Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Paul Thava. My heartfelt condolences to his family....உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு..இவர் தான் அந்த நாய் குட்டியின்சொந்தக் காரன்.நேற்று முன் தினம் நயாகராப்பகுதியில் அவசரசிகிச்சை பிரிவினரின் அரை  மணி நேரக் கால தாமதத்தினால் அனியாயமாக உயிர் பிரிந்துள்ளது.3 வயது பெண் குழந்தையின் தந்தையும் ௬ட..

 · 
Image may contain: 1 person, sitting, camera, beard and indoor

 

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு மரம் ஒன்று... 
ஆசையை துறக்கக் கற்று தந்தது ! 
நியூட்டனுக்கு ஆப்பிள் மரம் ஒன்று... 
ஈர்ப்பு விசையை கற்று தந்தது !
எந்த மரத்தையும் வெட்டாதீர்கள், 
எதாவது ஒன்று கற்று தரும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம்

 · 
No automatic alt text available.

நம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள்...

• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.
• உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

• இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்:
‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’

• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது

(நன்றி - இன்று ஒரு தகவல்)

No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎/‎02‎/‎2017 at 10:25 PM, யாயினி said:

care giver burn out/care giver relive - தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ள முடியாது..அந்தக் கட்டத்திற்குள் போய் விட்டனோ என்ற   சின்ன ஐயப்பாடு உண்டு..

மற்றப்படி உங்களைதிட்டவில்லை..ஆனால் உங்களைப் போன்றவர்களைக் கொண்டு வந்து இப்படியானவர்களைப் பராமரிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறன்..என்னத்தை சொல்வது ஒரு பிள்ளையினுடைய கட்டாய கடமை.என்றே நினைக்கிறேன்...எனது பின் பலத்தோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் அதிக சுமை..எப்படி இருந்தாலும் கடசிவரைக்கும் நானே செய்து முடிக்க வேண்டும் என்ற கோட்பாடு மட்டுமே மனத்தினுள் இருக்கிறது...சந்தர்ப்பம் அமைந்தால் பிறிதொரு தலைப்பில் பேசுவோம்..

 

 

ஏன் யாயினி இந்தக் கொலை வெறி?...இந்தத் தொழில் செய்பதற்கு என்னிடம் சகிப்புத் தன்மை இல்லையே தவிர,இந்தத் தொழில் மீது மதிப்பும்,மரியாதையும் இன்னும் சொல்லப்போனால் அதன் கஸ்டங்களும் தெரியும்:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

ஏன் யாயினி இந்தக் கொலை வெறி?...இந்தத் தொழில் செய்பதற்கு என்னிடம் சகிப்புத் தன்மை இல்லையே தவிர,இந்தத் தொழில் மீது மதிப்பும்,மரியாதையும் இன்னும் சொல்லப்போனால் அதன் கஸ்டங்களும் தெரியும்:mellow:

ஒரு கொலை வெறியும் அல்ல.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகா சிவராத்திரி..

மகா சிவராத்திரி... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்...!

சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். 'ராத்திரி' என்ற சொல்லுக்கு பி.என்.பரசுராமன்அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.

ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.

இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது.

அத்தகைய நாளில் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக்கூடாது என்பது குறித்து சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் விளக்குகிறார்.

சிவன்

 

 

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

1. முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.

2. சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.

3. அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.

4.ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

5.பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும்.

6.அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும்.

7.வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.

8.இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

சிவராத்திரி பூஜை


9.சிவபூஜை செய்ய இயலாதவர்கள்  சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

10.அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.

11.அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

சிவலிங்கம்

செய்யக்கூடாதவை

1.பகலில் தூங்கக் கூடாது.

2.சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

3.சிவராத்திரி உபவாசம் என்பது நியதி.  உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.

 

 

எங்க இந்த பக்கம் யாயினியை காணவில்லை...:unsure:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகா சிவராத்திரி பற்றிய பதிவிடலுக்கு மிக்க நன்றி நவீனன்..அவ்வப்போது பதிவிடுகிறன்.திடீர் என்று ஏற்பட்ட உடல் நலமின்மை காரணமாக இப்போ எல்லா வேலைகளும் நேரத்திற்கு செய்ய இயலாது போய் விட்டது..யாழிலும் தான்.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழ மன்னனால் கட்டப்பட்ட பொலனறுவைச் சிவன் கோயில். 

ஈழத் தமிழ் இனம்போலவே இருக்கிறது 
அழிந்தும் அழியாமலுமாய்.

படித்ததில் என்னை மிகவும்
பாதித்தது

புகைப்படம்- ஐய்யாத்துரை கஜமுகன்

 · 
Image may contain: sky, cloud, outdoor and nature
Image may contain: tree, plant, grass, sky, outdoor and nature
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கு இசைக்கு ஈடில்லா இழப்பு ஈழத்தின் இனிய பாடல் இன்றோடு முடிந்து விட்டதே ..கம்பீரத்தின் காந்தக்குரலோன் சாந்தன் அண்ணா.
அன்னாரின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

 · 
Image may contain: 1 person
Image may contain: 1 person
யோ புரட்சி with Kokulan Santhan.
8 hrs · 
 

மாவீரரை தந்த இசைவீரன்

துயிலும் இல்லத்திலே
மாவீரர்கள் விதைக்கப்பட முன்னே
'சூரிய தேவனின் வேருகளே
ஆயிரம் பூக்களைச் சூடுகிறோம்' என‌
அழுதழுது ஒலிக்கும்
சாந்தனின் பாடல்.

