Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27.🙏

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27/11/2021
15171031_397473473917431_776852171919193
 
15253537_397473713917407_594852761615090
 
15181213_397473747250737_878407394246924
 
May be an image of flower and nature
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15.07.1991இல் ஆனையிறவில் மரணித்த மாவீரர் கப்டன் வானதி (பத்மசோதி சண்முகநாதபிள்ளை) எழுதிய கவிதை.
 
எழுதாத கவிதை
எழுதுங்களேன்
நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்!
ஏராளம்
ஏராளம் எண்ணங்களை எழுத‌
எழுந்துவர முடியவில்லை.
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்து வர‌
என்னால் முடியவில்லை.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்.
ஆனால் என்
உணர்வுகள் சிதையாது.
உங்களை சிந்திக்க வைக்கும்.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
மீட்கப்பட்ட எம் மண்ணில்
எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால்
அவை உங்கள்
கண்ணீர் அஞ்சலிக்காகவோ
அன்றேல் மலர் வளைய‌
மரியாதைக்காகவோ அல்ல.
எம் மண்ணின்
மறுவாழ்விற்கு
உங்கள் மன உறுதி
மகுடம் சூட்ட வேண்டும்
என்பதற்காகவே.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
அர்த்தமுள்ள‌
என் மரண‌த்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலா வருவீர்கள்.
அப்போ
எழுதாத என் கவிதை
உங்கள் முன் எழுந்து நிற்கும்.
என்னைத் தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள்
அரவணைத்தவர்கள்
அன்பு காட்டியவர்கள்
அத்தனை பேரும்
எழுதாது
எழுந்து நிற்கும்
என் கவிதைக்குள்
பாருங்கள்!
அங்கே நான் மட்டுமல்ல‌
என்னுடன்
அத்தனை மாவீரர்களும்
சந்தோஷமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்.
 
எழுத்து: மாவீரர் கப்டன் வானதி
May be an image of 1 person and standing
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Snow day in Toronto 28/11/2021
262305382_10226024619898195_573738051508
 
  • கருத்துக்கள உறவுகள்
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்…
1. யாராவது டைம் கேட்டா செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் ).
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும் பேனா கையில கிடைச்சா அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க.
3. ஆப்பிள் ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க ( கண்டிப்பா கேச்-ஐ மிஸ் பண்ணுவாங்க ).
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க. “அஞ்சே நிமிஷத்துலரெடி ஆயிடுவேன்” இந்த டயலாக் சொல்லுவாங்க.
5. நண்பனை-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க.
6. ” உன்னாலே உன்னாலே ” இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
7. டி.வி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க ” ஏன்டா லெக் சைடு-ல பந்து போடுற ” இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா மறந்துட்டு வந்துடுவாங்க (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க அது வேறவிஷயம் ).
9. திடீர்ன்னு வாக்கிங் உடற்பயிற்சி யோகா பண்ண ஆரம்பிப்பாங்க எல்லாம் 4 நாளைக்கு தான்.
10. குழந்தைகளுக்கு ஹோம்வர்க் சொல்லிக்குடுக்கசொன்னா எஸ்கேப் ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் ).
பின் குறிப்பு : இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்.
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அன்புத்தம்பி said:

உங்களின் அனுபவம்தானே அப்படியே வாங்கிய ஏச்சுகள் எறிகளையும் வெட்கத்தைப் பாராமல் எடுத்து விடுறது......!  

😂 😂 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

உங்களின் அனுபவம்தானே அப்படியே வாங்கிய ஏச்சுகள் எறிகளையும் வெட்கத்தைப் பாராமல் எடுத்து விடுறது......!  

