Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்

old-watch-720x340.jpg
 

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார். அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார். அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்… அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்…

தந்தை மகனை பார்த்து, மகனே!

சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.”

உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்….”

” உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… ” இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்…

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவலிக்காதீர்கள்

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
204900363_10158761402405376_707712902782
 
 
204908285_10158761402470376_389544562087
 
 
203902746_10158761402500376_746155084916
 
 
202545290_10158761402600376_131148223892
 
 
206984448_10158761402710376_692002058035
 
 
 
அர்ஜின் அண்ணாவின் முகப் பக்கத்திலிருந்து கொள்ளை அடிச்சேென்.அவரது அனுமதியோடு தான்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

உண்மை!

 

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது…

“நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்.”

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.

( நயினை அன்னைமகன் )

முகநூலில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அன்புத்தம்பி said:

ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.

இதை பதிவிட்ட நயினைமகன் தாயகத்திலா புலம்பெயர்நாட்டிலா இருக்கிறார் என்று தெரியவில்லை.

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கடனாளியாக வாழவில்லை, நிச்சயமாக வசதியுடன் பல லட்சம்பேர் வாழுகிறார்கள்.

புலம்பெயர்ந்தவர்களில் 95% மேற்பட்டோர் முதுமையடைந்து பல்லு விழும் நிலை வந்தால்கூட தாயகம் திரும்ப தயாராக இல்லை ,திரும்பவும் மாட்டார்கள்.

அதற்கு பணம் பங்களா கார் மட்டும் காரணம் அல்ல, சொந்தநாட்டிலேயே இனம் மதம் மொழி சாதி பிரதேசம் என்று ஏகப்பட்ட கசப்பான சம்பவங்களை இலங்கை திரும்பி போனால் மறுபடியும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதும் ஒன்று.

புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தபடி தாயகத்திலிருப்பவர்களை இந்த பக்கம் வராதீர்கள் என்றோ அல்லது தாயகத்தில் எல்லாம் இருக்கு இங்க எதுக்கு வாறீங்கள் என்றோ இங்கிருக்கும் எவரும்சொல்லவும் முடியாது கேட்கவும் முடியாது.

நயினைமகன் எங்களை அதை சொல்ல சொல்லி கேட்கவும் கூடாது.

அங்கே இருக்கும் மக்களுக்கு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்கு பொருளாதார நோக்கம் மட்டுமல்ல,

சொந்த மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத உள்ளூர் தமிழ் அரசியல்,வவுனியா தாண்டிவிட்டால் எங்கும் எதிலும் சிங்கள மயம்  வடகிழக்கின் குறுகிய நிலப்பரப்புக்குள் மில்லியன் கணக்கில்  வாழ்ந்துகொண்டு சிறுநிலையை அடைய வேண்டுமென்றாலும் பெரும் அளவிலான போட்டி  , எவ்வளவு படித்திருந்தாலும் சிங்களம் தெரியாவிட்டால் வடக்கு கிழக்கை தாண்டி நல்ல வேலையில் அமர முடியாது என்ற நிலை போன்றன  இது எங்கள் நாடு அல்ல என்று ஏற்படுத்திவிட்ட  உணர்வும் ஒரு காரணம்.

புலம்பெயர்ந்தநாடு ஒன்றும் நம்மை கொடுமை படுத்தவில்லை சொந்தநாட்டிலேயே அகதியாக வாழ்ந்த எம்மினத்தை தனதுநாடு பிரஜை ஆக்கி உயிர் பயமின்றி வாழ வாழ்வு தந்த மண்ணில் கஷ்டமான நிலையிலோ அல்லது பொய் வாழ்க்கை  வாழ்கிறோம் என்று சொன்னால் நாம் வாழும் மண்ணுக்கு எம்மைவிட நன்றிகெட்டதனமாக யாருமே இருக்க வாய்ப்பில்லை.

