Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11217538_162138094117638_433897599049202

 

எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த நாள் சிறப்பு பதிவு:


ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்தச் சிறுவன் பிரபு வீட்டு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்தத் தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையைக் கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களைத் தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார்.

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதைக் கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்தத் தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார். நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆன்டிபயாடிக் கண்டறியப்பட்டது. நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்குத் தீர்வு தருகிற அற்புதத்தைப் பென்சிலின் செய்கிறது.

 

உலகைக்காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் என்று அலெக்சாண்டர் ப்ளேமிங் கொண்டாடப்படுகிறார். அவருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர் ஹோவர்ட் ஃப்ளோரே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இணைக்குப்பிள்ளையாகப் பிறந்தவர். அப்பா ஷூ வியாபாரி மருத்துவப்பட்டம் பெற்ற பின்பு முனைவர் பட்டம் பெற்று நோயியல் துறைப் பேராசிரியராக உயர்ந்தார். லைசோசோம் பாக்டீரியாக்களைக் கொல்கிற ஆற்றல் வாய்ந்தது. அதில் எச்சில் மற்றும் கண்களில் காணப்பட்டது. அதைக்குறித்தே முதலில் ஆய்வுகள் செய்தார்.


பெனிசிலியம் பாக்டீரியக் கிருமிகளைக் கொள்வதாகப் பிளெமிங் கண்டறிந்து இருந்தார். அதை அவரால் பிரித்தெடுக்க முடியவில்லை. அந்த ஆய்வில் இறங்கலாம் என்று இவரும்,செயின் என்கிற சக ஆய்வாளரும் அதைப்பற்றிய குறிப்பை ஒரு மருத்துவ இதழில் படித்ததும் முடிவு செய்தார்கள். ராக்பெல்லர் அமைப்பு நிதியுதவி அளித்தது. பல்வேறு ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வுகளை முடுக்கினார் செயின் பெனிசிலினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். நார்மன் ஹீட்லே பெனிசிலின் உற்பத்தியை பெருக்குவதைக் கவனித்துக்கொண்டார்.

 

மனிதர்கள் மீது இதைச் செலுத்துவதன் பொழுது ஏற்படும் தாக்கங்களை ஃப்ளோரே ஆய்வு செய்தார். பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டது. அதை எட்டு எலிகள் மீது இவரின் குழு சோதிக்க முடிவு செய்தது. ஸ்ட்ரேப்டோகாக்கி எனப்படும் கொடிய பாக்டீரியா செலுத்தப்பட்டது. நான்கு எலிகளுக்குப் பெனிசிலின் தரப்பட்டது. அவை நான்கு மட்டும் பிழைத்துக்கொண்டன.

 

கூரான பொருளில் நோய்க்கிருமி இருந்தாலோ,அல்லது காற்றில் இருந்து கிருமி காயத்தின் மீது தாக்குதல் புரிந்தாலோ வெட்டியெடுக்கிற அளவுக்கு அவை வேகமாக வளர்ந்தன.

 

ஆல்பர்ட் அலெக்சாண்டர் எனும் நபரை ரோஜா முள் குத்தியது. அவரின் முகம்,கண்கள் எல்லாமும் வீங்கியிருந்தன. நோய்த்தொற்றால் ஒரு கண் நீக்கப்பட்டது. இன்னொரு கண்ணையும் மூடியிருந்தார்கள்.

 

அவருக்குப் பெனிசிலின் என்கிற அற்புதத்தைத் தர முடிவு செய்தார் ஃப்ளோரே. ஓரளவுக்கு அவர் தேறிக்கொண்டு இருக்கும் பொழுதே மருந்து போதாமல் அவர் இறந்து போனார். அவரின் சிறுநீரில் இருந்து மருந்தை மீட்கும் முயற்சிகள் தோற்றது குழந்தைகளிடம் மட்டும் ஆய்வு செய்வது என்று முடிவு செய்தார். அப்படிச் செய்து படிப்படியாகப் பெனிசிலின் உற்பத்தியை பெருக்கும் முறையை அடைந்தார்கள்.