ஈழத்துப் போர்க்காலத்தில்
போராளிகளின் தோள்களில்
துப்பாக்கி இருந்தது.
வாய்களில் உங்கள்
பாட்டு இருந்தது.

'இந்தமண் எங்களின்
சொந்தமண்' என‌
சொன்னவர் ஆயிரம்
பாடியதோ நீங்கள் மட்டுமே...

குரலை மட்டுமா
கொடுத்தீர்கள் மண்ணுக்கு.
பெற்ற கொழுந்துகளையும்
மாவீரராய் கொடுத்தீர்களே..

ஆரம்ப இராணுவ‌
பயிற்சிக் கல்லூரிகளில்
அதிகாலை நான்கு மணிக்கு
'பாயும் புலியணி வீரம் பேசிடும்'
பாடல் கேட்டபடிதான்
பயிற்சிப் போராளிகள்
பணி தொடங்குவர்.

சோற்றுக்கு வழியின்றி
துயர்சுமந்த காலத்திலும்
'பிட்டுக்கு மண்சுமந்த...'
பாடல் கேட்கையில்
பசியாறுமே சாந்தண்ணா...

பூநகரி வென்றபோது
"சங்கு முழங்கடா தமிழா"
ஆனையிறவுச் சமருக்காய்
"ஆனையிறவின் மேனிதழுவி
போனது போனது பூங்காற்று"
முல்லைச்சமர் முடிந்தபின்னே
"முல்லைமண் எங்களின் வசமாச்சு
ஈழம் முறிலும் வெல்வது திடமாச்சு"
கிளிநொச்சி சமர் முடிய‌
"கைகளில் விழுந்தது கிளிநொச்சி
புலி
வென்றதை பாடடி தங்கச்சி"
புலனாய்வுத் துறையதன்
புதுப்பாடல் இறுவட்டிலும்
பூத்ததே உங்கள் பாடல்.

நரம்புகள் இயக்கத்தை
நோயது தடுத்தாலும்
உங்கள் நா பதிந்த இயக்கத்தை
எதுதான் தடுக்கும்?

இசைப்பேரரசே...
உம்பிள்ளை
இசையரசனையும்
இம்மண்ணுக்கு கொடுத்தீரே...

எஸ்.ஜீ.சாந்தன்
பாடகன் எனும்
பதத்தினுள் மட்டும்
பதுக்கப்பட வேண்டியவனல்ல.
அதற்கு அப்பால்
ஆயிரமாயிரம் பாயிரத்தினால்
அர்ச்சிக்கப்பட வேண்டியவன்.

நவீன காலத்திலும்
பதுங்குகுழி ஒலிப்பதிவு கலையகத்தில்
பாடியது சாந்தன் குரல்.

பக்திப் பாடல்கள்
உங்கள் குரலில் கேட்கையில்
ஒரு சுகம்.
ரி.எம்.எஸ் இன் பாடலும்
உங்கள் குரலில்
தித்திக்கும் ரகமே தனி.

'ஆதியாய் அநாதியாய்
அவதரித்த செந்தமிழ்' என‌
அழுத்திச் சொன்னவா
தலைமையின் பாடல்கள்
தாராளமாய் தந்தவா..
போர்முடிந்த பின்னே
புனர்வாழ்வு முகாம்வலி அனுபவித்தவா..
காலம் உள்ளவரை
கானமாய் பயணிக்க வா...

சாந்தனின் பாடல்கள்
போர்க்காலக் குயிலின்
பூபாள் இராகங்கள்.

எஸ்.ஜீ.சாந்தன்
முகத்தினால் அறியப்பட்டவரல்ல.
படத்தினாலும் அறியப்பட்டவரல்ல.
குரலினால்தானே அறியப்பட்டதிந்த குயில்.
அந்தக்குரல்
இதோ....இப்போதும்
உயிரோடு உலவுகிறதே...
அப்படி இருக்க‌
எஸ்.ஜீ.சாந்தனை
இறந்துவிட்டார் எனலாமோ...?

யோ.புரட்சி,
26.02.2017,
பிற்பகல் 12.56.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பிட்டுக்கு மண்
சுமந்த பெருமானார்.... எங்கள் கொக்கட்டிச்சோலையிலே
உருவானார்....
எம் ஈழதேசத்தின் பாடகர் S.G சாந்தன் அண்ணா ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம் !!!

 
Image may contain: 1 person, camera and text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
-PAXP-deijE.gif
 
Play
 
 
-8:55
 
 
 
Mute
 
 
 
 
 
Additional Visual Settings
 
 
 
 
 
 
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் I Old Age I Full Act.

தன் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் விடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை தங்களின் அருமையான நடிப்பு மூலம் வாழ்ந்து காட்டிய தருணம்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் உங்கள் ஜீ தமிழில் சனி மற்றும் ஞாயிறு இரவு 07:00 மணிக்கு.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people · 
 

மார்ச் 02, 2017 வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் 82 ஜனனதினம்

வயலின் இசையில் தனது தனித்திறமையை நிரூபித்து, 200 விருதுகளுக்கும் மேல் வென்று பெருமை சேர்த்த குன்னக்குடி வைத்தியநாதன் பக்தி பாடல்களில் புகுத்திய தனிப்பாணி அவருக்கு வெற்றி மேல் வெற்றி தேடித்தந்தது.