இங்கு துப்பரவு தொழிலாளியாக இருப்பது ஒன்றும் தரகுறைவில்லை, ஜனாதிபதியானாலும் அந்த தொழிலாளியை ஐயா என்றே அழைப்பார்கள். எந்த தொழில் செய்தாலும் முதலில் நீ மனிதன் அப்புறம்தான் உன் தொழில் என்று மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் இந்த தேசங்கள் சிங்கள தேசம் போன்றதல்ல, புண்ணியபூமி.

வாழ்வை திட்டமிடாதவர்கள் கஷ்டபடுகிறார்கள், திட்டமிட்டவர்கள் தமது தகுதி முயற்சிக்கேற்ப நன்றாக வாழ்கிறார்கள். தமது சக்திக்கு உட்பட்டும் சக்தியை மீறியும் தாயகபோராட்டத்துக்கும் மக்களுக்கும் உதவியிருக்கிறார்கள்.

தாயக மக்கள் தற்போது புலம்பெயர நினைத்தால் அது அவர்கள் விருப்பம், ஆனால் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்லலாம் பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டு இங்கே வருபவர்கள் அந்த  கடனை கட்டி முடியும் முன்னரே திருப்பி அனுப்பபடும் அபாய நிலையில்தான் தற்போதைய புலம்பெயர் அகதி சட்டங்கள் உள்ளன.

ஊரில் வந்து கலர் காட்டுகிறவர்கள் அற்பனுக்கு பவுசு வந்த கேசுகள், அவர்கள் ஊரில் இருந்திருந்தாலும் திடீர் வசதி வந்தால் அப்படிதான் கலர் காட்டியிருப்பார்கள், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

இதை பதிவிட்ட நயினைமகன் தாயகத்திலா புலம்பெயர்நாட்டிலா இருக்கிறார் என்று தெரியவில்லை.

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கடனாளியாக வாழவில்லை, நிச்சயமாக வசதியுடன் பல லட்சம்பேர் வாழுகிறார்கள்.

புலம்பெயர்ந்தவர்களில் 95% மேற்பட்டோர் முதுமையடைந்து பல்லு விழும் நிலை வந்தால்கூட தாயகம் திரும்ப தயாராக இல்லை ,திரும்பவும் மாட்டார்கள்.

அதற்கு பணம் பங்களா கார் மட்டும் காரணம் அல்ல, சொந்தநாட்டிலேயே இனம் மதம் மொழி சாதி பிரதேசம் என்று ஏகப்பட்ட கசப்பான சம்பவங்களை இலங்கை திரும்பி போனால் மறுபடியும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதும் ஒன்று.

புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தபடி தாயகத்திலிருப்பவர்களை இந்த பக்கம் வராதீர்கள் என்றோ அல்லது தாயகத்தில் எல்லாம் இருக்கு இங்க எதுக்கு வாறீங்கள் என்றோ இங்கிருக்கும் எவரும்சொல்லவும் முடியாது கேட்கவும் முடியாது.

நயினைமகன் எங்களை அதை சொல்ல சொல்லி கேட்கவும் கூடாது.

அங்கே இருக்கும் மக்களுக்கு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்கு பொருளாதார நோக்கம் மட்டுமல்ல,

சொந்த மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத உள்ளூர் தமிழ் அரசியல்,வவுனியா தாண்டிவிட்டால் எங்கும் எதிலும் சிங்கள மயம்  வடகிழக்கின் குறுகிய நிலப்பரப்புக்குள் மில்லியன் கணக்கில்  வாழ்ந்துகொண்டு சிறுநிலையை அடைய வேண்டுமென்றாலும் பெரும் அளவிலான போட்டி  , எவ்வளவு படித்திருந்தாலும் சிங்களம் தெரியாவிட்டால் வடக்கு கிழக்கை தாண்டி நல்ல வேலையில் அமர முடியாது என்ற நிலை போன்றன  இது எங்கள் நாடு அல்ல என்று ஏற்படுத்திவிட்ட  உணர்வும் ஒரு காரணம்.

