Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூந்துணர்:
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் எனப்படும். பூக்கள் தோன்றும் ஒழுங்கமைப்பிலும் அவற்றின் கட்டமைப்பின் அடிப்படையிலும் பூந்துணர்களை மேலும் வகைப்படுத்தலாம்.

Image may contain: plant, flower, sky, outdoor and nature
  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16.11.2017
உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் வத்திக்கான் நகரின் தேசியக் கொடி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.

No automatic alt text available.
 
 
 

வத்திக்கான் நகரின் தேசியக் கொடி.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16.11.2017 ஐயப்பன் மகர மண்டல மாலை அணியும் வைபவம் ஆரம்பித்துள்ளது!

Image may contain: 1 person, outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16.11.2017

வெனேரா (Venera, ரஷ்ய மொழி: Венера) என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஆகும்.

இத்திட்டத்தின் விண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது. வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது.

வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது. வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை 81 ஆவது நினைவு தினம்!


(செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். 

இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.

கப்பலோட்டிய தமிழன்ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

 

Image may contain: one or more people, hat and closeup
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 21 தொடக்கம் 27 வரையான காலப்பகுதி மாவீரர் வாரமாகும்..

Image may contain: outdoor
Image may contain: 1 person
No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழத்தின் தேசிய மலர் கார்த்திகை பூ...
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
 
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 
Related image
 

செங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்

செங்காந்தள் மலரை பற்றி ஏற்கனவே பலவேறு பட்ட பதிவுகள் ஒன்றை போலவே வார்த்தை மாறமல் எழுதப்பட்டுள்ளன. அதில் சில குறிப்பிட்டதக்க தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நம் இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ என்றொரு பெயரும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாநில மலராகவும் ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் இதுவே உள்ளது.

நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்இதழ் கிரை தொறும் விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி பவழத் தன்ன செம்பூத் தாஅய்
– நப்பண்ணனார்

விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வண்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் திசையெங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை தமிழீழ புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர்.

தமிழகத்தின் மாநில மலராக அறியப்படுவதற்கு காரணம் முருக கடவுள் ஆகத்தான் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் தமிழ்க் கடவுள் முருகனின் விருப்பமாதலால் அதன் காலத்தில் பூக்கும் இம்மலரும் சிறப்பு பெற்றிருக்கிறது.

பண்டைய அரச காலம் முதலே இது அங்கீகார மலராக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் போது காந்தள் மலர் மாலைகளை அணிந்து கொண்டதாக சங்ககால வரலாறு கூறுகிறது.

 

இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என்றும் இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும், பற்றி ஏறுவதால் பற்றியென்றும், வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.

மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). லில்லி இன மலர் வகையை சேர்ந்தது.

நம் ஊரில் இதன் பேர் கண்ணு நோய் பூ. நெருப்பை போன்ற இப்பூவை பார்த்தால் கண் நோய் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் இதற்கும் கண் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மலரும் நேரம் நம் மாவட்டத்தில் கண் நோய் சீசன், அவ்வளவே.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.

கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

இந்தப் பூ கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. கிழங்கு கலப்பை போலத் தோன்றுவதால் கலப்பை எனவும் அழைப்பர். கண்வலி இப்போது பிரபல பெயர்.

நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும், தோல் நோய் வரும். மொத்த செடிடின் பகமும் விஷத்தன்மை கொண்டதே. வாந்தி, மயக்கம் தொடங்கி கோமா, லுகிமியே என மரணம் கூட உண்டாக வாய்ப்புள்ளது.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும்மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை,அரணை,ஜலமண்டல விஷக்கடிகள் குணமாகும்.

எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை,சாரைப்பாம்பு, சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

 

வேலிகளில் இதை கண்டால் வெட்டி வீழ்த்தும் நிலையில் தான் நாம் இருந்து வந்தோம். இதனை மருத்துவ பயன்களை மக்கள் அறிந்திருந்தும் இதன் பண மதிப்பை வெளிநாட்டினரே நமக்கு கண்டறிந்து தந்தனர்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில் கிடைக்கின்றன. கொடியைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன.

அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் புரட்சிகரமாக பயன் படுத்தப்படுகிறது.

இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்(gout) எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.

அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.

தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 95 % தமிழகத்தில் தான் சாகுபடி நடக்கிறது.

தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது.

ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.

முதல்முறையாக 1980-ம் ஆண்டுகளில் மூலனூர் பகுதியில்தான் செங்காந்தள் சாகுபடி தொடங்கியது. தற்போது திருப்பூர் மாவட்டம், மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்கு அடுத்தபடியாக உள்ளது செங்காந்தள் சாகுபடி.

இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும்.

பாலையை தவிர மற்ற எல்லா வகை நிலங்களில் இது வளரக்கூடியது. பொதுவாக 2500 மீ உயரத்திற்கு மேல் மிக சாதரணமாக வளர்கிரது. கூடலூர் போன்ற இடங்களில் இந்த காலனிலையில் மிகச் சாதரணமாக காணலாம். ஆனால் தற்போது பல இடங்களில் தென்படுகிறது.

இந்த பயிர் பொதுவாக வறண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான். பல ஏக்கர் கணக்கில் இதன் விளச்சல் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மகரந்த சேர்க்கை பணிக்காக தேனீக்கள் கூட வளர்க்கப்படுகின்றன.