புத்தக ஷெல்பில் இருக்கும் இழைகளைக்கொண்டு பெனிசிலின் திரவத்தை வடிகட்டினார்கள்.

 

பெனிசிலின் உற்பத்தியை பெரிய அளவில் செய்யப் பேடன்ட் செய்வதில் கவனம் செலுத்தாமல் அமெரிக்காவுக்குக் கள்ள விமானத்தில் ஏறிப்போனார்கள். அங்கே விவசாய ஆய்வகம் ஒன்றில் பெனிசிலினை வளர்க்கும் திரவத்தைக்கண்டார்கள். பெரிய அளவில் பெனிசிலின் உற்பத்தி சாத்தியமானது. வடக்கு ஆப்ரிக்காவில் உலகப்போர் சமயத்தில் சென்று சேர்ந்தார். அங்கே இருந்த வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அப்பகுதியை வெட்டி காயத்தை ஆறவிடுகிற பழக்கம் இருந்தது. இவர் காயங்களைத் தைக்கச்சொன்னார். பெனிசிலினை செலுத்தினார். காயங்கள் வேகமாக ஆறின. மாயம் நிகழ்ந்தது. பிளெமிங் கண்டுபிடித்த அற்புதம் ப்ளோரே குழுவின் முயற்சியால் பல லட்சம் வீரர்களைக் காப்பாற்றியது.


அவருக்குப் பல்வேறு கவுரவங்களை அவர் நாட்டு அரசு செய்தது. ஆஸ்திரேலிய கரன்சியில் அவர் முகத்தை வெளியிட்டது.

 

அவரோ நேர்முகங்கள் தராமல் அமைதியாகவே இருந்தார். “பல்வேறு நபர்களின் சாதனை இது !அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்ததும் காரணம் “ என்று தன்னடக்கமாகச் சொன்னார் ப்ளோரே. பெனிசிலின் மக்களின் உயிர்களைக் காப்பாற்றி மக்கள்தொகை பெருக்கத்துக்கு வழி வகுத்ததைக் கண்ட அவர் அதைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.


- பூ.கொ.சரவணன்.

 

 

 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம் இன்று


2ம் உலகப்போரின் போது ஜப்பானின், ஹிரோஷிமா மீது 1945, ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கி உயிர் பலி எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

11825230_10155986684515637_2924972717681

1962346_10155986684710637_35070447967414

11796357_10155986684995637_7982204309558

11838903_10155986683450637_7605220692842

இரண்டாம் உலகப் போரின்போது,ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 70-வது நினைவு தினம் இன்றாகும்.

ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

 

Hiroshima சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

 

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

 

“ அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

 

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

 

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

 

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடிய வரலாற்றில் Parapan Am விளையாட்டை கொப்பரை ஏற்றி திறந்து வைத்தார் Petitclerc.

 

ரொறொன்ரோ-Pan American விளையாட்டுக்களை தொடர்ந்து நான்கு வருடங்களிற்கு ஒரு தடவை உடல் ஊனமற்றவர்களிற்காக இடம் பெறும் ஒரு பல-விளையாட்டு நிகழ்வு Parapan Am விளையாட்டாகும்.
கனடாவில் முதல் தடவையாக இடம் பெறும் இந்நிகழ்வின் தொடக்க விழா ரொறொன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய அரங்கத்தில் நடை பெற்றது.
1999ல் முதலாவது விளையாட்டு மெக்சிக்கோ நகரில் இடம்பெற்றது.
கனடிய அணியில் 216 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
28நாடுகளில் இருந்து 1,600 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு வரலாற்றில் முதல் தடவையாக கனடாவில் நடைபெறுகின்றது.
விளையாட்டு வீரர்களின் குறைபாடுகளை மறந்து அவர்களின் திறமைகளை கணிக்கும் ஒரு நிகழ்வாக இது அமைகின்றது.