குன்னக்குடிக்கு அருகே கிருஷ்ணன் கோவிலில் ஒரு திருவிழாவுக்காக அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. குன்னக்குடியின் தந்தை அரியக்குடியிடம் பழக்கமானவர், நல்ல நண்பர். இந்த விழாவுக்கு தந்தையுடன் குன்னக்குடி சென்றிருந்தார். வயலின் வாசிக்க வேண்டிய கலைஞர் வராமல் போகவே, குன்னக்குடியின் தந்தையை அரியக்குடி அழைத்து, "உங்கள் மகனையே வாசிக்க சொல்லலாமே' என்றார். சிறு சிறு கச்சேரிகளில் மட்டுமே வாசித்து பழக்கப்பட்ட மகனுக்கு இது சரிப்பட்டு வருமா என்று அவரது தந்தை யோசித்தார்.

ஆனால், அரியக்குடியோ, "உனக்கு எத்தனை கீர்த்தனைகள் தெரியும்' என்றார் குன்னக்குடியிடம். "எனக்கு பத்து கீர்த்தனைகள் தெரியும்' என்றார். "அப்படியானால் வா. உனக்கு தெரிந்ததை தைரியமாக வாசி' என்றார் அரியக்குடி. எல்லா கலைஞர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு போலவே, குன்னக்குடிக்கும் வாய்ப்பு வந்தது.மேடையில் அரியக்குடி - குன்னக்குடி ஜோடி மிகப்பிரமாதமாக கச்சேரி செய்து - கூட்டத்தினரின் கரகோஷத்தை பெற்றது. இதுதான் குன்னக்குடியின் முதல் வெற்றி.அதன்பின் பெரிய வித்வான்களின் கச்சேரிகளில் தாமாக வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ஸ்ரீரங்கம் அய்யப்பன், செம்மங்குடி சீனிவாச அய்யர், ஏ.கே.சி.நடராஜன், சங்கர சிவம், சித்தூர் சுப்ரமணியபிள்ளை, கல்யாண கிருஷ்ண பாகவதர், மதுரை மணி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டோருடன் மேடைகளில் வயலினை தன் எண்ணப்படி - சொன்னபடி கேட்க வைத்தார் குன்னக்குடி.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பதிவுகள் இடும் போது அவ்வளவாக பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை..ஒரு பதிவும் போடாத போது பார்வையாளர்களின் எண்ணிக்கை ௬டுதலாக உள்ளது..சிறு அவதானிப்பு...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாய் வெளிச்சமாகும் வரை யார் இருட்டை விளக்க
முடியும்?
மெதுவாய் தெளியும் வரை யார் 
கலங்கலைத் தெளிய வைக்க 
முடியும்?
மெதுவாய் அசையும் வரை யார்
தேக்கத்தை முடுக்கி விட
முடியும்?
இந்த அடிப்படைகளைப் பின்பற்றும் மனிதன்
முழுமைக்கு ஆசைப்படுவதில்லை.
முழுமையற்றிருப்பதால் அவன் சிதைந்து போகும் போது தன்னைப் புதுப்பித்துக் கொள்ள. முடியும்.
.
-லாவோட்சு-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே நல்ல குளிர் ஆகவே வெளியில் போக இருக்கும் கனேடிய உறவுகள் அதற்கேற்ப உடைகளை அணிந்து செல்லுங்கள்.Extreme cold weather alert.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
 
March 3, 2017: First - Ever World Wildlife Day

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில்லென்று ஒரு மழைக்காலம் ,
"அழகியலூர் வவுனியா "
 · 

Image may contain: flower, plant, tree, outdoor and nature
Image may contain: flower, plant, tree, outdoor and nature
Image may contain: plant, flower, tree, sky, outdoor and nature

படங்கள் :- பாலபிரசன்னா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மரணம் என்பது ஒரு மெல்லிய குளிர்க்காற்றுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, மெல்ல மெல்ல உதிரும் ஒரு சருகின் மீது எழுதப்பட்ட வாசகமாக இருக்க வேண்டும்.

இயற்கை வழங்கும் ஓர் உயிரின் வாழ்வுரிமையை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கு இயற்கைக்கு மட்டும்தான் உரிமை உண்டு.

- பழநிபாரதி

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Yarl 19

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக் களம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
cox_1-032317.jpg Magnum Photos

The Wonderful Allure of Tamil

 
 
Mahabalipuram, Tamil Nadu, India, 1996; photograph by Raghu Rai

Tamil is spoken today by approximately 80 million people, mostly in India but also in Sri Lanka, Singapore, and Malaysia, and in an international diaspora. It is also one of the world’s oldest languages, with a continuous history stretching back to at least the late centuries BCE. It has served as a language of trade and statecraft, and as a medium for poetry, philosophy, linguistic science, visionary esotericism, and the expression of Hindu, Jain, Buddhist, Muslim, and Christian religious cultures over the past two millennia. To attempt to give a comprehensive vision of the language within the compass of a brief book intended for nonspecialists might seem an impossible task.

