Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10575250_804961559537738_340059000561427

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே?  :unsure:

 

அது சுட்டிபுரம்.அப்ப விக்ரர்ஸ் படம் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.ஆனால் ஆண்டு கொஞ்சம் இடிக்குது.80 என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சுட்டிபுரம்.அப்ப விக்ரர்ஸ் படம் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.ஆனால் ஆண்டு கொஞ்சம் இடிக்குது.80 என்று நினைக்கிறேன்.

 

எனது தந்தையாரிமும்  கேட்டு அறிந்து கொண்ட முறையில்  நீங்கள் சொல்வது சரி சுவைப்பிரியன்..மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் பாடல்களை பார்த்து ரசிக்கலாம்...

 

 

 

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான காலை வணக்கங்கள்...அனைத்து உறவுகளுக்கும் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்.இந்தப் பக்கத்தை எந்த,எந்த நாடுகளிலிருந்து புரட்டிப் பார்க்கிறீர்களோ அந்த நேரப்படி வணகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இன்று

 

10665825_10152315124467944_2902471159915

 

http://www.youtube.com/watch?v=q_X-9S3TvyI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று எட்டயப் புரத்துக்கவி என்று அழைக்கபடும் மகாகவி சுப்பிரமணியபாரதியாரின் 93 ஆவது நினைவு தினம்.

10603532_805352092832018_821607936038537

 

செப்டம்பர் 11, 2014 - மகாகவி சுப்பிரமணிய #பாரதியார் அவர்களின் 93வது நினைவுதினம்

ஒரு முறை காந்தியடிகள் திருவல்லிக்கேணியில் வெள்ளையருக்கு எதிரான சுதந்திர சொற்பொழிவு ஆற்றினாராம்.

அது சம்பந்தமாக காந்தியடிகளுக்கு கடிதம் எழுதிய பாரதி:

"காந்திஜி அவர்களே வெள்ளையருக்கெதிரான உங்கள் சொற்பொழிவு சிறப்பாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நீங்கள் ஆற்றிய உரையை ஆங்கிலத்திலேயே ஆற்றியது தான் எனது வருத்தம். ஒன்று நீங்கள் உங்கள் உரையை உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் ஆற்றியிருக்க வேண்டும் இல்லையென்றால் இந்திய பிராந்திய மொழிகள் ஏதாவது ஒன்றில் ஆற்றியிருக்க வேண்டும்" என்று ஆங்கிலத்திலேயே எழுதினாராம்.

அதற்கு பதில் எழுதிய காந்தியடிகள்:

"ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். தவறுக்கு மன்னியுங்கள். அதெல்லாம் சரி பாரதி நீங்கள் மட்டும் எனக்கு எழுதும் கடிதத்தை எப்படி ஆங்கிலத்தில் எழுதலாம்? உங்கள் வாதத்தின்படி உங்கள் தாய்மொழியான தமிழிழ் அல்லவா எழுதி இருக்க வேண்டும்?" என்று எழுதினாராம்.

அதற்கு பாரதி என்ன பதில் எழுதினார் தெரியுமா?

"ஒருவரை மனம் நோகடிக்கும் விதமாக எழுதுவது தமிழர் பண்பாடல்ல. அதனால் தான் உங்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை நான் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதினேன்" என்று எழுதினாராம்.

 


பாரதியாரின் அபூர்வ புகைப்படம்...

1920px-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE


பாரதியார் கையொப்பம்:-Subramanya_Bharathi_Signature.jpg

 

பாரதியார் தன் குடும்பத்துடன்.

 

396783_266849836750234_326116240_n.jpg?o

10622970_470160019793684_543962109652707

 

எட்டயபுரம் அரண்மனை:
இளம் பாரதியின் அருட்கவிதைகள் முதன்
முதலாக ரசிக்கப்பட்ட இடம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு மேவும் விரல்

நான் உனக்கு ...