Steve Danielமற்றும்Dominic Larocqueஆகிய இருவரும் தீப்பந்தங்களை தாங்கி சென்றனர். இருவரும் கனடாவின் ஆயுத படைகளில் பணிபுரிந்த சமயம் காயமடைந்தவர்கள்.
கனடிய வரலாற்றில் பெரிதும் அலங்கரிக்கப்பட்ட தடகள விளையாட்டாளரானChantal Petitclercவிளையாட்டாளர்கள் குழுமியிருந்து உள்ளரங்கத்தில் கொப்பரையை ஏற்றி வைத்தார்.
உலகிலேயே மிக பல்வேறுபட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கிய நகரங்களில் ஒன்றான ரொறொன்ரோவில் இந்த விழா இடம்பெற்றமை பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகின்றது.

game1

game

game2

game3

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரிகையோடு 
மேலும் கீழும் 
கலந்தாலோசித்து 
ஆலாபனை செய்து 
இழுக்கிற இழுப்பில் 
எண்ணங்களை 
வழிந்து ஓடவிடாமல் 
அடக்கி வைத்து 
சடங்குகள் 
எதுவில்லாமல் 
நிறங்களில் 
ஜன்ம ஜனன 
ராகங்களின் 
பாவம்களை 
எடுத்து விடுகிற 
ஓவியன்
கேள்விகளே 
இல்லாத வெட்டவெளியை 
நாலு சட்டத்துக்குள் 
ஒடுக்கி 
நம்பிக்கை வைத்த கணத்தில்
ஓவியமாகி விடுகிறான் !
.
.
நாவுக்அரசன் (ஒஸ்லோ-நோர்வே)
.09.08.15

இந்தப்படம் உலகப்புகழ் பெற்ற போடோகிரபி விருது பெற்றது.....இந்த போட்டோவில் இருப்பவர் புகழ் பெற்ற ஓவியர் lucian freud [1922 -2011]

11838807_10206974578304138_6519519206778

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி – உலக சிங்க தினம்

 

உலகளாவியரீதியில் அருகிவருகின்றஉயிரனமாக IUCN அமையத்தினால்வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவிழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலகசிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.
 
 
அந்தவகையில்சிங்கங்கள் தொடர்பிலானசுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 
 
  • சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்குஅப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
Pair_of_lions.jpg
  • சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின்குதிகால்கள் தரையில் படுவதில்லை.
21-David-Lazar-Lion-Family.jpg
  • சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20மணித்தியாலங்களை தூக்கத்திலும்,ஓய்விலுமே செலவிடுகின்றன.
Lion+sleeping-835939.jpeg
  • சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேரபார்வையினைக் கொண்டவையாகும்இதன்காரணமாக அவை சில வேட்டையாடுதல்களைஇரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.
  • ஆண் சிங்கங்களை விடவும்பெண் சிங்கங்களேபெரும்பாலான வேட்டையாடல்களைமேற்கொள்கின்றனஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.
 
 
  • பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள்மாத்திரமே சமூகவியலானவையாகும்.சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவேவாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும்ரு குழுவில் அண்ணளவாக 30 வரையானசிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.

 
resting-lions-tanzania_56400_600x450.jpg
  • சிங்கங்கள் மணித்தியாலத்திற்கு 81கிலோமீற்றர் (50 mph) வேகத்தில்ஓடக்கூடியவையாகும்.
 
 
o-LION7-900.jpg
  • சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனதுகாலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.
 
 
lions_small.jpg
  • தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோதுமிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ளவிலங்கினம் சிங்கம் ஆகும்சிங்கத்தின்இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும்குறைந்த வகிபாகத்தினையே வகிக்கின்றது.
 
 
  • ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இற்கும் இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.
 
 
  • உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும்.  ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ  ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.
 

 

Y உங்களுக்குத் தெரியுமா - 1972ம் ஆண்டுவரை இந்தியாவின் தேசிய விலங்கினமாக சிங்கம் விளங்கியது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11873728_167202643611183_129919337151993

 

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் நாள் இன்று.

இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி – உலக யானை தினம்

 
உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும் கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும்  மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.


 

ele2%2B(2).JPG
www.facebook.com/kkloganphotography
 
1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன்யானைகள்  வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது,ஆனால் தற்சமயம் அண்ணளவாக 430,000யானைகளே வாழ்வதாககணிப்பிடப்படப்பட்டுள்ளது.  

