Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13587_619771274730317_1177750496_n.jpg?o

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குமேல் யாரையும் 

தூக்கி வைத்துக் கொள்ளாதீர்கள் ...

தூக்கி எறிய நினைக்கும் போது. 

கிடைக்கும் வலியை எதைக்கொண்டும் சரி செய்ய இயலாது ...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11100868_945791115460987_474315834232973

 

இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இன்று அன்னை பூபதியின் 27ம் ஆண்டு  நினைவு நாள்.... தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.
 
11066619_967658559920228_838857975398175

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11029908_574875662614980_445805194548382

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10985192_963544377019670_487455000844188

 

 

374993_610220415662879_1588868386_n.jpg?

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11138653_992794710739646_636842296150796

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

964403_614391301912457_824751654_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tea-293x150.jpg

 

கனடா-ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் திங்கள்கிழமை பொது உயர்தர பாடசாலைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்ராறியோ இரண்டாம் நிலை பாடசாலை ஆசிரியர்களின் கூட்டமைப்பு, அரசாங்கம் மற்றும் ஒன்ராறியோ பொது பாடசாலை சபை ஆகிய வர்களிற்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் முடிவை பொறுத்து ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் ஏற்படுமானால் பாடசாலைகள் மூடப்படலாம்.

ஒன்ராறியோ உயர் பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதிப்படுத்தும் தொழிற்சங்கம் தங்கள் பேரம் பேசும் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்வாகத்தினரை வலியுறுத்துகின்றனர்.

 

canadamirror.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அருமையான பாடல்.

அருமையான பாடல்.

எனக்கும் மிகவும் பிடிக்கும். நன்றி இணைப்பிற்கு்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்க்க நேரம் தான் இல்லை. தொடருங்கள் யாயினி. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rainy Morning..

 

271208_original.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 21, 2015 - பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 51 வது நினைவு தினம்

 

1619606_727563300610898_8950099347510119

 

பாரதிதாசன் கனவை கலைஞர் நிறைவேற்றினார் 

--------------------------------------------------------------------------------

புரட்சிக்கவி பாரதிதாசன் கடைசிக் காலத்தில் இரண்டு கனவுகள் வைத்திருந்தார்....1-} “பாண்டியன பரிசு” காப்பியத்தை திரைப்படமாக எடுப்பது ......2-} பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுப்பது...... பாண்டியன்பரிசு காப்பியத்தை படமாக எடுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல..... அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்... திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில் பெயர்க்க வேண்டும்.... நூலகம் சார்பாக பதிப்பகம் தொடங்க வேண்டும்... பல நலிந்த எழுத்தாளர் கவிஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்....இதற்காக சிவாஜி உட்பட பல இயக்குனர்களை சந்தித்து ஏற்பாடாகும் போது அது நிறைவேறாமலே உலகவாழ்வை முடித்துக் கொண்டார்.

---------இரண்டாவது கனவு பாரதி வாழ்வை படமாக்குவது கதை எட்டையபுர சமஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது.. .சமஸ்தானத்தை செக் நாட்டு தமிழறிஞர் கமில்ஸ்வலபில் என்பவர் பார்வை இடுவதாகவும், பாரதி பற்றி கேட்கும் போது அருகிலிருக்கும் பாரதிதாசன் “பாரதி பிறப்பினிலே ஒரு புதுமையான நிகழ்ச்சி அடங்கி இருக்கிறது” என்று கூற ......”அது என்ன/” என்று அறிஞர் கேட்க .பாரதி வீட்டிலிருந்து “பிளாஸ் பேக்” உத்தியில் படம் துவங்குகிறது

-------இதுவும் நிறைவேறவில்லை ..இது குறித்தெல்லாம் ,ஈரோடு தமிழன்பன்,அவர்களுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதம் மூலம் அறியமுடிகிறது அதுதான் பாரதிதாசன் எழுதிய கடைசிக் கடிதம்[ 15/4/1964}. மற்றும் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் புரட்சிக் கவி பரிமாறிய உரையாடல் மூலமும் அறிய முடிகிறது.....{ஆதாரம் ..ய .மணிகண்டன் கட்டுரை . காக்கைச் சிறகினிலே .ஜனவரி 2012}.--------அவர் கனவு கலையவில்லை நூலகக் கனவை கலைஞர் நிறைவேற்றி விட்டார் . பாரதி வாழ்வை ஞான ராஜசேகர் படமாக்கிவிட்டார். . 

-

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1510590_766233023388350_974743177_n.jpg?