😂 😂 

என்ன சுவி ,இப்புடி உண்மையா போட்டு உடைச்சுப்புட்டிங்க,
வாட்சப் குறுப்பில வந்தது,,,
முகநூலில் சுட்டது என்று ,,,நான் சொல்லலையே ,
இது நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,பக்கத்து வீட்டுக்கு ,,அருகிலே ஒருவீட்டில நடந்ததாம்,இந்த வாட்ச்சப் குறூப் ..முகநூல் வர்றதுக்கு முன்னை

நான் ரொம்ப நல்லவனுங்க...🤭😄

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அன்புத்தம்பி said:

வேண்டாம் அன்பு இதோட நிப்பாட்டுங்கோ, என்ர  வீடுவரைக்கும் வந்திட்டுது.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருட இறுதி மாதத்தின் முதலாம் திகதி 01/12/2021 👋✍️.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலக மாற்றுத்திறனாளிகள் நாள் ...
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை
உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
 
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
 
பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழோடு பெரிய மாரடிப்பா இருக்கிறது..ஒரு பக்கமும் ஒழுங்காக பாக்க ஏலாதிருக்கிறது....என்ன செய்ய..✍️👋

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு முதியவர் இறந்து போன தனது மனைவிக்காக எழுதும் கடிதம்❤️
👉தள்ளாத வயதில் உன் நினைவுகளை தவிர எந்த ஒரு ஆதரவும் இன்றி நிற்கிறது மனது
👉இத்தனை வருடங்கள் என்னுடன் நீ இருந்த போது பல நாட்கள் உன்னை' நான் கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் கொண்டாடவில்லை
👉எனக்காக நீ செய்யும் சமையலை ஒருநாளாவது மனம் திறந்து பாரட்டி இருக்க வேண்டும்
👉என்றாவது ஒரு நாள் உனக்காக நான் சமையல் செய்து அதை என் கையலே ஊட்டி விட்டு உன் புன்னகையை ரசித்து இருக்க வேண்டும்
👉வாரத்தில் ஒருநாள் விடுமுறையிலாவது மொபைலையும் தொலைக்காட்சியையும் அனைத்து உனக்காக நேரத்தை செலவு செய்து இருக்க வேண்டும்
👉என்றாவது ஒரு நாளாவது எனது பணித்தளத்தின் கோபத்தை அங்கேயே விட்டுவிட்டு என் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் உன்னிடம் புன்னகையை மலர விட்டிருக்க வேண்டும்
👉நீ விரும்பி கேட்காத போதும் நானே விரும்பி உனக்கு பிடித்த புடவைகளை பரிசளித்து இருக்கலாம்
👉எனக்காக உணவு பரிமாறும் போது நீ சாப்பிட்டாயா என்ற எனது ஒற்றை கேள்வியில் உன் பூரித்த முகத்தை கண்டு இருக்கலாம் அல்லது நீயும் வா என்னுடன் அமர்ந்து சாப்பிடு என்று சொல்லி இருக்கலாம்
👉உனக்கு உடல் நிலை சரியில்லாத நேரங்களில் பணிக்கு முன்னுரிமை தராமல் உனக்கு முன்னுரிமை தந்து நான் உனக்கு அருகிலேயே இருந்து இருக்கலாம்
👉நீ உன்னுடைய உடல் நலத்தை பற்றி யோசிக்காமல் பிள்ளைகள் மற்றும் என்னையும் கவனிப்பதை கண்டு நான் உன்னை கவனித்து இருக்கலாம்
👉அவ்வாறு நான் கவனித்து இருந்தால் இன்று நீ என்னோடு இருந்துருப்பாய்
👉தாரமே நீ என்னோடு இருந்த காலங்களில் கம்பீரமாய் வாழ்ந்தேன்
👉ஆனால் நீ இன்று இல்லாத காலங்களில் மனதளவிலும் உடலளவிலும் அடிக்கடி தடுமாறி விழுகிறேன்
👉என்னை தூக்கி விட மூத்த மகனுக்கு நேரம் இல்லை
இளைய மகனுக்கு பொறுமையும் இல்லை
👉நீ இல்லாத தருணங்களில் தான் நீ என்னுள் பாதி என்பதை உணர்கிறேன் தாரமே நான் உன்னை பல காலங்களில் கொண்டாடியும் கவனித்தும் இருக்க வேண்டும் என்னை மன்னித்து விடு..!
இருக்கும் போதே வாழ்ந்து (கொண்டாடி விடுங்கள் இழந்து பின்பு வருந்தி எந்த ஒரு பயனும் இல்லை..!❤️
  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2021 at 23:55, யாயினி said:
உலக மாற்றுத்திறனாளிகள் நாள் ...
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை
உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
 
