்யம்- திருமாங்கல்யம் கொள்ளும் முறை…

8. திருமாங்கல்யம் – பொற்குடத்தில் பொங்கும் எழிற் சுவையோ…

9. உன்னை சுற்றும் உலகம்- மெட்ராஸ் மைல்…

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்  ‘மாறி வரும் உலகினிலே…’, ‘மாரியம்மா முத்து மாரியம்மா…’, ‘காளி மகமாயி கருமாரியானவளே…’, ‘தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்…’ போன்ற பக்தி பாடல்களையும் ஆல்பங்களில் பாடி இருக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஜெ.ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்..!

Dec 06, 2016

 

செல்வி ஜெ.ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்..!

தமிழ்த் திரையுலகில் ‘கலைச்செல்வி’ என்றழைக்கப்படும் செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் முழு விவரம் இங்கே :

1961-ம் ஆண்டு – 2 படங்கள்

1. ஸ்ரீசைல மகாத்மே (கன்னடம்).
2. எபிஸில் (ஆங்கிலம்).

1962-ம் ஆண்டு – 1 படம்

மன்மாஜி (இந்தி).

1964-ம் ஆண்டு – 2 படங்கள்

3. மனே அலியா (கன்னடம்).
4. சின்னத கொம்பே (கன்னடம்).

1965-ம் ஆண்டு – 6 படங்கள்

5. மாவன மகளு (கன்னடம்).
6. மனசிலு, மாமதலு (தெலுங்கு).
7. வெண்ணிற ஆடை.
8. ஆயிரத்தில் ஒருவன்.
9. கன்னித்தாய்.
10. நன்ன கர்டவியா (கன்னடம்).

1966-ம் ஆண்டு – 16 படங்கள்

11. முகராசி.
12. தனிப்பிறவி.
13. ஆஸ்திபரூலு (தெலுங்கு).
14. சந்திரோதயம்.
15. கன்னித்தாய்.
16. பதூகுவா தாரி (கன்னடம்).
17. கவுரி கல்யாணம்.
18. மேஜர் சந்திரகாந்த்.
19. மணி மகுடம்.
20. ஏமே எவரு? (தெலுங்கு).
21. குமரிப்பெண்.
22. நவராத்திரி (தெலுங்கு).
23. யார் நீ?
24. நீ
25. குடச்சாரி 116 (தெலுங்கு).
26. மோட்டார் சுந்தரம்பிள்ளை

1967-ம் ஆண்டு – 10 படங்கள்

27. தாய்க்கு தலைமகன்.
28. ஆபூர்வ பிறவிகள்.
29. நான்.
30. மாடிவீட்டு மாப்பிள்ளை.
31. அரசக் கட்டளை.
32. சிக்கடு தொரகாடு (தெலுங்கு).
33. கோபாலுடு பூபாலுடு (தெலுங்கு).
34. காவல்காரன்.
35. கந்தன் கருணை.
36. ராஜா வீட்டுப்பிள்ளை.

1968-ம் ஆண்டு – 21 படங்கள்

37. பணக்கார பிள்ளை.
38. எங்க ஊர் ராஜா.
39. புதிய பூமி.
40. தேர் திருவிழா.
41. பிரம்மச்சாரி (தெலுங்கு).
42. குடியிருந்த கோவில்.
43. மூன்று எழுத்து.
44. முத்துச்சிப்பி.
45. காதல் வாகனம்.
46. கணவன்.
47. கலாட்டா கல்யாணம்.
48. சுகா துக்காலு (தெலுங்கு).
49. பொம்மலாட்டம்.
50. கண்ணன் என் காதலன்.
51. நிலவு தொப்பிடி (தெலுங்கு).
52. பாக்தாத் கஜதோங்கா (தெலுங்கு).
53. ஒளி விளக்கு
54. இசாத் (இந்தி).
55. ரகசிய போலீஸ் 115.
56. அன்று கண்ட முகம்.
57. திக்கா சங்கரய்யா (தெலுங்கு).