Yet Tamil: A Biography succeeds at this remarkably well. It is written by David Shulman—a leading Indologist and scholar of classical South Asian languages, now emeritus at the Hebrew University of Jerusalem—who has often written about Israel and particularly the plight of Palestinians in these pages. The book traces a chronological sequence from the prehistory of the language up to modern times. Shulman draws together a wealth of contemporary scholarship, but the perspective that commands the book is uniquely his, as is the authorial voice. Gently humorous, frequently lyrical, and wearing great learning very lightly, the book’s prose admirably summons up what it might be like to listen to a series of lectures by a gifted teacher.

Some readers today would associate the Tamil language with the ethnic minority of that name in northern Sri Lanka and with the tragic events of that nation’s civil war. Others might think of the state of Tamil Nadu in the modern Republic of India, with its distinctive cuisine and popular culture. The language has more native speakers than Italian, Thai, or Polish; more than Dutch and Swahili combined. Modern Tamil is profoundly “diglossic”: its spoken register differs sharply from the formal written language.

Such descriptions cannot begin to capture the experience of listening to or speaking the language. Imagine, say, academic German at its most ornate: long sentences, internal digressions, a flurry of case endings and conjugations, the exhausting anticipation of a desperately needed noun. Imagine this as the medium of everyday life: trips to the store, tentative friendships, asking for directions. Now imagine it spoken as quickly as human tongues and lips can allow, and you have an idea, more or less, of how I felt as a college student living among Tamil speakers for the first time.

I was in Madurai, an ancient city in Tamil Nadu inextricably connected with the language’s millennia-long existence, and after much desperation, I came to find life in Tamil’s presence exhilarating. This is a frequently shared experience of the language’s foreign enthusiasts, which mirrors, however poorly, the insider perspective of many Tamil native speakers. Speaking, or even just listening to, well-spoken…

https://www.nybooks.com/articles/2017/03/23/wonderful-allure-of-tamil/

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை!

வரம் சாபமானது. பாற்கடல் கசேந்திரா கடலானது.
மு.திருநாவுக்கரசு 

“கிரேக்கர்களின் பரிசுப் பொருட்களையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள், 

அவை அழகிய வடிவில் ஆபத்தை தரக்கூடியவை” – கசேந்திரா

சிங்களத் தலைவர்களினது வாக்குறுதிகளும், பரிசுப் பொருட்களும் கசேந்திரா கூறியுள்ள மேற்படி தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு ஒப்பானவை. 

கிரேக்கர்கள் மரத்தாலான அழகிய ரோயன் குதிரை ஒன்றை ரோய்க்கு பரிசளிப்பார்கள் என்றும் அதற்குள் இருந்து வாள்களும் கேடயங்களும் வெளியே நிழும், தீப்பந்தங்கள் எழும், ரோயன் அரண்மனையும், நகரமும் சாம்பலாய் போகும் மக்கள் அழிவார்கள். சாம்ராச்சியம் வீழும் என்று கசேந்திரா முன்கூட்டி பல ஆண்டுகளுக்கு முன்னே கூறிய போதிலும் அவள் சபிக்கப்பட்டவள் என்பதால் யாரும் அவளின் தீர்க்கதரிசனத்தை நம்பவில்லை. 

ஆரம்பத்தில் புராணக்கதையென்று நம்பப்பட்டு பிற்காலத்தில் வரலாற்று உண்மைகளுடன் கூடிய கதையென்று கண்டறியப்பட்ட ரோய் அரசின் மன்னனது பெயர் பிறியம். அவரது மகளே இளவரசியான கசேந்திரா. கசேந்திரா மீது அப்பல்லோ கடவுள் காதல் கொண்டதனால் அவளுக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே உரைக்கக்கூடிய தீர்க்கதரிசனத்தை வரமாக வழங்கினார்.

ஆனால் அவ்வரத்தைப் பெற்றுக் கொண்ட கசேந்திரா பின்பு அந்த கடவுளுக்கு மாறாகவும், எதிராகவும் செயற்பட்டதனால் அவளுக்குக் கொடுத்த வரத்தை சாபமாக்கினார் அப்பல்லோ கடவுள். அதன்படி அவள் தீர்க்கதரிசனம் உரைப்பாள். ஆனால் அதனை அவளது தாய் தந்தையரோ, சகோதரர்களோ, உறவினர்களோ, அரண்மனை அமைச்சர்களோ, மொத்தத்தில் மக்களோ யாரும் நம்பமாட்டார்கள். அதனால் அவள் விரக்தியடைந்து, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து அழிந்து போவாள் என்பதாய் அந்த சாபம் அமைந்தது. தற்போது ஈழத் தமிழரின் அரசில் வாழ்வில் வரம் சாபமாகும் படலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஈழத் தமிழரின் அரசியல் வாழ்வில் வரங்கள் சாபமாவது இது ஒன்றும் முதற்தடவையல்ல. ஆயினும் முள்ளிவாய்க்கால் அனுபவத்தின் பின்னும் அந்தப் பேரவலத்தின் பின்னும் தமிழ் மக்களின் வாழ்வில் கிடைத்துள்ள வரம் சாபமாவது வியப்பிற்கும், வேதனைக்கும், ஆற்றாமைக்கும் உரியது.