 

ஆரம்பத்தில் ஒரு கிலோ விதை அதிக விலைக்கு விற்கப்பட்டது, அதாவது 1500 – 2000ரூ அளவிற்கு விற்கப்பட்ட காலமெல்லாம் உண்டு. இதனால் கண்வலி மூலிகை சாகுபடியில் ஈடுபட்ட பலர் அதிக மகசூலை ஈட்டினர். ஆனால் தற்போது 900 ரூ கிடைப்பதே பெரும்பாடக உள்ளது.

விலை வீழ்ச்சி, இடைதரகர்களின் ஆதிக்கம் போன்றவற்றால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது, கிழங்குகள் பயிரிடப்படுவதும் குறைந்துவிட்டது

எது எவ்வாறாயினும் மருத்துவ பயங்கள் கொண்ட இந்த சங்க கால செடிகள் அதன் சிறப்பியல்பை வெளிப்படுத்தி காலங்கடத்து நிலைத்திருப்பது கவனிக்கத்தக்கது, இந்த கார்த்திகை மாதத்தில் செங்காந்தளை காண நேர்ந்தால் இது நம் மாநில மலரெனெ உங்கள் நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

படித்ததிலிருந்து........

Image may contain: plant, flower, nature and outdoor
Image may contain: plant, flower, nature and outdoor

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21.11.2017
 
 
Image may contain: plant, flower, nature and outdoor

மண்ணில் முதல் முதலில் வித்தாகியவர்கள்...

Image may contain: 1 person, hat and closeup
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் முதல் முதலில் வித்தாகியவர்கள்...

Image may contain: 1 person, outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 personImage may contain: 1 person, standing
 
நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதுதான் பதில் சொல்லவில்லை என்று.அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LTTE தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழிதானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா? என்று கேடான் .நான் ஆச்சரியத்துடன் ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏலு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிறார்கள்.

அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை .. நன்றி .

கவிப்பேரரசு வைரமுத்து.

3 hours ago, யாயினி said:
21.11.2017
 
 
Image may contain: plant, flower, nature and outdoor

மண்ணில் முதல் முதலில் வித்தாகியவர்கள்...

Image may contain: 1 person, hat and closeup

http://tamil.thehindu.com/business/பரவலாகி-வரும்-செங்காந்தள்-மலர்-சாகுபடி/article6396872.ece

உங்கள் பதிவில் இருந்து தேடிப்பார்த்தேன். நல்ல வருமானம் தரக் கூடிய மருத்துவ பயிர். நாட்டில் உள்ளவர்கள் பயிரிட்டு மருத்துவத்துக்கும் பயன்படுத்தலாம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலமுரளி கிருஷ்ணா நினைவு தினம். ..

பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில், பட்டாபி ராமைய்யா - சூரியகாந்தம் தம்பதியருக்கு 1930ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பிறந்தவர். அப்பா-அம்மா இருவருமே இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். பட்டாபி ஒரு இசை ஆசான். சூரியகாந்தம் ஒரு வீணை கலைஞர். பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார்.9 வயதில் பல வாத்தியங்களில் தேர்ச்சி : தனது 6வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட தொடங்கினார்.

9 வயதில் வாய்பாட்டு இல்லாமல் வயலின், மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றார்.பிரபலங்களுக்கு வயலின் கலைஞர் : வானொலியில் முதன்முதலில் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் 'பக்தி மஞ்சரி' என்ற நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு வயலின் கலைஞராக பக்கவாத்தியம் வாசித்துள்ளார். 25 ஆயிரம் இசைக்கச்சேரி தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் நடத்தியிருக்கிறார்.

தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-ம் ஆண்டு 'பக்த பிரகலாதா' என்ற படத்தில் நாரதர் வேடத்திலும், சந்தினே செந்தின சிந்தூரம்(மலையாளம்) படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் : கர்நாடக சங்கீதத்தில் எண்ணற்ற ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகம் என்று சொல்லப்படும் தாய் ராங்கள் 72 தான். இந்த 72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் இயற்றி சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயக்கும் திறன், ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜூகல்பந்தி என்ற இசையில் பல்வேறு பரிமாணங்களில் வல்லவர். மேடைகச்சேரி, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் பிரதிபலித்தவர். புதிய ராகங்களை உருவாக்கியவர் சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள், மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்றே சுவரங்கள்), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே, மோகன்காந்தி... இப்படி பல புதிய ராகங்களை உருவாக்கியவர்.

இசை பயின்றவர்கள் : பி.ஜெயச்சந்திரன், கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, டிஎம் சுந்தரம்(இசை ஆராய்ச்சியாளர்) உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் இசை பயின்றவர்கள்.இசையமைப்பாளர் : சந்தியராகா (கன்னடம்), சங்கரச்சாரியா (சமஸ்கிருதம்), மாத்வாச்சாரியா (கன்னடம்), ராமானுஜசாரிய (தமிழ்), தலைவனுக்கோர் தலைவி 0(தமிழ்) போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.விருதுகள் : இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே சிவாஜி, சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.பாலமுரளி கிருஷ்ணாவின் பிரபல தமிழ் பாடல்கள் : தமிழில் 'திருவிளையாடல்' படத்தில் இவர் பாடிய 'ஒரு நாள் போதுமா....', 'கவிக்குயில்' படத்தில் ''சின்ன கண்ணன் அழைக்கிறான்...', 'கலைக் கோயில்' என்ற படத்தில், ''தங்கம் ரதம் வந்தது வீதியிலே...'', 'சாது மிரண்டால்' படத்தில் ''அருள்வாயே நீ அருள்வாயே...'', 'சுபதினம்' படத்தில் ''புத்தம் புது மேனி...'', 'கண்மலர்' படத்தில் ''ஓதுவார் உன் பெயர் ஓதுவார்...'', 'உயர்ந்தவர்கள்' படத்தில் ''ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே...'', 'நூல் வேலி' படத்தில் ''மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே....'', 'திசைமாறிய பறவைகள்' படத்தில் ''அருட்ஜோதி தெய்வம்...'', 'வடைமாலை' படத்தில், ''கேட்டேன் கண்ணனின் கீதோ உபதேசம்...'', 'தெய்வத்திருமணங்கள்' படத்தில் ''தங்கம் வைரம் நவமணிகள்...'', 'மகாசக்தி மாரியம்மன்' படத்தில், 'மகரந்தம் தான் ஊதும், சக்கரவர்த்தி மிருதங்கம் படத்தில், ''கேட்க திகட்டாத கானம்...', 'இசைப்பாடும் தென்றல்' படத்தில் ''ரகுவர நின்னோ...'' போன்ற பாடல்கள் கேட்க கேட்க என்றும் திகட்டாதவை.