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
 
பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதில் இருக்கும் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள்/சிறப்புத் தேவையுடையோர் என்று போட்டிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இதில் இருக்கும் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள்/சிறப்புத் தேவையுடையோர் என்று போட்டிருக்கலாம்.

உண்மை ஏற்றுக் கொள்கிறேன்.கவனிக்க தவறி விட்டேன் மன்னிக்கவும்!

முக புத்தகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பகிரப்பட்ட தகவல்கள், மீளவும் அதை அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து விட்டு அப்படியே போய்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’@211986245 ShareChat 1985 ஆனந்த விகடன்-ல்: விதவை என்று எழுதுகிறேன் எழுத்தில் கூட பொட்டு வைக்க முடியவில்லை... இந்த சமுதாயம் மட்டுமல்ல தமிழும் எங்களை வஞ்சிக்கிறது:- கலைஞர்: விதவை என்பது வடச்சொல்... தமிழில் கைம்பெண் என்று எழுதி பாருங்கள் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்... தமிழ் வஞ்சிக்காது...! வாழ வைக்கும்...!! படித்ததில் பிடித்தது TON Google Play’

  • கருத்துக்கள உறவுகள்
🐀எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த
ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும்
விலை உயர்ந்த வைரம் அது..
வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து,
எப்படியாவது அந்த 🐀எலியை ஷூட்🔫
செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை
எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக்
கொண்டான்..
🐀எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன்🔫
வந்துவிட்டான், எலியை🐀 ஷூட் செய்ய..
எலி🐀 அங்கே இங்கேயென்று போக்குக்
காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள்🐁🐀🐀🐁 ஒன்று கூடிவிட்டன..
அந்த நூற்றுக்கணக்கான 🐁🐁🐁🐁🐀🐀🐀 எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த🐁 எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out..
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை
எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு
கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான்.
"ஆமா...! அந்த எலி🐀 மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே
இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம்
கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?
அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
"இப்படித்தான்.. பலபேர் திடீர்ப்
பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட
நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு
மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே..
ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.
உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில்
வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி
இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை
செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!
அவள் மானுடப் பெண் என்றாலும் ,
அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன்.
அவர் மணந்த பெண் நல்லவள் தான்.
என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.
மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார்.
ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,
மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.
மகனே..
நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.
மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.
எப்படித் தெரியுமா...?
ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன்.
உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.
நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே.
நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.
எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,
தைரியமாக மருந்து கொடு.
அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.
அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.
மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,
மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.
அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.
ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,
எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.
இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்.
யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.
இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,
அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,
ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.
அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.
எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.
வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.
ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,
ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.
இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.
எப்படி அவரை விரட்டுவது..?
பளிச்சென்று யோசனை பிறந்தது.
வாசல் பக்கம் பார்த்து கத்தினான்.
அம்மா....!!
அப்பா உள்ளே இருக்கார்.
ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!
இங்க இருக்கார்.....!
என்று அலறினான்....!
அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!
கட்டுனது எமனாயிருந்தாலும்,
இல்லை எவனாயிருந்தாலும் ,,,,
பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!!
 