வாய்ப்புக்களைத் தவறவிடுவோர் வரலாற்றில் வெற்றி பெறுவதில்லை. அத்துடன் வாய்ப்புக்களை சிதைப்போர் சந்தி சந்தியாக வரலாற்றினதும், மக்களினதும் எதிரிகளாய் காட்சியளிப்பர். 

“புழுதிபறக்க செடில் எடுத்தான். ஆனால் ஒரு குத்தில் குப்புற வீழ்ந்தான்” என்று குத்துச் சண்டை தொடர்பாக ஒரு கூற்றுண்டு.” தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ்த் தலைவர்களின் அரசியல் இப்படித்தான் இழுத்துச் செல்கிறது. 

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பேரழிவைக் கொடுத்தது என்பது உண்மைதான். ஆனாலும் அந்தப் பேரழிவுடன் கூடவே அது வரங்களையும் கொடுத்திருந்தது. அதாவது முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்க பேரழிவாய் அமைந்த வேளை அந்த பேரழிவை ஏற்படுத்திய இலங்கை அரசுக்கும், இராணுவத்திற்கும் உலக அரங்கில் நெருக்கடிகளையும், அவமானங்களையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது. 

16ஆம் நூற்றாண்டில் இலங்கை இயற்கையான திருகோணமலை துறைமுகத்தால் உலகப் பேரரசுகளின் மத்தியில் அறியப்பட்டது. பின்பு அது தேயிலையால் அறியப்பட்டது. அதன்பின்பு அது துடுப்பாட்டத்தால் உலகில் அறியப்பட்டது. ஆனால் அது முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்கள் மீதான பாரிய படுகொலைகளால் உலக அரங்கில் இரத்தக்கறை படிந்த நாடாய் அறியப்பட்டது. 

ஒருபுறம் முள்ளிவாய்க்காலால் தமிழ் மக்கள் இழப்பிற்கு உள்ளான போதிலும் மறுவளம் அவர்களின் தேசிய இனப்பிரச்சனை அத்துடன் கூடவே அதிகம் பிரபலம் அடைந்தது. இத்தகைய சர்வதேச பிரபலமும் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடிகளும், போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவத்தால் காணி பூமி ஆக்கரமிக்கப்பட்டோர் என்பதன் வாயிலாக தமிழ் மக்களுக்கு சர்வதேச அரங்கில் மிகவும் சாதகமான களம் ஒன்று வரமாய் பிறந்தது. 

அந்த வரத்தைச் சுற்றி பன்னாட்டு அரசுகள் வட்டமிட்டன. ஈழத் தமிழர் உலகில் கவனத்திற்குரிய மக்களாயினர். உலகம் தமிழ் மக்கள் மீது ஒருபுறம் அனுதாபத்தையும், மறுபுறம் இலங்கை அரசின் மீது கண்டனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்திய சூழ்நிலையானது தமிழ் மக்கள் தமக்கான நீதியையும் தமக்குத் தேவையான அரசியல் தீர்வையும் பெற ஏதுவான வரங்களாய் அமைந்தன. 

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரத்தைக் கையில் எடுத்தது. கூடவே தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் பேரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பதவிகளையும், அதிகாரங்களையும் பரிசளித்தனர். 

அதேவேளை புதிதாக ஆட்சிக்கு வந்த சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் அரியணையில் மூன்றாவது பெரிய தூணான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கூட்டணித் தலைவர்களுக்கு மகுடங்களைச் சூடியதுடன், புகழாரங்களையும் கூறி வாக்குறுதிகளை அளித்தனர். 

மேற்படி புதிதாக பதவிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுக்கு ரோயன் குதிரைகளை பரிசளித்தனர். தமிழ்த் தலைவர்கள் அந்த ரோயன் குதிரைகளுக்கு சில்லுப்பூட்டி தமிழ் மண்ணிற்கு இழுத்துவந்து மக்களிடம் காட்சிப்படுத்தினர். குதிரையைப் பற்றிய புகழாரங்களை தமிழ்த் தலைவர்கள் உதிர்த்தனர். 

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்பு அன்றைய தமிழ்த் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை கையில் ஏந்தினர். தமிழ் மண்ணில் அமைச்சர்களின் வரவுகளைப் புறக்கணித்தனர். அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் கர்த்தால், கதவடைப்பு, பகிஸ்கரிப்பென தமிழ் அரசியல் நகர்ந்தது. 

குறிப்பாக 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் முன்னணிப் பிரச்சாரக்காரர்களாய்; திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் என்போர்களுடன் கூடவே மடலேறு – அடலேறு ஆலாலசுந்தரம் போன்றோர் என அப்பட்டியல் நீண்டு அமைந்தது. 

தேர்தல் மேடைகளில் பகவத்சிங்குகளே எழுக, தமிழ்த் தாய் உங்களை அழைக்கிறாள். விடுதலை வீரன் கரிபால்டி உங்களை அழைக்கிறான். இளைஞர்களே எழுக என்று அந்த மேடைகளில் ஆயுதப் போராட்டங்களுக்கான அழைப்பு இளைஞர்களுக்கு விடப்பட்டது. 

இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள திரு. மாவை சேனாதிராஜா தலையில் சிவப்புத் துண்டு அணிந்தவாறு புரட்சி வீரனின் தோற்றத்தில் மேடைகளில் காட்சியளித்து வானதிர உரை நிகழ்த்துவார் (2014ஆம் ஆண்டு வவுனியாவில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய திரு. மாவை சேனாதிராஜா அத்தலைமையுரையை ஒரு சிறு பிரசுரமாக வெளிட்டார். அந்த வெளியீட்டின் அட்டைப் படத்தில் மேற்படி தலையில் சிவப்புத் துணி அணிந்த புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.) 

அக்காலத்தில் திருகோணமலை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரான திரு.ஆர்.சம்பந்தன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். 

இத்தகைய 1977ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் மின்னல் இடிமுழக்கங்கள் என்பவற்றைக் கண்டு இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களுக்கும், முன்னணி பிரச்சாரக்காரர்களுக்கும் இளைஞர்கள் தங்கள் விரல்களை கீறி இரத்தத் திலகமிட்டு விடுதலைக்காக உறுதி பூண்டார்கள். ஆயுதந்தரிக்கத் தொடங்கினார்கள். 

மேற்படி அன்று தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களிலும் முன்னணி பிரச்சாரக்காரர்களிலும் காசி ஆனந்தன் போன்ற மிகச் சிலரைத் தவிர மற்றைய அனைவரும் வார்த்தை தவறிவிட்டனர். கொண்ட கொள்கை மாறிவிட்டனர். 

மேற்படி 1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் சிங்கக் கொடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியோரும், கறுப்புக் கொடி காட்டக் கோரியோரும் 2015ஆம் ஆண்டு தேர்தல்களின் பின் சிங்களத் தலைவர்கள் கொடுத்த ரோயன் குதிரைகளை தமிழ் மக்கள் மத்தியில் இழுத்துவந்து காட்சிப்படுத்துவதுடன் கறுப்புக் கொடிக்குப் பதிலாக சிங்கக் கொடிகளை ஏந்தத் தொடங்கினர். 

அன்று வெளியிட்ட “அமைச்சர்களே திரும்பிப் போ” என்ற கோசங்களுக்கும், சுவரொட்டிகளுக்கும் பதிலாக இன்று அமைச்சர்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் படலம் ஆரம்பமானது. இவை தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட தெளிவான நேரெதிர் முரண்பாடுகள்.

மேற்படி சிங்களத் தலைவர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிகளின் பின்பு பரிசளித்த ரோயன் குதிரைகளைப் பற்றி தமிழ் மக்கள் தரப்பில் இருந்து இடித்துரைக்கும் குரல்கள் எழத் தவறவில்லை. அந்தக் குரல்கள் ஆபத்தானவை என்ற தீர்க்கத்தரிசனங்களும் எழத் தவறவில்லை.

ஆனால் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், முன்னாள் சனாதிபதி அம்மையார் சந்திரிகா பண்டாரநாயக்கவையும் தாம் முழுதுமாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஆர். சம்பந்தன் உறுதிபடக் கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தின் போது நவாலி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தங்கியிருந்த இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீது தமது விமானப்படையினர் குண்டு வீசி நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்ததைக் கண்டு தான் கண்ணீர்விட்டு அழுததாக திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க தமிழ் மக்களை கவரும் வகையில் கூறினார். 

ஆனால் தனது ஆட்சியின் கீழ் நிகழ்ந்த அவர் கண்ணீர் வடித்த அந்த படுகொலைக்கு எதிராக விமானப்படையினர் மீது அவர் ஏன் விசாரணை நடத்தவில்லை? ஏன் ஒருவரைக்கூட தண்டிக்கவில்லை? என்ற கேள்விகள் சாதாரண பொது அறிவு கொண்ட எந்தொரு தமிழ் மகனின் மனதிலும் எழமுடியும்.

முதலை கண்ணீர் வடிப்பது தான் கொல்லும் அந்த இரைப்பிராணியின் மீதான கருணையினால் அல்ல.

மாறாக அந்த இரையை வலுவாக கடிக்கும் போது அப்படி வலுவாக கடிக்கப்படுவதன் வெளிப்பாடாக அதற்கு கண்களில் இருந்து நீர் சொரியும். எனவே முதலை கண்ணீர் விடுவது இரக்கத்தால் அல்ல. அது உணவை உட்கொள்ளும் தொழிற்பாட்டின் ஒரு பகுதியாகும். 

2016ஆம் ஆண்டு தைப் பொங்கல் அன்று பிரதமர் யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் காணாமல் போனோரில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார். கடந்த மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று சந்திரிகாவின் பின்வரும் கருத்தைத் தாங்கி வந்தது. அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட பின் போர்க்குற்றம் பற்றிய விசாரணைகளுக்கு நீதிமன்றங்களை அமைக்க வேண்டிய தேவையிருக்காது என்றவாக அது அமைந்தது.

பெப்ரவரி 26ஆம் தேதி பொலனறுவயில் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றுகையில் 

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் தான் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்று பிபிசி தமிழோசை அன்றைய இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

அரசு என்ற ரீதியில் உள்நாட்டு நீதித்துறை மற்றும் நீதிபதிகள் தொடர்பாக தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறியதுடன் “வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க நான் ஒருகணமும் தயாரில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தான் ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனிதஉரிமைகள் ஆணையரிடமும், உலகின் பிரதான நாடுகளின் தலைவர்கள் உட்பட சகலருக்கும் தான் இதுபற்றி கூறியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். 