புலம்பெயர்ந்தநாடு ஒன்றும் நம்மை கொடுமை படுத்தவில்லை சொந்தநாட்டிலேயே அகதியாக வாழ்ந்த எம்மினத்தை தனதுநாடு பிரஜை ஆக்கி உயிர் பயமின்றி வாழ வாழ்வு தந்த மண்ணில் கஷ்டமான நிலையிலோ அல்லது பொய் வாழ்க்கை  வாழ்கிறோம் என்று சொன்னால் நாம் வாழும் மண்ணுக்கு எம்மைவிட நன்றிகெட்டதனமாக யாருமே இருக்க வாய்ப்பில்லை.

இங்கு துப்பரவு தொழிலாளியாக இருப்பது ஒன்றும் தரகுறைவில்லை, ஜனாதிபதியானாலும் அந்த தொழிலாளியை ஐயா என்றே அழைப்பார்கள். எந்த தொழில் செய்தாலும் முதலில் நீ மனிதன் அப்புறம்தான் உன் தொழில் என்று மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் இந்த தேசங்கள் சிங்கள தேசம் போன்றதல்ல, புண்ணியபூமி.

வாழ்வை திட்டமிடாதவர்கள் கஷ்டபடுகிறார்கள், திட்டமிட்டவர்கள் தமது தகுதி முயற்சிக்கேற்ப நன்றாக வாழ்கிறார்கள். தமது சக்திக்கு உட்பட்டும் சக்தியை மீறியும் தாயகபோராட்டத்துக்கும் மக்களுக்கும் உதவியிருக்கிறார்கள்.

தாயக மக்கள் தற்போது புலம்பெயர நினைத்தால் அது அவர்கள் விருப்பம், ஆனால் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்லலாம் பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டு இங்கே வருபவர்கள் அந்த  கடனை கட்டி முடியும் முன்னரே திருப்பி அனுப்பபடும் அபாய நிலையில்தான் தற்போதைய புலம்பெயர் அகதி சட்டங்கள் உள்ளன.

ஊரில் வந்து கலர் காட்டுகிறவர்கள் அற்பனுக்கு பவுசு வந்த கேசுகள், அவர்கள் ஊரில் இருந்திருந்தாலும் திடீர் வசதி வந்தால் அப்படிதான் கலர் காட்டியிருப்பார்கள், 

ஊரில் வந்து கலர் காட்டுகிறவர்கள் அற்பனுக்கு பவுசு வந்த கேசுகள், அவர்கள் ஊரில் இருந்திருந்தாலும் திடீர் வசதி வந்தால் அப்படிதான் கலர் காட்டியிருப்பார்கள், 👏

 

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொன்ஸ்ரக்ஸன் வேலை செய்யிறவேன்ட தொல்லை தாங்க முடிய இல்லை.. மோகன் அண்ணா என்ன செய்தனீங்கள் யாயினியை காணாமல் போனோர் பட்டியலில் போட்டுட்டீங்களா..🤔😄👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யானைகள் : ஒரு பார்வை.
----------------------------------------------
காட்டில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கான யானை பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்:
 
யானை 22 மாதங்கள் கருவைச் சுமக்கும் . அது 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். யானையால் ஒரே நேரத்தில் 350 கிலோ எடையைத் தூக்க முடியும்.
சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூடப் போடும். ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சிகளும் விதைக்கப்படும்.
ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3,000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36,500 மரங்கள் நடுகிறது.
ஒரு யானை தன் வாழ்நாளில் 18,25,000 மரங்கள் வளரக் காரணமாகிறது .
உலகிலுள்ள காடுகள் மற்றும் அதன் மரங்களால் வெளிப்படும் ஆக்சிஜன் இந்த ஜீவன்களால் மட்டுமே உருவாகின்றன.
 