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10626870_809528072412470_301923875801312

 

 

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் யாரை நேசித்ததால்

ஓயாமல் சிணுங்கிக்

கொண்டே இருக்கிறது.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவருட்பா

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவுவேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று

பேசுவார் உறவுகலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்களைவிட, தண்டிக்க பட்டவர்கள்தான் அதிகம்.ம்ம்ம்..உண்மை தான்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்ப்பதுடன் தங்கள் கருத்துக்களையும், விருப்பு புள்ளிகளையும் இட்டு  தொடர்ந்து எடுத்து செல்ல உதவும் அத்தனை உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1893 - சிகாகோவில் இடம்பெற்ற முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமிவிவேகானந்தர்  இந்து சமயத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகம் செய்தார்.

100px-Swami_Vivekananda_Jaipur.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்களைவிட, தண்டிக்க பட்டவர்கள்தான் அதிகம்.ம்ம்ம்..உண்மை தான்.

 

கடவுள் பாவம் அவர் ஒன்றும் செய்யிறேல்ல.. :D சனம் கொள்ளுப்படுறதுக்கு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ன செய்ய முடியும்?! :o  :D

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பாவம் அவர் ஒன்றும் செய்யிறேல்ல.. :D சனம் கொள்ளுப்படுறதுக்கு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ன செய்ய முடியும்?! :o  :D

 

கடவுள் பாவம் அவர் ஒன்றும் செய்யிறேல்ல..  :D சனம் கொள்ளுப்படுறதுக்கு  மனிதனாலேயே  உருவாக்கப்பட்ட :(  

ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ன செய்ய முடியும்?! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பாவம் அவர் ஒன்றும் செய்யிறேல்ல.. :D சனம் கொள்ளுப்படுறதுக்கு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ன செய்ய முடியும்?! :o  :D

 

அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. இதில் சொல்லப்பட்டு இருப்பதை நீங்கள் சாதரண பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு இருக்கிறீர்கள்...என் அறிவுக்கு எட்டியவரையில் இதில் சொல்லப் பட்டு இருக்கும் கருத்துப் பற்றி பிச்சு,பிச்சும் எழுத முடிய இல்ல.சில இடங்களில் பிள்ளை வளர்ந்த பின் எடுக்க கூடிய முடிவை பெற்றோர் முன்,பின் யோசிக்காமல் வைத்தியர்கள் கையில் விடுவதனால் ஏதும் அறியாமல் பிறந்து ஆயுள் தண்டனைகள் சிலவற்றை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்..கடவுளால் ஆசீர் வதிக்கப்பட்டவர்களை விட,தண்டிக்கபட்டவர்களே அதிகம்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சுட்டிபுரம்.அப்ப விக்ரர்ஸ் படம் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.ஆனால் ஆண்டு கொஞ்சம் இடிக்குது.80 என்று நினைக்கிறேன்.

 

இலங்கைக்கு முதன்முதலாக வந்த தென்னிந்திய பாட்டுக்காரர் சீர்காழி கோவிந்தராஜன் ஆவார்.

அவர் சிறிமாவின் கடூழிய ஆட்சிக்காலத்தில் வந்து  சுட்டிபுரம் அம்மனுக்காக இன்னிசை நடாத்தியவர்.

தொலைக்காட்சியே வராத காலத்தில் விக்ரர் வீடியோ வர சந்தர்ப்பமேயில்லை. தொலைக்காட்சியும் அதி நவீனங்களும் இலங்கைக்குள் புகுந்தது ஜே.ஆரின் வருகைக்குப் பின்........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய நாளாக அமைய எனது பக்கம் நல் வாழ்த்துக்களை தெரிவித்து செல்கிறது.

 

10610670_544397242371121_578585381626992

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தென் இந்திய பின்னணி பாடகி ஸ்வர்ணலதா அவர்களது நினைவு தினம்.