ரோயன் குதிரையின் வயிற்றில் இருந்து மேற்படி மூன்று தலைவர்களினதும் பேச்சுக்கள் வாள்களையும், ஈட்டிகளையும், கேடயங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளன. 

இலங்கை அரசு சர்வதேச கலப்பு நீதிபதிகளைக் கொண்ட போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென தற்போது ஜெனிவாவில் கூடியுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கோரவுள்ளதான செய்திகள் வெளிவந்துள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி நிலைப்பாட்டைக் கண்டு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் எழுந்த பின்னணியில் இலங்கை அரசுக்கு நிபந்தனையுடன் கூடிய குறுகியகால காலஅவகாசம் கொடுக்கலாமென சம்பந்தன் தெரிவித்துள்ளார். காலஅவகாசம் பெறுவது என்பதுமட்டுமே இலங்கை அரசின் ஒரே நோக்கம். அது இப்போது கூடியுள்ள ஜெனிவா மாநாட்டின் ஒரு தத்தை கடக்க வேண்டும். அது குறுங்காலமோ, நீண்டகாலமோ என்பதல்ல முக்கியம் தத்தைக் கடந்தால் போதும். 

எனவே மேற்படி குறுங்கால அவகாசம் என்பதும் இலங்கை அரசின் திட்டத்திற்கு இரையாகும் செயல்தான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வாயிலாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த சர்வதேச சூழலை வரமாகக் கொண்டு, அதனை முதலீடாகக் கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் வாயிலாக தமிழ் மக்களுக்கான நீதியையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு இப்போது சாபமாக ஆக்கப்பட்டுவிட்டதெனத் தெரிகிறது. 

இன்று அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய குறுகியகால காலஅவகாசம் என்று கூறும் தலைவர் சம்பந்தன் 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தின் போது ஏன் அப்படிப்பட்ட நிபந்தனையுடன் கூடிய காலவரைறையை ஏற்படுத்தத் தவறினார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் அவலத்தை தமிழ் மக்களின் கடந்தகால அனுபவங்களுக்கு ஊடாகவும், சர்வதேச அரசியலில் காணப்படும் வாய்ப்புக்களுக்கு ஊடாகவும் எடைபோட வேண்டியது அவசியம். சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலிருந்து தமிழ்த் தலைவர்களின் அழைப்புக்களை தமிழ் மக்கள் எப்போதும் ஏற்று தலைவர்களின் பின் திரண்டுள்ளனர்.

வாக்களிக்குமாறு கேட்டபோதெல்லாம் வாக்களிக்கத் தவறவில்லை. தேர்தல்களை புறக்கணிக்க கேட்டபோதெல்லாம் புறக்கணிக்கத் தவறவில்லை. சப்பாணிகட்டி இருக்கச் சொன்னபோதெல்லாம் சத்தியாகிரகத்தில் இருக்கத் தவறவில்லை. இடம்பெயரச் சொல்லி கேட்டபோதெல்லாம் இடம் பெயரவும் தவறவில்லை. பொன்னை-பொருளை, தங்கள் புதல்வர்களையெல்லாம் போர்க்களம் அனுப்பத் தவறவுமில்லை. தலைவர்கள் கேட்டதையெல்லாம் மக்கள் செய்யத் தவறவில்லை. 

“ஏற்பட்ட இடிமுழக்கத்தின் அளவைவிடவும் பெய்த மழை சிறிது” என்று ஒரு முறை சோக்ரட்டீஸ் கூறியிருந்தார். 1977ஆம் ஆண்டு மேடையில் எழுந்து வானத்தில் வெடித்த இடிமுழக்கங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் பூமிக்கு இன்னும் மழையைக் கொண்டுவரவில்லை. 

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகளாகப் போகும் நிலையில் தமிழ்த் தலைவர்கள் மத்தியிலிருந்து அப்படுகொலைக்கு எதிரான அரசியலையும், நீதிவிசாரணையையும் ஏற்படுத்துவதற்கான ஒரு செயல் அணியை தமிழ்த் தலைவர்கள் வடிவமைக்கத் தவறிவிட்டனர். தமிழ் மக்களின் ஒருநூற்றாண்டுகால அரசியல் பாரம்பரியத்தில் இத்தவறுக்கான பாரம்பரியம் உண்டு. இன்றைய தமிழ்த் தலைவர்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நிபுணத்துவம் கொண்டோரையும் உள்ளடக்கி இதற்கான ஒரு செயலணியை உருவாக்கியிருக்க வேண்டும். 

இதில் அவர்களுக்கு உண்மையாகவே ஈடுபாடு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய பொறுப்பற்ற அரசியல் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்காலைவிடவும் பெருந்தோல்விகளை அளிக்கவல்லவை.

எப்படியோ வரம் சாபமாக்கப்பட்டுவிட்ட துயரம் கண்ணில் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் தோல்வியினதும், துயரத்தினதும் பின்னணயிலுங்கூட தமிழ் மக்களுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க தவறவில்லை. அந்த வரத்தின் பேரால் தமிழ் மக்கள் தமிழ்த் தலைவர்களுக்கு நாடாளுமன்றப் பதவிகளை பரிசளித்தனர்.