 

அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 

 
  • தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க யானைகள் பெரியவையாகும்.
7159-1.jpg
  • ஆபிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும், உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.

 

original-29952-1403096446-15.jpg
 
  • தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள் விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
  • யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும். யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி

     

    வைத்துக்கொள்ளும்.
Phant.jpg
  • விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக்கொண்ட விலங்கினம் யானை ஆகும்பெண்யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினைபிரசவிக்கின்றது.
elephant-family.jpg
  • யானையின் தும்பிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்டதசைநார்கள் உண்டு.
  • யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
  • யானைகள் தெளிவான கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல் சக்தியினையும் கொண்டவையாகும்.
  • பாலூட்டிகளில் துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
  • யானை ஒரே நேரத்தில் தனதுதும்பிக்கையினால் 7.5 லீற்றர் நீரினைஉறிஞ்சிக்கொள்ள முடியும்.
original-21664-1403098154-16.jpg
  • ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு யானை ஆகும்.

 

"லோகநாதனின் பகிர்வுகள்" 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துகள்...

 

 

சத்திய மூர்த்தி's photo.
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு அடுக்கு செம்பருத்தி

 

11234856_1023049091069198_84536628214651

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Google நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் 
சுந்தர் பிச்சை நியமனம்.

2004 ஆம் ஆண்டு Google நிறுவனத்தில் பணியில் சேர்ந்த பிச்சை , Google Chrome மற்றும் ஆன்டிராய்டு மொபைல் போன் இயங்குதள வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

Google தேடு பொறி நிறுவனம் 1998 ஆம் ஆண்டில் Larry Page மற்றும் Sergey Brin ஆகியோரால் தொடங்கப்பட்டது.

 

 

 

11843978_1651428788427887_565525431_n.jp

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day.:)

photo-6741.jpg

இடது கை பழக்கமுள்ளவர்கள் விவேக திறன்மிக்கவர்கள்: இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்

 
 
இடது கையால் எழுதும் மாணவி.
இடது கையால் எழுதும் மாணவி.

பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள். இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் வித்யாசங்கர் கூறும்போது, “இடது கை பழக்கம் பிறப்பிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மைய விழையம் (மெடுல்லா ஆப்லங்கட்டா) என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. பெரும்பாலானோருக்கு இடதுபக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலதுபக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஒரு சிலருக்கு வலதுபக்க அரைக்கோளம் மேலோங்கி இருப்பதால் இடதுபக்க பழக்கம் ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சித்தால் அவர்களது கை எழுத்து சிதைவதுடன், பின்னாளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்” என்றார்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

 

11094357_10154095567709606_5825656873411

 

****
இந்த ஜென்மத்தில் 
இறைவன் வழங்கும்
பல வேடங்களை 
வாழ்க்கையில் ஏற்று நடிக்கிறேன் ..

.
அதில் உறவுகளின் வரவை விட
அதன் மூலம் பெற்ற அனுபவங்களும்
கற்ற பாடங்களும் தான் அதிகம் .
இருந்தும் அதை முழு 
மனதுடன் வரவேற்கிறேன் .

.
காரணம் இறைவன் அமைத்த 
நாடக மேடையில் நல்ல நடிகன் 
என்று நடித்து பெயர் 
வாங்க வேண்டுமே ஒழிய 
மாறாக அந்த பாத்திரங்களில் 
மூழ்கி நின்றால் ஆபத்து .

.
இல்லையேல் அடுத்த 
பாத்திரத்துக்கு உன்னைத் 
தயார்படுத்த முன் மாயை 
உன்னை தன் பாத்திரத்துக்குள்
                 விழ வைக்கும் ....

.
இறுதியில் உனது 
பாதை உன்னால் 
தீர்மானிக்கப்படாமல் 
பல முகங்களால் தீர்மானிக்கப்படும் ..

.
‪#‎அன்பு‬ செலுத்து , ஆனால் ‪#‎பற்று‬ என்ற மாயைக்குள் விழுந்துவிடாதே

 

சிவசுதன்-சுதன்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.


அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது
.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்.....,
''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''.

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் தமிழனின் 29 ஆவது ஆண்டு

 

இந்த மாதம் புலம்பெயர் கனடிய தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான ஒரு மாதம்

 

29 வருடங்களுக்கு முன்னர் 155 தமிழ் அகதிகளுடன் கனடாவின் கிழக்கு கரை‌யை வந்தடைந்த மாதம் இதுதான்.

 

1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி Atlantic Reaper மீன்பிடிக் கப்பலின் தலைமை மாலுமியான Gus Dalton 155 தமிழர்களின் கரை ஒதுங்குவதற்கு உதவிய கனடியர்களின் பிரதானமானவர்.

 

இதன் பின்னர் இரண்டு முறை தமிழர்கள் கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்தனர். Sun Sea கப்பல் மூலம் 2010ஆம் ஆண்டு 492 இலங்கை தமிழ் அகதிகள் கனடாவின் மேற்கு கரையோரத்தை வந்தடைந்தனர். இதுநடந்தது ஆகஸ்ட மாதம் 12ஆம் திகதி.

 

இதுதவிர இன்னுமொரு கப்பல் மூலம் தமிழர்கள் கனடாவை வந்தடைந்திருந்தனர்.Ocean Lady கப்பல் மூலம் 2009ஆம் ஆண்டு 76 தமிழ் அகதிகள் கனடாவை வந்தடைந்தனர்.

 

....... இணைப்பில்: 25 வருடங்களுக்கு பின்னர் 155 தமிழர்களை காப்பாற்றியதற்காக 2011ஆம் ஆண்டு Gus Dalton ரொறன்ரோவில் கனடிய தமிழ் காங்கிரசினால் பாராட்டப்பட்டது குறித்த கனடிய தொலைக்காட்சியின் செய்தியில் இருந்து . 

 

லங்கதாஸ் பத்மநாதன்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11218164_1454707891518882_69946913341817

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.


2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.


3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை.

ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.


குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.


1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.
இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.
இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் - அவசரம் - Share now to save the kids

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை அறைந்த சிலுவையைத் தேடுகிறேன்
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
புன்னகைகளை மட்டுமே
சபையில் வைக்கும் எனக்கு,
கண்ணீரைக் காட்சிப்படுத்த
முடிவதேயில்லை.
சிரித்துக் கொண்டேயிருப்பதாக
எப்போதும் நினைப்போருக்கு,
எனது அழுகையொலி கேட்டதேயில்லை.
ஆசீர்வாதங்களால் மட்டுமே
பறந்து கொண்டிருப்பதாக
கற்பனை செய்வோருக்கு-நான்
சாபங்களால் மட்டுமே
நகர்த்தப்பட்டது புரிவதேயில்லை.
சிறுவனைப் போலவே பார்க்கப்படும் -நான்
முதிர்ந்த மரணத்தின் கிழம் என்பது
தெரிவதேயில்லை.
பனியைவிட வெள்ளையும்
சூரிய ஒளியைவிடப் பிரகாசமுமாய்
மேய்ப்பர்களுக்கு தோற்றம் காட்டும்
தேவதூதனே எனது வழிகாட்டியாய்க்
காண்போருக்கு,
தாரிலும் கறுப்பாய்
சந்திரனைவிடக் குளிருமாய்
பிசாசுகளின் கடவுளே
என்னைப் பிடித்து அழுத்தினான்
என்பது புரிவதேயில்லை .
என்னை நோக்கி பூமாலைகளே
அணியப்படுவதாக காண்போருக்கு
நான் சிலுவையில் அறையப்பட்டது
தெரிவதேயில்லை .
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் 
உங்கள் புன்னகையில்
எனக்கான கண்ணீர்
கசிய வேண்டாம்.

-கல்லாறு சதீஷ் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

11218164_1454707891518882_69946913341817

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.


2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.


3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை.

ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.


குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.