 

Image may contain: 1 person, smiling

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாலமுரளி கிருஷ்ணா...
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூஸிக் அகாடமிக்கு அருகிலேயே, இன்னொரு மியூஸிக் அகாடமி உண்டு. அந்த அகாடமியை, இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். சங்கீத ஜாம்பவான் என்றும் பெருமைபட விவரிக்கலாம். அந்த இசைமேதை... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இவர் பாடி அழைத்தால் போதும்... அந்தக் கண்ணனே ஓடி வந்துவிடுவான். அவரின் குரலும் அதில் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுகிற குழைவும், நெகிழ்வும் இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அருமருந்தாகவும் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை. 
காலமெல்லாம் இசையால் நம்மையும் இறைவனையும் தன்வசப்படுத்தியவர் இன்று இறைவன் வசப்பட்டுவிட்டார். சக்தி விகடன் வாசகர்கள் பங்கேற்கும் சக்தி சங்கமம் நிகழ்ச்சிக்காக அந்த இசைமேதையுடன் நடத்திய கலந்துரையாடலின் சில பகுதிகளை அவருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கே உங்களுக்காக...

மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில் ஒரு ராஜாங்கமே நடத்திவரும் மேதையைப் பார்க்கப் போகிறோம் என்கிற லேசான பதற்றம் ப்ளஸ் பயத்துடனும் வந்திருந்தனர், வாசகர்கள்.

‘‘நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். வாங்கோ, வாங்கோ!’’ என்று பளீர் புன்னகையும், வாஞ்சையான பார்வையுமாக வரவேற்றார் பாலமுரளி கிருஷ்ணா.

‘’நீங்க எல்லாரும் பாடுவேளா? பாட்டுன்னா, கச்சேரி பண்றதையெல்லாம் சொல்லலே! சாதாரணமா பாடுவீங்களானு கேட்டேன். எல்லாரும் பாடுங்கோ. பாட்டு, ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். அதனாலதான் ஒரு பாட்டு, நம்மளை உற்சாகமாக்கிடுது. மொத்தக் கவலையையும் போக்கிடுது’’ என்றார், சிரித்துக் கொண்டே!
ஒரு சின்ன அமைதி. அந்த அமைதி, கேள்விகள் கேட்க வாசகர்களை தயார் படுத்துவதுபோல அமைந்தது. அதையடுத்து வாசகர்கள் மெள்ள கேள்விகளைக் கேட்கத் துவங்கினார்கள்.

‘‘உங்களுக்குள் இருந்த இசை ஞானத்தை முதலில் அறிந்தவர் யார்?’’ என்று வாசகி சுகன்யா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.
‘‘எல்லாம் பகவானின் அருள். இதோ... இந்த நிமிஷம் வரைக்கும் குரல் பயிற்சி எடுத்துக்கிட்டதில்லை. சங்கீதம் பெரிசா தெரியாது. கச்சேரிக்கு முன்னாடி, இப்படி இப்படில்லாம் பாடணும்னு எந்தத் திட்டமிடலும் வெச்சுக்கறது இல்லை. இது, தெய்வ சங்கல்பம். இதைப் பெருமையாவோ தன்னடக்கமாவோ சொல்லிக்கலை. நிஜம் இதுதான்.
ஏழு வயசுல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். பாருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுதான் என்னோட குருநாதர். அவர்தான் எனக்கு என்னெல்லாம் வரும், எங்கிட்டேருந்து எதெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்னு பயிற்சி கொடுத்து உருவாக்கினார். என் அப்பா பட்டாபிராமய்யா மிகப்பெரிய புல்லாங்குழல் வித்வான். அம்மா பிரமாதமா வீணை வாசிப்பாங்க. தாத்தாவும் இசைக்கலைஞர்தான். பாரம்பரியம் மிக்க ஓர் இசைக் குடும்பத்துலேருந்து வந்ததுகூட, என் இந்த வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் காரணமா இருக்கலாம்.’’

‘‘இசைத் துறை மட்டும் இல்லாம, சினிமாலயும் நடிச்சிருக்கீங்க. பக்த பிரதலாதன் படத்துல நாரதரா நடிச்சதுக்கு நிறையப் பாராட்டுக்கள் குவிஞ்சுதாமே..?’’ என்று வாசகி சுபஸ்ரீ கேட்டார்.
‘’நாரதர் வேஷத்துக்குப் பாராட்டுக்கள் கிடைச்சது இருக்கட்டும். ஆனா, அதுக்குப் பிறகு சான்ஸ் ஏதும் வரலியே! தவிர, அடுத்தடுத்தும் நாரதர் மாதிரியான கேரக்டரே வந்துச்சு. நான் வேணாம்னுட்டேன். ஏன்னா, நாரதருக்கு ஜோடி கிடையாது. ஹீரோயின் இல்லாம எதுக்காக நடிக்கணும்னு விட்டுட்டேன். சான்ஸ் வேற கிடைக்கலியா... நல்லதாப் போச்சுனு பேசாம இருந்துட்டேன்’’ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் பாலமுரளி கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து வாசகர்களும் பலமாகச் சிரித்தார்கள்..