யானையைப் பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் :
 
தூய தமிழில் யானைக்கு 60 பெயர்கள் உள்ளன.
யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருக்காது. யானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது. இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள் இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது இருப்பது 27,312 யானைகள் மட்டுமே.
யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நோயுற்ற யானைகளுக்கு உணவையும், நீரையும் மற்ற யானைகள் ஊட்டும்.
நோயுற்ற யானைக்கு மற்ற யானைகள் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.
5 கி.மீ தூரத்தில் தண்ணீர் இருந்தால் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.
யானையின் தும்பிக்கை 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் குடிக்கும் திறனுடையது.
இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் இடையாது. ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.
பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் சாவைத் தானே தேடிக் கொள்ளும்.
இயற்கையை சமநிலைப் படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரியது. அதைத் தெரிந்துதான் கேரள அரசு தனது அரசு முத்திரையில் இரண்டு யானைகள்படம் வைத்துள்ளது.
 
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-
May be an image of animal and outdoors
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் இசை உலக வாரிசு யார்?
வாரிசு என்றால் சேர்த்து வைத்து உண்டு பண்ணிய சொத்துகளை அனுபவிப்பவர்கள் தான் அந்த வகையில் பார்த்தால்
என் இசை ரசிகர்கள் எல்லாமே என் வாரிசு தான்
🌹இறையருள்🌹
🌹 இளையராஜா 🌹
அன்புடன் உங்கள்
Ilayaraja Isai Pasarai🎵
இளையராஜா இசைப்பாசறை🎵
May be an image of 1 person and text that says 'உங்கள் இசை உலக யார்? வாரிசு -பொன்விழி, அன்னூர். வாரிசு என்றால்- சேர்த்து வைத்த- உண்டு பண்ணிய சொத்துக்களை அனுபவிப்பவர்கள். அந்த முறையில் பார்த்தால் என் இசை ரசிகர்கள் எல்லாமே என்னுடைய வாரிசுகள்தான் அவர்கள்தான் தான் நான் உண்டு பண்ணிய இசை அனைத் தையும் அனுபவித்து வருகிறார்கள்.'
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

IMG_20170129_155338.jpg

ஜல்லிக்கட்டு – 1943-ஆம் வருடத்தின் தீபாவளி மலரின் அட்டைப்படமே ஜல்லிக்கட்டு பற்றிய அட்டைப்படம்! ஒரு காளையை அடக்கும் இளைஞர் அருகே மாலையுடன் காத்திருக்கும் ஒரு யுவதி…..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் 👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
nature....
May be an image of text that says 'mukund'
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1h  · 
 
பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் வசித்து வந்த பிரஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) அவர்கள் காலமானார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ் மரபு அறக்கட்டளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-சுபா
கலைஞர் தொலைக்காட்சிச் செய்தி
26 April 2021
திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்!
சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros). 1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 - 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்த பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்த பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த சுமார் 10 ஆயிரம் அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கிவிட்டார்.
அவரது தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் உலகளவில் புகழ்ப் பெற்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழிலக்கியத்திற்கும் பேரிழப்பாகும்.
திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஆஸ்திரேலிய மயிர்கொட்டி..!!!

June 27, 2021
 52
 

 

Screen-Shot-2021-06-27-at-10.57.49-am-780x470.webp

இன்னமும் மனித அறிவுக்கு எட்டாத பல இயற்கையின் அதிசயங்கள் உலகெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. மனிதனின் கண்டுபிடிப்புக்கள், எத்தனையோ உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களை – பயன்களை – இயல்புகளை வெளிக்கொண்டுவந்திருந்தாலும் இன்னமும் வெளிவராத அதிசயங்கள் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.

அந்தவகையில், ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து காடுகளிலுள்ள கொடிய மயிர்கொட்டி குடும்பத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய நஞ்சு, பல மருத்துவ தயாரிப்புக்களுக்கு பயன்படக்கூடியது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 59 வகையான வித்தியாசமான குடும்பங்களை கொண்ட இந்த மயிர்கொட்டிகளிடமிருந்து 150 வகையான நஞ்சுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நஞ்சுத்திரவத்தினை மூலப்பொருளாகக்கொண்டு பக்டீரியா அழிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கலாம், கொடிய கிருமி நாசினிகளை தயாரிக்கலாம், இன்னும் பல தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.