1969-ம் ஆண்டு – 11 படங்கள்

58. ஸ்ரீ ராம கதா (தெலுங்கு).
59. அடர்சா குடும்பம் (தெலுங்கு).
60. நம் நாடு.
61. அதிர்ஷ்டவந்தலு (தெலுங்கு).
62. தெய்வ மகன்.
63. குருதட்சணை.
64. காதனாக்குடு (தெலுங்கு).
65. காதலாடு வாதலாடு (தெலுங்கு).
66. மாட்டுக்கார வேலன்.
67. காந்திகோட ரகசியம் (தெலுங்கு).
68. அடிமைப்பெண்.

1970-ம் ஆண்டு – 11 படங்கள்

69. அனாதை ஆனந்தன்.
70. அக்கா செல்லேலு (தெலுங்கு).
71. அலிபாபா 40 தொங்கலு (தெலுங்கு).
72. தேடி வந்த மாப்பிள்ளை.
73. எங்க மாமா.
74. எங்கள் தங்கம்.
75. ஸ்ரீ கிருஷ்ண விஜயம்(தெலுங்கு).
76. தர்ம தாதா (தெலுங்கு).
77. எங்கிருந்தோ வந்தாள்.
78. என் அண்ணன்.
79. பாதுகாப்பு.

1971-ம் ஆண்டு – 9 படங்கள்

80. சுமதி என் சுந்தரி.
81. ஆதி பராசக்தி.
82. அன்னை வேளாங்கண்ணி.
83. சவாலே சமாளி.
84. தங்க கோபுரம்.
85. பார்யா பித்தாலு (தெலுங்கு).
86. குமரி கோட்டம்.
87. ஒரு தாய் மக்கள்.
88. நீரும் நெருப்பும்.

1972-ம் ஆண்டு – 9 படங்கள்

89. அன்னமிட்ட கை.
90. பட்டிக்காடா பட்டணமா.
91. ஸ்ரீ கிருஷ்ண சத்யா (தெலுங்கு).
92. ராஜா.
93. அக்கா தம்புடு (தெலுங்கு).
94. ராமன் தேடிய சீதை.
95. நீதி.
96. திக்கு தெரியாத காட்டில்.
97. சக்தி லீலை.

1973-ம் ஆண்டு – 8 படங்கள்

98. தேவுடு செசினா மனுசுலு (தெலுங்கு).
99. பாக்தாத் பேரழகி.
100. டாக்டர் பாபு (தெலுங்கு).
101. பட்டிக்காட்டு பொன்னையா.
102. ஜீசஸ் (மலையாளம்).
103. வந்தாளே மகராசி.
104. கங்கா கவுரி.
105. சூர்யகாந்தி.

1974-ம் ஆண்டு – 7 படங்கள்

106. அன்பைத்தேடி.
107. அன்பு தங்கை.
108. தாய்.
109. இரு தெய்வங்கள்.
110. பிரேமலு பேலிலு (தெலுங்கு).
111. வைரம்
112. திருமாங்கல்யம்.

1975-ம் ஆண்டு – 4 படங்கள்

113. அவளுக்கு ஆயிரம் கண்கள்.
114. யாருக்கும் வெட்கம் இல்லை.
115. அவன்தான் மனிதன்.
116. பாட்டும் பரதமும்.

1976-ம் ஆண்டு 2 படங்கள்

117. கணவன் மனைவி.
118. சித்ரா பவுர்ணமி.

1977-ம் ஆண்டு – 2 படங்கள்

119. ஸ்ரீ கிருஷ்ண லீலை.
120. உன்னை சுற்றும் உலகம்.

1980-ம் ஆண்டு – 4 படங்கள்

121. மாற்றான் தோட்டத்து மல்லிகை. (படம் வெளியாகவில்லை).
123. மணிப்பூர் மாமியார் (படம் வெளியாகவில்லை).
124. நதியை தேடி வந்த கடல்.
125. நாயகுடு வினாயகுடு (தெலுங்கு). 

1982-ம் ஆண்டு – 1 படம்.

126. நீங்க நல்லா இருக்கணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தன்னை பற்றி மறைந்த முதல்வர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய உருக்கமான பேச்சு.