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

 

உங்கள் வரவுக்கு நன்றி..நீங்கள் கேட்கும் கேள்வி சற்றுக் குளப்பமாக இருக்கு... யாழின் விதிமுறைகளுக்கு  ஏற்ப நடந்து கொண்டால் நம்ம பாட்டுக்கு பக்கங்களை புரட்டிச் செல்லலாம்...என் அறிவுக்கு எட்டியவரையில் இது தான் புரிந்து கொண்டது...
 
மேலதிக தகவல்களுக்கு யாராச்சும் மட்டுறுத்தினர்மார் இந்தக் கேள்வியைப் பார்த்தால் பதில் எழுதி விடுங்கோ பிளீஸ்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது நாள் உண்ணாவிரத போராட்டம்

 

11169835_816985475022476_628283332690234

காலையில் 6 மணிக்கு வெளிக்கிட்டு 8 மணி வரை நல்லூரைச் சுற்றி இருந்த நண்பர்களை ஒன்றாக்கினோம் . மீடியாக்களில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன ,' எத்தனை மணிக்கு தொடங்குவீங்க ?' ஆனால் 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தோம் ,பஸ்களை ஒழுங்கு படுத்துவதில் இருந்த தாமதத்தினாலும் எங்களுக்கு 4 பஸ்கள் தேவைப் பட்டதாலும் இழுபறியுடன் ,நானே நேரில் சென்று எனது நண்பர்களையும் ஒன்றிணைத்து அழைத்து வர வேண்டியிருந்தது , 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம் ,ஏலவே ஆதியும் மற்றவர்களும் பேசியிருந்தார்கள் ,எங்களது கோரிக்கைகளை நான் வாசித்தேன் ,பின்னர் அந்த நொடியிலிருந்து நீருமற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தோம் ,மருத்துவ பீட மாணவர்களும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொண்டனர் , 800- 1000 வரையானவர்கள் பங்கு பற்றியிருந்தனர் .

நீருமற்ற உண்ணாவிரதத்தை நல்லூர் முன்றலில் ஆரம்பித்து மொத்தமாக 8 பேர் இருந்தோம் ஒருவரை தவிர மற்றவர்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் .பின்னர் தான் ஒரு பெண் இணைந்து கொண்டார் . மொத்தமாக 9 பேர் ,8 பேரில் 2 பேர் சுன்னாகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் . மற்றயவர்கள் யாழ்ப்பாணம் மத்தி . பேரணி முடிந்து திரும்பியவர்களில் பெரும்பானமையானவர்கள் மதியம் 2 மணி வரை எங்களோடு நின்றார்கள் .ஊடகங்கள் செவ்விகளையும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டிருந்தன .

இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் ஊடகங்கள் பதிவு செய்யவில்லை ,மதியம் ஒரு மணி வரை அடையாள உண்ணாவிரதத்தில் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் எங்களோடு இருந்து பங்கு பற்றினர் .

அதை எந்த செய்தியிலும் நான் பார்க்கவில்லை ,எங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூட செய்தியாக போடும் சில ஊடகங்கள் இதைக் கவனிக்கத் தவறிவிட்டன .

மேலும் இன்னொரு பெண்ணும் இரண்டு நாள் பகலும் எங்களுடன் உண்ணாவிரதத்தில் இருந்தார் ,மொத்தம் இரண்டு பெண்கள் . மாலை வரை தொடர்ச்சியாக மாணவர்கள் நின்றிருந்தனர் .இடையில் முதலாவதாக அரசாங்க அதிபரின் செயலாளர் வந்தார் ,பின் அரசாங்க அதிபர் வந்தார் ,அதற்கு முன்னமே சிவாஜி லிங்கம் வந்திருந்தார் . இப்படியாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன . அமைச்சர் ப.டெனீஸ்வரனும் குருகுலராஜாவும் வந்தனர் , பின் இரவு 8.30 மணியளவில் முதலமைச்சரும் வேறு சில அமைச்சர்களும் வந்திருந்தனர் . அதில் இடம்பெற்ற சில முக்கிய குறிப்புக்களை தருகிறேன் ,அந்த இடம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது .

1 - ' என்ன தம்பி மார் காலமையில இருந்து தண்ணி கூட குடிக்காம இருக்கிறியள் ' என்று கேட்டார் ,நாங்கள் விஷயத்துக்கு வரச் சொன்னோம் ,' நான் செய்யக் கூடிய எல்லாத்தையும் செய்யிறன் ,நீங்கள் இந்த இத ( உண்ணாவிரதம் என்பது உடனடியாக அவரது வாய்க்குள் வரவில்லை ) விடுங்கோ 'என்றார் .

ஒருவர் பிரச்சினையை அணுகும் முறை என்பது அதை தீர்ப்பதில் செல்வாக்குச் செலுத்தும் . முதலமைச்சரின் அணுகுமுறை தான் முதலாவது விரிசல் விழுந்த பகுதி .