‘’நீங்கள் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர் கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று வாசகர் நல்லசிவம் கேட்க...
‘’மன்னிக்கணும். பிடிக்காத விஷயங்களை நான் செய்யறதே இல்லை. ஒரு விஷயத்தை பிடிச்சுப் பண்ணணும். மனசு லயிச்சுப் பண்ணணும். பிடிச்சும் லயிச்சும் பண்ற விஷயங்கள் நல்ல விதமாத்தான் வெளிப்படும்னு நம்பறேன்!’’ என்று உறுதியான பதில் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவிடம் இருந்து.

‘’கற்றுக் கொடுத்த குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டதாக முதன்முதலில் எப்போது உணர்ந்தீர்கள். அவருக்கு எதைச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?’’ - என்று வாசகி சாருலதா தன் கேள்வியை முன்வைத்தார்.
‘’என் குருநாதர், வருடாவருடம் அவருடைய குருவுக்கு ஆராதனை விழா நடத்துவார். அந்த விழாவில் என்னையும் பாட வைச்சார். எனக்கு அடுத்தாப்ல, முசுனூரி சூரிய நாராயண மூர்த்திங்கறவரோட, கதா காலட்சேபம் இருந்துச்சு. மிகப்பிரமாதமா கதை சொல்வார். அதைக் கேக்கறதுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவாங்க. அவருக்கு முன்னாடி என்னைப் பாட வைச்சா, அந்தக் கூட்டம் என் பாட்டையும் கேக்கும்னு யோசிச்சு, நேரம் ஒதுக்கினாங்க. 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு முடிக்கணும். ஆனா, பாட்டு பாட ஆரம்பிச்சதும் நேரம் போனதே தெரியலை எனக்கு. பத்தரை மணியைத் தாண்டியும் பாடினேன். அப்புறம் குருநாதர் வந்து, ‘போதும்டா! முடிச்சுக்கோ’ன்னார். மேடைக்குப் பின்பக்கம் என்னை கூட்டிட்டுப் போய் திருஷ்டி சுத்திப் போட்டார். கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டார். இதுதான் குருவின் பெயரைக் காப்பாத்தறதுன்னு நினைக்கிறேன். தவிர, எல்லாமே குருவுக்கு சமர்ப்பணம். இந்த ஞானம், புகழ், கௌரவம் எல்லாத்தையுமே அவருக்கு சமர்ப்பணம் செய்றேன்.

என்னோட குரு, ஆல் இண்டியா ரேடியோல டாப் ஆர்ட்டிஸ்ட்! நான் ஏ கிரேடு. குருவுக்கு வெள்ளிக்கிழமை பாட வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ஞாயித்துக் கிழமை கிடைக்கும். இதுக்காக ரெண்டு பேரும் வியாழக்கிழமை சாயந்திரம் சென்னைக்குக் கிளம்புவோம். ரயில்ல அஞ்சு ரூபா டிக்கெட். குருவோட சகோதரர் மயிலாப்பூர் லஸ் பக்கத்துல இருந்தார். அவரைப் பார்த்துட்டு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவோம். வெள்ளிக் கிழமை குருநாதர் பாடுவார். அப்புறம் சனிக் கிழமை ரெஸ்ட். ஞாயித்துக்கிழமை நான் பாடுவேன். அப்புறம் கிளம்பி ஊருக்கு வருவோம். அப்பா என் குருநாதரா இருந்தார். அதேபோல குருநாதரும் அப்பா மாதிரியே என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.

‘’உங்களின் இஷ்ட தெய்வம் எந்தக் கடவுள்னு தெரிஞ்சுக்கலாமா சார்?’’ - என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.
‘’நமக்கு இஷ்டமான தெய்வத்தை தேர்ந்தெடுக்கறதா அல்லது தெய்வத்துக்கு இஷ்டமா நாம இருக்கறதா... இதுல எது முக்கியம்? கடவுளுக்கு இஷ்டமா நாம நடந்துக்கணும். அது இசைத் துறையாகட்டும், வேற துறையாகட்டும். எதுவா இருந்தாலும் சரி... வாழ்க்கையை அர்த்தம் உள்ளதா மாத்திக்கணும். எல்லாருக்கும் உபகாரம் பண்ணிண்டு, ஒருத்தருக்கும் சின்ன உபத்திரவம்கூட பண்ணாம, வாழ்ந்தா... கடவுளுக்கு இஷ்டமானவங்களா நாம ஆகிடலாம். ஒவ்வொரு மனுஷாளுக்கும் இதுதான் அவசியமும்கூட!  
மத்தபடி என் இஷ்ட தெய்வம்னு நீங்க கேட்டதால சொல்றேன். அனுமார்தான் என் இஷ்ட தெய்வம். சின்ன வயசுலேருந்து வந்த பழக்கம் இது. எந்தவொரு செயலா இருந்தாலும் சரி, சட்டுன்னு அனுமார்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருவேன். அவரோட திருநாமத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். ஸ்ரீஅனுமன் மேல அலாதி பிரியமும் பக்தியும் உண்டு எனக்கு’’ என்றார்.