1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.
இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.
இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் - அவசரம் - Share now to save the kids

அன்று தொடக்கம் நானும் என்னைப்போன்றவர்களும்  யாழ்களத்தில் படிச்சு படிச்சு சொன்னம்..... இது விளையாட்டு / பொழுதுபோக்கு அல்ல வினை என்று...

சரக்கு முடிய கழட்டி விடுவார்கள்.......அப்போது தெரியும் வருங்கால வாழ்க்கையின் வேதனை!!!

இன்றைய பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பால்குடிகளை வைத்து பணம் பார்க்கும் தொழிற்சாலைகள்.

 

 

அன்று தொடக்கம் நானும் என்னைப்போன்றவர்களும்  யாழ்களத்தில் படிச்சு படிச்சு சொன்னம்..... இது விளையாட்டு / பொழுதுபோக்கு அல்ல வினை என்று...

சரக்கு முடிய கழட்டி விடுவார்கள்.......அப்போது தெரியும் வருங்கால வாழ்க்கையின் வேதனை!!!

இன்றைய பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பால்குடிகளை வைத்து பணம் பார்க்கும் தொழிற்சாலைகள்.

 

யாழில கருத்துச்சொல்லுறதும் கள்ளுக்கொட்டில்ல புசத்துறதும் ஒண்டுதான் எண்டு இன்னும் புரியலயா சாமி்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இனிய  காலை வணக்கங்கள்..

1150554_594431350607261_1680133554_o.jpg

பலமுறை தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஆபிரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக முதல் முறை வெற்றி பெற்றார். நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் ஒரு சிற்றூரில் பேசும்போது அந்த ஊரில் உள்ள ஒரு சிறுமியின் பெயரைச் சொல்லி மேடைக்கு அழைத்தார். தான் இந்த முறை பெற்ற வெற்றிக்குக் காரணம் அந்தச் சிறுமி என்று புகழ்ந்தார்.

அப்படி அந்தச் சிறுமி லிங்கனுக்கு என்ன உதவி செய்தாள், வெற்றி பெற...!

ஆபிரஹாம் லிங்கன் ஒல்லியான உடல்வாகு உடையவர். அவர் கன்னங்கள் ஒட்டிப்போய் முகத்தில் பள்ளமாக இருந்தன. அம்மைத் தழும்பு வேறு... அப்போது அவர் தாடி வளர்க்கவும் இல்லை. முகம் விகாரமாக இருந்தது. இதை உற்றுக் கவனித்த சிறுமி அவருக்கு ஓர் ஆலோசனை எழுதி இருந்தாள். ""தாடி வளர்த்துக் கொண்டால் உங்கள் முகம் அழகாக, கம்பீரமாக இருக்கும். இப்போதுள்ள உங்கள் முகத்தைப் பெண்கள் விரும்புவதில்லை'' என்ற உண்மையை அவள் வெளிப்படுத்தி இருந்தாள்.

அவளது கடிதத்தைக் குப்பைக் கூடையில் லிங்கனின் தேர்தல் பொறுப்பாளர்கள் போடும் சமயத்தில் அங்கு வந்த லிங்கன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். அந்தச் சிறுமியின் யோசனையை ஏற்றுத் தாடி வளர்த்தார். கம்பீரமாக, களையாகக் காட்சியளித்து ஜெயித்தார். அதற்காக அந்தச் சிறுமியைத் தேடி நன்றி தெரிவித்தார் லிங்கன்.

# படித்து ரசித்தது.

 

998641_652484608098191_1354649396_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தஸ்வாமி ஆலய கொடியேற்றம்  நாளை 19.08.2015.

10599219_699901313414131_142021170733227

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

247107_414853305373312_52487709668049448

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11923267_1026994690674638_69312178241647

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11885039_10207041776744057_8368982259037

 

சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள உலகத்தில் உயிர் வாழ உத்தரவாதம் இல்லாத உள் நாட்டு யுத்தம் யாரை எந்த நேரம் எங்கே வைத்து போட்டுத் தள்ளுவது என்ற சந்தேகம் இல்லாமல் பல வருடமா அரசியல் இஸ்திரம் இல்லாமல் அல்லாடும் ஒரு வறிய நாடு.அந்த நாட்டு மக்கள் நிறையப்பேர் ஒஸ்லோவில் அரசியல் அகதிகளாக வந்தேறி வசிக்கிறார்கள்.