2- மருத்துவர்கள் இலங்கை நீர்வழங்கல் அதிகார சபையின் அறிக்கையை காட்டி பேசிய போது ,இது எனக்கு தெரியாது ,இந்த ரிபோர்ட் ஐ தாங்கோ என்று கேட்டார் ,அதற்கு இந்த ரிபோர்ட் ஒரு மாதத்திற்கு முன்னமே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு கையளிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப் பட்டது . இதனாலும் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டது . முதலமைச்சருக்கு ஏன் விடயங்கள் இன்னும் தெளிவாக்கப் படவில்லை என்பது கேள்வி .ஏன் அந்த விடயங்களை தெரிந்து கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லைஎன்பதுவும் இன்னொரு கேள்வி .

3 - அந்த நேரத்தில் குறுக்கிட்ட நான் ( உண்ணாவிரதிகளில் முதலமைச்சருடன் பேசியது நான் மட்டுமே ,வேறு எந்த உண்ணாவிரதியும் அவருடன் பேசவில்லை ) ' விஷயத்துக்கு வருவோம் " இருக்கு இல்லை என்ற இரண்டு பதில்களை தவிர மூன்றாவதாக என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டேன் , 12 திகதி வரை தண்ணீர் தருவம் .அந்த தினம் வரை பொறுங்கோ என்று சொன்னார் . பிறகு , இவ்வாறாக நாங்கள் 100 பெடியள் போய் பார்த்தனாங்கள் ,சனம் கிணற்று தண்ணியக் குடிக்குது , என்றேன் ( மாகாண சபையின் அறிக்கையைத் தொடர்ந்தே ,மக்கள் அந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர் ) அவர்கள் அவர்களுடைய கிணற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியுமென்றால் குடிக்கட்டும் ,நான் ஒண்டும் செய்யேலா " என்றார் . எனக்கு கோபம் வந்து விட்டது .மிக அலட்சியமான ,பொறுப்பற்ற பதில் . மக்கள் உங்களுடைய அறிக்கையை பார்த்து அந்த நீரை பயன்படுத்துகின்றனர் , அனால் அதை தடுக்க தன்னால் முடியாது என்பது என்ன மாதிரியான பதில் . பின் அவருடன் உரையாடுவதை நிறுத்தி விட்டேன் , இதற்கு மேல் எந்த அடிப்படையில் அவருடன் கதைப்பது ,

4 - பின்னர் வழங்கல் தொடர்பில் உள்ள குறைகளை நின்றவர்கள் சொன்னார்கள் ,நாங்கள் தண்ணி தருவம் என்றார் முதலமைச்சர் . எழுத்து வடிவில் தந்த 3 சிபாரிசுகளையும் நாங்கள் மறுத்து விட்டோம் . இந்த பிரச்சினை தொடர்பாக முழுமையான அறிதல் இல்லாத ஒரு முதலமைச்சரின் வாய் மொழியை எப்படி நம்புவது . இடையிடேயே சிவாஜிலிங்கம் அவர்கள் ,தண்ணியக் குடிக்க வேண்டாம் எண்டு தான் ஐயா சொல்லுறார் என்று மொழிபெயர்த்துக் கொண்டு ,நின்றார் ,அவரைப் பேச விடுங்கள் ,நீங்கள் பேசவேண்டாம் என்று சிவாஜிலிங்கத்தை தடுத்தார்கள் . மற்றைய விடயங்கள் சாதரணமான அரசியல் சமாளிப்புகள்

5 - கொஞ்ச நேரம் தள்ளி நின்று உரையாடிய முதலமைச்சர் சில வைத்தியர்களை பேச அழைத்து வந்தார் ,அவர்களை முழுமையாக மறுத்து விட்டோம் .முதலமைச்சரின் வார்த்தைகளை மட்டுமே நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றோம் .

7 - அதன் பின்னர் , இந்த பிரச்சினை பற்றி அடியும் நுனியும் தெரியாத முதலமைச்சரை பார்த்து " உங்களுடைய கதையை நம்பேல்ல .எழுத்து வடிவத்தில தாங்கோ " என்று நான் சொன்னேன் ,உடனடியாக அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் .

மேலும் இரண்டு தடவைகள் டெனீஸ்வரனும் சிவாஜிலிங்கமும் திருத்தப்பட்ட கடிதங்களுடன் வந்து எங்களுடன் நிலத்தில் இருந்து உரையாடல்களை நிகழ்த்தினார்கள் .அதன் போது பல்வேறு விளக்கங்களை நாம் வழங்கினோம் .ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .இருந்தாலும் ,அக்கறையுடன் நடந்து கொண்டார்கள் .