  • கருத்துக்கள உறவுகள்
கணவன்: ஓய்.. இங்க பாரு,
கொஞ்சம் திரும்பி படு..
மனைவி: அதெல்லாம் முடியாது,
எனக்கு தூக்கம் வருது...
கணவன்: இப்போ நான் என்ன கேட்டேன் ?
உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
மனைவி: அதுக்கு இப்போ தான் நேரம் கிடைச்சாதா? பேசாம தூங்குறிங்களா இல்லையா..
கணவன்: வேற எப்போ தான் உன்கிட்ட பேசுறது?
மனைவி: நான் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும் . என்ன தூங்க விடுங்க..
கணவன்: இல்லடி கொஞ்சம் திரும்பி தான் பாரேன்.
மனைவி: உங்களை பற்றி எனக்கு தெரியும்,
நான் ஒன்னும் மெஷின் இல்ல, சரியா?
இப்போ தூங்குறிங்களா இல்லையா?
கணவன்: என்னடி இப்படி பேசுற,
உனக்கு என்னதான் அப்படி பிரச்சனை?
மனைவி: எப்படிங்க இப்படி வாய் கூசாம கேக்க முடியுது?
என்னை கலயாணம் பண்ணிக்கிட்டதிலிருந்து
அப்படி என்ன பெருசா பண்ணிட்டிங்க?
எல்லோர் மாதிரியும் தினமும் வெளிய கூட்டிட்டு போங்கன்னு அடம் பிடிக்கிறேனா?
எனக்கு அது இது வேணும்ன்னா தினமுமா கேக்குறேன்?
வருஷத்துக்கு ஒரு நாள் தீபாவளி வருதுனு தானே கேக்குறேன்.
அதைக்கூட வாங்கி தர மாட்டிங்களா?
நானும் மனுஷி தான் புரிஞ்சுக்கோங்க..
சத்தியமாக அவனிடம் இதற்கு விடை இல்லை..
கணவன்: சரி தூங்கு..
மனைவி: நாய் மாதிரி நான் கத்திட்டுருக்கேன்..
தூங்க சொல்றிங்களா?
கணவன்: இப்போ என்னதாண்டி என்ன பண்ண சொல்ற?
நான் தனியார் கம்பெனியில் மாச சம்பளம் வாங்குறவன்.
பிசினஸ் பண்ணல!
எப்போ வேலை போகும்னே தெரியாது.
வெளியே போகச் சொன்னா வர வேண்டியது தான்.
ஒரு மாசம் என் சம்பளம் இல்லைனா என்ன ஆகும் தெரியுமா?
நான் என்ன அப்படி பெருசா தப்பு பண்ணிட்டேன்?
பைக் வேண்டாம்
பையன வச்சுட்டு வெளியே போக முடியலைன்னு சொன்ன..
லோன் போட்டு கார் வாங்குனேன்.
வாடகை வீட்ல இருந்தா உங்க வீட்ல மதிக்க மாட்டாங்கன்னு சொன்ன..
சரி இருந்த பணத்தையெல்லாம் போட்டு இந்த பிளாட் வாங்கினேன்.
இதுக்கு மேல
அப்பா.. அம்மா.. ஹாஸ்பிடல் செலவு ..
வீட்டு செலவு பிள்ளைகள் படிப்பு இதையும் பார்க்கணும்.
ஒரு மாசம் லோன்க்கு மட்டும் எவ்வளோ போகுதுன்னு தெரியுமா?
என்னைக்காவது கேட்டிருக்கியா?
இல்லை என்ன பண்ண போறீங்கன்னு ஏதும் டிஸ்கஸ் பண்ணிருக்கியா?
ஒன்னுமே இல்ல.
நானும் நீ கஷ்டப்படுவேன்னு ஏதும் சொல்றது இல்ல.
சம்பளம் போட்ட மறுநாளே தீர்ந்துபோய் கடன் வாங்கவேண்டியதாய் இருக்கு ..
உனக்கு எப்படி என் கஷ்டம் புரியும்!
உங்க வீட்டில் ஏதும் குடுத்து உதவ போறாங்களா?
நான் தான எல்லாத்தையும் பார்க்கணும்.
தீபாவளிக்கு மட்டுமல்ல எப்பவுமே நீ கேட்டதையெல்லாம் வாங்கி தரணும்னு எனக்கும் ஆசை தான்.
உன்னையும் பிள்ளைகளையும் அடிக்கடி வெளியே கூட்டிட்டு போகணும்னு எவ்வளோ ஆசை தெரியுமா?
எனக்கும் ஆசை இருக்காதா?
நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு.
நம்ம பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு சேர்த்து வைக்கணும்.
நல்லா படிக்க வைக்கணும்.
ஒரு நல்ல அப்பாவா இருக்கணும்னு எவளோ கஷ்டப்படறேன் தெரியுமா?
பெத்தவங்களுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்.
கட்டிய மனைவியா சந்தோசமா வச்சிக்கணும்னு எவ்வளோ போராடுறேன் தெரியுமா ?
இப்போது அவளிடம் விடை இல்லை..
இதில் யாரை தப்பு சொல்வது?
யார் மீது குற்றம் சுமத்துவது?
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் கிணற்றில் தள்ளிவிடப்பட்டு அவர்களாகவே நீச்சல் கற்றுகொள்கிறார்கள்.
இதில் கரை சேர்வோரும் உண்டு.
மூச்சு முட்டி மூழ்குவோரும் உண்டு.
ஒரு குடும்பத்தில் தனக்கானவர்களுக்காக சின்ன சின்ன தியாகம் செய்து வாழ்வது இன்பம் என்பதை கணவன் மனைவி இருவரும் உணரும் போதுதான்
அது இல்லறம்.
இல்லையேல்
அது துறவறம்...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இன்று மகாகவியின் 139 ஆவது ஜனன தினம்!
 
   நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?1  விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இன்று மகாகவியின் 199 ஆவது ஜனன தினம்

இது 139 ஆவது பிறந்த நாள் என்பதுதான் சரி.  அவர் 1882 இல் பிறந்தார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

இது 139 ஆவது பிறந்த நாள் என்பதுதான் சரி.  அவர் 1882 இல் பிறந்தார்!

தவறை திருத்தியமைக்கு மிகவும் நன்றி வாலி.👋 சரி செய்து விட்டேன். வருகைக்கும் நன்றி.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார். 88 வயதான அவர், நேற்றைய தினம் (சனிக்கிழமை -11) தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
 
Former Toronto Mayor Mel Lastman has died.
He passed away today (Saturday - 11) afternoon at his home.
 
May be an image of 1 person
 
  • கருத்துக்கள உறவுகள்

80864174_2493051994125543_81531952332789

ஒவ்வொரு ஆண்டும் அளவுகளில் வளரும் நந்தி சிற்பம் -😲😳😯🙏🙏🙏
நந்தி (ஹோலி புல்) அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது

கோவிலின் பெயர்: ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்
அருகிலுள்ள நகரங்கள் - கர்னூல் 85 கி.மீ, பெங்களூர் 335 கி.மீ.
இடம்: கர்னூல், ஆந்திரா

கோயில் வரலாறு

இந்த கோவிலை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹாரா புக்க ராயாவால் கட்டப்பட்டது. இது வைணவ மரபுகளுக்கு ஏற்ப கட்டப்பட்டது.

வளர்ந்து வரும் நந்தி

கோயிலுக்கு முன்னால் உள்ள நந்தி சிலை தொடர்ந்து அதன் அளவை அதிகரித்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிலை செதுக்கப்பட்ட பாறை வகை அதனுடன் தொடர்புடைய அல்லது வளர்ந்து வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு 20 ஆண்டுகளிலும் சிலை 1 அங்குலமாக அதிகரிக்கிறது என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சிலையை உருவாக்க பயன்படும் பாறை வளர்ந்து வரும் தன்மையை வெளிப்படுத்துகிறது என்று பரிசோதனை கூறுகிறது.

*கடந்த காலங்களில் மக்கள் அதைச் சுற்றி பிரதாக்ஷினாக்களை (சுற்றுகள்) செய்தார்கள் என்று கூறப்படுகிறது. நந்தியின் அளவு அதிகரித்துள்ளதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணையும் அகற்றியுள்ளனர்* .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.