அவர்களில் சிலர் என்னோட நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாடு ஐரோப்பிய காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களான போத்துக்கீசர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளை சில நாட்கள் முன் ஒஸ்லோவில் உள்ள ஒரு பார்க்கில் பாரம்பரிய உடைகள் அணிந்து நடனம் ஆடி கொண்டாடினார்கள். உண்மையில் சோமாலியாவுக்கு உள்ளேயே இன்னொரு சின்ன சுதந்திர நாடு இருக்கு எண்டும் அதுக்கு பெயர் சோமாலி லேன்ட் என்று அந்த நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பெரும்பாலான சோமாலி ஆண்கள் திடகாத்திரமான உடல்க் கட்டமைப்பு இருந்தாலும் ,கஷ்டப்பட்டு வேலை செய்வதைக் கஷ்டமாக நினைப்பவர்கள்.அதனால் அவர்கள் உழைப்பு பற்றி இங்கே நோர்வே மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.சமூக உதவிகளில்,நிரம்பி வழிந்து அவர்கள் தான் அதிகம் அழுது வடிந்து கொண்டு இருப்பார்கள்.அவர்கள் நாட்டிலும் அவர்கள் வேலை செய்வதை ஒரு சுமையாக நினைப்பது என்பது போல சோமாலி நன்பர்கள் பெருமையாக சொல்லுவார்கள் .

" ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், வீட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன் " என்பது போல அவர்கள் வீட்டிலும் வேலை செய்வதில்லை.பெண்கள் தான் வீட்டின் கண்கள். என்னோட முன்னர் ஒரு சோமாலி வேலை செய்தார். நாலு மாதம் தான் வேலை செய்தார்,அதுக்குப் பிறகு நாலு மாதம் ரெஸ்ட் எடுப்பார். பிறகு வேற இடத்தில நாலு மாதம் வேலை செய்ததா சொன்னார். " கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம் " என்றது போல விளக்கம் வேற சொன்னார்.

" எப்படிப்பா இப்படி தேசிங்கு ராஜா போல வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க என்று வாழ முடிகிறது உங்களால் " என்று கேட்டேன் ஒரு நாள், அதுக்கு அவர்

" நான் பரவாயில்லை, என்னோட அப்பா ஒரு இடத்தில ஒரு மாதம் தான் வேலை செய்வார்,அதுக்கு பிறக்கு அந்த வருடம் முழுவதும் வீட்டில இருப்பார்,எங்கள் தலைமுறை கொஞ்சம் டெவலப் ஆகிக்கொண்டு இருக்கு, கஷ்டப்பட்டு பல்லைக் கடிச்சுக்கொண்டு நானே தொடர்ச்சியாக நாலு மாதம் ஒரே இடத்தில வேலைசெய்யப் பழகிவிட்டேன்,அது எங்கள் சமூகத்துக்கு நல்ல அறிகுறி " என்று சிரித்துக்கொண்டு சிம்பிளா சொல்லுவார்.

எனக்கு தெரிந்த சோமாலியர்கள் எளிமையான மனிதர்கள். தலையைக் குத்தி தலைகரணமா ஜோசிக்கும் தமிழர்கள் போல அவர்கள் சிந்திப்பதில்லை.நோர்வேயில் அவர்களின் கலாச்சார விழுமியங்கள் அதிகம் கவரப்படாத அந்நிய சூழலில் புலம்பெயர் வாழ்கையை அதன் போக்கில் ஓடவிட்டு அதோடு ஒட்டியும் ஒட்டாமலும், விமர்சனம்களையும், விஷமத்தனங்களையும், விதண்டாவாதங்களையும் வீதிகளில் எதிர்கொண்டு விதி என்று வாழ்கிறார்கள்.