ஆனால் சிங்களத் தலைவர்களின் பரிசுகளான ரோயன் குதிரைகள் களத்தில் இறங்கி எல்லா வரங்களையும் சாபமாக்கும் அரசியலில் வெற்றி பெற்றுவிட்டன. 

கசேந்திரா எதிர்வு கூறியது போல கிரேக்கரின் ரோயன் குதிரை களத்தில் இறங்கிய போது ரோய் எரியத் தொடங்கியது. அதீனா ஆலயத்துள் கசேந்திரா ஒளிந்து கொண்டாளாயினும் அவள் சிறைபிடிக்கப்பட்டு மன்னனும் கிரேக்கத் தலைமைத் தளபதியுமான அகமனனின் பாலியல் அடிமையாக்கப்பட்டாள். அந்த வேளையிற்கூட அகமனனிடம் கசேந்திரா தீர்க்கத்தரிசம் உரைக்கத் தவறிவில்லை. அவள் அகமனனிடம் இப்படிக் கூறினாள். அதாவது “நீயும் நானும் உனது மனைவியாலும், மனைவியின் கள்ளக்காதலனாலும் வாளுக்கு இரையாக்கப்படுவோம்” என்றாள்.

ஆனால் அவள் பெற்றிருந்த சாபத்தின் பலனாய் அப்போதுங்கூட அவளது தீர்க்கதரிசனத்தை அகமனன் எள்ளி நகையாடினான். அகமனன் கசேந்திராவோடு மகிழ்ச்சி பெருக்கெடுக்க படுக்கை அறையில் இருந்த வேளை அகமனனது மனைவியினதும், அவளின் கள்ளக்காதலனிதும் வாளின் முன் படுக்கையறை கொலைக்களமாய் மாறியது. 

கசேந்திராவின் தீர்க்கத்தரிசனம் பலித்தது கூடவே அவளுக்கு அளிக்கப்பட்ட சாபமும் பலித்தது. அகமனனது மனைவியினதும், அவளது கள்ளக்காதலனினதும் கையில் இருந்த வாள்களுக்குப் பதிலாக தமிழ் மக்களிடம் வள்ளுவரின் எழுதுகோலும், சிலம்பேந்திய ஆயிரமாயிரம் கண்ணகிகளும் தமிழ் மண்ணில் எழுவார்கள் என்பதை உலகின் பல பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் எழுந்த மக்களின் சனநாயக வழிப் பேராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

மகா பாரதத்தில் பார்வைப்புலனற்றிருந்த திருதராட்டினனுக்கு சஞ்சயன் களத்தில் நிகழந்து கொண்டிருந்த 18 நாள் யுத்தத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பாரம்பரியத்தில் தலைவர்களின் கண்களை திறக்கவல்ல இடித்துரைப்போரோ அல்லது அப்படி இடித்துரைப்போர் இருந்தாலும் அதனை செவிமடுத்தவல்ல தலைவர்களோ இல்லையென்பதை நூற்றாண்டுக்கால வரலாறு படம் போட்டுக் காட்டுகிறது. 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பார் இலானும் கெடும். 

என்ற திருக்குறளைக் கருத்தில் கொண்டு அறிஞர்களும், பத்திரிகைகளும் மற்றும் ஊடகங்களும் இடித்துரைக்கும் பணியை நெஞ்சுறுதியுடனும், நேர்மைத்திறனுடனும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

இங்கு இக்கட்டுரை யாரையும் திட்டித் தீர்ப்பதையோ, சபிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல. 

வரலாற்றுக் கண்ணாடிக்கு ஊடாக கடந்தகால, நிகழ்கால சரி, பிழை, நல்லது, கெட்டது என்பதை தரிசிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல பாதையை வடிவமைக்க முடியும்.

எப்படியோ இன்றைய நிகழ்காலம்வரை தமிழரின் கடந்தகால பாதைகள் அனைத்தும் பொய்த்துவிட்டன என்பதால் ஒரு புதிய மதிப்பீட்டுடன் தமிழ் மக்கள் அறிவுபூர்வமான பண்பாட்டு முன்னுதாரணம் மிக்க ஒரு புதிய வழியைத் தேடவேண்டியது வரலாற்றின் கட்டளையாக உள்ளது. 

நகரீக வளர்ச்சியும், பண்பாட்டுச் செழுமையும் கொண்ட இலங்கைத் தமிழர்களை தோற்கடிக்க முடியாதென 1950களின் மத்தியில் டாக்டர் என்.எம்.பேரேரா கூறிய எதிர்வு கூறலை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டிய காலம் அவசர அவசரமாய் எழுந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் தந்த வரம் சாபமாகியுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதை அறிஞர் பெருமக்களும், ஊடகவியலாளர்களும், கலை இலக்கிய கர்த்தாக்களும், மக்களும் இணைந்து தீர்மானிக்க வேண்டும்.

வரம் சாபமானதிலிருந்து சாபத்தை விமோசனமாக்குவதற்கு மிக நீண்ட தூரம் நீதியின் பேராலும், தர்மத்தின் பேராலும், உன்னதமான பண்பாட்டின் பேராலும் பயணிக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை.

--------------
நன்றி 
தினக்குரல்
05.03.17

Image may contain: outdoor
Maura 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.