‘’இந்தக் கால இசையைக் கேட்கிறீர்களா? கர்னாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையும் கலப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று வாசகி பத்மலதா கேட்டார்.
‘’ஓய்வு நேரங்கள்ல கேப்பேன். ஆனா, ஓய்வுக்குன்னெல்லாம் நேரம் ஒதுக்கறதே இல்லை. எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். அதான் என் விருப்பம். தவிர, கர்னாடக சங்கீதம் மேற்கத்திய சங்கீதம்னெல்லாம் தனித் தனியா இருக்கிறதா நினைக்கலை. காதுக்கு இனிமையான சங்கீதம் எதுவா இருந்தாலும், அது கர்னாடக சங்கீதமே!’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.

‘’உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக, கமல்ஹாசன்கூட உங்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாராமே...’’ - என்று வாசகர் ஸ்ரீநிவாசன் கேட்க...
‘’கமல், மகா கலைஞன். கூர்மையான புத்திசாலித்தனம் உண்டு. எதையும் சட்டுன்னு உள்வாங்கிப்பார். அவ்வளவு ஏன்... இப்போ நம்ம தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிட்டிருக்கிற ஜெயலலிதா கூட எங்கிட்ட பாட்டு கத்துட்டிருக் காங்க. இசைல பெரிய ஆர்வம் உண்டு அவங்களுக்கு. அவங்க குரலும் பாடுறதுக்கு அத்தனை தோதா இருக்கும். அவங்க கச்சேரிலயோ இல்ல சினிமாலயோ இன்னும் நிறையப் பாடியிருக்கலாம். ஏன் பாடலைனு தெரியலை. ஆனா, இப்ப கமலும் சரி, ஜெயலலிதாவும் சரி... என்னை அடியோடு மறந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்’’ என்று வெள்ளந்தியாகச் சொல்லிப் புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.

‘’மேடையில் கச்சேரி பண்ணும்போது கையில், பாக்கெட்டில் அல்லது பக்கத்தில் ஏதேனும் ஸ்வாமி படம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட் உண்டா, உங்களுக்கு?’’ என்று வாசகி லலிதா கேட்டார்.
‘’அப்படியெல்லாம் எந்த சென்டி மென்ட்டும் கிடையாது. இந்தக் கலர், இந்த ஸ்வாமி படம், இப்படி திசை பார்த்து உட்கார்றதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. பகவான் எப்பவும் எல்லா பக்கத்திலயும் பக்கத் துணையா இருக்கார். பக்க வாத்தியக்கார கலைஞர்களும் பக்கத் துணையா இருக்காங்க. எதிர்ல இருக்கற ரசிகர்களும் நம்ம மேல மிகுந்த வாத்ஸல்யத்தோட, பிரியத்தோட இருக்காங்க. இவங்க எல்லாரையும் திருப்திப்படுத்தணும்; சந்தோஷப் படுத்தணும்; பெருமைப்படுத்தணும். அவ்வளவுதான் நினைச்சுப்பேன்!
திருவையாறில் ஒரு ஆராதனை விழா. அப்ப எனக்கு 11 வயசு. அங்கே விழாவுல, முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திருந்தேன். ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்துட்டிருந்துது. யாரோ ஒருத்தங்க பாடிட்டிருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும், ‘நீ பாடு... நீ பாடு...’னு முத்தையா பாகவதர் சொல்ல, நான் பாட ஆரம்பிச்சேன். மொத்தக் கூட்டமும் ‘யார் பாடுறது?’னு சுத்திச் சுத்திப் பார்க்க ஆரம்பிச்சுது. கடைசியாதான், முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திண்டிருக்கிற பய பாடுறான்னு தெரிஞ்சுது அவங்களுக்கு.
பெங்களூரு நாகரத்தினம்மாங்கறவங்க, ‘நாளைக் காலைல இவன் பாடட்டும். நான் என் டைமை இவனுக்காக விட்டுத் தரேன்’னு சொன்னாங்க. மறுநாள், மாபெரும் இசைக்கலைஞர்களோட நிகழ்ச்சிகளுக்கு நடுவே பாடினேன். ‘என் நேரத்தையும் பையனுக்கே தரேன்’னு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முன்வந்தார். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அவர் நேரத்தை எனக்குத் தந்து பாடச் சொன்னார். ஓர் இளம் பாடகன், திருவையாறு கச்சேரில ஒன்றரை மணி நேரம் பாடினது, அதுதான் முதல்முறை. மேடையேறும்போது பல தருணங்கள்ல, 11 வயசுல திருவையாறில மேடையேறின அனுபவம்லாம் சட்டுன்னு நினைவுக்கு வரும். இப்பவும் ஞாபகம் வந்துடுச்சு!’’ என்று சொல்லிப் பூரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
பெயருக்கேற்றாற்போலவே, ஒவ்வொரு பதிலிலும் ஒரு குழந்தைத்தனம் கொஞ்சுகிறது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம். எந்தக் கேள்வி கேட்டாலும், சட்சட்டென்று பதில் சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிப்பதில் தான் அவரின் ஆரோக்கியமும் தெளிவும் நிறைந்திருக்கிறதுபோலும்.