சில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள், 

வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்.

நான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை .

யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை . 

எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு, 

வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன . 

இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .

அ இ அ தி மு க பொதுக் குழு கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா பேசியது 
31-1-2013

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த அரசியல் விமர்சகர் நடிகர் எழுத்தாளர் சோ.ராமசாமி இயற்கை எய்தினார்

கடைசிவரை ஜெயலலிதா மரணம் அவருக்கு தெரியாது தெரியாமலே இறந்து இருக்கிறார்

#Rip 

Image may contain: 1 person , sunglasses

The famous journalist and writer Cho died the cho.Ramasami

பதிவு செய்த நேரம்:2016-12-07 05:45:24

சென்னை: பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோராமசாமி (84) காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது உயிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது. 

சோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், சோ ராமசாமியும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சோ மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விஜயசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். 

பத்திரிகை, நாடகம், நடிகர், வழக்கறிஞர் என பன்முகத் துறையில் திறமை பெற்றவராக சோ விளங்கினார். துக்ளக் என்ற பிரபல அரசியல் வார இதழை கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=264062#sthash.jgLUJlTR.dpuf

 
  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2016 at 6:49 AM, யாயினி said:

மரணங்களை நினைக்கும் போது....முரண்பட்டாலும் மனம் வலிக்கின்றது

 
Image may contain: 1 person , people smiling

உண்மை தான் யாயினி!

மரணம் என்பதை ஒரு தண்டனையாகப் பார்த்தால்...மனம் வலிக்கத் தான் செய்யும்!

எனினும் அதனை ஒரு விடுதலையாகப் பார்த்தால்....அந்த மனதின் வலி கொஞ்சம் குறையும்!

 

விரிந்து ..பரந்தது.... பிரபஞ்சம்!

அதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் எம்மிடம் இல்லை!

அந்தப் பிரபஞ்ச இயக்கத்தில்..பிறப்பைப் போல...இறப்பும் ஒரு அங்கமே!

அதனை உணர்ந்து கொள்ளும் நாள் வரைக்கும்...மற்றவரது மரணங்கள் எமக்கு வலி தான்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லாம் அடிக்கடி இறப்பு வீடுகள் தான் எங்கள் விருப்ப பக்கங்களை நிரப்பிச் செல்கிறது....விரும்பியோ விரும்பாமலோ ; அவற்றையும் எந்த வித பிரிவினைகளுமின்றி இணைத்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக் கைதிகளாய் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுகள், தொடருங்கள் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

நல்ல பதிவுகள், தொடருங்கள் யாயினி

நீண்ட காலத்தின் பின் இந்தப் பக்கத்திற்கு வந்திருக்கிறீங்கள் மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் விளக்கம்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Honoring Human Rights Day

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் மட்டும் நாமள் ஒழுங்காக வேலைக்கு போற நாள்.சோ என்ன சொல்ல வாறன் என்றால் விரைவில் மற்றுமோர் தேர்தல் எதிர்பாருங்கள்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 134 பிறந்த தினத்தில் பாரதியாரையும் நினைவு கூருவோம்.

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.

இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.


தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

Image may contain: 1 person
Image may contain: 1 person
No automatic alt text available.
Image may contain: 1 person
Image may contain: 1 person
+6
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: hat, one or more people and closeup
 

பாரதி பிறந்த தினம் இன்று. அவர் புகழறிவோம் (11.12.16
==========================================

’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலைப் பெற்றிருந்தார். தமிழ் மீது அவர் வைத்திருந்த பற்று அளப்பெரியது. 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை திருமணம் முடித்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். (வறுமையும் புலமையும் ஒன்றோடு ஒன்று பிரியாதது). தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் 
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் 
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல 
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் 
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் 
கண்டதோர் வையை பொருனைநதி-என 
மேவி யாறு பலவோடத்-திரு 
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று 
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் 
எத்தனை யுண்டு புவிமீதே-அவை 
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று 
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட 
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் 
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் 
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல 
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் 
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி 
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய 
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று 
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும் 
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் 
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப் 
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம்-இன்னும் 
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை 
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக 
நன்று வளர்த்த தமிழ்நாடு