அம்மன்கோவில் அன்னதானத்தில் அவல் கடலை சுண்டலுக்கு அள்ளுப்படும் கோஸ்டிகள் போல நெரிசலில் அலைக்கழிந்து கொண்டு கும்பலாக எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் சோமாலி மக்கள் நட்பானவர்கள். அவர்கள் ஒரு தனித்துவ மொழி பேசுகிறார்கள்.ஆனால் அந்த மொழிக்கு தனித்துவ எழுத்துக்கள் இல்லை. ஆங்கில எழுத்துக்களைப் பாவித்தே அவர்கள் மொழியை எழுதுகிறார்கள். அதை வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் எழுதி பேஸ்புக்கில் சிலர் போடும் கொமென்ட் போல இருக்கும்.

சோமாலி ஆண்கள் பாரம்பரியமாக ,கிராமப்புற முதியான்சலாகே சிங்களவர் கட்டும் வெள்ளை நிற சரம் ,சிங்களவர் போலவே கட்டி அதுக்கு மேலே தவில் மேளம் வாசிப்பவர்கள் அணிவது போல ஒரு பெல்ட் கட்டுறார்கள்.பெண்கள் நீண்ட வெள்ளை அங்கிகளின் நிறையக் கலர் கலரான குஞ்சங்கள் தொங்கும் பிரில் வைச்ச ஆடையை அணிகிறார்கள். பெண்கள் தலையை மூடிக்கொண்டு கறுப்பாக இருந்தாலும் அவர்களின் கண்கள் ஆயிரத்து ஒரு இரவுகள் கதை சொல்லும் கறுப்பு வைரங்கள்.

சோமாலி ஆண்களும் பெண்களும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் முன்னேறி பதுங்கித் தாக்குவது போல பாய்ந்தும் கால்களை உதைத்து எம்பிக் குதித்தும் ஆடுவதைப் பார்க்க அவர்கள் இயற்கையாகவே பூமியுடன் பாதம் வழியாக ஆதர்சமான சக்தியை சேர்த்துக்கொண்டு ஆடுவது போலவும்,,கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் எதிரே ஆடும் பெண்களை கடத்துவதுக்கு பிளான் போடுற மாதிரியும் இருந்தது,சோமாலி ஆண்கள் பெண்களுக்கு வசியம் வைப்பதில் கில்லாடிகள் என்று அவர்களின் செயல்களில் பலமுறை கவனித்து இருக்கிறேன்.

பல நிறங்களில் கண்ணைக்கவரும் அவர்களின் உடைகள் ஒரு அலாதியான போட்டோகிரபிக்கு அணி அலங்காரம் கொடுக்கும். தங்கள் தாய் நாட்டில் ஒரு காலத்தில் காடுகளில் வேட்டை ஆடி வாழ்ந்ததை நினைவு கொள்ள ஆண்கள் எல்லாரும் ஒரு நீண்ட மரக் கம்பு வைத்து இருந்தார்கள்.மிக நவீனமான நோர்வேயில் அதைப் பார்க்க அபத்தமாக இருந்தாலும் அழகாக அவர்களின் மூதாதையர்களின் ஆன்மாவோடு அது பேசுவது போல இருந்தது .
.
.நாவுக்அரசன் (ஒஸ்லோ-நோர்வே)
17.08.15

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

காலை வணக்கம்|....

11870714_1026274204080020_13972606478904

 

 

 

ஆகஸ்ட் 19 → உலக புகைப்பட தினம் (World Photography Day)

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக புகைப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.

ஆகஸ்ட் 19: உலக புகைப்பட நாள் (World photograph day) இன்று.

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் இந்நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

வியட்நாம் யுத்தத்தில் உலக வல்லரசான அமெரிக்காவை படுதோல்வியடைய செய்வதற்கு காரணமான புகைப்படம் இதுதான் .

10600549_1523430084556887_30548121578461

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வரலாற்றுச்சிறப்பு மிகு நல்லூர்க் கந்தனுக்கு இன்று (19.08.2015) கொடிறேற்றம்,,

11873738_912749855464398_292454942958558

11899984_912749942131056_319886102885455

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உலக புகைப்பட தினத்தையொட்டி  புகைப்படத் தொகுப்பு!11903875_616338735135339_454921309666143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.