திருவிளையாடல்ல ‘ஒருநாள் போதுமா’ன்னு ஆணவ த்வனியில பாடியிருப் பீங்க. இன்னொரு படத்துல ‘தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் பாடியிருப்பீங்க. இதுக்காக, என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துக் கிட்டீங்க?’’ என்று கேட்டார் வாசகி ராதா சுதர்சனம்.
‘‘இதுக்குப் பெரிசா மாத்திப் பாடணும், முயற்சி எடுத்துப் பாடணும்னெல்லாம் அவசியம் இல்லை. படத்துல அந்தக் கேரக்டரோட குணாதிசயம் என்ன, எந்தச் சூழல்ல இந்தப் பாட்டு வருது, இந்தப் பாட்டின்போது யார் யாரெல்லாம் இருப்பாங்க, பாட்டுக்கு வாயசைக்கிற நடிகர் யாருனு டைரக்டர்கிட்டயும் மியூஸிக் டைரக்டர்கிட்டயும் முழு விவரத்தை யும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடிட வேண்டியதுதான்!’’

‘இந்தக் காலத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?’’ இது வாசகர் சேதுராமனின் கேள்வி. 
‘‘அரைகுறையா கத்துக்காதீங்க; முழுசா கத்துக்கோங்க. ஆசைப்பட்டு கத்துக்கோங்க. அப்பா ஆசைப்படுறார், அம்மா விரும்பறானு இல்லாம, நீங்களா விரும்பிக் கத்துக்கணும். சங்கீதத்துல எல்லா நுணுக்கங்களையும் ஈடுபாட்டோட கத்துக்கணும். அந்தக் காலத்துல எல்லாம் இந்த அளவுக்கு வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை. இங்கேருந்து அங்கே போய் கத்துக்கறதுக்கு, போயிட்டு வர வாகன வசதிகளும் கிடையாது.
இன்னிக்கு எல்லாமே இருக்கு. கத்துக் கொடுக்கறதுக்கும் நிறையப் பேர் இருக்காங்க. போக வர, சாலையும் நல்லாருக்கு. வாகன வசதிகளும் இருக்கு. ரேடியோ, டிவி, மேடை, சபாக்கள்னு நிறைய வாய்ப்புகளும் கிடைக்குது. போட்டிகள் வைக்கிறாங்க. பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. அதனால, எதைக் கத்துக்கறதா இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடயும் உத்வேகத்தோடயும் குழந்தைகள் கத்துக்கணும்!’’ என்றார் பாலமுரளி கிருஷ்ணா.

‘‘நீங்களே புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். கீர்த்தனை களை இயற்றியிருக்கிறீர்கள். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்று வாசகி புவனேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
‘’இசையில் மொத்தம் 72 மேளகர்த்தாக்கள். ஆனால் அந்த மேளகர்த்தாக்களைப் பற்றி ஒரு சர்ச்சை உண்டு. சம்பூர்ண மேளகர்த்தா, அசம்பூர்ண மேளகர்த்தானு ரெண்டுவிதம். இதுல, அசம்பூர்ண மேளகர்த்தாவை உருவாக்கியவர் வேங்கடபதி. சம்பூர்ண மேளகர்த்தாவுக்கு கோவிந்தாச்சாரி என்பவர்தான் கர்த்தா. தியாகராஜர், சம்பூர்ண விதத்தைத்தான் கையாண்டார். எனக்கும் சம்பூர்ணம்தான் பிடிக்கும்.
முத்துசாமி தீட்சிதர், அசம்பூர்ண மேளகர்த்தாவை போற்றினார். எந்த ராகத்துக்கும் ஒரு பாடல் இருக்கணும். அப்போதுதான், அந்தப் பாட்டைப் பாடும்போதுதான் ராகம் புரியும். ஒரு ராகத்துக்கு பலப்பல பாட்டுகள் இருந்தா, இன்னும் விசேஷம். ஆனா, ஒரு ராகத்துக்கு ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே இருந்தா, அதை அடிக்கடி பாடணும். அப்படிப் பாடினாத்தான், அந்த அபூர்வ ராகம் வெளியே தெரியவரும். நான் கச்சேரிகள்ல, ரெண்டு பாட்டுப் பாடிட்டு, ஒரு அபூர்வ ராகம் பாடுறது வழக்கம்.
கவிதை, பாடல் எழுதறதை முறையாக் கத்துக்கலை நான். சம்ஸ்கிருதம் தெரியாது எனக்கு. பாடுவேனே தவிர, எழுதத் தெரியாது. திடீர்னு தோணுச்சு. குருநாதர்கிட்ட பாடிக்காட்டினேன்.
‘அற்புதம்... ரொம்ப நன்னா இருக்கு. நிறையப் பண்ணு...’னு ஆசீர்வாதம் பண்ணினார். அப்புறம் குருவை வைச்சே கீர்த்தனை தோணுச்சு. அதுக்கு நிறைய கீர்த்தனைகள் எழுதினேன். எல்லாமே இறையருள். குரு கிருபை.
அப்பய்ய சாஸ்திரி தெரியும்தானே! ஒருநாள், காலைல நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அப்ப, சின்னவயசுதான் எனக்கு. கதவைத் திறந்து பார்த்ததும், என் அப்பா ஆடிப்போயிட்டார். ‘எழுப்பு... இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையன் என்னோட வரணும்’னார் சாஸ்திரி. எழுந்து, குளிச்சு நாங்க ரெண்டு பேரும் ரெடியானதும்... ‘நீ வரவேணாம். அவன் மட்டும் வந்தாப் போதும்’னார்.
சாஸ்திரிகளை நிமிர்ந்து என்னால பார்க்கவே முடியலை. அவர் கண்கள்ல அப்படியொரு ஒளி. தேஜஸ். பயமா இருந்துச்சு. ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது மாதிரி அவரோடயே போனேன்.  
அவர் வீட்டு பூஜையறையில் என்னை உட்கார வெச்சு. ‘’இங்கே பார். சில விஷயங்களை உங்கிட்ட சொல்லச் சொல்லி, அம்பாள் உத்தரவு. அதைச் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். கவிதைங்கறது ஒரு அற்புதமான படைப்பு. அதுக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதுவொரு அறிவியல். சில முக்கியக் குறிப்புகள் உனக்குத் தெரியணும். கவிதைக்கு ஒரு கனம் அவசியம். மீட்டர் ரொம்பவே முக்கியம். அதெல்லாம் இப்படித்தான் இருக்கணும்’னு சொல்லிட்டு, மடை திறந்த வெள்ளம் போல, சங்கீதம் தொடர்பான குறிப்புகளை சொல்லிக்கிட்டே போனார். அப்பய்ய சாஸ்திரி சொன்ன எல்லாமே அப்படியே என் மனசுல பதிஞ்சிடுச்சு.
வீட்டுக்கு வந்து, எழுதின கீர்த்தனைகளையும் சாஸ்திரி சொன்ன குறிப்புகளையும் வைச்சுப் பார்த்தப்ப, ஒவ்வொரு கீர்த்தனையும் கனகச்சிதமா அமைஞ்சிருந்து. நான் கரகரன்னு அழுதுட்டேன். எல்லாமே தெய்வ சங்கல்பம். வேற என்ன சொல்றது... சொல்லுங்க’’ என்றபோது, நெகிழ்ந்தும் வியந்தும் நின்றது வாசகர் கூட்டம்.