சமுதாயச் சிந்தனைகள் பல புனைந்த மகாகவி பாரதி, தன் பாடல்களிலே அனைத்து தரப்பினரின் புகழையும் பெற்றார். "யானை மிதித்து தமிழ் செத்தது" என்று பல தரப்பினராலும் அனுதாபத்துடன் குறிப்பிடலானார். இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை 
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் 
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை 
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

வாழ்க பாரதி புகழ் இவ்வுலகெங்கும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நம் கையே நமக்கு உதவி.எதுவாகயிருந்தாலும் நம்பிக்கையை தளர விட வேண்டாம். விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

யாயினி,நம் கையே நமக்கு உதவி.எதுவாகயிருந்தாலும் நம்பிக்கையை தளர விட வேண்டாம். விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்

உங்களுக்கு மிக்க நன்றி ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது:

பலமாய் இருத்தல்!

பலமாய் இருத்தல் என்பது…
ஒரு போதுமே வீழாதிருப்பதல்ல
அனைத்தையும் அறிந்திருப்பதல்ல
எப்பொழுதும் எல்லாமும் 
இயலுமென்றிருப்பதுமல்ல

பலமாய் இருத்தல் என்பது
எப்பொழுதுமே… 
சிரித்திருப்பதல்ல
உயரத்திற்கு பாயும் 
வலுவோடிருப்பதல்ல

தூரங்களைக் கடக்கும்
ஆற்றல் கொண்டிருப்பதல்ல
எப்பொழுதுமே…
வெற்றியடைவதைக் குறிப்பதுமல்ல

பலமாய் இருத்தல் என்பது
வாழ்க்கையை 
அதன் இயல்புகளோடு 
அணுகுவது
அதன் சக்தியை ஏற்றுக்கொள்வது
வாழக் கற்றுக் கொள்வது

பலமாய் இருத்தல் என்பது
அடியாழத்திற்கு வீழ்வது
பலமாய் அடிபடுவது
வீழுகின்ற...
அடிபடுகின்ற... 
ஒவ்வொரு தடவையும்
எழுந்து கொள்வது

பலமாய் இருத்தல் என்பது…
நம்பிக்கை நலிவடையும் 
தருணங்களிலெல்லாம்
புதிதாய் 
நம்பிக்கை கொள்ளத் துணிவது
கசப்பானதெனினும்
உண்மையைக் கண்களால்
தரிசித்துக் கொள்வது

பலமாய் இருத்தல் என்பது
இருளில்..
ஒளியைத் தேடுவது
அந்த ஒளியை அடைய
எப்பொழுதும் போராடுவது

[நோர்வேஜிய மூலம்: Marie Fredrikson
தமிழில்: ரூபன் சிவராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

- பாரதியார் -1914958_164550673813_7826490_n.jpg?oh=d5

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரையும் அல்லியும்....

CC1.jpg
CC2.jpg
 
தாமரை சூரியனைக் கண்டு மலரும். அல்லி சந்திரனைக் கண்டு மலரும்னு கவிஞர்கள் சொன்னார்களே அது பொய்யா?
 
 
CC3.jpg
CC4.jpg
 
தாமரை இலைக்கும் அல்லி இலைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
 
CC5.jpg
CC6.jpg
CC7.jpg
CC8.jpg
CC9.jpg
 
படங்களும் தகவல்களும் நெல்லைத்தமிழன் 

அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும் அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதியாரின் 134 ஆவது பிறந்த தினம் இன்று.

 

----------------கேட்பன-------------------------- 

நல்லதோர் வீணை செய்தே - அதை 
நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி! - எனைச் 
சுடர்மிகு மாறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த 
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! - நிலச் 
சுமையென வாழ்த்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் 
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், - நித்தம் 
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் - சிவ 
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; - இவை 
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.