பின்னர் ,இரவு நல்லூர் முன்றலிலேயே தொடர்ந்தது ,30 வரையான வைத்தியர்கள் மற்றும் இளையவர்கள் எங்களுடன் நின்றிருந்தனர் . காலையில் 10 மணிக்கு வருவதாக சொல்லி முதலமைச்சர் சென்றிருந்தார் , என்ன நம்பிக்கையில் ? அல்லது இதை பற்றி என்ன நினைகிறீர்கள் ஒரு இரவு ஒரு பகல் 43 பாகையில் வெப்பம் கொதிக்கும் நாளில் நீரின்றி 24 மணி நேரங்கள் கடந்தால் கிட்னியில் பிரச்சினை வரும் ,அதையும் வைத்தியர்கள் எங்களுக்கு அறிவித்திருந்தார்கள் . நான் ,ஆதி , நெல்சன் , லனுஜன் ஆகியோர் செலைன் ஏற்ற மறுத்து எமது போராட்டத்தை தொடர்ந்திருந்தோம் , அந்த அம்மாவுக்கு காலையில் பேரணி ,அதன் போதும் அவர் கத்தியபடி சென்றதில் சோர்ந்திருந்தார் , மற்றவர்கள் அனைவருக்கும் செலைன் 2 தடவைகள் ஏற்றப் பட்டிருந்தது , நள்ளிரவில் அந்த அம்மாவும் ,இன்னொரு நண்பரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டனர் ....

தொடரும்

கிரிஷாந்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11149408_10152892378292992_8430790357189

 

 

கனடா- ரொறொன்ரோவின் புதிய பொலிஸ் மா அதிபராக மார்க் சான்டர்ஸ் நியமனம் பெறுகின்றார். இந்த தலைமை பதவியை பெறும் முதல் கறுப்பு இனத்தவர் சான்டர்ஸ் ஆவார். தற்போதைய தலைமை அதிகாரி பில் பிளயர் வெளியேறியதும் சான்டர்ஸ் ரொறொன்ரோ பொலிஸ் தலைமை கடிவாளத்தை தனது கையில் பெறுவார். இந்த பதவி நியமனத்திற்கான அறிவிப்பு திங்கள்கிழமை காலை 10-மணியளவில் செய்தியாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பதிவிக்கு தற்போதைய பிரதி தலைமை அதிகாரி பீட்டர் ஸ்லோலியை சான்டர்ஸ் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32-வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்தவர் சான்டர்ஸ். 2012-ல் பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 175-மில்லியன் டொலர்கள் வரவு செலவுத்திட்டம், 1,200 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 164 பொதுமக்கள் உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு செயற்பாடுகள் கட்டளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பொலிஸ் தலைமை அதிகாரியான பிளயர் இந்த வார இறுதியில் இளைப்பாறுகின்றார்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good Morning ......

 

905982_707688906053034_38376240073386932

The Great Wall Of China 

 

15572_707688936053031_167742423004992398

The Great Wall Of China 

 

11150144_707688756053049_569295324991212

The Great Wall Of China

 

11174320_707688779386380_851889953382296

The Great Wall Of China

 

10849092_707688846053040_872120776604113

1523033_707688802719711_4717169027868720

1836868_707688962719695_3442992066688494

11174237_707688782719713_160408868116696

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட்சய திருதியை!!

மகாபாரதத்தில் திரௌபதி சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரௌபதியைக் காண பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருந்தது., அதில் ஒட்டியிருந்த ஒரு கீரையை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதிதி தேவோபவ எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும்நிறைவேற்றப் பெற்ற புனித நாளே அட்சய திருதியை என்பது புராண கதை.

அப்படிப்பட்ட அட்சய திருதியில் இறைவனை மனதார எதை வேண்டினாலும் அது பன்மடங்கு பெருகும். ஆகவே அவரவர் தகுதிக்கும் பொருளாதார சூழலுக்கும் ஏற்ப அது உணவு தானியமாகவோ,உடையாகவோ,பொன்னாகவோ,பொருளாகவோ, நிலமாகவோ அமையலாம்.

அட்சயதிருதியில் தங்கதான் வாங்கவேண்டும் என்பதல்ல அர்த்தம் . மேலும் அட்சயதிருதியில் தங்கம் வாங்கினால் பெருகுமா பெருகாதா என்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இது போன்ற நிர்ப் பந்தங்களால் பொருளாதாரக் குறைவு உள்ள பெண்கள், தங்கள் வீட்டின் மன மகிழ்வை இழக்கக்கூடாது.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் அட்சய திருதியால் ஆதாயம் என்பது நகை வணிகர்களுக்கே. - விகடன் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11055401_862512897121261_231453164142700

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11150818_807632175996770_333220199077591

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11164577_861778563861361_316115888553442

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.