‘‘இப்படித்தான் கச்சேரி பண்ணணும். பூஜை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?’’ என்று வாசகி உமா கேட்டார்.

‘’பூஜையாகட்டும், கச்சேரியாகட்டும்... இப்படிக்கட்டுப்பாடுகள் வெச்சுக்கிட்டா, அப்புறம் மனசும் புத்தியும் அந்தக் கட்டுப்பாட்டையே பிடிச்சுண்டு நிக்கும். மனசு ஒரு திசை. புத்தி இன்னொரு திசை. இது ரெண்டும் இப்படிப் போயாச்சுன்னா, அப்புறம் பூஜைலயும் ஆத்மார்த்தம் இருக்காது. கச்சேரியை யும் லயிச்சுப் பண்ணமுடியாது.
அதனால, பூஜைகளை எப்ப செய்யணும்னு தோணுதோ, அப்ப ஆத்மார்த்தமா செய்றவன் நான். அதேபோல கச்சேரி புக்காகி, மேடை ஏறிட்டேன்னா, அந்த நாலஞ்சு மணி நேரமும் பாட்டுலதான் முழுக்கவனமும் இருக்கும்.
அதேபோல, ‘கச்சேரி அன்னிக்கி மௌன விரதம் இருந்து குரலை பாதுகாப்பீங்களா? ஐஸ்க்ரீம் அறவே தொடமாட்டீங்களா?’ன்னெல்லாம் கேப்பாங்க சிலபேர். ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’னு பாடியிருக்கேன். ஆனா, கச்சேரிக்கும் மௌனமா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஐஸ்க்ரீமை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். சாயந்திரம் கச்சேரின்னா, ஒரு மூணு மணி வாக்குல, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு, அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்கூட சாப்பிட்டுவிட்டு, மேடையேறியிருக்கேன்.
இந்தப் பாட்டு, இசை, ஞானம், கீர்த்தனை, பெயர், புகழ் எல்லாமே பகவான் கொடுத்த பெருங்கருணை. கொடை. அப்படியிருக்கும்போது, குரல் வளத்தோட இருக்கறதுக்கு நாம என்ன பண்ணினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. தெய்வக் கணக்குக்கு முன்னாடி, நீங்க என்ன.... நான் என்ன... நாமெல்லாம் எம்மாத்திரம்?
இசையுலகத்துக்கும் இறைவனுக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவ்ளோதான்...’’ என்று ஒரு குழந்தையைப் போல் கபடமின்றிச் சிரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
அந்தச் சிரிப்பே ஒரு ஆலாபனைதான். சங்கீதம்தான்!


http://www.vikatan.com/…/73182-memories-of-balamuralikrishn…

Image may contain: 1 person, outdoor
Image may contain: 1 personImage may contain: 12 people, people standing
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எப்படி 'டொலர்' தோன்றியது?
தற்போது செக்கோஸ்லாவியா குடியரசின் உள்ள 'சங்கிட்' ஜோசியம் 'ஸ்தல்' என்ற நகரம், முன்னர் ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருந்தது.அங்கு 1516ம் ஆண்ல் ஒரு வெள்ளிச்சுரங்கம் அமைக்கப்பட்டது.ஜேர்மனிய மொழியில் 'தால்' என்பதற்குப் 'பள்ளத்தாக்கு' என்று பொருள்.
எனவே, வெள்ளிசுரங்கம் இருந்த இடம் 'தாலேர்' என்று அழைக்கப்பட்டது.இதனால் வெள்ளிசுரங்கத்தில் அச்சடிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் 'தாலேர்கள்' எனப்பட்டன. 1600ம் ஆண்டில் அந்த வெள்ளி நாணயங்கள் ஆங்கிலத்தில் 'டொலர்' என்று மொழி பெயர்க்கபட்டன.
முதலில் ஜேர்மானிய நாணயத்தை மட்டும் குறித்த அந்தப் பெயர்,பின்னர் வேறு சில நாடுகளின் நாணயங்களையும் குறிப்பதாகமாறியது.
ஸ்பானியர்களின் நாணயமான 'பெஸோ' தான் டொலர் என்று அளைக்கபட்ட முதல் வேற்று நாட்டு நாணயமாகும். முதல் அமெரிக்க டொலர் 1792ம் ஆண்டு பிலடெல்பியா என்ற இடத்தில் அச்சடிக்கப்பட்டது.
 
Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதிரும் பூவும் அழகாய் தோன்றும்
உங்கள் வீழ்வை நினைக்கயிலே.

அதிரும் களமும் அறமாய் இருக்கும்
உங்கள் வாழ்வை எண்ணும்போது.

கல்லில் கூட வேரமுழைக்கும்
உங்கள் பெயரில் நடுகையிலே..

வெறும் சொல்லும்கூடகவியாய்மாறும்
உங்கள்நினைவில் அழுகையிலே.

- போராளிக்கலைஞர் துளசிச்செல்வன் -

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய எழுச்சி வாரம் 2017

No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போக நினைச்சாலும் கையை இழுத்து தடுக்குது இசைக்கலைஞர் ஐயா பாலமுரளி கிருஸ்ணாவின் பதிவுகள்...... சும்மா போம்மா யாயினி....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
On 3.11.2017 at 11:58 AM, யாயினி said:
 
லைக்கா (Laika, ரஷ்ய மொழி: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. லைக்கா (பெண் நாய்)
விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.
லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
No automatic alt text available.

யாயினி,  இதுவரை... நான் கேள்விப் படாத, முக்கிய  செய்தி ஒன்றை, 
உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன். அதனை... இணைத்தமைக்கு  நன்றி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, candles
 

எழுதுங்களேன் – நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்...
ஏராளம்… ஏராளம்
எண்ணங்களை – எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால்
முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்...

"கப்டன் வானதி அக்கா"  1f622.png?1f64f.png? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
 

இன்று - நவ.25: சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் (International Day for the Elimination of Violence against Women). 

உலக அளவில் பெண்கள் பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகுக்கு காட்டி, அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் தேதியை 'சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்' ஆகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25-ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள். 

'மறக்கமுடியாத பட்டாம்பூச்சிகள்' என்று பின்னர் உலகில் பரவலாக அறியப்பட்ட இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lest we forget.

Image may contain: plant, flower, text and nature
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம் 2017 மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராக,

 
Image may contain: one or more people, people standing, people walking and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ வைப்பகம் திறக்கும் என காத்திருக்கும் நாகம்மா!

இன்று துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊர் வல்வெட்டித்துறை. “என்ரை பிள்ளைகள் இருக்கிற இடத்திலை இந்த உயிரை விடவேணும்..” என்று திமிராகச் சொன்னார். 

நாகம்மாவின் வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர். ஏழுபேரை போரில் பலி கொடுத்தவர். “இப்ப ஒரு பிள்ளையை வளர்க்கிறன்..” என்றார். “தம்பி, நான் ஆமியைப் பார்த்து சொன்னனான்.. நீங்களும் சண்டை பிடிச்சியள். நாங்களும் சண்டை பிடிச்சம். ஆர் வெண்டது, தோத்தது எண்டுறது இருக்கட்டும். ஆனால் இதுகள் எங்கடை பிள்ளையள் எண்டனான்..”

நாகம்மா இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதும் துயிலும் இல்ல வீதியில் ஒரு இராணுவ வண்டி இராணுவத்தினரை நிறைத்துக் கொண்டு போனது. தன் பிள்ளைகளுக்காக விளக்கேற்றும் விநாடிகளுக்காக காத்திருக்கும் அவரின் பேரவா தெரிய பேசிக் கொண்டிருந்தார். 

அவர் முதுமையில் வறண்டுபோன கையில் இன்னமும் பளபளக்கும் தமிழீழ வைப்பக வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்றை வைத்திருந்தார். தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினார். 2009இற்கு முன்னரான காலத்தில் அவருக்கு மாதம் ஆறாயிரம் ரூபாவை வழங்கியுள்ளது தமிழீழ வைப்பகம். அந் நாட்களில் அது பெரிய பணம். மாதம் ஒன்றுக்கு தனியொருவருக்கு போதுமான நிதி.

போராட்டத்திற்கு பங்களித்தவர்களை, மாவீரர்களின் பெற்றோர் உறவுகளை அன்றைக்கு புலிககள் இயக்கம் இப்படித்தான் பொறுப்பாக தம் அரசில் நிர்வகித்து வந்தது. ஒரு விடுதலை இயக்கம் இப்படியான விடயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இன்று அரசோ, தமது அரச திணைக்களங்களோ, பாதிக்கப்பட்டவர்களை இப்படி ஏதும் நிர்வாகிக்கிறதா? 

இறுதியாக அந்தப் புத்தகத்தில் 16ஆயிரம் ரூபா வைப்பில் இருப்பதையும் வைப்பு விபரங்கள் காட்டின. “தம்பி, தமிழீழ வைப்பகம் திரும்பவும் திறக்கும்தானே..” என்று நம்பிக்கையோடு கேட்டார். அம்மா, தனக்குள் சேகரித்து வைத்திருப்பது தமிழீழ வைப்பக புத்தகத்தையும் 16ஆயிரம் ரூபாவையும் மாத்திரமல்ல. 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Image may contain: one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: outdoor
காவலூர் அகிலன்
 
சுடலை சென்று வந்தால் குளிக்கச் சொல்லும் உறவுகள்
துயிலுமில்லம் சென்றுவந்தால் குளிக்கச் சொல்வதில்லை இதிலிருந்து தெரிகிறதெல்லவா
மாவீரர்கள் கடவுள்கள் என்பது...
 · 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எனது நண்பன்;
வாழ்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி.
#தமிழீழ_தேசியத்_தலைவர்_மேதகு
#வே_பிரபாகரன்

Image may contain: drawing

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.