 

Swarnalatha.jpg10636078_10152245585176637_2960199120696

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கவிஞர் கண்ணதாசன்
சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட
ஒருவர் , நேராக அவரிடம் சென்றார்.
"காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம்
நாடு சுதந்திரம் அடைவதற்காக
பாடுபட்டவர்கள் . அவர்கள்
சுயசரிதை எழுதியது சரி. நீங்கள்
எதற்காக எழுதுகிறீர்கள் '
என்று கேட்டார் .
இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்
எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு.
ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக ,
காந்தி ,
நேரு போன்றவர்கள் ஒருவர்
எப்படி வாழவேண்டும் என்பதற்காக
எழுதினார்கள் .
ஒருவர்
எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான்
எழுதுகிறேன் ' என்றார்.
--- ஒரு விழாவில்
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கூறியது
10610547_469883996487953_561339134036477
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்டவர் எவர் அய்யா..பிரியா சகோதரிகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் வரும் 27ம் திகதி நடை பெறவுள்ள நகரபிதாவிற்கான போட்டியிலிருந்து றொப்போர்ட் அவர்கள் விலகல்.கடந்த சில நாட்களாக சுகவீனம் காரணமாக  றொப்போர்ட் அவர்கள் மருத்துவமைனயில் அனுமதிக்கபட்டுட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்..அதன் பின்னரான மாற்றமாக றொப்போர்ட் அவர்கள் நகரபிதா பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10408631_863891336957155_381815767103095


10178069_1478139939109227_10205499346707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

 

xfw87l.jpg

 

பெரும் பாலும் புதிது,புதிதாக தொலைபேசிகளை அறிமுகப்டுத்தும் தொலைபேசி கொம்பனிகளும் மக்களை,வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்த்து அடிக்கடி நூற்றுக்கணக்காக,ஆயிரக்கணக்காக பணத்தை கொட்டும் பெரும் பணியை செய்ய வைக்கின்றன..தொலைபேசிப் பாவனையால் நம்மையும் உண்டு தீமையும் உண்டு...ஒரு டாலரை உழைப்பதற்கு எவ்வளவு கஸ்ரப்படுகின்றோம்..அதே நேரம் தொலைபேசி நிறுவனங்கள் வெளிப்படுத்தும் நவீன ரக தொலைபேசிகளைக் கண்டதும் ஓடிப் போய் வாங்கிக் கொள்கிறோம்..ஏன் ஒரு நாளையிலயே எத்தனையோ லட்சம்,மில்லியன் டாலர்களை ஓரே நாளில் ஈட்டும் சம்பவங்களும் நடந்திருக்கிறது..காரணம் மக்களின் அதிக பட்ட ஆசைகள் எப்போ,எப்போ என்று காத்திருந்து வாங்குவது..மற்றவர்களின் விருப்புக்களை நாங்கள் தடுக்க ஏலாது.

 

தரம் வாய்ந்த உயர்ந்த ரக தொலைபேசி இல்லை வாங்கும் என்றும் சொன்னாலும் இழுத்தடிச்சுக் கொண்டு திரிகிற நட்புக்கள் பழகுபவர்களைக் கண்டால் கூட சிலருக்கு பிடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் குட் பாய் சொல்லி விட்டு போற கால கட்டமாகிட்டு...ஏன் ஒரு நல்ல போணாக வாங்கலாம் தானே அப்படி என்று சொல்லும் போது அக்கறையில் சொல்கிறார்கள் என்று மனம் நினைக்கும். ஆனால் நாம் எதிர் பார்க்காதவற்றுக்கு எல்லாம் பிரச்சனை பண்ணி,சண்டை போட்டு நமக்கு தெரியாமலே எத்தனையோ விடையங்களை செய்துட்டு போய் நிற்கும் போது தான் அட நாமள் சுத்த வேஸ்டாக அவர்களுக்கு பிரியோசனமற்றவர்களாக தெரிந்து இருக்கிறோம். அதனால் கை விட்டுப் போனார்கள் என்று நினைச்சு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இருக்கிறது..சில இயலாமைகள் மற்றவர்களின் வலிகள்  கூட நட்பை அன்பாக பழகுபவர்களை திசை திருப்பிடும்..

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.